கண்டதும் கேட்டதும்..(23.11.2009)


நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் கிரிக்கெட் விளையாடிவிட்டு ஏழு மணிக்கு எங்கள் "வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினை" கூட்டினோம்.. நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் ஒருவன் மட்டும் "மச்சி வீட்டில கொஞ்சம் வேலை இருக்குடா" என்று கிளம்பினான்..எங்க சங்கத்தில் அவன் ஒருவன் மட்டும் விஜய் ரசிகன்..சரி போயிட்டு வாடா என்று சொன்ன பிறகு தான் ஞாபகத்துக்கு வந்தது "வேட்டைக்காரன் ஆடியோ ரிலிஸ்"..நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது விஜயின் ரசிகனாக இருந்த காரணத்தினாலும்,வேறு பொழுதுபோகவில்லை என்ற காரணத்தினாலும் எங்க ஊர் பஞ்சாயத்து தொலைக்காட்சியில் அனைவரும் அந்த அரிய நிகழ்ச்சியினை பார்த்தோம்..அங்கே போனவுடன் எனக்கே அதிசயமாக இருந்தது..எங்க ஊரிலுள்ள சின்ன பசங்க எல்லாம் (நல்லா கவனிக்கவும் சின்னப்பசங்க) அங்க ஒரே ஆர்ப்பாட்டம்..."புலி உறுமுது புலி உறுமுது" என்ற பாடல் வந்தவுடனே விஜய் காரில் வந்து இறங்குவார்..அதை பார்த்தவுடன் புதியகீதை என்ற மெஹா கிட்டான படமே எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.

அனுஷ்கா பார்க்க அழகாக இருக்கிறார்..அனுஷ்காவுக்காக படத்துக்கு போகலாம் என்று இருக்கிறேன்..யாராச்சும் வர்ரீங்களா..

******************************

நான் கிரிக்கெட் ஆடிய வராலாற்றிலே நேற்றுதான் என் அதிகபட்ச ஸ்கோரினை பதிவு செய்தேன்..வழக்கமாக 10 ரன்களுக்கு மேல் தாண்டமாட்டேன்..காலையில் நடந்த ஆட்டத்தினில் 20 அடித்த காரணத்தினாலும்,தொடக்க ஆட்டக்காரனாக இறங்குபவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் மாலையில் நடைபெற்ற போட்டியில் எங்கள் அணி கேப்டன் என்னை தொடக்க ஆட்டக்காரனாக என்னை களமிறக்கினான்..முதல் ரன்னை எடுப்பதற்குள் மூன்று ஓவர் முடிந்துவிட்டது...இருப்பினும் மனதை தைரியப்படுத்தி 12 ஓவர் முடிவுக்குள் 42 ரன் அடித்தேன்..எங்கள் அணியின் எண்ணிக்கை 110.தொடரின் முதல் சுற்றில் வெற்றி..இனிவரும் போட்டிகளிலும் வென்று கோப்பையை கோப்பையை கைப்பற்றிவிடலாம் என்று நினைக்கிறேன்..

ஆட்டநாயகன் விருது கொடுத்தவுடன் எல்லோரும் என்னை பாராட்ட,,வழக்கமாக களமிறங்குபவன் என்னை ஒரு வெறியோடு ஏற இறங்கிப்பார்த்தான்...

******************************

நேற்று இரவு விஜய் டி.வி.யில் நீயா நானா நிகழ்ச்சியின் தலைப்பு வட இந்திய பெண்கள் அழகானவர்களா..? தென்னிந்திய பெண்கள் அழகானவர்களா..? என்ற தலைப்பில் தொடங்கிய நிகழ்ச்சி இறுதியில் வட இந்திய ஆண்கள் அழகானவர்களா..இல்லை தென்னிந்திய ஆண்கள் அழகானவர்களா என்ற விவாதத்திற்கு போனது..அவங்க நம்மளை திட்ட நம்ம பொண்ணுங்க அந்த பசங்களை திட்ட கண்களில் ரத்தக்கண்ணீர்தான் வந்தது...

******************************

என்னதான் பசங்க கட்டுக்கோப்பா மனசை வச்சு இருந்தாலுமே ஒரே ஒரு கால் பண்ணி நம்ம மனசை கவுத்திவிடுறாங்க...

1.சாப்பிடியாடா செல்லம்..
2.உன்னோட எஸ்.எம்.எஸ்.ரொம்ப நல்லா இருந்ததுடா..எனக்காக தானே எழுதின..
3.உனக்கும் எனக்கும் ஒரே டேஸ்ட் தெரியுமா..
4.இன்னிக்கு நீ போட்டிருக்கிற சட்டை ரொம்ப சூப்பர்..நான் நாளைக்கு அதே கலர்தான் சுரிதார் போடப்போறேன்..
5.கேன்-டீன்ல மீட் பண்ணலாம்டா செல்லம்..
6.தியேட்டருக்கு போலாமாடா.
7.படிக்கும் போது கூட புத்தகத்துல உன் முகம் தெரியுதுடா..
8.என்னோட பர்ஸ்ல எப்போதுமே உன் போட்டா இருக்கு தெரியுமா..

இன்னும் இதுபோல நிறைய இருக்கு..

******************************

நகைச்சுவை:-

காதல் என்பது..

"வேட்டைக்காரன்" பட டிரெயிலர் மாதிரி..

பார்க்கதவன் பார்க்க துடிப்பான்..

பார்த்தவன் சாகத்துடிப்பான்...

******************************

தத்துவம்:-
காதல் வர காரணம் கண்கள்..
கண்களில் கண்ணீர் வர காரணம் பெண்கள்..
பெண்களின் இதயம் ஒரு செங்கல்..
அதை உடைக்க முடியாமல் தவிப்பது ஆண்கள்..

******************************

கவிதை:-
அத்தை பையன் என
தோழிகளிடம்
என்னை அறிமுகப்படுத்தையில்
வந்த வெட்கத்தை
மறைக்க முயன்றாயே..
அந்த நொடி
ஆயிரம் கவிதைகளுக்கு சமம்.

******************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் பாடம்...


உன்பெயர் சொன்னால் இன்னும்
இனிமையாவது - தமிழ்

நீ நுனி நாக்கில் பேசக் கொடுத்து
வைத்தது - ஆங்கிலம்

உன்னை தினம் ஒரு முறையாவது
பார்க்க மனம் போடுவது - கணக்கு

உன்னைப் பார்க்காமல் இயங்காது
என் - உயிரியல்
உன்னைப் பார்த்ததும் வயிற்றில்
பட்டாம்பூச்சி - வேதியியல்

நீ அருகில் வர வர அதிகமாகும்
இதயத் துடிப்பு - இயற்பியல்

காதலில் தோற்றவனுக்கு
மறு தேர்வு இல்லை..
இது நீ எனக்கு சொல்லி கொடுத்த வரலாறு..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கடலை! கடலை! கடலை!



கடலை ரசித்தபடி
கடலைப் பார்த்தவாறு காற்றுவாங்கி
கடற்கரையில் தோழியுடன் இருக்கையில்
கடலை கடலை என்றான் சிறுவன்!
கடலை பொட்டலம் வாங்கி
கடலை சாப்பிட்டவாறே பேசிக்கொண்டிருந்தோம்!
கடலைக் காணவந்தவன் ஒருவன்
கடலைப் பார்த்தபடி அருகில் வந்து
கடலையா.................? என்றான்!
கடலை தான் கேட்கிறான் என்று
கடலைப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு
கடலைப் பார்த்தது போதுமென்று
கடலை விட்டு நீங்கி செல்கையில்
கடற்கரையில் கடலையா? எனக்கேட்டவன் கேட்ட
கடலை என்னவென்று தோழி எனக்கொரு
கடலை வகுப்பெடுத்தாள்!
கடலை போடுவது பற்றி!
கடலையில் இப்படியும் ஒரு வகையா? என
கடற்கரையை நினைத்து நகைத்தேன்!
கடலலைபோல் அவளும் சிரித்தாள்! நிலம் பார்த்தவாறு!

குறிப்பு:- மீள்பதிவு....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அரும்பு மீசை...


