நான் மகான் அல்ல...விமர்சனம்!


கதை என்னவென்றால்...அட நிறுத்துங்க,நமக்கெல்லாம் எதுக்கு பாஸ் கதை.. கொடுக்குற 50 ரூபாய்க்கு நல்லா டைம்பாஸ் ஆகுதா அப்படின்னு கேட்டீங்கன்னா நீங்க என் கூட்டாளிங்க..

இல்லை..நாங்க படம் பார்த்தா அதுல ஒரு இலக்கணம்,இலக்கியம் வேணும்... காலேஜ் பசங்க எல்லாம் லவ் பண்ணக்கூடாது..சிகரெட்,கஞ்சா அடிக்கக்கூடாது.. காலேஜ் பசங்க அப்படின்னா புத்தகம் தான் படிக்கணும்... படத்துல ஒரு கதை இருக்கணும்.. கதாநாயகி சேலை மட்டும்தான் கட்டணும்..அப்படின்னு நினைக்கிறவங்க தயவு செய்து படத்திற்கு போகாதீங்க..அப்புறம் படம் பார்த்துவிட்டு, என்ன இந்த படத்துல காலேஜ் பசங்க கஞ்சா அடிக்கிறாங்க..இதை பார்த்துதான் எங்கூர் பசங்க எல்லாம் கெட்டு போறாங்க அப்படின்னு கண்டனப்பதிவு போடாதீங்க...

சரி விடுங்க படத்துக்கு வருவோம்...

கதை என்னன்னு கேட்டீங்கன்னா.. காலேஜ் படிக்கிற ஐந்து பசங்க போதைக்கு அடிமையாகி ஒரு காதல் ஜோடியை கொலை பண்றாங்க..அதுக்கு ஒரே சாட்சியா கதாநாயகனோட அப்பா..அவரையும் அந்த பசங்க கொலை பண்றாங்க.. தன் அப்பாவை கொன்ற அந்த பசங்களை திருப்பி பழி வாங்குவதே மீதிக்கதை.. இதற்கிடையில் காஜல் அகர்வாலுடன் காதல் கொள்ளும் கார்த்தி, என திரைக்கதையை மிகவும் நேர்த்தியாக நகர்த்தியுள்ளார் சுசீந்தரன்..

படத்தில் காலேஜ் பசங்களாக நடித்துள்ள ஐந்து பேரும் எக்ஸ்டிரானரி பெர்பார்மன்ஸ்.. அதிலும் நந்தா படத்தில் குட்டி சூர்யாவாக நடித்தவர் இதில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.. அதிலும் அவரது கண் சொல்லவே வேணாம்.. அப்புறம் பரட்டைத்தலையன், இந்த ஐந்து பேருக்கு துணை போகும் மாமா என எல்லோரும் தங்களது வேலையை கனகச்சிதமாக செய்துள்ளனர்...

காஜல் அகர்வால் முதல் பாதியில் காதலிக்க வருகிறார்..இரண்டாவது பாதியில் இரண்டு நிமிடம்.. ஒரு பாடல்.. அவ்வளவுதான்..

கார்த்தியின் தந்தையாக வரும் ஜெயபிரகாஷ் மிக அருமை...எல்லோருக்கும் இதே போல் அப்பா அமைந்தால் யோகம்தான்...

மற்றபடி வெண்ணிலா கபடிகுழுவில் வரும் 50 புரோட்டா சாப்பிடுபவர், குப்பத்தில் வசிக்கும் தாதா, இன்னும் நிறைய பேரை இயக்குனர் மிகச்சரியாக கையாண்டுள்ளார்..

படத்தின் இரண்டாவது ஹீரோ யுவன்... ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாயிருக்கும் நிலைமையில் படத்தின் பேக்கிரவுண்ட் மியூசிக்கிலும் கலக்கி இருக்கிறார்..

ஒளிப்பதிவாளர் மதி, எடிட்டர், சண்டைப்பயிற்சி அனல் அரசு, என எல்லோரும் ரவுண்டி கட்டி அடித்துள்ளனர்..

முதல் பட வெற்றிக்குப்பின் சுசீந்திரன், நகரத்தை மையமாக கொண்டு ஒரு கமர்சியல் ஹிட் கொடுத்துள்ளார்..

படத்தின் நாயகன் கார்த்தி, முதல் பாதியில் எப்போது பார்த்தாலும் சிரித்த முகத்துடனே இருக்கிறார்.. இவர் நடிக்கும் படத்தில் காமெடி பண்ண தனியாக ஆட்கள் தேவையில்லை.. இதுக்கு மேல் இவரை பற்றி சொன்னா சூர்யா தம்பி அப்படிங்கிறதால தான் இவன் இப்படி பேசுறான்னு சொல்லுவீங்க.. :-))

நான் மகான் அல்லா - இறகை போலே பறக்கிறேனே..

______________________


படத்தின் இடைவேளையின் போது தல நட(டி)க்கும் மங்காத்தா டிரெய்லர் போடப்பட்டது.. டிரெய்லர் போட்டதிலிருந்து ரசிகர்களின் அமைதிக்கு அளவே இல்லை.. பக்கத்திலிருந்தவர் உடனே என்னிடம் சொன்னார்.. அதை ஏன் என்னை பார்த்து சொன்னார்ன்னு தெரியலை..

ஏன் எல்லோரும் அமைதியா இருக்காங்க தெரியுமா? என்றார்..

தெரியலையே அண்ணே..

இத்தனை நாளா நடந்த தல இப்போ தான் உட்கார்ந்து இருக்கார்.. ஒருவேளை நடந்து நடந்து கால்வலி வந்துருச்சோ அப்படின்னு எல்லாம் பீல் பண்ணிருப்பாங்க என்றார்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

8 பின்னூட்டங்கள்:

Raju said...

ஏலே தம்பி, அருவா தெரியுமா அருவா..?

மவனே,ஓட ஒட விரட்டி விரட்டி வெட்டுவேன்.

வினோத் கெளதம் said...

:)

Ramesh said...

Vimarsanam arumai. Trailer vimarsanam adhaivida arumai..

கார்த்திகைப் பாண்டியன் said...

//இல்லை..நாங்க படம் பார்த்தா அதுல ஒரு இலக்கணம்,இலக்கியம் வேணும்... காலேஜ் பசங்க எல்லாம் லவ் பண்ணக்கூடாது..சிகரெட்,கஞ்சா அடிக்கக்கூடாது.. காலேஜ் பசங்க அப்படின்னா புத்தகம் தான் படிக்கணும்... படத்துல ஒரு கதை இருக்கணும்.. கதாநாயகி சேலை மட்டும்தான் கட்டணும்..அப்படின்னு நினைக்கிறவங்க தயவு செய்து படத்திற்கு போகாதீங்க..அப்புறம் படம் பார்த்துவிட்டு, என்ன இந்த படத்துல காலேஜ் பசங்க கஞ்சா அடிக்கிறாங்க..இதை பார்த்துதான் எங்கூர் பசங்க எல்லாம் கெட்டு போறாங்க அப்படின்னு கண்டனப்பதிவு போடாதீங்க...//

அன்பு.. இது எனக்காக எழுதுனதா..:-)))

இல்லை என்றாலும் நான் எழுதிய “காதல் சொல்ல வந்தேன்” விமர்சனத்துக்கும் இந்த வார்த்தைகள் பொருந்தும் என்பதால் இந்த விளக்கம்..

படத்துல இலக்கணம், இலக்கியம் எல்லாம் இருக்கணும்னு நான் எப்பவுமே சொல்லல.. கமெர்ஷியல் படங்களுக்கு நான் எதிரியும் அல்ல.. எடுத்துக்காட்டா உனக்குப் பிடிச்ச சிங்கத்தையே எடுத்துக்குவோம்.. படம் போரடிக்காம நல்லாயிருந்தா சரின்னு நினைக்கிறவன் நான்.. ஆனா எதுக்கும் ஒரு வரைமுறை இருக்கு இல்லையா?

இப்பத்தான் “நான் மகான் அல்ல” பார்த்துட்டு வரேன்.. இதுல வர பசங்கள எப்படி காமிச்சு இருக்காங்க? ஆரம்பம் முதலே வில்லனா.. அவங்க பண்ரது தப்புன்னு.. அதால அவங்க சாகுராங்கன்னு..

ஆனா இதே பசங்கள ஹீரோவா காமிச்சு ஆகா ஓகோன்னு படம் எடுத்தா கண்டிப்பா எனக்குப் பிடிக்கலைன்னு சொல்வேன்.. சினிமா இன்னைக்கு கண்டிப்பா இளைஞர்களை பாதிக்கலைன்னு சொல்லு பார்ப்போம்..?

ரெண்டு வாரத்துக்கு ஒரு தரம் எங்க கல்லூரில காதல் பிரச்சினை வருது.. இதெல்லாம் எங்க இருந்து அவங்க கத்துக்கிறாங்க? அந்த வருத்தம்தான் அந்தப் பதிவுல எதிரொலிச்சதே தவிர வேற ஒண்ணுமில்லை..

ஓவரா படம் காட்டுறேனோ.. சரி.. போதும்..:-))

சிங்கக்குட்டி said...

அப்ப படத்தை பார்க்கலாம் சரியா? விடுங்க பார்த்துடுவோம்.

சொல்லரசன் said...

கார்த்திகைப் பாண்டியன்
/இல்லை..நாங்க படம் பார்த்தா அதுல ஒரு இலக்கணம்,இலக்கியம் வேணும்... காலேஜ் பசங்க எல்லாம் லவ் பண்ணக்கூடாது..சிகரெட்,கஞ்சா அடிக்கக்கூடாது.. காலேஜ் பசங்க அப்படின்னா புத்தகம் தான் படிக்கணும்... படத்துல ஒரு கதை இருக்கணும்.. கதாநாயகி சேலை மட்டும்தான் கட்டணும்..அப்படின்னு நினைக்கிறவங்க தயவு செய்து படத்திற்கு போகாதீங்க..அப்புறம் படம் பார்த்துவிட்டு, என்ன இந்த படத்துல காலேஜ் பசங்க கஞ்சா அடிக்கிறாங்க..இதை பார்த்துதான் எங்கூர் பசங்க எல்லாம் கெட்டு போறாங்க அப்படின்னு கண்டனப்பதிவு போடாதீங்க...//

அன்பு.. இது எனக்காக எழுதுனதா..:‍)))//

இதைதான் நானும் நினைத்தேன் கா.பா

Anonymous said...

கண்ணா பத்திரிக்கையில வருகிற விமர்சனங்கள் படிப்பதுண்டா ?

குறைந்தது ஒரு வருடம் எல்லா விமர்சனங்களையும் படித்து விட்டு நீயா தனியா விமர்சனம் எழுதிப் பழகிட்டு, பிறகு பொதுவில வை. இப்படி கடுப்பேத்தாதே ! தமிழ் மனத்தில வந்து உன் கடைய விரிச்சதால இந்த கருமத்தைப் படிக்க வேண்டியதாகிருச்சு

cheena (சீனா) said...

அன்பின் அன்பு
விமர்சனம் நிதர்சனம் இயல்பு
காபா கோவித்தால் அது அவரது உரிமை
நல்வாழ்த்துகள் அன்பு
நட்புடன் சீனா