ஒரு பிரபல பதிவரின் காதல் ஏக்கங்கள்..!!!


முதலில் இக்கதையின் கதாநாயகனை பற்றிய ஒரு சிறு குறிப்பு:-

என்னைப்பற்றி சொல்ல ஒண்ணுமில்லைங்க..நல்ல பையன், அப்பாவி, வெள்ள சோறு, புள்ள பூச்சி.. இப்படி என்ன பத்தி எங்க ஊர்ல சொல்லுவாங்க.. ஆனா உண்மையில நான் ரொம்ப கெட்டவன் என்று எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. மேலும் சொந்தமாக ஒரு Browsing Centre வைத்து நடத்தி வருகிறேன்.

ஒரு மாலை நேரப்பொழுது..மணி சரியாக தெரியாவிட்டாலும் கதிரவன் வானத்திற்கு விடைகொடுத்துக்கொண்டிருந்தான்..அந்த அழகினை மெல்ல ரசித்துக்கொண்டிருந்தேன்..'இயற்கையின் அழகே தனிதான்'என்று மனதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

தூரத்தில் ஒரு வெண்ணிலவு நடந்து வந்தது..என்னடா இது இன்னும் கதிரவன் மறையவே இல்லை..அதற்குள் வெண்ணிலவா..ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்கையில்...
சார்..மணிக்கு எவ்வளவு ரூபாய்?..

சுய நினைவுக்கு வந்தவனாய்...பத்து ரூபாய் மேடம்

இந்தாங்க..

பணத்தை வாங்கியவுடன் என் மனது ஏனோ திரும்பி பார்க்க சொல்லி கட்டளையிட்டது..

திரும்பிப் பார்த்தவுடன்..கருப்பு நிற சுடிதாரில் ஒரு வெண்ணிலவு ஒளிந்து கொண்டிருந்தது.. Browsing பண்ணனும்...

ம்ம்..எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பண்ணுங்க..

மணிக்கு எவ்வளவு ரூபாய்?

ஐந்தே ரூபாய் தான் மேடம்..

ரொம்ப கம்மியாக இருக்கு..

ஆடித்தள்ளுபடி அதான்..ஒரு புன்சிரிப்புடன்..

அந்த சிஸ்டத்தில் உட்காருங்க மேடம்...

சார் இந்த சிஸ்டம் வொர்க் பண்ணலை..

ச்செ..இது வேற மக்கர் பண்ணுது..என்று மனதிற்குள் புலம்பினவனாய்..

நீங்க இந்த சிஸ்டத்தில் உட்காருங்க மேடம்..

சரி..

Browsing பண்ணி முடித்ததும் என் அருகில் வந்து இந்தாங்க..என்று 100 ரூபாயை நீட்டினாள்..

சில்லரை இல்லை மேடம்..அடுத்த முறை வரும் போது நான் வாங்கிக்கிறேன்..

அவளோ என்னை ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு சென்றாள்..

என்னடா நடக்குது இங்க..என் நண்பன் கேட்டான்..

சும்மாதான்டா..அந்த பொண்ணு அழகா இருக்காடா மச்சி..அதுவும் அவளோட அந்த தெத்துப்பல் அழகுக்கே அழகு சேர்ப்பது போல் உள்ளதுடா..

உனக்கு என்னமோ ஆச்சு..உட்கார்ந்து வேலையைப் பாருடா..

மறுநாள் மாலை..

அவளுக்காக நான் காத்திருக்க..

இம்முறை அனைத்து சிஸ்டம் வேலை செய்கிறதா என்று செக் பண்ணினேன்..

நினைத்தது போலவே அந்த அழகு தேவதை வந்தாள்..ஒரு புன் சிரிப்புடன்

Browsing பண்ணி முடித்தவுடன் சரியான சில்லறையை கொடுத்துவிட்டு தான் கொண்டு வந்த வண்டியை ஸ்டார்ட் பண்ணினாள்..வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை..ஒருமுறை இருமுறை என கணக்கில்லாமல் மிதித்து கொண்டிருப்பதை நான் ரசித்து கொண்டிருந்தேன்..நான் அந்த வண்டியாக இருந்திருக்க கூடாதா? என்ற எண்ணம் என் மனதில் அலைபாயாமல் இல்லை..

கிட்ட போய்..anyhelp என்றேன்..

ya என்றாள்..

உடனே நான் ஹீரோயிசத்தினை காட்ட ஆரம்பித்தேன்..தோல்வியே கிடைத்தது தவிர வெற்றி கிட்டவில்லை..இறுதியில் ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ணுங்க மேடம்..மெக்கானிக் வரச்சொல்றேன் என்றேன்..

மெக்கானிக் வந்து சரி பண்ணும் வரை அவளுடன் கலாய்த்துக்கொண்டிருந்தேன்..தான் காலேஜ் படிப்பதாக கூறினாள்..கஷ்டப்பட்டு அவளுடைய மொபைல் நம்பரை வாங்கிக்கொண்டேன்..

அன்று முதல் நாங்கள் எஸ்.எம்.எஸில்.பேசத்தொடங்கினோம்

அவள் : "Don't miss or avoid d person who really had a true affection on u. it may make u feel when they live without u and your memories....."

அவசர அவசரமாக பதிலளித்தேன்..

"hey... what a surprise... எப்படி இருக்கே? சாப்டாச்சா? "

அவள்: ஓ சாப்டாச்சு.. நீ சாப்டயா.. வீட்டுக்கு வந்தாச்சா..

சாப்டாச்சு.. ஆனா இன்னைக்கு வீட்டுக்கு வரல.. ஆபிஸ்லதான் இருக்கிறேன்..

அவள்: ஏன்பா???

கொஞ்சம் அவசர வேலை இருக்கு.. நாளைக்குள்ள முடிக்கணும்.. அதுதான்..

அவள்: சரி.. continue பண்ணு.. Good night.. Sweet dreams.. bye..

ஒரு ஸ்வீட்டே ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்லுதே...

அவள்: ரொம்ப ஐஸ் வைக்காத.. வேலைய பாரு..

ஐஸ் கிரீமுக்கே யாரவது ஐஸ் வைக்க முடியுமா...

அவள்: ஐயோ முடியல... நா தூங்க போறேன்..

கனவுலையும் என் கூடத்தான் பேச போற.. அதுக்கு இப்பவே பேசலாம்ல..

அவள்: ஆசைதான்.. டைப் பண்ணி முடிச்சுட்டு சீக்கிரம் தூங்குடா.. Bye..

சரிங்க மேடம்.. Good night...

நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து சோம்பல் முறித்தேன்.. கற்பனையில் கொஞ்ச ஆரம்பித்தேன்..

ஸ்பீக்கரில்
"காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை..
காதல் இன்றி யாரும் இங்கில்லை..." யேசுதாஸ் பாடி கொண்டிருந்தார்..

அப்படியே தூங்கி போனேன்..

டிஸ்கி:- 1.இது முழுக்க முழுக்க ஒரு பிரபல பதிவரை சார்ந்த காதல் கசமுசாக்கள்..

2.நான் கதை என்று நினைக்கிறேன்..நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

72 பின்னூட்டங்கள்:

வேத்தியன் said...

இது அந்த பிரபலமான “லோ”வில் தொடங்கி “கு”வில் முடியும் பெயரை உடையவர் இல்லை தானே ???
:-)

நட்புடன் ஜமால் said...

என்னமோ போங்கோ!

நையாண்டி நைனா said...

இது கதை தான் பாஸ். ஆனா உண்மைக்கதை.

Anonymous said...

thusyanthan
france

ayiiiiiiiii
ithu namma logu vin kathal kathyiiiii

Anonymous said...

துஷ்யந்தன்
பிரான்ஸ்

அன்பு ஏன் உனக்கு இந்த வம்பு..

Anonymous said...

துஷ்யந்தன்
பிரான்ஸ்

ஒரு பிரபல பதிவர்- இத ஒத்துப்பன்..

காதல் ஏக்கங்கள்-இத ஒத்துக்க மாட்டன்

அப்துல்மாலிக் said...

//ஒருமுறை இருமுறை என கணக்கில்லாமல் மிதித்து கொண்டிருப்பதை நான் ரசித்து கொண்டிருந்தேன்..நான் அந்த வண்டியாக இருந்திருக்க கூடாதா?//

மிதிபட்டே செத்துருப்பீங்க....

டக்ளஸ் said...

இன்னா டம்ப்ரீ....!
நைனா வேலைய நீ பாத்துக்குனுக்கீற..!
:)

சுந்தர் said...

அது யாருன்னு எனக்கு மட்டும் சொல்லு

Anbu said...

\\வேத்தியன் said...

இது அந்த பிரபலமான “லோ”வில் தொடங்கி “கு”வில் முடியும் பெயரை உடையவர் இல்லை தானே ???
:-)\\

அதே தான் தல..

வால்பையன் said...

//கதிரவன் வானத்திற்கு விடைகொடுத்துக்கொண்டிருந்தான்.//

வானம் என்ன கேள்வி கேட்டுச்சுன்னு கதிரவன் விடை கொடுக்கிறார்!

Anbu said...

\\நட்புடன் ஜமால் said...

என்னமோ போங்கோ!\\

எங்க அண்ணன் போக..

வருகைக்கு நன்றி அண்ணா

Anbu said...

\\நையாண்டி நைனா said...

இது கதை தான் பாஸ். ஆனா உண்மைக்கதை.\\

ஆம் அண்ணா..

வருகைக்கு நன்றி

வால்பையன் said...

//தூரத்தில் ஒரு வெண்ணிலவு நடந்து வந்தது//

நிலாவுக்கு எப்பய்யா கால் முளைச்சது!
ஒரு பொண்ணு நடந்து வந்தததுன்னு சொல்றதுக்கு ஏன்யா உங்களுக்கு இப்படி வலிக்குது!

Anbu said...

\\துஷ்யந்தன்
பிரான்ஸ்

ஒரு பிரபல பதிவர்- இத ஒத்துப்பன்..

காதல் ஏக்கங்கள்-இத ஒத்துக்க மாட்டன்\\

கண்டிப்பாக ஒத்துக்க வேண்டும் அண்ணா..

வருகைக்கு நன்றி

Anbu said...

\\\\அபுஅஃப்ஸர் said...

//ஒருமுறை இருமுறை என கணக்கில்லாமல் மிதித்து கொண்டிருப்பதை நான் ரசித்து கொண்டிருந்தேன்..நான் அந்த வண்டியாக இருந்திருக்க கூடாதா?//

மிதிபட்டே செத்துருப்பீங்க....\\

அதிலும் ஒரு சுகம் தான் அண்ணா..

வருகைக்கு நன்றி..

Anbu said...

\\டக்ளஸ் said...

இன்னா டம்ப்ரீ....!
நைனா வேலைய நீ பாத்துக்குனுக்கீற..!
:)\\\


சும்மாதான் தல..

வருகைக்கு நன்றி தல

வால்பையன் said...

//சார்..மணிக்கு எவ்வளவு ரூபாய்?..//

யோவ்! அது ப்ரெளசிங் செண்டரா இல்ல சைக்கிள் கடையா!?

வால்பையன் said...

//.பத்து ரூபாய் மேடம் இந்தாங்க..//

சொல்லிட்டு நீயே காசு கொடுத்தியா!
விளங்கிறும் செண்டரு!

Anbu said...

\\தேனீ - சுந்தர் said...

அது யாருன்னு எனக்கு மட்டும் சொல்லு\\

அது ரொம்ப ரகசியமான நபர் அண்ணா..உங்க கிட்ட மட்டும் சொல்றேன்...யார்கிட்டேயும் சொல்லாதீங்க..அடித்துக்கூட கேட்பாங்க சொல்லாதீங்க..சரியா..

வருகைக்கு நன்றி அண்ணா

வால்பையன் said...

//கருப்பு நிற சுடிதாரில் ஒரு வெண்ணிலவு ஒளிந்து கொண்டிருந்தது//

எத்தனை வெண்ணிலவுதாய்யா நாட்டுகுள்ள சுத்துது!

வால்பையன் said...

//ஆடித்தள்ளுபடி அதான்//

உம்மை உள்ள தள்ளுன்னா சரியா போகும்!

சுந்தர் said...

நேற்று மதுரையில் , கா.பா. இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட வளரும் பதிவர், அடிக்கடி செல்பேசியுடன் , மாயமாகி கொண்டே இருந்தார். இதன் பின்னணி என்ன ? . அவரை பற்றிய க்ளூ , அவர் ஊரின் பெயர் "சி" யில் ஆரம்பித்து "சி" யில் முடியும். திறந்த இதயம் என பதிவிற்கு பெயர் வைத்துள்ளார் .

வால்பையன் said...

//ஒருமுறை இருமுறை என கணக்கில்லாமல் மிதித்து கொண்டிருப்பதை நான் ரசித்து கொண்டிருந்தேன்..நான் அந்த வண்டியாக இருந்திருக்க கூடாதா? //

உதைவாங்குறதுல உமக்கு அம்புட்டு பிரியமாய்யா! தெரிஞ்சிருந்தா மதுரையில பார்த்த போது எல்லோரும் சேர்ந்து ஃபுட்பால் ஆடியிருப்போமே!

Anbu said...

\\வால்பையன் said...

//கதிரவன் வானத்திற்கு விடைகொடுத்துக்கொண்டிருந்தான்.//

வானம் என்ன கேள்வி கேட்டுச்சுன்னு கதிரவன் விடை கொடுக்கிறார்!\\

வால் அது எங்களை மாதிரி யூத்துக்கு மட்டுமே கேட்க கூடிய கேள்வி
உங்களுக்கு கிடையாது..

Anbu said...

\\வால்பையன் said...

//தூரத்தில் ஒரு வெண்ணிலவு நடந்து வந்தது//

நிலாவுக்கு எப்பய்யா கால் முளைச்சது!
ஒரு பொண்ணு நடந்து வந்தததுன்னு சொல்றதுக்கு ஏன்யா உங்களுக்கு இப்படி வலிக்குது!\\

அதெல்லாம் ஒருவித பீலிங் வால்

உங்களுக்கு வயசாயிடுச்சுல..

வால்பையன் said...

நீங்க கலாய்ச்சு விளையாட நாங்க தான் கிடைச்சோமா!

Anbu said...

\\ வால்பையன் said...

//சார்..மணிக்கு எவ்வளவு ரூபாய்?..//

யோவ்! அது ப்ரெளசிங் செண்டரா இல்ல சைக்கிள் கடையா!?\\

ப்ரெளசிங் சென்டர் தான் வால்..

Anbu said...

\\வால்பையன் said...

//கருப்பு நிற சுடிதாரில் ஒரு வெண்ணிலவு ஒளிந்து கொண்டிருந்தது//

எத்தனை வெண்ணிலவுதாய்யா நாட்டுகுள்ள சுத்துது!\\

ஒன்னுதான் வால்..

பல உருவங்களில் சுத்துதது..

வால்பையன் said...

//வால் அது எங்களை மாதிரி யூத்துக்கு மட்டுமே கேட்க கூடிய கேள்வி
உங்களுக்கு கிடையாது.. //

பொறந்ததிலிருந்து எனக்கு பொண்ணுங்க பொண்ணுங்க மாதிரி தான் தெரியுறாங்க!
உங்களுக்கு மட்டும் ஏன் அப்படி?
யார் கண்ணுல கோளாறு!

Anbu said...

\\வால்பையன் said...

நீங்க கலாய்ச்சு விளையாட நாங்க தான் கிடைச்சோமா!\\

சும்மா லுலாயிக்கு..

வால்பையன் said...

//அதெல்லாம் ஒருவித பீலிங் வால்
உங்களுக்கு வயசாயிடுச்சுல.. //

இப்படி சொல்லி சொல்லியே எனக்கு வயசாயிரும்போல!
அப்படி என்னய்யா எனக்கு வயசாயிருச்சா ஒரு இருத்தியொன்னு இருக்குமா!

சுசி said...

அப்டி என்னதான் அந்த பிரபலம் ஏங்கி இருக்கார்னு பாத்தா மாட்டர் இதுதானா. இருந்தாலும் என்னால அது யாருன்னு கண்டு பிடிக்கவே முடீலங்க. கொஞ்சூண்டு ஈசியான க்ளூவா குடுத்திருக்க கூடாதா? வேணா நான் லோகு கிட்ட கேட்டுக்கிறேன் இது யாருன்னு!!
அன்புடன் - சுசி.

வால்பையன் said...

//எத்தனை வெண்ணிலவுதாய்யா நாட்டுகுள்ள சுத்துது!\\
ஒன்னுதான் வால்..
பல உருவங்களில் சுத்துதது.. //

பாத்துக்கோ மோகினி பிசாசா இருக்க்ப்போவுது!

Anbu said...

\\வால்பையன் said...

//வால் அது எங்களை மாதிரி யூத்துக்கு மட்டுமே கேட்க கூடிய கேள்வி
உங்களுக்கு கிடையாது.. //

பொறந்ததிலிருந்து எனக்கு பொண்ணுங்க பொண்ணுங்க மாதிரி தான் தெரியுறாங்க!
உங்களுக்கு மட்டும் ஏன் அப்படி?
யார் கண்ணுல கோளாறு!\\


ஒரு பீலிங் வால்..

மனதிலிருந்து வருகிறது..தடுக்க இயலவில்லை..

வால்பையன் said...

//ஒரு பீலிங் வால்..
மனதிலிருந்து வருகிறது..தடுக்க இயலவில்லை.. //

பாத்துகோப்பா ரொம்ப முத்தீறப்போவுது!

கடைக்குட்டி said...

முழுநேர பதிவராய்டியா ???

செம பதிவு நண்பா :-)

Anbu said...

\\சுசி said...

அப்டி என்னதான் அந்த பிரபலம் ஏங்கி இருக்கார்னு பாத்தா மாட்டர் இதுதானா. இருந்தாலும் என்னால அது யாருன்னு கண்டு பிடிக்கவே முடீலங்க. கொஞ்சூண்டு ஈசியான க்ளூவா குடுத்திருக்க கூடாதா? வேணா நான் லோகு கிட்ட கேட்டுக்கிறேன் இது யாருன்னு!!
அன்புடன் - சுசி\\



நீங்க லோகுவிடம் கேளுங்கள் விரிவாக சொல்லுவார்..

நன்றி அக்கா முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

Anbu said...

\\தேனீ - சுந்தர் said...

நேற்று மதுரையில் , கா.பா. இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட வளரும் பதிவர், அடிக்கடி செல்பேசியுடன் , மாயமாகி கொண்டே இருந்தார். இதன் பின்னணி என்ன ? . அவரை பற்றிய க்ளூ , அவர் ஊரின் பெயர் "சி" யில் ஆரம்பித்து "சி" யில் முடியும். திறந்த இதயம் என பதிவிற்கு பெயர் வைத்துள்ளார் \\

அதுநான் தாங்கோ..

வேறு யாரும் இல்லைங்கோ..

Anbu said...

\\வால்பையன் said...

//அதெல்லாம் ஒருவித பீலிங் வால்
உங்களுக்கு வயசாயிடுச்சுல.. //

இப்படி சொல்லி சொல்லியே எனக்கு வயசாயிரும்போல!
அப்படி என்னய்யா எனக்கு வயசாயிருச்சா ஒரு இருத்தியொன்னு இருக்குமா!\\

கண்டிப்பாக இல்லை வால்

வால்பையன் said...

அப்போ அதுக்கும் கம்மியா!

Anbu said...

\\வால்பையன் said...

//எத்தனை வெண்ணிலவுதாய்யா நாட்டுகுள்ள சுத்துது!\\
ஒன்னுதான் வால்..
பல உருவங்களில் சுத்துதது.. //

பாத்துக்கோ மோகினி பிசாசா இருக்க்ப்போவுது!\\

அது மோகினி இல்லை வால்

வானத்து தேவதைகள்..

Anbu said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

//அது மோகினி இல்லை வால்
வானத்து தேவதைகள்.. //

முதல்ல அப்படிதான் தெரியும்,
டவுசர உருவீட்டு போன பிறகு சொல்லுவிங்க யாருன்னு!

Anbu said...

\\\வால்பையன் said...

//ஒரு பீலிங் வால்..
மனதிலிருந்து வருகிறது..தடுக்க இயலவில்லை.. //

பாத்துகோப்பா ரொம்ப முத்தீறப்போவுது!\\

இது முத்திவிட்டது வால்..

இன்னும் ஒன்னும் பண்ண இயலாது

Anbu said...

\\வால்பையன் said...

//அது மோகினி இல்லை வால்
வானத்து தேவதைகள்.. //

முதல்ல அப்படிதான் தெரியும்,
டவுசர உருவீட்டு போன பிறகு சொல்லுவிங்க யாருன்னு!\\

டவுசர் போடுற பழக்கமே இல்லை வால்..

Anbu said...

\\கடைக்குட்டி said...

முழுநேர பதிவராய்டியா ???

செம பதிவு நண்பா :-)\\

ஆமா அண்ணா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

தீப்பெட்டி said...

கத நல்லாயிருக்கே..

Anbu said...

\\தீப்பெட்டி said...

கத நல்லாயிருக்கே\\

நன்றி அண்ணா

முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

கதை நல்லாவே இருக்கு - மனசுலே தோணுதா - சரி சரி - எழுது - எழுது

நல்வாழ்த்துகள் அன்பு

Anonymous said...

கதை சூப்பரு..அதை விட போட்டோ சூப்பரு...ஹி,ஹி

Anbu said...

\\ cheena (சீனா) said...

அன்பின் அன்பு

கதை நல்லாவே இருக்கு - மனசுலே தோணுதா - சரி சரி - எழுது - எழுது

நல்வாழ்த்துகள் அன்பு\\

நன்றி ஐயா ...வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

Anbu said...

\\இங்கிலீஷ்காரன் said...

கதை சூப்பரு..அதை விட போட்டோ சூப்பரு...ஹி,ஹி\\\

நன்றி அண்ணா..

முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

சொல்லரசன் said...

என்னதான் நையான்டிசெய்தாலும்,அவர் அச்சம்தவிர்த்துவிடுவார்

Anbu said...

\\சொல்லரசன் said...

என்னதான் நையான்டிசெய்தாலும்,அவர் அச்சம்தவிர்த்துவிடுவார்\\

உண்மைதான்....

வருகைக்கு நன்றி அண்ணா

சொல்லரசன் said...
This comment has been removed by the author.
அத்திரி said...

கதையின்னு சொன்னதால நம்பிட்டேன்

வழிப்போக்கன் said...

அவசர அவசரமாக பதிலளித்தேன்..//

அவ்ளோ அவசரமா???
:)))

Raju said...

அடிங்கொய்யால..!
இவந்தான் அந்த பிரபல பதிவரா..?
ரொம்ப நாளா தெரியாமப் போச்சே..! காட்டிக் கொடுத்ததுக்கு ரொம்ப டேங்சு டம்ப்ரீ...

ஆ.ஞானசேகரன் said...

//2.நான் கதை என்று நினைக்கிறேன்..நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்..//

கதைமாதிரி தெரியுது ஆனா இல்லை

லோகு said...

என்ன நடக்குது இங்கே..

லோகு said...

//என்னைப்பற்றி சொல்ல ஒண்ணுமில்லைங்க..நல்ல பையன், அப்பாவி, வெள்ள சோறு, புள்ள பூச்சி.. இப்படி என்ன பத்தி எங்க ஊர்ல சொல்லுவாங்க.//

எந்த ஊர் ராசா..

லோகு said...

//ஆனா உண்மையில நான் ரொம்ப கெட்டவன் என்று எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. //

அப்படியா

லோகு said...

//தூரத்தில் ஒரு வெண்ணிலவு நடந்து வந்தது..என்னடா இது இன்னும் கதிரவன் மறையவே இல்லை..அதற்குள் வெண்ணிலவா..ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்கையில்..//

அய்யயோ மாலைக்கண் வந்துருச்சுன்னு நெனைக்கிறேன்.. போய் கண்ணை டெஸ்ட் பண்ணுடா..

லோகு said...

//மணிக்கு எவ்வளவு ரூபாய்?

ஐந்தே ரூபாய் தான் மேடம்..//

//
சில்லரை இல்லை மேடம்..அடுத்த முறை வரும் போது நான் வாங்கிக்கிறேன்..//

வெளங்கிடும்..

லோகு said...

//.ஒருமுறை இருமுறை என கணக்கில்லாமல் மிதித்து கொண்டிருப்பதை நான் ரசித்து கொண்டிருந்தேன்..நான் அந்த வண்டியாக இருந்திருக்க கூடாதா? என்ற எண்ணம் என் மனதில் அலைபாயாமல் இல்லை..//

அவ அடுத்த நாள் சாணிய கூட மிதிச்சு இருப்பா.. அதுக்காக சாணியா மாறிடுவியா??

லோகு said...

//அவள் : "Don't miss or avoid d person who really had a true affection on u. it may make u feel when they live without u and your memories....."//


ஒனக்குத்தான் இங்கிலிஸ் வராதேடா...

லோகு said...

//இது முழுக்க முழுக்க ஒரு பிரபல பதிவரை சார்ந்த காதல் கசமுசாக்கள்..//


எவண்டா அவன்..

லோகு said...

//டக்ளஸ்....... said...

அடிங்கொய்யால..!
இவந்தான் அந்த பிரபல பதிவரா..?
ரொம்ப நாளா தெரியாமப் போச்சே..! காட்டிக் கொடுத்ததுக்கு ரொம்ப டேங்சு டம்ப்ரீ...//


உனக்கும் தெரிஞ்சுடுச்சா..

யாரு மாப்ள அவன்..

Rajeswari said...

///இது அந்த பிரபலமான “லோ”வில் தொடங்கி “கு”வில் முடியும் பெயரை உடையவர் இல்லை தானே ???
:-)

//

எப்படித்தான் இப்படியெல்லாம் முடியுதோ

*இயற்கை ராஜி* said...

எப்படி இப்படி?:-))))

Sinthu said...

அன்பு நீங்க நல்லாவே சுடுவீங்க போல் இருக்கிறதே,,