கண்டதும் கேட்டதும்..(23.11.2009)


நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் கிரிக்கெட் விளையாடிவிட்டு ஏழு மணிக்கு எங்கள் "வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினை" கூட்டினோம்.. நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் ஒருவன் மட்டும் "மச்சி வீட்டில கொஞ்சம் வேலை இருக்குடா" என்று கிளம்பினான்..எங்க சங்கத்தில் அவன் ஒருவன் மட்டும் விஜய் ரசிகன்..சரி போயிட்டு வாடா என்று சொன்ன பிறகு தான் ஞாபகத்துக்கு வந்தது "வேட்டைக்காரன் ஆடியோ ரிலிஸ்"..நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது விஜயின் ரசிகனாக இருந்த காரணத்தினாலும்,வேறு பொழுதுபோகவில்லை என்ற காரணத்தினாலும் எங்க ஊர் பஞ்சாயத்து தொலைக்காட்சியில் அனைவரும் அந்த அரிய நிகழ்ச்சியினை பார்த்தோம்..அங்கே போனவுடன் எனக்கே அதிசயமாக இருந்தது..எங்க ஊரிலுள்ள சின்ன பசங்க எல்லாம் (நல்லா கவனிக்கவும் சின்னப்பசங்க) அங்க ஒரே ஆர்ப்பாட்டம்..."புலி உறுமுது புலி உறுமுது" என்ற பாடல் வந்தவுடனே விஜய் காரில் வந்து இறங்குவார்..அதை பார்த்தவுடன் புதியகீதை என்ற மெஹா கிட்டான படமே எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.

அனுஷ்கா பார்க்க அழகாக இருக்கிறார்..அனுஷ்காவுக்காக படத்துக்கு போகலாம் என்று இருக்கிறேன்..யாராச்சும் வர்ரீங்களா..

******************************

நான் கிரிக்கெட் ஆடிய வராலாற்றிலே நேற்றுதான் என் அதிகபட்ச ஸ்கோரினை பதிவு செய்தேன்..வழக்கமாக 10 ரன்களுக்கு மேல் தாண்டமாட்டேன்..காலையில் நடந்த ஆட்டத்தினில் 20 அடித்த காரணத்தினாலும்,தொடக்க ஆட்டக்காரனாக இறங்குபவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் மாலையில் நடைபெற்ற போட்டியில் எங்கள் அணி கேப்டன் என்னை தொடக்க ஆட்டக்காரனாக என்னை களமிறக்கினான்..முதல் ரன்னை எடுப்பதற்குள் மூன்று ஓவர் முடிந்துவிட்டது...இருப்பினும் மனதை தைரியப்படுத்தி 12 ஓவர் முடிவுக்குள் 42 ரன் அடித்தேன்..எங்கள் அணியின் எண்ணிக்கை 110.தொடரின் முதல் சுற்றில் வெற்றி..இனிவரும் போட்டிகளிலும் வென்று கோப்பையை கோப்பையை கைப்பற்றிவிடலாம் என்று நினைக்கிறேன்..

ஆட்டநாயகன் விருது கொடுத்தவுடன் எல்லோரும் என்னை பாராட்ட,,வழக்கமாக களமிறங்குபவன் என்னை ஒரு வெறியோடு ஏற இறங்கிப்பார்த்தான்...

******************************

நேற்று இரவு விஜய் டி.வி.யில் நீயா நானா நிகழ்ச்சியின் தலைப்பு வட இந்திய பெண்கள் அழகானவர்களா..? தென்னிந்திய பெண்கள் அழகானவர்களா..? என்ற தலைப்பில் தொடங்கிய நிகழ்ச்சி இறுதியில் வட இந்திய ஆண்கள் அழகானவர்களா..இல்லை தென்னிந்திய ஆண்கள் அழகானவர்களா என்ற விவாதத்திற்கு போனது..அவங்க நம்மளை திட்ட நம்ம பொண்ணுங்க அந்த பசங்களை திட்ட கண்களில் ரத்தக்கண்ணீர்தான் வந்தது...

******************************

என்னதான் பசங்க கட்டுக்கோப்பா மனசை வச்சு இருந்தாலுமே ஒரே ஒரு கால் பண்ணி நம்ம மனசை கவுத்திவிடுறாங்க...

1.சாப்பிடியாடா செல்லம்..
2.உன்னோட எஸ்.எம்.எஸ்.ரொம்ப நல்லா இருந்ததுடா..எனக்காக தானே எழுதின..
3.உனக்கும் எனக்கும் ஒரே டேஸ்ட் தெரியுமா..
4.இன்னிக்கு நீ போட்டிருக்கிற சட்டை ரொம்ப சூப்பர்..நான் நாளைக்கு அதே கலர்தான் சுரிதார் போடப்போறேன்..
5.கேன்-டீன்ல மீட் பண்ணலாம்டா செல்லம்..
6.தியேட்டருக்கு போலாமாடா.
7.படிக்கும் போது கூட புத்தகத்துல உன் முகம் தெரியுதுடா..
8.என்னோட பர்ஸ்ல எப்போதுமே உன் போட்டா இருக்கு தெரியுமா..

இன்னும் இதுபோல நிறைய இருக்கு..

******************************

நகைச்சுவை:-

காதல் என்பது..

"வேட்டைக்காரன்" பட டிரெயிலர் மாதிரி..

பார்க்கதவன் பார்க்க துடிப்பான்..

பார்த்தவன் சாகத்துடிப்பான்...

******************************

தத்துவம்:-
காதல் வர காரணம் கண்கள்..
கண்களில் கண்ணீர் வர காரணம் பெண்கள்..
பெண்களின் இதயம் ஒரு செங்கல்..
அதை உடைக்க முடியாமல் தவிப்பது ஆண்கள்..

******************************

கவிதை:-
அத்தை பையன் என
தோழிகளிடம்
என்னை அறிமுகப்படுத்தையில்
வந்த வெட்கத்தை
மறைக்க முயன்றாயே..
அந்த நொடி
ஆயிரம் கவிதைகளுக்கு சமம்.

******************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

19 பின்னூட்டங்கள்:

முரளிகண்ணன் said...

சுவையாக எழுதியிருக்கிறீர்கள் எல்லாவற்றையுமே

வால்பையன் said...

அடுத்த சச்சின் வாழ்க!

லோகு said...

//என்னதான் பசங்க கட்டுக்கோப்பா மனசை வச்சு இருந்தாலுமே ஒரே ஒரு கால் பண்ணி நம்ம மனசை கவுத்திவிடுறாங்க...
1.சாப்பிடியாடா செல்லம்..
2.உன்னோட எஸ்.எம்.எஸ்.ரொம்ப நல்லா இருந்ததுடா..எனக்காக தானே எழுதின..
3.உனக்கும் எனக்கும் ஒரே டேஸ்ட் தெரியுமா..
4.இன்னிக்கு நீ போட்டிருக்கிற சட்டை ரொம்ப சூப்பர்..நான் நாளைக்கு அதே கலர்தான் சுரிதார் போடப்போறேன்..
5.கேன்-டீன்ல மீட் பண்ணலாம்டா செல்லம்..
6.தியேட்டருக்கு போலாமாடா.
7.படிக்கும் போது கூட புத்தகத்துல உன் முகம் தெரியுதுடா..
8.என்னோட பர்ஸ்ல எப்போதுமே உன் போட்டா இருக்கு தெரியுமா..

இன்னும் இதுபோல நிறைய இருக்கு.//

அடப்பாவி, அவ்வளவு நல்லவனா நீ???

லோகு said...

//இருப்பினும் மனதை தைரியப்படுத்தி 12 ஓவர் முடிவுக்குள் 42 ரன் அடித்தேன்..எங்கள் அணியின் எண்ணிக்கை 110.தொடரின் முதல் சுற்றில் வெற்றி..இனிவரும் போட்டிகளிலும் வென்று கோப்பையை கோப்பையை கைப்பற்றிவிடலாம் என்று நினைக்கிறேன்//

கலக்குங்க சச்சின்..

தேவன்மாயம் said...

அத்தை பையன் என
தோழிகளிடம்
என்னை அறிமுகப்படுத்தையில்
வந்த வெட்கத்தை
மறைக்க முயன்றாயே..
அந்த நொடி
ஆயிரம் கவிதைகளுக்கு சமம்.
///

இந்த ஒரு கவிதை போதும்!!

கார்த்திகைப் பாண்டியன் said...

ஏயப்பா.. அந்த டிரைலரைபார்த்தே நான் டரியலாகிப் போய் கிடக்கிறேனேப்பா.. அதுலயும் கிப்பி முடியெல்லாம் வச்சு ஒரு பாட்டுக்காக கெட்டப்பு சேஞ்சு பண்ணியிருக்காரு பாருங்க...அவ்வ்வ்வ்

Subankan said...

இந்தியாவுக்கு அடுத்த பேட்ஸ்மென் ரெடியாகுறாரா?

விஜய் - சேம் பிளட்

வேட்டைக்காரன் டிரெயிலர் கலக்கல்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பதிவு.வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

நகைசுவை, கவிதை , தத்துவம்.... எல்லாமே அமர்களம்.... நல்லாயிக்கையா>>>

சங்கர் said...

//அனுஷ்கா பார்க்க அழகாக இருக்கிறார்..அனுஷ்காவுக்காக படத்துக்கு போகலாம் என்று இருக்கிறேன்..யாராச்சும் வர்ரீங்களா..//

ஒரு பிளைட்டு பிடிச்சு ஆந்திரா போய் நேர்லயே வேணும்னாலும் பாத்துட்டு வந்துடலாம், தியேட்டருக்கு போற விஷப்பரிட்சை எல்லாம் வேண்டாம்

cheena (சீனா) said...

வணக்கம் வாலிப அன்பரே - நீ வாலிபனாகி விட்டாய் என்பதனை ஒத்துக்கொள்கிறோம். சின்னப்பசங்க சகவாசம் எல்லாம் இனி வேணாம் - வருத்தமில்லாத ( வருத்தப்படாத வேண்டாம் ) வாலிபனாக வாழ். அத்தனையும் அருமை -

இசைவெளியீட்டுவிழா - கிரிக்கெடி ஆடினியாக்கும் -

அனுஷ்கா பாக்கற வாலிபந்தான் - போய்ப் பாரு - வாலிப நண்பர்களுடன் போ =

நீயா நானா பொதுவா நல்லா இருக்கும் - இது திருஷ்டிப் பரிகாரம்

ஒரு நாளைக்கு எத்தனை கால்டா வருது

கவிதை சூப்பர் - தத்துவம் பரவா இலல் - நகைச்சுவை ஹா ஹா ஹா

நல்வாழ்த்துகள் வாலிப நண்பா அன்பு

யோ வொய்ஸ் (யோகா) said...

கலக்கல்

S.A. நவாஸுதீன் said...

கண்டதும் கேட்டதும் கலகலப்பா இருக்கு. கவிதை சூப்பர்.

விக்னேஷ்வரி said...

அனுஷ்கா பார்க்க அழகாக இருக்கிறார்..அனுஷ்காவுக்காக படத்துக்கு போகலாம் என்று இருக்கிறேன்..யாராச்சும் வர்ரீங்களா.. //
ரைட்டு. நடத்துங்க.

முதல் ரன்னை எடுப்பதற்குள் மூன்று ஓவர் முடிந்துவிட்டது... //
ஏன் தம்பி இப்படி...

அவங்க நம்மளை திட்ட நம்ம பொண்ணுங்க அந்த பசங்களை திட்ட கண்களில் ரத்தக்கண்ணீர்தான் வந்தது... //
ஹாஹாஹா...

என்னதான் பசங்க கட்டுக்கோப்பா மனசை வச்சு இருந்தாலுமே ஒரே ஒரு கால் பண்ணி நம்ம மனசை கவுத்திவிடுறாங்க... //
ரொம்ப அனுபவமோ...

நகைச்சுவை நல்லாருக்கு. :)

டி.ஆர்.ரசிகராகிட்டீங்களா, தத்துவமெல்லாம் கொட்டுது.

கவிதை நல்ல ரசனை.

பாலகுமார் said...

//என்னதான் பசங்க கட்டுக்கோப்பா மனசை வச்சு இருந்தாலுமே ஒரே ஒரு கால் பண்ணி நம்ம மனசை கவுத்திவிடுறாங்க... //

அது தானே அன்பு... அதுவே தான் !!!

மணிகண்டன் said...

நல்லா எழுதறீங்க அன்பு. கலக்குங்க. உங்களுக்கு எதிரா பவுல் பண்ணினவனுக்கு என்ன வாங்கி கொடுத்தீங்க ? :)- தமன்னா படம் நல்லா இருக்கு !

சிங்கக்குட்டி said...

அன்பு பதிவு ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள்.

சத்ரியன் said...

//பூமியில் நகரும் பேருந்து,
என்னை மட்டும்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பயணிக்க வைக்கிறது...//

அன்பு,

பயணிப்பது நீங்கள். வியப்பது நான்.

அழகான வரிகள்.

(குறிப்பு:- நாளைக்கும் இதே பேருந்தில் வரச் சொல்லவா ராசா?

thiyaa said...

நல்வாழ்த்துகள்