கடலை! கடலை! கடலை!கடலை ரசித்தபடி
கடலைப் பார்த்தவாறு காற்றுவாங்கி
கடற்கரையில் தோழியுடன் இருக்கையில்
கடலை கடலை என்றான் சிறுவன்!
கடலை பொட்டலம் வாங்கி
கடலை சாப்பிட்டவாறே பேசிக்கொண்டிருந்தோம்!
கடலைக் காணவந்தவன் ஒருவன்
கடலைப் பார்த்தபடி அருகில் வந்து
கடலையா.................? என்றான்!
கடலை தான் கேட்கிறான் என்று
கடலைப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு
கடலைப் பார்த்தது போதுமென்று
கடலை விட்டு நீங்கி செல்கையில்
கடற்கரையில் கடலையா? எனக்கேட்டவன் கேட்ட
கடலை என்னவென்று தோழி எனக்கொரு
கடலை வகுப்பெடுத்தாள்!
கடலை போடுவது பற்றி!
கடலையில் இப்படியும் ஒரு வகையா? என
கடற்கரையை நினைத்து நகைத்தேன்!
கடலலைபோல் அவளும் சிரித்தாள்! நிலம் பார்த்தவாறு!

குறிப்பு:- மீள்பதிவு....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

10 பின்னூட்டங்கள்:

கார்த்திகைப் பாண்டியன் said...

அய்யா சாமி.. முடியல..:-))

செந்தில்குமார் said...

வணக்கம் அன்பு

கடலையோ கடலை...

அருமை லேசா குருதி என்காதுகளில் வளிய ஆரம்பிக்குது


செந்தில்குமார்...........

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

கவிதை அருமை - கடலை என்ற ஒரு சொல்லினை வைத்து ஒரு நல்ல படத்துடன் ஒரு அழகிய கவிதை வரைந்ததற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் அன்பு

தொடர்க திறமையினை

நட்புடன் சீனா

ஜெட்லி... said...

:))

Unknown said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

தம்பி.அருமை

ஆர்வா said...

ஒரே வார்த்தையில மொத்த மேட்டரையும் சொல்லிட்டீங்க.. நல்லா இருக்கு அன்பு

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

கார்க்கிபவா said...

//ஒரு அழகிய கவிதை வரைந்ததற்குப் பாராட்டுகள்//

இவரு நக்கலுக்கு ஒரு அளவே இல்லைங்கண்ணா :))

chinnathambi said...

என்ன கொடுமை சார்?

இந்த வயசில கடலை நல்லாதான் இருக்கும்