ஒரு பிரபல பதிவரின் காதல் ஏக்கங்கள்..!!!


முதலில் இக்கதையின் கதாநாயகனை பற்றிய ஒரு சிறு குறிப்பு:-

என்னைப்பற்றி சொல்ல ஒண்ணுமில்லைங்க..நல்ல பையன், அப்பாவி, வெள்ள சோறு, புள்ள பூச்சி.. இப்படி என்ன பத்தி எங்க ஊர்ல சொல்லுவாங்க.. ஆனா உண்மையில நான் ரொம்ப கெட்டவன் என்று எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. மேலும் சொந்தமாக ஒரு Browsing Centre வைத்து நடத்தி வருகிறேன்.

ஒரு மாலை நேரப்பொழுது..மணி சரியாக தெரியாவிட்டாலும் கதிரவன் வானத்திற்கு விடைகொடுத்துக்கொண்டிருந்தான்..அந்த அழகினை மெல்ல ரசித்துக்கொண்டிருந்தேன்..'இயற்கையின் அழகே தனிதான்'என்று மனதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

தூரத்தில் ஒரு வெண்ணிலவு நடந்து வந்தது..என்னடா இது இன்னும் கதிரவன் மறையவே இல்லை..அதற்குள் வெண்ணிலவா..ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்கையில்...
சார்..மணிக்கு எவ்வளவு ரூபாய்?..

சுய நினைவுக்கு வந்தவனாய்...பத்து ரூபாய் மேடம்

இந்தாங்க..

பணத்தை வாங்கியவுடன் என் மனது ஏனோ திரும்பி பார்க்க சொல்லி கட்டளையிட்டது..

திரும்பிப் பார்த்தவுடன்..கருப்பு நிற சுடிதாரில் ஒரு வெண்ணிலவு ஒளிந்து கொண்டிருந்தது.. Browsing பண்ணனும்...

ம்ம்..எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பண்ணுங்க..

மணிக்கு எவ்வளவு ரூபாய்?

ஐந்தே ரூபாய் தான் மேடம்..

ரொம்ப கம்மியாக இருக்கு..

ஆடித்தள்ளுபடி அதான்..ஒரு புன்சிரிப்புடன்..

அந்த சிஸ்டத்தில் உட்காருங்க மேடம்...

சார் இந்த சிஸ்டம் வொர்க் பண்ணலை..

ச்செ..இது வேற மக்கர் பண்ணுது..என்று மனதிற்குள் புலம்பினவனாய்..

நீங்க இந்த சிஸ்டத்தில் உட்காருங்க மேடம்..

சரி..

Browsing பண்ணி முடித்ததும் என் அருகில் வந்து இந்தாங்க..என்று 100 ரூபாயை நீட்டினாள்..

சில்லரை இல்லை மேடம்..அடுத்த முறை வரும் போது நான் வாங்கிக்கிறேன்..

அவளோ என்னை ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு சென்றாள்..

என்னடா நடக்குது இங்க..என் நண்பன் கேட்டான்..

சும்மாதான்டா..அந்த பொண்ணு அழகா இருக்காடா மச்சி..அதுவும் அவளோட அந்த தெத்துப்பல் அழகுக்கே அழகு சேர்ப்பது போல் உள்ளதுடா..

உனக்கு என்னமோ ஆச்சு..உட்கார்ந்து வேலையைப் பாருடா..

மறுநாள் மாலை..

அவளுக்காக நான் காத்திருக்க..

இம்முறை அனைத்து சிஸ்டம் வேலை செய்கிறதா என்று செக் பண்ணினேன்..

நினைத்தது போலவே அந்த அழகு தேவதை வந்தாள்..ஒரு புன் சிரிப்புடன்

Browsing பண்ணி முடித்தவுடன் சரியான சில்லறையை கொடுத்துவிட்டு தான் கொண்டு வந்த வண்டியை ஸ்டார்ட் பண்ணினாள்..வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை..ஒருமுறை இருமுறை என கணக்கில்லாமல் மிதித்து கொண்டிருப்பதை நான் ரசித்து கொண்டிருந்தேன்..நான் அந்த வண்டியாக இருந்திருக்க கூடாதா? என்ற எண்ணம் என் மனதில் அலைபாயாமல் இல்லை..

கிட்ட போய்..anyhelp என்றேன்..

ya என்றாள்..

உடனே நான் ஹீரோயிசத்தினை காட்ட ஆரம்பித்தேன்..தோல்வியே கிடைத்தது தவிர வெற்றி கிட்டவில்லை..இறுதியில் ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ணுங்க மேடம்..மெக்கானிக் வரச்சொல்றேன் என்றேன்..

மெக்கானிக் வந்து சரி பண்ணும் வரை அவளுடன் கலாய்த்துக்கொண்டிருந்தேன்..தான் காலேஜ் படிப்பதாக கூறினாள்..கஷ்டப்பட்டு அவளுடைய மொபைல் நம்பரை வாங்கிக்கொண்டேன்..

அன்று முதல் நாங்கள் எஸ்.எம்.எஸில்.பேசத்தொடங்கினோம்

அவள் : "Don't miss or avoid d person who really had a true affection on u. it may make u feel when they live without u and your memories....."

அவசர அவசரமாக பதிலளித்தேன்..

"hey... what a surprise... எப்படி இருக்கே? சாப்டாச்சா? "

அவள்: ஓ சாப்டாச்சு.. நீ சாப்டயா.. வீட்டுக்கு வந்தாச்சா..

சாப்டாச்சு.. ஆனா இன்னைக்கு வீட்டுக்கு வரல.. ஆபிஸ்லதான் இருக்கிறேன்..

அவள்: ஏன்பா???

கொஞ்சம் அவசர வேலை இருக்கு.. நாளைக்குள்ள முடிக்கணும்.. அதுதான்..

அவள்: சரி.. continue பண்ணு.. Good night.. Sweet dreams.. bye..

ஒரு ஸ்வீட்டே ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்லுதே...

அவள்: ரொம்ப ஐஸ் வைக்காத.. வேலைய பாரு..

ஐஸ் கிரீமுக்கே யாரவது ஐஸ் வைக்க முடியுமா...

அவள்: ஐயோ முடியல... நா தூங்க போறேன்..

கனவுலையும் என் கூடத்தான் பேச போற.. அதுக்கு இப்பவே பேசலாம்ல..

அவள்: ஆசைதான்.. டைப் பண்ணி முடிச்சுட்டு சீக்கிரம் தூங்குடா.. Bye..

சரிங்க மேடம்.. Good night...

நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து சோம்பல் முறித்தேன்.. கற்பனையில் கொஞ்ச ஆரம்பித்தேன்..

ஸ்பீக்கரில்
"காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை..
காதல் இன்றி யாரும் இங்கில்லை..." யேசுதாஸ் பாடி கொண்டிருந்தார்..

அப்படியே தூங்கி போனேன்..

டிஸ்கி:- 1.இது முழுக்க முழுக்க ஒரு பிரபல பதிவரை சார்ந்த காதல் கசமுசாக்கள்..

2.நான் கதை என்று நினைக்கிறேன்..நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஏ.டி.ம்.சென்டரினை அடிக்கடி உபயோகப்படுத்துவீர்களா...!!!
















  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழ் கதாநாயகர்களின் கவர்ச்சிப்படங்கள்












இந்த புகைப்படங்கள் அனைத்தும் நகைச்சுவைக்காகவே..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நம்பிக்கை..!!(சிறுகதை போட்டிக்காக..)

அந்தத் தெருவாசிகளின் இயல்பு வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காத அந்த தெருக்குப்பை கண்ணனை மட்டும் என்னவோ செய்தது.

தன் வீட்டு முற்றத்தில் நின்று பல்துலக்கிக் கொண்டே தெருவினை நோட்டமிட்டான்.முதல் வீடான ஆடிட்டர் வீட்டிலிருந்து ஒரு இருபது உள்ளடக்கியது அந்த தெரு.அதிகாலை நேரத்திலேயே அனைத்து வீடுகளின் முற்றங்களிலும் தண்ணீர் தெளிக்கப்பட்டு கோலம் வரையப்பட்டிருந்தது.

ஆனால் முற்றங்கள் தவிர்த்த அந்த நடைபாதை ஒரு இருபதடி நீளத்துக்கு சுத்தம் செய்யப்படாமல் தூசியும் குப்பைகளுமாய் இருந்தது.அந்தப்பாதையிலே தான் அனைவரும் போய் வந்து கொண்டிருந்தார்கள்.யாருக்குமே அதை சுத்தம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் தோன்றவில்லை.அப்படியிருக்க தனக்கு மட்டும் ஏன் இப்படி தோன்றுகிறதென்று தன்மேலேயே எரிச்சல் கூட வந்தது கண்ணனுக்கு..

தன் வீட்டு வாசலில் சின்ன அடுப்பு வைத்து பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தாள் கண்ணனின் அக்கா.தண்ணீர் பிடித்துக் கொண்டும் சமையல் செய்து கொண்டும் குறுக்கும் நெருக்குமாய் நடந்து கொண்டிருந்தாள் கண்ணனின் மனைவி.

வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த கண்ணனை பார்த்து கேலியாய் சிரித்தபடி "என்னடா இன்னிக்கு தெருவை சுத்தம் பண்ணலியா"என்றாள் அக்கா

அதைத்தான் செய்யப்போகின்றேன்.நான் இரண்டு நாள் ஊரில் இல்லை அதுக்குள்ள எவ்வளவு குப்பையாப் போச்சு நம்ம தெரு.நான் இல்லைன்னா யாராச்சும் பெருக்குவாங்கன்னு நினைச்சேன்..

ம்ம்..அதைப்போயி யாரு பெருக்கிட்டு இருப்பா?..வேற வேலை இல்லையாக்கும்.என்றாள் மனைவி..

எனக்கு மட்டும் வேற வேலையில்லையா என்ன?..

உங்களை யாரு அதை எல்லாம் செய்ய சொன்னா?...பேசாமா இருக்க வேண்டியதுதானா...

என்னால் அப்படியிருக்க முடியவில்லை. அதைப்பார்க்கும் போதெல்லாம் அது வெறும் குப்பையாக மட்டும் தெரியவில்லை.நம்முடைய அலட்சியத்தையும்,பொறுப்பின்மையும்,புறக்கணிப்பையும் எதிரொலிக்கின்ற பொருளாகத்தான் தெரிகின்றது.

உங்களுக்கு அப்படித்தான் தெரியும்..நடந்து போகின்றவர்களெல்லாம் மனுஷன் இல்லை..

பிள்ளைங்க எல்லாம் எந்திருச்சிட்டாங்களா?... இல்லையா?..

எல்லாரும் எந்திருச்சாச்சு.உள்ள வாங்க..காபித்தண்ணி குடிச்சிட்டு எங்க வேணாலும் போங்க..

நம்ம மக ஸ்கூல்ல படிக்க வேற செய்றா..அவளாச்சும் அந்த இடத்தை சுத்தம் பண்ணலாம்..

அப்பா..என்னை ஏன் வம்புக்கு இழுக்குற..இப்ப சுத்தம் பண்ணா அப்படியே இருக்கப் போகுதா?..

எதையாவது சொல்லி தட்டிக் கழிச்சிடுங்க..அவங்க அவங்க பயன்படுத்துற வீடு மட்டும் எவ்வளவு அழகாக இருக்கு.ஆனா நிறையப்பேரு பயன்படுத்துற இந்தப்பாதை மட்டும் ஏன் இப்படி இருக்கணும்?..

சொன்ன வேகத்திலேயே ஒரு துடைப்பத்தையும் அட்டையும் எடுத்துட்டுப்போய் தெருவை சுத்தம் செய்து அந்தக் குப்பையை அள்ளி ஒரு குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு வந்தான் கண்ணன்..

"இப்ப நிம்மதியாக்கும் உங்களுக்கு" என்றாள் மனைவி

என்னமோ தெரியவில்லை..எனக்கு அந்த நடைபாதையை பார்க்கும் போதெல்லாம் அது என்கிட்டே மட்டும் ஏதோ சொல்ற மாதிரி இருக்கு..

அது என்னவென்று சொல்லட்டுமா அப்பா..வீட்டுக்குள்ளே இருந்து காபி தம்ளரை கையில் பிடித்தபடி வந்தான் மூத்த மகன்...

என்ன? என்றான் கண்ணன்..

"ஒரு ஆளு பயன்படுத்துற வீடு நல்லா இருக்கும்..நிறைய பயன்படுத்துற நான் எப்படி இருக்கேன்னு பார்த்தியா?"என்னைப் போலத்தான் நீயும்.."நாலு பிள்ளைங்க இருந்தாலும் யாரும் உன்னைக்கவனிக்க மாட்டாங்க" என்று சொல்லி இருக்கும்..நான் சொல்றது சரியா அப்பா?

"மனசுல உள்ளதை அப்படியே சொல்லிட்டானே"..என்று மகனை வியப்பால் பார்த்தபடி நின்றான் கண்ணன்..

நீ ஒன்னும் கவலைப்பட தேவையில்லை அப்பா..நாங்க அப்படியெல்லாம் உங்களை கவனிக்காம விட்டுவிட மாட்டோம்.

அதை எப்படிடா நம்புவது?

சரி..நாளையிலேருந்து நாங்களே இந்த தெருவை சுத்தம் பண்ணுகிறோம் போதுமா?

ம்ம்..இப்ப தாண்டா உங்க மேல எனக்கு நம்பிக்கை வருது.

உங்களை வயசான காலத்துல நல்லா கவனிப்போம் என்றா..

இல்லைடா..நாட்டில் உள்ள பொதுச்சொத்தை நம்ம சொத்தா நினைச்சு பாதுக்காக்கிற யாருமே குடும்பத்தையும் நல்லா கவனிச்சிப்பாங்க..ஒவ்வொரு குடும்பமும் நல்லா இருந்தா இந்த நாடு என்ன உலகமே நல்லா இருக்கும்..என்றான் கண்ணன்..அவர் குரலில் திருப்தியோடு நம்பிக்கையும் ஒலித்தது..

{'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது }

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வருங்கால இந்திய பிரதமரின் 32 பதில்கள்..!!

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

ஓபன் ஹார்ட் என்பது சட்டென என் நண்பரின் மனதில் தோன்றியது.எனக்கும் பிடித்திருந்ததால் உடனே வைத்தேன்..அன்பு என்பது என்னுடைய பெயர்.மதி என்பது அம்மாவின் பெயர். அதனால் இரண்டையும் இணைத்து அன்புமதி என்று வைத்துக்கொண்டேன். என்னுடைய பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும்..
************************************************************************
2.கடைசியாக அழுதது எப்பொழுது?

ஒரு வாரத்திற்கு முன்பு.சிறு குழந்தை ஒன்று எதிரே வந்த வண்டியின் மீது மோத அக்குழந்தையின் அம்மா கதறி அழுத காட்சியை பார்த்தபோது என் கண்களில் தானாகவே கண்ணீர் வந்தது..
************************************************************************
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்பபிடிக்கும்
************************************************************************
4.பிடித்த மதிய உணவு என்ன?

தயிர்சாதம்,அம்மாவின் சமையல் எதுவாயிருந்தாலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
************************************************************************
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கொஞ்ச காலம் பழகியபின் அவர்களது நடத்தைகள் சரியாக இருந்தால் மட்டுமே உடனே நட்பை தொடருவேன்.ஆனால் நட்பு என்பது மிகவும் பிடித்தமான ஒன்று.
************************************************************************
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடலில் குளிக்க பிடிக்கும். அருவியில் கிளிக்க ரொம்ப ரொம்ப பிடிக்கும், அதிலும் குற்றாலம் என்றால் ஜாலிதான்...
************************************************************************
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்..பின் ஆடை அணிந்திருக்கும் விதம்..
************************************************************************
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்சது:தன்னம்பிக்கை..எந்த வேலையிலும் வெற்றி எனக்குத்தான் கிடைக்க வேண்டும் என நினைப்பேன்..

பிடிக்காதது:கோபம்.வெற்றி என்ற இலக்குக்காக பல தவறான முடிவுகளை எடுத்தல்.. இந்த இரண்டையும் எவ்வளவோ முயன்றும் என்னால் மாற்ற இயலவில்லை..
************************************************************************
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

சாரிங்க..எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை:-))
************************************************************************
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க..நான் விரும்பும் அனைவருமே என் அருகிலே உள்ளனர்..
************************************************************************
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

சிவப்பு நிற சட்டை..சந்தன நிற பேண்ட்..
************************************************************************
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

ஒரு முறை பிறந்தேன்..ஒரு முறை பிறந்தேன்..உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்..
************************************************************************
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு
************************************************************************
14.பிடித்த மணம்?

மல்லிகையின் மணம்.மண்வாசனை.
************************************************************************
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

பொன் வாசுதேவன்: "அகநாழிகை" என்னும் பெயரில் எழுதி வருகிறார்..நிறைய கவிதைகள் எழுதுவார்.
************************************************************************
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

டக்லஸ்: எனக்கு பிடித்த பதிவு. 2020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை..நல்ல மொக்கையான பதிவு.
************************************************************************
17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்..
************************************************************************
18.கண்ணாடி அணிபவரா?

கண்டிப்பாக இல்லை
************************************************************************
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

பெரும்பாலும் காதல் திரைப்படங்கள்.
************************************************************************
20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க..
************************************************************************
21.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்
************************************************************************
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் இரண்டாம் பாகம்..
************************************************************************
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

தினமும் ஒரு படம் வைத்து ரசிப்பேன்
************************************************************************
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது:குழந்தையின் சிரிப்பு.
பிடிக்காதது : ரோட்டில் வரும் ஹார்ன் இரைச்சல்,
************************************************************************
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சென்னை..
************************************************************************
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எதுவும் இல்லை..
************************************************************************
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பொதுவா லஞ்சம், மற்றும் ஏமாற்றுதல்.
************************************************************************
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்…
************************************************************************
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இன்னும் எதுவுமே பார்க்கலைங்க..பார்த்தபின் தான்சொல்ல முடியும்.. இதுவரை குற்றாலம் ரொம்ப பிடிக்கும்.. ************************************************************************
30.எப்படி இருக்கணும்னு ஆசை?

பெரிய ஆசை எல்லாம் ஒன்னும் இல்லைங்க..இந்தியாவின் பிரதமர் ஆனால் போதும்..
************************************************************************
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?

ஏற்கனவே சொன்னது போல் நான் ரொம்ப சின்னப்பையன்ங்க..
************************************************************************
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை வாழ்வதற்கே..ஒவ்வொருவரும் தன் இலக்கை நோக்கி முயற்சித்து போராடுங்கள்.. வெற்றி ஒரு நாள் நிச்சயம்..
************************************************************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் படுத்தும் பாடு!!


தன் காதல் கடிதத்தை சாந்தியிடம் நீட்டினான் சக்தி..அவளும் அக்கடிதத்தை எதிர்பார்த்து இருந்திருப்பாள் போல..அவன் கொடுத்தவுடன் பெண்ணுக்கே உரிய வெட்கத்துடன் தலைகுனிந்து வாங்கிச்சென்றாள்.இவனுக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி.என்ன செய்வதென்று தெரியவில்லை..ரோட்டில் தானாவே சிரித்தான்..அவனது கால்கள் ரோட்டில் ஆட்டம் போட்டுக்கொண்டே சென்றன..என்ன சொல்லப்போகிறாள் தெரியவில்லையே..மறுநாள் காலையில் தான் அவளை சந்திக்க இயலும்..ஓ.கே சொல்லிடுவாளா?

அன்றிரவு அவனுக்கு உறக்கம் வரவில்லை..நண்பர்களை தொலைபேசியில் அழைத்தான்..அனைவரும் வழக்கம் போல் கட்டைச்சுவரில் கூடினர்.

என்னடா மாப்ள..அவசரமா வரச்சொன்ன..

சும்மாதான்டா..

சொல்லேண்டா..10.00 மணியாச்சு தூங்கணும்

ஒண்ணுமில்லைடா இன்னிக்கு சாந்திக்கு லவ் லெட்டர் கொடுத்தேன்டா..

என்னடா சொன்னா..

காலையில சொல்றேன் சொன்னாடா..

மச்சி கலக்கிறடா..சரிடா காலையில பார்ப்போம்.

இருடா எனக்கு தூக்கமே வரலைடா..கொஞ்சம் பொறுடா.

எனக்கு தூக்கம் வருதேடா..அவ உனக்கு தான் மச்சான் கவலைப்படாதே..போய் தூங்குடா..

பிரியா மனதுடன் விடை பெற்று சென்றான்..

இரவு உறக்கம் வரவில்லை..தீடிரென விழித்தான்..அதிகாலை 4.00 மணி..விடியலை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தான்..கிழக்கில் சூரியன் மெல்ல உதிக்க ஆரம்பித்தான்.மிக ஆர்வத்துடன் கல்லூரிக்கு கிளம்ப தயாரானான்.அவனிடம் இருப்பதிலே மிகவும் நல்ல ஆடையை அணிந்தான்..தலையை நூறு முறை சீவியும் அவனுக்கு அழகாக தெரியவில்லை..ஒருமனதாக கல்லூரிக்கு கிளம்பினான்..

மிகவும் ஆவலுடன் கல்லூரியின் வாசலை எதிர்நோக்கி இருந்தான்.மணி 9.00 ஆகியும் வரவில்லை..அவள் தோழிகளிடம் விசாரித்தான்..அனைவரும் தெரியவில்லை என்றே பதில் கூறினர்..மனம் உடைந்து போனான்..

யாரோ ஒருவர் ஓடி வருவதை உணர்ந்த அவன் திரும்பிபார்க்க..சாந்தி மூச்சிரைக்க ஓடி வந்தாள்..அவளைக்கண்டதும் அவன் மகிழ்ச்சியில் திளைத்தான்.
அவளிடம் இருந்து ஒரு வார்த்தைக்காக மிகவும் ஏங்கினான்..

அவளோ ச்.சீ போடா என்று சிணுங்கியபடி வகுப்புக்குள் ஓடினாள்..இவன் மனதுக்குள் ஒரு ஆயிரம் சூர்யா வந்துவிட்டது போல் துள்ளிகுதித்தான்..

துள்ளி குதித்ததில் அவனை அறியாமல் படுக்கையறையிலிருந்து கீழே விழுந்தான்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனக்குப் பிடித்த ஆசிரியர்கள் (தொடர் பதிவு)...!!!!

ஆசிரியர்கள் பற்றிய தொடர்பதிவினை எழுத ஆசிரியர் கார்த்திகைப்பாண்டியன் அண்ணன் ஏப்ரல் மாதமே அழைப்பு விடுத்திருந்தார்..ஆனால் சில காரணங்களால் அந்நேரம் எழுத இயலவில்லை..இப்போது எழுதுகிறேன்...

இன்றைய உலகில் குழந்தைகள் அம்மாவுடன் இருப்பதைவிட ஆசிரியருடனே அதிக நேரம் கழிக்கின்றனர்..பள்ளி விடுமுறையிலும் கூட கணிணி படிப்பு, செஸ் விளையாட்டு என மாணவர்கள் பெற்றோர்களை நெருங்கவே வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது

நான் படித்தது எல்லாம் நான் வளர்ந்த பேராபட்டி என்னும் கிராமத்தில்..அங்குள்ள அரசு துவக்க பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றேன்..பின் ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அருகிலுள்ள சின்னக்காமன்பட்டி என்னும் ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றேன்..

என் பள்ளி வாழ்வினில் எனக்கு பிடித்த ஆசிரியர்கள் என்று சொன்னால் என் மனதில் உடனே வருவது..

மல்லிகா ஆசிரியை:-

என் முதல் வகுப்பு ஆசிரியர்.எனக்கு ரொம்ப பிடித்த ஆசிரியர்.மேலும் எனக்கு அ..ஆ.சொல்லிக்கொடுத்தவர்..என்னை இப்போது பார்த்தாலும் மிகவும் மனநிறைவோடு நலம் விசாரிப்பார்..எனக்கு எழுத்தறிவித்த அந்த முதல் வகுப்பு ஆசிரியரே என்றுமே மறக்க முடியாது..கடந்த நான்கு வருடங்களாக அவர்களை சந்திக்கவில்லை..எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை..எங்கிருந்தாலும் இந்த மாணவனின் மனமார்ந்த நன்றிகள்..

செல்வராஜ் ஆசிரியர்:-

எனக்கு ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் தமிழ் கற்றுக்கொடுத்தவர்.என் மீது மிகவும் பாசம் கொண்டவர்.எனது கையெழுத்து அழகாக இருப்பதனால் என்னையே கரும்பலகையில் கட்டுரைகள் எழுத சொல்லுவார்..அவர் பாடம் நடத்தும் போதே பாடத்தின் சம்பந்தமான கதைகளை எடுத்துக்கூறுவார்..பாடத்தை கவனிப்பதை விட அவர் சொல்லும் கதைகளை நன்றாக கவனிப்பேன்..அவருடன் எந்த வகுப்பு மாணவன் பேசினாலும் தமிழிலே உரையாட வேண்டும்.இல்லை என்றால் கண்டிப்பாக அடி விழும்..பள்ளி வாழ்வினில் மிகவும் நெருங்கிப்பழகிய ஆசிரியர்களில் அவரும் ஒருவர்..எப்போதும் கதர் சட்டை,வேஷ்டி அணிந்திருப்பார்..பார்த்தவுடனே நான் என்னை அறியாமல் கையெடுத்து வணக்கம் ஐயா என்று கூறிவிடுவேன்..

இன்னும் நிறைய ஆசிரியர்கள் என் பள்ளிவாழ்வினில் மறக்கமுடியாதவர்கள்...எனக்கு பாடம் கற்பித்து நல்ல அறிவூட்டிய அனைத்து ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS