கண்டதும் கேட்டதும்..(27-10-2009)


கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சீனா ஐயா அவர்கள் அவர் வீட்டிற்கு வரச்சொல்லி அழைத்துக்கொண்டிருந்தார்.. அதற்கு போன ஞாயிற்றுக்கிழமைதான் விடை கிடைத்தது..நானும் ஞாயிற்றுக்கிழமை காலையில் கிளம்பி மதியம் அவரது வீட்டினை அடைந்தேன்..அவர் இருக்கும் அபார்மென்டை பார்க்கும் போதே நானும் அங்கேயே தங்கிவிடலாமோ என நினைப்பு வந்தது (காரணம் கேட்பவர்கள் தனியாக மின்னஞ்சல் பண்ணவும்). வீட்டிற்குள் நுழைந்தவுடன் வழக்கமான நல விசாரிப்புகள் முடிந்தவுடன் சீனா ஐயாவின் மனைவி அவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடுத்தார்கள்.மிகவும் அருமையாக இருந்தது..பின் சிறிது நேரம் கதைத்து விட்டு அவரது குடும்ப புகைப்படங்களை பார்த்தேன்..மிகவும் அழகாக இருந்தது..பின் மதிய உணவு சாப்பிட்டோம்.. சாதம்,சாம்பார்,கேரட் பொரியல்,என அருமையான விருந்து.இந்த விருந்தை கார்த்தி அண்ணா மிஸ் பண்ணிவிட்டார்..பின் மின்சாரம் தடை செய்யப்படவே இருவரும் பேராண்மை படத்துக்கு கிளம்பினோம்..படமும் அருமை,தியேட்டரும் அருமை.ஏனென்றால் சிவாகாசியில் இருக்கும் தியேட்டரை விட பல மடங்கு நன்றாக இருந்தது..பின் வீட்டிற்கு வந்தவுடன் கார்த்தி அண்ணா வந்தார்..அதன் பின் ஸ்ரீதர் அண்ணா வந்தார்..மொத்தத்தில் ஒரு பதிவர் சந்திப்பினை நடத்திவிட்டு கிளம்பினோம்..பதிவர் சந்திப்பினில் நானும் ஸ்ரீதர் அண்ணனும் ஒரு குறும்படம் எடுப்பது உறுதியானது..எங்களது குறும்படத்திற்கு வசனமும் பஞ்ச் டையலாக் எழுதும் பொறுப்பினை அண்ணன் கார்த்திகைப்பாண்டியன் ஏற்றுக்கொண்டார்..அனேகமாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம்...

*************************

அது என்னமோ ஏதோ தெரியவில்லை..எனக்கு எவனோ ஒருவன் அண்ணனை சந்திக்கும் வாய்ப்பு தள்ளிக்கொண்டே போய்கிறது..போன முறை சிவகாசி வந்தவுடன் அழைத்தார்கள்..என்னால் செல்ல இயலவில்லை..இதோ இந்த சனிக்கிழமையும் அப்படியே நடந்தது.நான் அழைக்கும் போது அவர் கொஞ்சம் பிஸி.அவர் அழைக்கும் போது நான் கொஞ்சம் பிஸி..நாம் இருவரும் அடுத்த முறையாவது சந்தித்துவிடுவோமா அண்ணா...

*************************

அண்மையில் பார்த்த படங்களில் என்னை வெகுவாக ஈர்த்தது பேராண்மை...படத்தில் பல இடங்களில் பொண்வண்ணன் பேசும் போது கட் செய்யப்படுகின்றன.இரட்டை அர்த்த வசனம் உள்ள படங்களையே சென்சார் அனுமதித்து தொலைக்காட்சிகளில் வெளியிடும் போது ஒரு நல்ல படத்தின் வசனத்தை கத்தரிப்பது நன்றாக இல்லை.. மற்றபடி படத்தில் நடித்து உள்ள அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம் போல் இருக்கிறது..

*************************

கவிதை:-

உயிர்

உயிருடன் இருக்கும் பொழுது ,
உணர்ச்சியற்று இருக்கும் நம் மக்கள்,
உயிரில்லாத பொழுது மட்டும் ஏன்,
உணர்ச்சி பொங்க அழுகிறார்கள் ;
உயிரில்லாத உடலை பார்த்து . . .

*************************

தத்துவம்:-

இன்றைய வெற்றி நாளையும் வெற்றி…!!
இன்றைய தோல்வி நாளைய அனுபவம்… !!!!

*************************

டிஸ்கி:-

இந்த பதிவு படித்து முடித்தவுடன் பின்னூட்டமோ வோட்டோ மட்டும் தான் போடணும் என்று அவசியம் இல்லை...எங்கள் வீட்டிற்கு தேவையான மிக்ஸி,கிரைண்டர்,என எந்த நல்லா பொருளாக இருந்தாலும் அனுப்பி வைங்க..

100 பாலோயர்ஸ் அடையச்செய்த அனவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

20 பின்னூட்டங்கள்:

மணிஜி said...

??????????????????????????

ஆயில்யன் said...

/.எங்கள் வீட்டிற்கு தேவையான மிக்ஸி,கிரைண்டர்,என எந்த நல்லா பொருளாக இருந்தாலும் அனுப்பி வைங்க..//

நல்லவேளை பெருந்தன்மையோட மிக்ஸி கிரைண்டர் மட்டும் கேட்டீங்களே?!

Anonymous said...

Hi...
Nice Post...
The way u r writing the post is very interesting...
Keep doing it..
But...
I can't accept the movie review part.. Because they should take a typical tamil file..or fully holywood style move...No need to mix both.. Regarding the logic in the film...actually no logic there...

Beski said...

நல்லாயிருக்கு அன்பு.

இந்த ஜென்மத்தில் நிச்சயம் சந்திப்போம்.

லோகு said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......

வால்பையன் said...

//எங்களது குறும்படத்திற்கு வசனமும் பஞ்ச் டையலாக் எழுதும் பொறுப்பினை அண்ணன் கார்த்திகைப்பாண்டியன் ஏற்றுக்கொண்டார்.//

அடுத்த பேரரசு ரெடியப்பா!

வால்பையன் said...

//உயிருடன் இருக்கும் பொழுது ,
உணர்ச்சியற்று இருக்கும் நம் மக்கள்,
உயிரில்லாத பொழுது மட்டும் ஏன்,
உணர்ச்சி பொங்க அழுகிறார்கள் ;
உயிரில்லாத உடலை பார்த்து . . .//

இப்பயாவது போனியேன்னு சந்தோசத்துல இருக்கும்!

அழவது ஒரு நல்ல உடற்பயிற்சி! அடிக்கடி செய்யமுடியாததால், இம்மாதிரியான சடங்குகளை பயன்படுத்தி கொள்ள வேண்டியது தான்!

சொல்லரசன் said...

//எங்கள் வீட்டிற்கு தேவையான மிக்ஸி,கிரைண்டர்,என எந்த நல்லா பொருளாக இருந்தாலும் அனுப்பி வைங்க.//

தனிகுடித்தனம் போக போறியா?அதெல்லாம் அவங்களே பார்த்துகொள்வார்கள் தம்பி.

சொல்லரசன் said...

//நானும் ஸ்ரீதர் அண்ணனும் ஒரு குறும்படம் எடுப்பது உறுதியானது..எங்களது குறும்படத்திற்கு வசனமும் பஞ்ச் டையலாக் எழுதும் பொறுப்பினை அண்ணன் கார்த்திகைப்பாண்டியன் ஏற்றுக்கொண்டார்..அனேகமாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம்...//


"நாங்க எடுத்தா அது வரலாறு,நீங்க எடுத்தா அது தகராறு" இப்படி பஞ்ச் டயலாக் எழுதவேண்டாம் என‌ சொல்லுங்க உங்க கா.பா விட‌ம்

வினோத் கெளதம் said...

Disky Super Tambi..:))

கார்த்திகைப் பாண்டியன் said...

அடே மாபாதகா.. துஷ்டா.. ஏன் இப்படி என்ன வச்சு காமெடி பண்ற..

யோ வொய்ஸ் (யோகா) said...

//எங்கள் வீட்டிற்கு தேவையான மிக்ஸி,கிரைண்டர்,என எந்த நல்லா பொருளாக இருந்தாலும் அனுப்பி வைங்க.//

அட்ரஸ் சொல்லுங்க நேராவே கொண்டு வாறோம்.

ஜெட்லி... said...

செம விருந்து போல...
கலக்கு அன்பு...

தருமி said...

//மொத்தத்தில் ஒரு பதிவர் சந்திப்பினை நடத்திவிட்டு ...//


ம்ம் .. ம்ம் ...ம்

pudugaithendral said...

உங்க வலைப்பூவுக்கு என் முதல் வருகை. கண்டதும் கேட்டதும் மிக ரசித்தேன்.

சீனா சார் வீட்டுக்கு போயிட்டு வந்திருக்கீங்களா!!! நாங்களும் டிசம்பரில் மீட்டுவோம். :)))

cheena (சீனா) said...

என்னடா இவ்வளவி சிம்பிளா எழுதிட்டே - மாபெரும் பதிவர் சந்திப்பில்லையா இது - ஐவர் சந்தித்தோம் - ம்ம்ம்ம்ம்ம்

சரி சரி நல்வாழ்த்துகள்

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் அன்பு..

ஆ.ஞானசேகரன் said...

//நானும் ஸ்ரீதர் அண்ணனும் ஒரு குறும்படம் எடுப்பது உறுதியானது..எங்களது குறும்படத்திற்கு வசனமும் பஞ்ச் டையலாக் எழுதும் பொறுப்பினை அண்ணன் கார்த்திகைப்பாண்டியன் ஏற்றுக்கொண்டார்..அனேகமாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம்...//

வாழ்த்துகள் நண்பர்களே!!!!

shortfilmindia.com said...

மேலும் பல நூறு பெற வாழ்த்துக்கள்.

கேபிள் சங்கர்

வழிப்போக்கன் said...

அனேகமாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம்...//

vaazthukkal