சிறுவனாய் இருந்த நான்
என்னுள் இன்று ஏகப்பட்ட
மாற்றங்கள் பல கண்டுள்ளேன்...

எண்ணங்கள் பல..
சலனங்கள் சில..

சீராய் இருந்த முகத்தில்
மேடு பள்ளங்கள்..

பள்ளிக்குப் புறப்படும்போது
எண்ணையும் சீப்புமாய் வரும்
அம்மாவின் கையை
உதறும் என் கைகள்..

இன்று கண்ணாடி முன்
அரைமணி நேரம் கையில் சீப்புடன்!!

வீதியில் செல்லும்போது
நண்பர்களுடன் சண்டை
தாண்டிச் சென்றவள்
என்னைத்தான் பார்த்தாலென்று!

உடையில் கவனம்

நண்பர்களுடன் அரட்டை

அரைக்கால் சட்டைக்கு விடுதலை

கையில் கடிகாரம்

பழைய சட்டையை போட மறுத்தல்

இன்னும் எத்தனை மாற்றங்கள் என்னுள்ளே!!

ஒரு சிறு மீசை
அரும்பிய நாள் முதல்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சின்ன சின்னதாய் "16"


பசிக்கும்போது
உண்ணா விட்டால்...
நீ உண்ணும்போது
உனக்கு பசிக்காது..!!

******************
சான்றோர் புத்திமதி கேளான்..
சறுக்கியதும் தானும் புத்திமதி
சொல்ல தொடங்குவான்..??
******************
போதைக்கு...
ஒரு கோப்பை மது போதும்...
தெளிவதற்கோ..?
******************
நீந்த கற்றுகொண்டால்....
இரும்பும் கூட நீரில்
மிதக்கும்..!!
******************
பலமணிநேர சிந்தனவாதியின் வெற்றி..
நொடி பொழுதில் தீர்மானிக்க பட்டுவிடும்..!!
******************
நிலைப்பதாய்
இருந்தால் நேசி...
கிடைக்கும் என்றால்
முயற்சி செய்..!!
******************
'குப்பையை' பேசி..
கோபுரத்தில் சுகிக்கிறது ஒரு கூட்டம்..?!
கோபுரத்தை கனவு கண்டு..
குப்பையிலேயே மடிகிறது ஒரு கூட்டம்..!
******************
எது சலிக்காமல்
கிடைக்கிறதோ...
அது விரைவில்
சலித்து விடும்...!!?
******************
எத்தனை எழுதினாலும் தீரவே மாட்டேன் என்கிறது...?
என் பேனா மையும்....
உன்னை பற்றிய கவிதைகளும்...!!
******************
கொண்டு வருகிறேன்...தினமும்..,
கொடுக்கத்தான் முடிந்ததில்லை ஒருமுறை கூட...
ரோஜாவும்...
என் கடிதமும்..!!
******************
கரண்ட் கம்பியில் சிட்டுகுருவிகளுக்குள் சண்டை
மேல் கூரை இல்லாத குளியலறையில்
அவள் குளிக்கிறாள்..!!
******************
நீ பயணிக்கும் அந்த பேருந்தில் அனைவரும்
புரிந்து கொண்டார்கள்-என் காதலை..
உன்னை தவிர...!!!
******************
உன்னிடம் பேச சேர்த்துவைப்பேன் வார்த்தைகளை...
'அனுமன் வால்'போல
உன்னை பார்த்தும்...
கரைந்து போகும் அத்தனையும் 'கற்பூரம்' போல...!!
******************
உன்னை மட்டுமே அன்பு செய்யும் என்னை பார்த்தும்
உனக்கு கோபம் வருவதுபோல்..
என்னை தவிர உன்னை யார் அன்பு செய்தாலும் ஏனோ
எனக்கு கோபம் வருகிறது..!!
******************
உன்னால் தான் 'விடியல்'
எத்தனை அழகானது என்று தெரிந்துகொள்ள முடிந்தது..?!
உன்னால் தான் 'அஸ்தமனம்'
எத்தனை கொடுமையானது என்றும் தெரிந்து கொண்டேன்..!!
******************
நம் குழந்தைக்கு சோறூட்ட
நிலவை தேடிகொண்டிருக்க வேண்டியதில்லை...
நீதான் இருக்கிறாய் அல்லவா பக்கத்திலேயே..!!
******************
டிஸ்கி:- இவை அனைத்தும் எனது மொபைலுக்கு வந்த குறுந்தகவல்களே..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தீபாவளி சிறப்புப் பதிவு 2009...!!!


அருமை அண்ணன் ஸ்ரீ அவர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த பதிவினை தொடர்கிறேன்..ஏனெனில் அவர் என் கூட சேர்ந்து குறும்படம் இருக்கவிருப்பதால்...

பதிவிற்கான விதிமுறைகள் :


1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள்.

2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.

3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.

4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.

5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்..

**************************

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

என்னை பற்றி இந்த உலகமே அறிந்து இருந்தாலும் நீங்கள் கேட்டு இருப்பதால் சொல்கிறேன்..சென்னையில் பிறந்து இன்று சிவகாசியில் வாழ்பவன்..வீட்டிற்கு ஒரே பிள்ளை..அதனால் செல்லம் அதிகம்..தீவிர கிரிக்கெட் ரசிகன்..தற்சமயம் கணிணியில் டிசைனராக இருக்கிறேன்..

**************************

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?


மறக்க முடியாத சம்பவம் என்று எதுவும் இல்லை..நானும் என் நண்பர்களும் சேர்ந்து இரவு 2 மணி வரை வெடி போடுவோம்.நன்றாக என்ஜாய் பண்ணுவோம்..சமீபவத்தில் மூன்று நாட்களுக்கு முன்னே டிக்கெட் ரிசர்வ் செய்து ஆதவன் என்ற சூப்பர்ஹிட் படத்தை பார்த்தது...

**************************

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

பொதுவாக விஷேஷ நாட்களில் வெளியூருக்கு செல்வதில்லை..சொந்த ஊரிலே தான் ஊர் சுத்தும் சுகமே தனிதான்..மாலை நேரங்களில் இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என ஒளிபரப்பாகும் குப்பை படங்களை பார்ப்பது..

**************************

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?

தீபாவளி என்ற ஒரு நாள் சந்தோஷத்திற்காக பலபேர் இங்கு தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வருடம் முழுவதும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்..20 வயது இளைஞர்கள் முதல் 80 வயது முதியவர்கள் வரை. ஒரு வருடம் கூட பட்டாசு ஆலைகள் வெடிக்காமல் இருந்ததில்லை..ஆனால் இம்முறை பல உயிர்கள் என் கண் முன்னே இறந்து இருப்பதை பார்த்ததால் எழுதுகிறேன்..

**************************

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

இந்த முறை நான் ஆடை எடுக்கவில்லை..அப்படியே எடுத்து இருந்தாலும் தைத்துத்தான் இருப்பேன்..

**************************

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

எல்லாமே கடையிலேதான்..இனிப்பும் காரமும் கலந்து வீட்டிற்கு வாங்கிச்சென்றேன்..மற்றபடி நகரத்தில் உள்ள மாதிரி திண்பண்டங்கள் கொடுக்கல்,வாங்கல் நடைமுறைகள் இன்னும் எங்கள் ஊருக்கு வரவில்லை..

**************************

7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

முதல் நாளே அனைவருக்கும் இ-மெயில் அனுப்பினேன்..என்னுடைய மொபைலில் பேலண்ஸ் இல்லாததால் யாருக்கும் தொலைபேசியில் வாழ்த்துக்கள் கூறவில்லை..

**************************

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

பகல் நேரங்களில் ஊர் சுத்துவேன்..இரவு நேரங்களில் வீடு வந்துவிடுவேன்..

**************************

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

இதுவரை செய்ததில்லை..இனிமேல் செய்ய ஆசை உண்டு..

**************************

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

லோகு..(அச்சம் தவிர்)


.ஞானசேகரன்..(அம்மா அப்பா)


எவனோ ஒருவன்..(அதி பிரதாபன்)


பீர் முகமது..(ஜெய்ஹிந்துபுரம்)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS