எனக்கு எல்லாம் கஷ்டம் அப்படின்னா என்னவென்று கூட தெரியாதுங்க. என்னோட வாழ்க்கையில (நீ அப்படி என்னடா வாழ்ந்துட்டன்னு அத்திரி அண்ணன் கேட்காதீங்க..) இதுவரை நான் அழுதிருப்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்..நான் கடைசியா அழுதது கூட 3-ம் வகுப்பு படிக்கும் போது 2-வது ரேங்க் வந்ததுக்காக எங்கம்மா என்னை பூரிக்கட்டையாலே அடிச்சாங்க, அப்பத்தான் அழுதேன், அதுகூட அடிக்கிறதை நிப்பாட்டனுமே அப்படிங்கிறதுக்காக... இப்படி இருந்த நான் நேத்து மதியம் குப்புறபடுத்து விஜய் டி.வி.யில் "விஜய் அவார்ட்ஸ்" என்னும் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன்.. அந்த நிகழ்ச்சி என்னவோ பல மாதத்துக்கு முன்னாடியே போடப்பட்டது தான் என்றாலும் இந்த மானிடனால் நேற்றுதான் பார்க்க முடிந்தது..அப்போது 2009ம் வருடத்துக்கான சிறந்த NEW COMER FEMALE என்னும் விருது "நாடோடிகள் அபிநயா" வுக்கு கொடுக்கப்பட்டது..அந்த விருதை வாங்கியவுடன் அவங்க உணர்ச்சி பொங்க பேச ஆரம்பிக்க அவளது இயலாமையை அறிந்து கண்களில் இருந்து கண்ணீர் வந்துகொண்டிருந்தது.. அவளின் அழுகையை கண்டவுடன் என்னமோ தெரியலைங்க என்னையும் அறியாமலே என் கண்கள் கலங்கின...
HATS OFF ABINAYA
சமீபத்தில் நான் பார்த்த படங்களிலேயே என்னை ரொம்ப கவர்ந்த படம் களவாணிதாங்க..மூன்று நிதிகளின் பிரச்சினையால் எங்கள் ஊரில் ஒரு பிட்டுபட தியேட்டரில் அந்த படத்தை ஓட்டினார்கள்.. சரி, நல்ல படத்தை எங்க போய் பார்த்த என்ன என்று எண்ணிக்கொண்டு வழக்கம்போல் ஓனரின் உபயத்தோடு படத்துக்கு சென்றேன். படம் நன்றாக இருந்தாலும் படம் பார்த்த இடம் சரியில்லை என்பதால் படம் மனதில் அவ்வளவாக நிலைக்கவில்லை..இருப்பினும் ஹரிஸ் ராகவேந்திராவின் குரல் மட்டும் நெஞ்சில் ஒலித்துக்கொண்டு இருந்தது..சரி இருக்கவே இருக்கு திருட்டு டி.வி.டி என்று வாங்கிவிட்டேன்..இதுவரை இரண்டு நாளில் நான்கு முறை பார்த்தாச்சு.. படம் பார்த்ததன் விளைவா என்னவென்று தெரியலை, தோழி பேசும் போதெல்லாம் "கட்டிக்கிறேன்னு சொல்லு" என்று சொல்லச்சொல்கிறேன்..படத்தின் கதாநாயகி ஓவியாவுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்ங்க..
நான் எப்போதுமே கிரிக்கெட் விளையாடும் போது ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருப்பேன்..கடந்த சில வாரங்களாக நான் சரியாக விளையாடாத காரணத்தினால், வழக்கமாக நான்காவது ஆளாக களமிறங்கும் நான் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தேன்.. சரி டீம்லயாவது சேர்த்துக்குறாங்களே அப்படிங்கிற நம்பிக்கையில நானும் விளையாட போனேன்.. நேத்து எங்களுக்கும் எங்கள் ஊரின் அருகில் உள்ள விஸ்வநத்தம் என்கிற ஊருக்கும் மேட்ச்.. முதலில் பேட் செய்த அவர்கள் 16 ஓவர்களுக்கு 96 ரன் அடிச்சாங்க.. நாங்களும் திரும்ப மன தைரியத்தோட களமிறங்கி நல்லாத்தான் விளையாடுனோம்.. நானோ சந்தோஷமாக இருந்தேன், நல்லவேளை நாம இன்னிக்கு இறங்க வேண்டி இருக்காது என நினைத்துக்கொண்டிருக்கையில் வரிசையாக எல்லோரும் பேட்டை கொண்டுபோவதும், திரும்ப கொண்டு வருவதுமாய் இருந்தனர்.. இறுதியில் 1 ஒவருக்கு 4 ரன்கள் என்று இருக்கையில் நான் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படவே மனதை தைரியப்படுத்திக்கொண்டு களமிறங்கினேன்.. நான் சந்தித்த முதல் பந்தே பவுன்சர்.. நான் அம்பயரிடம் நோ-பால் கேட்க, அம்பயர் என்னை பார்த்து நீ இன்னும் வளரணும் தம்பி என்றார்.. கேட்டு அசிங்கப்பட்டுடீயேடா அன்பு என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அடுத்த பந்தை வீச அதுவும் கீப்பர் கைக்கே போனது. கீப்பர் தவறவிட்டவுடன் என்னோட பாட்னர் மிகவும் சிரத்தை ஓடி வர நானும் ஓடினேன்..அப்பாட தப்பிச்சோம் அப்படின்னு நினைக்கும் போதே பாவிப்பையன் சிங்கிள் தட்டிவிட்டான்..கடைசி 3 பந்து 2 ரன்கள்.. மனதிற்குள் ஆரோமலே பாடல் ஒலிக்க நானும் எப்படியாவது அடிக்கவேண்டும் என்று எத்தனிக்க மறுபடியும் மிஸ்ஸிங்.. இம்முறை கீப்பர் என்னருகே நிற்பதனால் பைஸ் ரன் கூட எடுக்கமுடியவில்லை. 2 பந்துகள் 2 ரன்கள்.. சிங்கம் சிங்கம் He is துரை சிங்கம் என்று முணுமுணுத்துக்கொண்டே மட்டையை ஓங்கினேன்.. என்னையும் அறியாமல் பந்து தானாகவே மட்டையில் பட்டு பவுண்டரி லைனை தொட்டது..அன்பு என்னிக்குமே நீ சிங்கம்தான்டா...
தயவு செய்து படிக்கிற மக்கள் கமெண்ட் போடுங்க.. வாழ்த்த மனமில்லை என்றாலும் ரெண்டு வார்த்தை திட்டிட்டாவது போங்க..
HATS OFF ABINAYA
**********************

15 பின்னூட்டங்கள்:
keep it up....
எலே நீ சிங்கம்தான்லே!!!
வாழ்த்துகள் அன்பு.... நலமா?
//தோழி பேசும் போதெல்லாம் "கட்டிக்கிறேன்னு சொல்லு" என்று சொல்லச்சொல்கிறேன்..//
தம்பி பால்ய விவாகம் பண்ணினா போலிஸ் புடிச்சுக்கும் ஜாக்குரதை
அபிநயா வா இல்ல அனன்யா வா
வாழ்த்துகள் அன்பு!! :)
///வாழ்த்த மனமில்லை என்றாலும் ரெண்டு வார்த்தை திட்டிட்டாவது போங்க..///
ச்சீ த்த்தூ...
சும்மா தான் பாஸ் கோச்சுகாதீங்க!!!
ean pa eppadi
மக்கா சிவகாசியா நீ .. போஸ்ட் நல்லா தான் எழுதுற .. நன்க சாத்தூர் பா ... ரொம்ப நெருங்கிட்ட :)
திருட்டு VCD ல படம் பார்க்கும் உங்களுக்கு, அந்த 3 "நிதி " களை பற்றி பேச என்ன இருக்கிறது ?
ஹிஹி.. எப்படியோ ஜெயிச்சிட்ட இல்ல.. விடு
தோழியா?????ஆவ்வ்வ்வ்வ்
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
ஒரு சின்ன கட்டுரை நகைசுவையோடு கலந்த அரசியல் உண்மைகள்............வாழ்த்துகள் அன்பு
Post a Comment