விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள்.


விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள்.

யோசனை1: திருச்சி பிரஸ்மீட்டிங்கில் நான் கலந்துகொள்ளவே இல்லை. என்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு நபரை வைத்து குறிப்பிட்ட சிலர் செய்த சதி இது.அதேபோல் வில்லு என்ற திரைப்படத்தில் நான் நடிக்கவே இல்லை,அதுவும் போலிதான் என அறிக்கை ஒன்றைவிட்டால் ரசிகர்கள் உங்களை நம்பி விடுவார்கள்.
யோசனை2: இனிமேல் ரிலீஸாகும் உங்கள் படங்களுக்கு கதை என்று ஒன்று இருந்தால் அதை ஒரு பிட் நோட்டீஸில் பிரிண்டு செய்து தியேட்டர் வாசலில் படம் பார்க்க வருபவர்களுக்கு விநியோகிக்கலாம்.

யோசனை3: இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம் முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைச் கண்டுபிடிப்பவருக்கு ஒரு “காண்டாசா கார்” பரிசு என போட்டி வைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது

யோசனை4: டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் போது கூடவே ஒரு சாரிடான் மாத்திரை,ஒரு பிரஸர் மாத்திரை மற்றும் ஒரு வாட்டர் பாக்கெட் சேர்த்து ஒரு பையில் போட்டு, 3டி படங்களுக்கு டிக்கெட்டுடன் கண்ணாடி கொடுப்பது போல கொடுக்கலாம்.

யோசனை5: திரையரங்கில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் தனித்தனியே கைடுகளை(Guide) நியமித்து ஒவ்வொரு சீன் முடிந்த பின்னும் அதில் என்ன வந்தது என்பதை படம் பார்ப்பவர்களுக்கு விளக்கிச் சொல்லலாம்.

யோசனை6: திரையரங்க வாயிலில் ஆம்புலன்சுடன் கூடிய மருத்துவக்குழுவை தயார் நிலையில் வைத்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும் முதியவர்கள்,இதயபலகீனமுள்ளவர்கள் ஆகியவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சையளிக்கலாம். இப்படி செய்தால் அவ்ர்கள் இனி உங்கள் படத்திற்கு நம்பி வருவார்கள்.

யோசனை7: உங்கள் படங்களில் தற்போது காமெடி மிகக்குறைந்து, நீங்கள் சீரியஸாக பேசும் வசனங்கள் மற்றும் பஞ்ச் டைலாக்குகளுக்கு மக்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.அதனால் நல்ல காமெடி சீன் வைப்பது சிறந்தது.

யோசனை8: குறிப்பாக‌ நீங்கள் டாக்டர் பட்டம் வாங்கியதை காமெடி சீனாக படத்திலே வைத்தால் அதைப் பார்ப்பவர்கள் விழுந்து,விழுந்து சிரிப்பார்கள். அதுமட்டுமின்றி சிறந்த காமெடிக்கான பிலிம்பேர் அவார்ட்டையும் அந்த சீனுக்கு வாங்கிவிடலாம்

யோசனை9: டைட்டில் போடும் போது அதில் வரும் இளைய தளபதியை சிலர் தவறாக "இளைய தலைவலி" என படித்துவிடுகிறார்கள்.எனவே வேறு பட்டத்திற்கு முயற்சி செய்யலாம்.மசாலா புயல் பேரரசுவிடம் கன்ச‌ல்ட் செய்தால் அவர் நிச்சயம் ஐடியா கொடுப்பார்.

யோசனை10: குருவி,வில்லு போன்ற பேரடிகளை மறக்க கொஞ்ச நாளைக்கு வடிவேலு குரூப்பில் சேர்ந்து சிங்கமுத்து,முத்துக்காளை ஆகியோரைப் போல காமெடி வேடங்களில் நடிக்கலாம்.காமெடிக்காக நீங்கள் முயற்சி பண்ண வேண்டாம். நீங்கள் சாதாரணமாக நடித்தாலே மக்கள் சிரிப்பார்கள்.

