நான்-விஜய்-காவலன்-தியேட்டர்-தலைவலி.


1.இந்த பதிவு விஜய் ரசிகர்களை தாக்கியோ அல்லது அஜித்,சூர்யா ரசிகர்களை உயர்த்தி பேசவேண்டும் என்று நினைத்தோ எழுதவில்லை.
2.இது கற்பனைக்கதை அல்ல முழுக்க முழுக்க நிஜம்..அதுவும் என் வாழ்வில் நேற்று மாலை நடந்த நிகழ்வு..

சரி அப்படி என்ன பிரச்சனைன்னா..

நான் ஒரு சூர்யா பைத்தியம் என்பது எனது பதிவு படிக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.. சூர்யாவை எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவுக்கு விஜயை பிடிக்காது. இதுக்கு எல்லாம் காரணம் கேட்காதீங்க.. பொங்கலுக்கு ரீலிஸான படங்களில் சிறுத்தையை ரீலிஸான முதல் நாளே பார்த்தாச்சு. காரணம் சூர்யாவின் தம்பி என்பதால்.அடுத்து ஆடுகளம் சன் டிவியின் டிரைலராலும், நண்பர்களின் ஊக்கத்தினாலும் பார்த்தேன்..

எவ்வளவோ என்னை நண்பர்கள் திடப்படுத்தியும், நண்பர்களே இலவசமாக டிக்கெட் எடுத்துக்கொடுத்தாலும் காவலனுக்கு செல்ல மறுத்தேன். நேற்று காலை அதிஷா அண்ணன் விமர்சனம் பார்த்துகூட என்னை நானே நியாயப்படுத்திக்கொண்டேன்.

தீடீரென எந்த எழுச்சி ஏழுமலையாத்தா என் மனதுக்குள் இறங்கினால் என்று தெரியவில்லை. என்னடா அன்பு,வேட்டைக்காரன்,சுறாவே பார்த்துட்டோம்.. இந்த படத்தை பார்த்தா என்ன.. என்று என் உள்மனது குறுகுறுத்தது..சரி மாலை போவோம் என உறுதியானேன். வழக்கமாக நான் படத்துக்கு போவதென்றால் என் முதலாளி தான் ஸ்பான்சர்.. இந்த தடவை அதுவும் மிஸ்ஸிங்.. காரணம் அவர் விஜய் பத்தி பேசுனாலே கோவப்படுவார்.. சரி இந்த படத்துக்காவது நம் சொந்த காசில் போலாம் என எண்ணி தியேட்டருக்கு கிளம்ப ஆயத்தமானேன்..

போகும் போதே முன்னெச்சரிக்கையாக கையில் தலைவலி மாத்திரை இரண்டும், ஜெண்டுபாம் தைல டப்பாவும் வாங்கிச்சென்றேன்..தியேட்டருக்குள் நுழையும் போதே மணி 6.30 ஆகிவிட்டது.. படம் 6.20க்கே போட்டுவிடுவார்கள் என நண்பன் கூறுயது வேறு ஞாபகத்திற்கு வந்து போனது..சீக்கிரமாக சென்று சைக்கிளை நிறுத்தி பார்க்கிங் டோக்கன் கொடுப்பவரிடம் படம் போட்டாச்சா என ஆவலாக கேட்டேன்.. என்னை ஏற இறங்க பார்த்த அவர் இல்லை தம்பி என்று கூறியவாறே டிக்கெட்டை கிழித்து கையில் கொடுத்தார்..

அவரிடம் பார்க்கிங் டிக்கெட் வாங்கியவன் ஓடினேன் கவுண்டரை நோக்கி.. கம்யூட்டரின் முன் உட்கார்ந்திருந்தவன் தலையில் கைவைத்தவாறு சோகமாக அமர்ந்திருந்தான்..

அண்ணே..அவனிடம் பேச்சில்லை

கொஞ்சம் அழுத்தமான குரலில் அண்ணே என்றேன்..

என்ன என்பது போல் பார்த்தார்...

சரி அவருக்கு என்ன பிரச்சினையோ என்று எண்ணி காவலன் டிக்கெட் என்றேன்..

ஒரு பத்து நிமிஷம் ஆகும்பா என்றார்..

15 நிமிடங்கள் பொறுமை காத்தவன் சற்றே பொறுமையில்லாமல் கேட்டேன்.. கம்யூட்டர் ரிப்பேரா என்றேன்..

இல்லைப்பா...

கைகடிகாரத்தை பார்த்தேன் 6.50 என காட்டியது..

மறுபடியும் அவரிடம் கேட்க முற்பட அவரே என்னிடம்

தம்பி..உள்ள 5 பேர் தான் போயிருக்காங்க.. இன்னும் 5 பேர் வரட்டும்.. ஒரு பத்து பேர் வந்தாலாவது படம் போட்டுருலாம்னு பார்க்கிறோம்.. உங்க பிரண்ட்ஸ் யாரும் இருந்தா கூப்பிடுறீங்களா என்றார்...

அப்போதுதான் தெரிந்தது அவர் தலையில் கைவைத்து உட்கார்ந்ததன் காரணம் என்னவென்று..

விஜய் படத்துக்கு இப்படி ஒரு நிலைமையை சத்தியமா நான் நினைச்சிக்கூட பார்க்கவே இல்லை..

வாழ்க விஜய்! வளர்க அவர் புகழ்!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அம்மா..

பார்த்து பார்த்து நீ என்னை அலங்கரிப்பாய்,
புது புடவை பொருந்தாத நிறத்தில் ரவிக்கை
உனக்கு மட்டும் தீபாவளி எப்போதும் இப்படித்தான்!
என் கண்கள் பார்த்தே மனதை படிக்கும் வித்தை
உனக்கு கை வந்த கலை............!
கோபமாய் கத்துவேன்.......
செல்லமாய் கொஞ்சுவேன்........
புரிதலோடு ஏற்க உன்னால் மட்டுமே முடியும்..............!
என் துயர தருணங்களில் ஓடி வருவேன் உன்னிடம்
என் ரனங்களுக்கான மருந்து
கிடைத்து விடும் உன் மடியில்...............!
தாமதமாய் வீடு திரும்புவேன்
தவித்து போவாய்.........
தடுமாறி ஆங்கிலம் பேசுவேன்
சிலிர்த்து போவாய்...............!
"விவரமான பையன் அவன்"
என்று என்னை ஊர் சொன்னாலும் நான் குழந்தை
என்ற நினைப்பு எப்போதும் உனக்கு.........!
வாழ்க்கை தந்தாய்........
வாழ வழி ஏற்படுத்தினாய்.........
துவண்டு விடும் போதெல்லாம்
தூக்கி நிறுத்தி சக்தி தந்தாய்.........!
அன்பு துளிர் விட்டுக்கொண்டே இருக்கும்
அசாத்யம் உனக்குள் மட்டும் எப்படி.......?

அதனால்தான்
கடவுளின் மாற்றாய்.........
கடவுளினும் மேலே...........
சரியாய் பொருந்துகிறாய்.......
அம்மா............. !!!!

**************************************


அனைவருக்கும் எனது மனமார்ந்த

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS