சின்ன சின்னதாய் "16"


பசிக்கும்போது
உண்ணா விட்டால்...
நீ உண்ணும்போது
உனக்கு பசிக்காது..!!

******************
சான்றோர் புத்திமதி கேளான்..
சறுக்கியதும் தானும் புத்திமதி
சொல்ல தொடங்குவான்..??
******************
போதைக்கு...
ஒரு கோப்பை மது போதும்...
தெளிவதற்கோ..?
******************
நீந்த கற்றுகொண்டால்....
இரும்பும் கூட நீரில்
மிதக்கும்..!!
******************
பலமணிநேர சிந்தனவாதியின் வெற்றி..
நொடி பொழுதில் தீர்மானிக்க பட்டுவிடும்..!!
******************
நிலைப்பதாய்
இருந்தால் நேசி...
கிடைக்கும் என்றால்
முயற்சி செய்..!!
******************
'குப்பையை' பேசி..
கோபுரத்தில் சுகிக்கிறது ஒரு கூட்டம்..?!
கோபுரத்தை கனவு கண்டு..
குப்பையிலேயே மடிகிறது ஒரு கூட்டம்..!
******************
எது சலிக்காமல்
கிடைக்கிறதோ...
அது விரைவில்
சலித்து விடும்...!!?
******************
எத்தனை எழுதினாலும் தீரவே மாட்டேன் என்கிறது...?
என் பேனா மையும்....
உன்னை பற்றிய கவிதைகளும்...!!
******************
கொண்டு வருகிறேன்...தினமும்..,
கொடுக்கத்தான் முடிந்ததில்லை ஒருமுறை கூட...
ரோஜாவும்...
என் கடிதமும்..!!
******************
கரண்ட் கம்பியில் சிட்டுகுருவிகளுக்குள் சண்டை
மேல் கூரை இல்லாத குளியலறையில்
அவள் குளிக்கிறாள்..!!
******************
நீ பயணிக்கும் அந்த பேருந்தில் அனைவரும்
புரிந்து கொண்டார்கள்-என் காதலை..
உன்னை தவிர...!!!
******************
உன்னிடம் பேச சேர்த்துவைப்பேன் வார்த்தைகளை...
'அனுமன் வால்'போல
உன்னை பார்த்தும்...
கரைந்து போகும் அத்தனையும் 'கற்பூரம்' போல...!!
******************
உன்னை மட்டுமே அன்பு செய்யும் என்னை பார்த்தும்
உனக்கு கோபம் வருவதுபோல்..
என்னை தவிர உன்னை யார் அன்பு செய்தாலும் ஏனோ
எனக்கு கோபம் வருகிறது..!!
******************
உன்னால் தான் 'விடியல்'
எத்தனை அழகானது என்று தெரிந்துகொள்ள முடிந்தது..?!
உன்னால் தான் 'அஸ்தமனம்'
எத்தனை கொடுமையானது என்றும் தெரிந்து கொண்டேன்..!!
******************
நம் குழந்தைக்கு சோறூட்ட
நிலவை தேடிகொண்டிருக்க வேண்டியதில்லை...
நீதான் இருக்கிறாய் அல்லவா பக்கத்திலேயே..!!
******************
டிஸ்கி:- இவை அனைத்தும் எனது மொபைலுக்கு வந்த குறுந்தகவல்களே..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

17 பின்னூட்டங்கள்:

Unknown said...

நன்றாய் இருக்கிறது....
குறுஞ்செய்திகளில் நல்ல விடயங்கள் பரிமாறப்படுவது நல்ல விடயம்...
நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள் போல...
வாழ்த்துக்கள் சகோதரா....

லோகு said...

நல்லாருக்கு மாப்ள.....

coolzkarthi said...

Good one bro....

அன்புடன் நான் said...