யோசனை 11: உங்களைக் காமெடி செய்து வீடியோ வெளியிடும் அஜீத் ரசிகர்களுக்கு பதிலடியாக நீங்கள் உடனே ஒரு சாஃப்ட்வேர் குழுவை அமைத்து பதிலுக்கு பதில் வீடியோ விடலாம். கவனமாக இருக்கவும் அந்தக் குழுவில் அஜீத் ரசிகர்கள் இருந்தால் உங்களைத் தாளித்துவிடுவார்கள்

பின்குறிப்பு: இனிமேல் எந்த மாதிரி படங்களை ரீமேக் செய்யலாம்:
மகேஷ்பாபு போன்றவர்களின் தெலுங்கு படங்களை ரீமேக் செய்தால் இனி போனியாகாது.
* மலையாளத்தில் வெற்றி கண்ட ஷகிலா படங்களை ரீமேக் செய்து நடிக்கலாம்
* எம்ஜியார் நடித்தரிக் ஷாக்காரன்படத்தை "திரிஷாக்காரன்" என்ற பெயரில் ரீமேக்
செய்யலாம். மெரினா பீச்சில் திரிஷாவோடு "கடலோரம் வாங்குனேன் காப்பு, வில்லுக்கு
வச்சிட்டாய்ங்கே ஆப்பு" என அருமையான டூயட் போட்டு அசத்திவிடலாம்
* பழைய ராமராஜன் படங்களை ரீமேக் செய்து "எங்க ஊரு எருமக்காரன்" என்ற பெயரில்
நடிக்கலாம்.


அறிவிப்பு: அன்பு நெஞ்சங்களே! இது வெறும் காமெடிக்கான பதிவுதானன்றி யார் மீதும் காண்டு காட்டும் பதிவு அல்ல.தயவு செய்து இதை வெறும் காமெடியாக மட்டுமே எடுத்துக்கொண்டு சிரித்துவிட்டு விட்டுவிடவும்..இவை அனைத்தும் என்னுடைய இ-மெயிலில் வந்தவையே...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

13 பின்னூட்டங்கள்:

krishna kuwait said...

enn?enn intha kolai veri??

ப்ரியமுடன் வசந்த் said...

முதலில் உங்களுடய வேலைய பாருங்க.... அப்பறமா அடுத்தவங்க வேலையை பார்க்கலாம்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

கார்த்திகைப் பாண்டியன் said...

சரியான காமெடி அன்பு.. பார்த்துப்பா.. உனக்கு யாராவது அமேரிக்கா, துபைல இருந்து போன் போட்டு மிரட்டப் போறாங்க...

Unknown said...

வேறு ஒரு நல்ல யோசனை

இருக்கு

ஆனாலும்

ஆட்டோ பயம் போய்

தொ(ல்)லைப்பேசி பயம் வந்துடுச்சி

:)

Anbu said...

\\\krishna kuwait said...

enn?enn intha kolai veri??\\

எல்லாம் சும்மா தான் அண்ணா!!!

Anbu said...

\\\பிரியமுடன்.........வசந்த் said...

முதலில் உங்களுடய வேலைய பாருங்க.... அப்பறமா அடுத்தவங்க வேலையை பார்க்கலாம்\\\

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

என்னுடைய வேலையை பார்த்தபின் பதிவினை இட்டேன்..

Anbu said...

\\\கார்த்திகைப் பாண்டியன் said...

சரியான காமெடி அன்பு.. பார்த்துப்பா.. உனக்கு யாராவது அமேரிக்கா, துபைல இருந்து போன் போட்டு மிரட்டப் போறாங்க...\\\


தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

போன் போட்டா போடட்டுமே அண்ணா என்னா செய்ய முடியும்..

Anbu said...

\\\ நட்புடன் ஜமால் said...

வேறு ஒரு நல்ல யோசனை

இருக்கு

ஆனாலும்

ஆட்டோ பயம் போய்

தொ(ல்)லைப்பேசி பயம் வந்துடுச்சி

:)\\\தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

பயப்படாதீங்க நாங்க இருக்கோம்ல

Sasirekha Ramachandran said...

ஹா ஹா ஹா......செம காமெடி!jollykku எப்பவுமே அன்போட பதிவுதான்!!
ஆனா ஒன்னு,இந்த விஜய் ரசிகர்கள் பாத்தா அவ்ளோதான்.......கண்டிப்பா நா விஜய் ரசிகை இல்லப்பா...

Anbu said...

\\\Sasirekha Ramachandran said...

ஹா ஹா ஹா......செம காமெடி!jollykku எப்பவுமே அன்போட பதிவுதான்!!
ஆனா ஒன்னு,இந்த விஜய் ரசிகர்கள் பாத்தா அவ்ளோதான்.......கண்டிப்பா நா விஜய் ரசிகை இல்லப்பா...\\

நன்றி அக்கா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

கார்க்கிபவா said...

:(

வேத்தியன் said...

தல கலக்குறேள் போங்கோ...
சூப்பர் காமெடி...
:-)