நானும் கார்த்திகைப்பாண்டியன் அண்ணனும்..

நேற்று (05.04.2009) காலை 10.00 மணி.அப்பொழுதுதான்...தமிழ் வலைப்பதிவு உலகில் எத்தனையோ பேர் இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர்..மிகக் குறுகிய காலத்தில் நன்கு பிரபலமானவர்..எனக்கு பட்டாம்பூச்சி விருதினை கொடுத்து என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியவர்.இவரை சொன்னால் இந்த ஒரு பதிவு காணாது என கருதுகிறேன்.அவர் வேரு யாருமில்லை..கார்த்திகைப்பாண்டியன் அண்ணன்.அவர்களை முதன் முதலாக நேற்று தான் சந்தித்தேன்..என்னுடைய முதல் பதிவர் சந்திப்பும் இதுவே..மிகவும் மகிழ்ச்சிகரமான நாள் என்றே சொல்ல வேண்டும்..


அதற்கு முன் நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..நான் இந்த பதிவு எழுதுவது என் அம்மாவிற்கு ஏற்கனவே தெரியும்..அவர்களும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள்..அவர்கள் பெரிதாக படிக்காவிட்டாலும் நான் நன்றாக படிக்க வேண்டும் என்பதே அவர்கள் ஆசை..காலையில் கிளம்பி நான் வீட்டை விட்டு வெளியேறும் போது எனது வீட்டின் அருகில் உள்ள ஒரு பாட்டி என்ன ஐயா..இன்னிக்கு சீக்கிரமாக வேலைக்கு போகணுமா.? எனக்கேட்கும் போது எனது அம்மா,இல்லை சித்தி அவன் கதை எழுதுவதை பார்த்துஒரு வாத்தியார் அவனை பார்க்கணும் சொன்னாராம்.அதான் போறான்.என கண்கள் கலங்க கூறினார்..அதை பார்த்த என் உள் மனதினுள் ஏதோ ஒரு நெகிழ்வு.என்னவென்று சொல்ல..

காலை பத்து மணிக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை வந்து அடைந்தேன்..மிகவும் பரபரப்பாக காணப்பட்டேன்.எப்படி இருப்பாரோ தெரியவில்லையே என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் என்னை ரொம்ப நேரம் காக்க வைக்காமல் வெகு விரைவில் வந்தார் கார்த்திகைபாண்டியன் அண்ணன்..பின் இருவரும் ஒன்றாக அவரது வீட்டிற்கு சென்றோம்..மிகவும் அமைதியான வீடு.அன்பான அப்பா..பாசமுள்ள அம்மா.வயதான அம்மாச்சி..என வீட்டினுள் உள்ளவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்..அனைவரும் என்னிடம் அன்பாக பழகினர்..

காலை உணவு முடித்துவிட்டு இருவரும் மீனாட்சி அம்மனை தரிசிக்க சென்றோம்..கோவில் கும்பாவிஷேகம் என்பதால் மிகவும் கூட்டமாக காணப்பட்டது.நான் முதன் முதலில் அந்த கோவிலுக்கு நேற்று தான் சென்றேன்.நன்றாக இருந்தது.கோவில்களின் சிறப்புகளை எனக்கு சொல்லிக்கொண்டே வந்தார் கார்த்திகை அண்ணன்..கோவிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அம்மனை தரிசிக்க இயலவில்லை.பின் இருவரும் திருமலை நாயக்கர் மஹால் சென்றடைந்தோம்.நல்ல அமைதியான இடம்.அந்த இடத்தின் சிறப்பை சொல்லிக்கொண்டிருந்த வேளையில் அங்கே ஒரு இளைஞனும் இளைஞியும் கடலை போட்டுக்கொண்டிருந்தனர்..அதைப் பார்த்து அண்ணன் மிகவும் ஆத்திரப்பட்டார்..சிறப்புமிகுந்த அந்த தலங்களை மக்கள் பயன்படுத்தும் முறைகள் மிகவும் மோசமாக உள்ளது..பின் இருவரும் வாசுதேவன்(அகநாழிகை) அண்ணனிடம் தொலைபேசியில் உரையாடினோம்.முதன் முதலில் நான் அவருடன் பேசினேன்..பின் இருவரும் ஒன்றாக தெப்பக்குளத்தினை ரசித்து விட்டு வீடு திரும்பினோம்.

மதிய உணவு அம்மாவின் கைவண்ணத்தில் மிகவும் ருசியாக இருந்தது.பின் சொல்லரசன் அண்ணனிடம் இருவரும் தொலைபேசியில் உரையாடினோம்..அவருடன் பேசுவதும் இதுவே முதல் முறை..நன்றாகப்பேசினார்..பின் அம்மா,அப்பா,அம்மாச்சியிடம் விடைபெற்று வீடு திரும்பினேன்..என்னை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு சென்றார் அண்ணன்..மிகவும் ஒரு நல்ல அனுபவம்..என்னை மென்மேலும் எழுத வேண்டும் எனத்தூண்டியது.என்னை அழைத்து விருந்தளித்த கார்த்திகைப்பாண்டியன் அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

நான் திருமங்கலத்தில் இருந்து சிவகாசி வரும் பேருந்தில் ஒரு சிறுமியின் செயல் என்னை மிகவும் ரசிக்க வைத்தது.பேருந்தில் அதிகமான கூட்டம்.அந்த சிறுமியின் சேட்டைகளை ரசித்துக்கொண்டே வந்தேன்.அவளது அம்மா கண்டித்துக்கொண்டே வந்தார்..எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்..உன் பெயர் என்ன என்று கேட்டேன். உடனே அந்த சிறுமி உங்க பெயர் என்ன? எனக்கேட்டாள்.நான் எனது பெயரை சொன்ன பிறகே அவள் பெயரை சொன்னாள் 'ஜோதி' என்று.இருவரும் மழலை மொழியில் பேசிக்கொண்டு வருகையில் அம்மா எனக்கு பசிக்குது என்றாள்.உடனே அவள் தாய் ஒரு வெள்ளரிக்காயை எடுத்துக் கொடுத்தார்கள்.அவள் அதை அதை வாங்கி பாதியாக பிய்த்து 'இந்தாங்க உங்களுக்கு' என்றாள்..அந்த சிறுமியின் செயலை எண்ணிக்கொண்டே சிவகாசி வந்து சேர்ந்தேன்.

சிவகாசியில் பொங்கல் என்பதால் மக்கள் நடமாட்ட்ம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.அனைவருக்கும் ஊதியத்தொகை(போனஸ்) வழங்கும் நாள்..அந்த சிறுமியின் செயலை எண்ணிக்கொண்டே போகும் வேலையில் இருவர் மிகவும் அதிகமாக குடித்துவிட்டு நடுரோட்டினில் நாம் என்ன செய்கிறோம் என்பது கூட அறியாமல் படுத்துக்கிடந்தனர்..அதில் ஒருவரது மனைவி அவரை தூக்கவும் முடியாமல் அங்கே விட்டுச் செல்லவும் இயலாமல் தவித்துக் கொண்டிருந்தார்..

'எங்க ஊர் திருவிழா
அதிகமான கூட்டம்
கோவிலில் அல்ல:
'டாஸ்மாக்'கில்'

இப்படியும் சிலர் இருக்கிறார்கள்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

23 பின்னூட்டங்கள்:

அகநாழிகை said...

அன்பு,
மேன்மேலும் எழுத்துலகில்
சாதிக்க வாழ்த்துக்கள்

Anbu said...

நன்றி அண்ணா

கார்த்திகைப் பாண்டியன் said...

//தமிழ் வலைப்பதிவு உலகில் எத்தனையோ பேர் இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர்..மிகக் குறுகிய காலத்தில் நன்கு பிரபலமானவர்..//

அன்பு.. இதுல சூது எதுவும் இலையே? நன்றி அன்பு..

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்காக அவ்வளவு தூரம் வந்தீர்கள்.. உங்களுடன் என் நேரம் போனது எனக்கு ரொம்ப சந்தோஷம் அன்பு...

குமரை நிலாவன் said...

அன்பு
அன்புத்தம்பி
நீங்கள் பதிவுலகில்
சாதிக்க வாழ்த்துக்கள் ..

கார்த்திகை பாண்டியன் அருமையான நண்பர்
நானும் அவரிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறேன்

தேவன் மாயம் said...

காலை பத்து மணிக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை வந்து அடைந்தேன்..மிகவும் பரபரப்பாக காணப்பட்டேன்.எப்படி இருப்பாரோ தெரியவில்லையே என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் என்னை ரொம்ப நேரம் காக்க வைக்காமல் வெகு விரைவில் வந்தார் கார்த்திகைபாண்டியன் அண்ணன்..பின் இருவரும் ஒன்றாக அவரது வீட்டிற்கு சென்றோம்..மிகவும் அமைதியான வீடு.அன்பான அப்பா..பாசமுள்ள அம்மா.வயதான அம்மாச்சி..என வீட்டினுள் உள்ளவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்..அனைவரும் என்னிடம் அன்பாக பழகினர்..////

மதுரைதானா? நீங்கள்!!
நான் காரைக்குடிதானப்பா!!

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் அன்பு!

சொல்லரசன் said...

அன்பு உங்கள் கவிதை நன்றாக இருந்தது வாழ்த்துகள்.
தொடரட்டும் உங்கள் சந்திப்பு,வளரட்டும் உங்கள் எழுத்து.

Vishnu - விஷ்ணு said...

// 'எங்க ஊர் திருவிழா
அதிகமான கூட்டம்
கோவிலில் அல்ல:
'டாஸ்மாக்'கில்' //

டாஸ்மாக் திருவிழா தான் தினமும் நடக்குதுல்ல. அப்புரம் அதுல என்ன ஸ்பெசல் இருக்கு.

//அவள் அதை அதை வாங்கி பாதியாக பிய்த்து 'இந்தாங்க உங்களுக்கு' என்றாள்..//

இததான் குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஓன்றுனு சொல்லுவாங்க.
மீனாட்சி அம்மன் தரிசனம் இல்லாமல் போனால் என்ன அந்த "ஜோதி" குட்டி தரிசனம் கிடச்சுசில்ல.

பத்ரகாளியம்மனை தரிசனம் பண்ணியாச்சா. இராட்டினம் ஏறியாச்சா. நானும் சிவகாசிதாம்பா.

*இயற்கை ராஜி* said...

அன்பு..ப‌திவ‌ர் ச‌ந்திப்பெல்லாம் ந‌ட‌த்த‌ ஆர‌ம்பிச்சிடீங்க‌.வாழ்த்துக்க‌ள்:-)

Anbu said...

\\\கார்த்திகைப் பாண்டியன் said...

//தமிழ் வலைப்பதிவு உலகில் எத்தனையோ பேர் இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர்..மிகக் குறுகிய காலத்தில் நன்கு பிரபலமானவர்..//

அன்பு.. இதுல சூது எதுவும் இலையே? நன்றி அன்பு..\\\

கார்த்திகைப் பாண்டியன் said...

//தமிழ் வலைப்பதிவு உலகில் எத்தனையோ பேர் இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர்..மிகக் குறுகிய காலத்தில் நன்கு பிரபலமானவர்..//

அன்பு.. இதுல சூது எதுவும் இலையே? நன்றி அன்பு..

Anbu said...

\\\ குமரை நிலாவன் said...

அன்பு
அன்புத்தம்பி
நீங்கள் பதிவுலகில்
சாதிக்க வாழ்த்துக்கள் ..

கார்த்திகை பாண்டியன் அருமையான நண்பர்
நானும் அவரிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறேன்\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்..

Anbu said...

\\\thevanmayam said...

வாழ்த்துக்கள் அன்பு\\\

மதுரை அருகில் உள்ள சிவகாசி
நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்..

Anbu said...

\\\சொல்லரசன் said...

அன்பு உங்கள் கவிதை நன்றாக இருந்தது வாழ்த்துகள்.
தொடரட்டும் உங்கள் சந்திப்பு,வளரட்டும் உங்கள் எழுத்து.\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்..நானும் அதையே எதிர்பாக்கிறேன் அண்ணா

Anbu said...

\\\விஷ்ணு. said...

// 'எங்க ஊர் திருவிழா
அதிகமான கூட்டம்
கோவிலில் அல்ல:
'டாஸ்மாக்'கில்' //

டாஸ்மாக் திருவிழா தான் தினமும் நடக்குதுல்ல. அப்புரம் அதுல என்ன ஸ்பெசல் இருக்கு.

//அவள் அதை அதை வாங்கி பாதியாக பிய்த்து 'இந்தாங்க உங்களுக்கு' என்றாள்..//

இததான் குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஓன்றுனு சொல்லுவாங்க.
மீனாட்சி அம்மன் தரிசனம் இல்லாமல் போனால் என்ன அந்த "ஜோதி" குட்டி தரிசனம் கிடச்சுசில்ல.

பத்ரகாளியம்மனை தரிசனம் பண்ணியாச்சா. இராட்டினம் ஏறியாச்சா. நானும் சிவகாசிதாம்பா.\\\

அப்படியா..அண்ணா கண்டிப்பாக இருவரும் விரைவில் சந்திப்போம்

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்..

Anbu said...

\\இய‌ற்கை said...

அன்பு..ப‌திவ‌ர் ச‌ந்திப்பெல்லாம் ந‌ட‌த்த‌ ஆர‌ம்பிச்சிடீங்க‌.வாழ்த்துக்க‌ள்:-)\\

நன்றி அக்கா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்..

Raju said...

எப்படி இருந்துச்சு எங்க ஊரு மதுர..
எங்க ஊருக்காரவுக பாசத்த பாத்தீகளா?
நாங்கல்லாம்...

Anbu said...

\\\டக்ளஸ்....... said...

எப்படி இருந்துச்சு எங்க ஊரு மதுர..
எங்க ஊருக்காரவுக பாசத்த பாத்தீகளா?
நாங்கல்லாம்...\\\

ரொம்ப அழகாக இருந்தது அண்ணா..

வேத்தியன் said...

ஆஹா இப்பிடி ஒன்னு நடந்திருக்குதா???
தெரியாமப்போச்சே...
:-)

வேத்தியன் said...

வாழ்த்துகள் அன்பு...

Sasirekha Ramachandran said...

அன்பு,
மேன்மேலும் எழுத்துலகில்
சாதிக்க வாழ்த்துக்கள்!!!

இதுமட்டும் போதாதென்பது என் எண்ணம் ....மென் மேலும் படித்து பட்டங்களும் பெற வேண்டும்.....

Anbu said...

\\\வேத்தியன் said...

வாழ்த்துகள் அன்பு...\\


நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்..

Anbu said...

\\\Sasirekha Ramachandran said...

அன்பு,
மேன்மேலும் எழுத்துலகில்
சாதிக்க வாழ்த்துக்கள்!!!

இதுமட்டும் போதாதென்பது என் எண்ணம் ....மென் மேலும் படித்து பட்டங்களும் பெற வேண்டும்.....\\\
nandri akka