கரண்ட் கம்பியில் சிட்டுகுருவிகளுக்குள் சண்டை
மேல் கூரை இல்லாத குளியலறையில்
அவள் குளிக்கிறாள்..!!//

கொண்டு வருகிறேன்...தினமும்..,
கொடுக்கத்தான் முடிந்ததில்லை ஒருமுறை கூட...
ரோஜாவும்...
என் கடிதமும்..!!//

நீ பயணிக்கும் அந்த பேருந்தில் அனைவரும்
புரிந்து கொண்டார்கள்-என் காதலை..
உன்னை தவிர...!!!


நம் குழந்தைக்கு சோறூட்ட
நிலவை தேடிகொண்டிருக்க வேண்டியதில்லை...
நீதான் இருக்கிறாய் அல்லவா பக்கத்திலேயே..!!//


அத்த‌னையையையும்... ர‌சித்தேன் மிக‌ அருமை.

சொல்லரசன் said...

//இவை அனைத்தும் எனது மொபைலுக்கு வந்த குறுந்தகவல்களே.//

அனுப்பியது யார்?

வால்பையன் said...

//போதைக்கு...
ஒரு கோப்பை மது போதும்...
தெளிவதற்கோ..?//

கன்னத்தில்
ஒரு அப்பு
போதும்!

தேவன் மாயம் said...

எத்தனை எழுதினாலும் தீரவே மாட்டேன் என்கிறது...?
என் பேனா மையும்....
உன்னை பற்றிய கவிதைகளும்...!!
//

ஆகா!!!ஊற்றுக்கு ஏது முடிவு!!

தேவன் மாயம் said...

அன்பு ஓட்டும் போட்டாச்சி!!

Unknown said...

//.. எது சலிக்காமல்
கிடைக்கிறதோ...
அது விரைவில்
சலித்து விடும்...!!?
******************
எத்தனை எழுதினாலும் தீரவே மாட்டேன் என்கிறது...?
என் பேனா மையும்....
உன்னை பற்றிய கவிதைகளும்...!! ..//

இந்த ரண்டும் முரண்பாடா இருக்கு.. :-))

உங்கள் தோழி கிருத்திகா said...

super anbu :)

cheena (சீனா) said...

ஹேய் அன்பு

எல்லாக் குறுந்தகவல்களும் அருமை

எலெக்ட்ரிக் கம்பி குருவிகள் சண்டை - அடடா - வாலிப வயதுக் குறும்பு

ம்ம்ம் - நல்லாருக்குடா நல்வாழ்த்துகள்

ரோஸ்விக் said...

அனைத்தும் அருமை! பகிர்விற்கு நன்றி.

விக்னேஷ்வரி said...

நிலைப்பதாய்
இருந்தால் நேசி...
கிடைக்கும் என்றால்
முயற்சி செய்..!! //
அப்படியா... எனக்கு சரியா தெரியலையே...

'குப்பையை' பேசி..
கோபுரத்தில் சுகிக்கிறது ஒரு கூட்டம்..?!
கோபுரத்தை கனவு கண்டு..
குப்பையிலேயே மடிகிறது ஒரு கூட்டம்..! //
இது நல்லாருக்கு.

உண்மையாவே குறுந்தகவல்கள் தானா... ஏதாவது சொந்த சரக்கும் இருக்கா.... ;)

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு அன்பு.... அந்த குழந்தை ??????

Anbu said...

நன்றி கனககோபி அண்ணா..

நன்றி மச்சான்...

நன்றி கார்த்தி அண்ணா..

நன்றி கருணாகரசு அண்ணா,,

நன்றி சொல்லரசன் அண்ணா..அனுப்பியது எல்லாம் ஒரு கேர்ள் பிரண்ட் தான்....

நன்றி வால் அண்ணே...

நன்றி டாக்டர் சார்...

நன்றி பட்டிக்காட்டான் அண்ணா..

நன்றி கிருத்திகா அக்கா..

நன்றி சீனா சார்..

நன்றி விக்னேஷ்வரி அக்கா...சொந்த சரக்கெல்லாம் இல்லை..

நன்றி ஞானசேகரன் அண்ணா...அந்த குழந்தை நான்தான்...

அன்புடன் அருணா said...

சொந்தமா நல்லா எழுதுறீங்களேன்னு நினைச்சுட்டு வந்தேன்!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

super.:-))))))))