எனக்குப் பிடித்த ஆசிரியர்கள் (தொடர் பதிவு)...!!!!

ஆசிரியர்கள் பற்றிய தொடர்பதிவினை எழுத ஆசிரியர் கார்த்திகைப்பாண்டியன் அண்ணன் ஏப்ரல் மாதமே அழைப்பு விடுத்திருந்தார்..ஆனால் சில காரணங்களால் அந்நேரம் எழுத இயலவில்லை..இப்போது எழுதுகிறேன்...

இன்றைய உலகில் குழந்தைகள் அம்மாவுடன் இருப்பதைவிட ஆசிரியருடனே அதிக நேரம் கழிக்கின்றனர்..பள்ளி விடுமுறையிலும் கூட கணிணி படிப்பு, செஸ் விளையாட்டு என மாணவர்கள் பெற்றோர்களை நெருங்கவே வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது

நான் படித்தது எல்லாம் நான் வளர்ந்த பேராபட்டி என்னும் கிராமத்தில்..அங்குள்ள அரசு துவக்க பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றேன்..பின் ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அருகிலுள்ள சின்னக்காமன்பட்டி என்னும் ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றேன்..

என் பள்ளி வாழ்வினில் எனக்கு பிடித்த ஆசிரியர்கள் என்று சொன்னால் என் மனதில் உடனே வருவது..

மல்லிகா ஆசிரியை:-

என் முதல் வகுப்பு ஆசிரியர்.எனக்கு ரொம்ப பிடித்த ஆசிரியர்.மேலும் எனக்கு அ..ஆ.சொல்லிக்கொடுத்தவர்..என்னை இப்போது பார்த்தாலும் மிகவும் மனநிறைவோடு நலம் விசாரிப்பார்..எனக்கு எழுத்தறிவித்த அந்த முதல் வகுப்பு ஆசிரியரே என்றுமே மறக்க முடியாது..கடந்த நான்கு வருடங்களாக அவர்களை சந்திக்கவில்லை..எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை..எங்கிருந்தாலும் இந்த மாணவனின் மனமார்ந்த நன்றிகள்..

செல்வராஜ் ஆசிரியர்:-

எனக்கு ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் தமிழ் கற்றுக்கொடுத்தவர்.என் மீது மிகவும் பாசம் கொண்டவர்.எனது கையெழுத்து அழகாக இருப்பதனால் என்னையே கரும்பலகையில் கட்டுரைகள் எழுத சொல்லுவார்..அவர் பாடம் நடத்தும் போதே பாடத்தின் சம்பந்தமான கதைகளை எடுத்துக்கூறுவார்..பாடத்தை கவனிப்பதை விட அவர் சொல்லும் கதைகளை நன்றாக கவனிப்பேன்..அவருடன் எந்த வகுப்பு மாணவன் பேசினாலும் தமிழிலே உரையாட வேண்டும்.இல்லை என்றால் கண்டிப்பாக அடி விழும்..பள்ளி வாழ்வினில் மிகவும் நெருங்கிப்பழகிய ஆசிரியர்களில் அவரும் ஒருவர்..எப்போதும் கதர் சட்டை,வேஷ்டி அணிந்திருப்பார்..பார்த்தவுடனே நான் என்னை அறியாமல் கையெடுத்து வணக்கம் ஐயா என்று கூறிவிடுவேன்..

இன்னும் நிறைய ஆசிரியர்கள் என் பள்ளிவாழ்வினில் மறக்கமுடியாதவர்கள்...எனக்கு பாடம் கற்பித்து நல்ல அறிவூட்டிய அனைத்து ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

22 பின்னூட்டங்கள்:

Suresh said...

சூப்பர்

Suresh said...

ஒரு ஆசிரியர் உன்னை அழைத்து இருக்காரு

வால்பையன் said...

இந்த பதிவு எழுத ஸ்கூலுக்கு போகிருக்கனுமா?

Anbu said...

\\\Suresh said...

ஒரு ஆசிரியர் உன்னை அழைத்து இருக்காரு\\

கண்டிப்பாக அண்ணா ..அவருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்..வருகைக்கு நன்றி அண்ணா

Anbu said...

\\வால்பையன் said...

இந்த பதிவு எழுத ஸ்கூலுக்கு போகிருக்கனுமா?\\

கண்டிப்பாக அண்ணா ..படிக்க வேண்டும் இருந்தாலும் கார்த்தி அண்ணனிடம் கேட்டு சொல்றேன்

Athisha said...

ஆட்டோ கிராப்பா..

*இயற்கை ராஜி* said...

nalla irukku..antha asiriyarkal padicha romba santhoshapaduvanga:-)

Anbu said...

அதிஷா said...

ஆட்டோ கிராப்பா..\\



ஆமாம் அண்ணா..வருகைக்கு நன்றி அண்ணா

Anbu said...

இய‌ற்கை said...

nalla irukku..antha asiriyarkal padicha romba santhoshapaduvanga:-)



உண்மையிலே அதிகமா சந்தோஷப்படுவது அவர்கள் தான் அக்கா

நட்புடன் ஜமால் said...

ஆசிரியர்களை நினைவு கூர்வது

நல்ல விடயம்

நல்லா மாணவர் தான் நீங்கள்

அகநாழிகை said...

அன்பு,
நல்ல பதிவுதான். எனது பள்ளி ஆசிரியர்கள் மேல் எனக்கு அவ்வளவு நினைவு கூறக்கூடிய அபிப்ராயம் இல்லை. ஆனால் கல்லூரியில் எனக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.
அது என் வாழ்வில் கிடைத்த வரம் என்றே கருதுகிறேன்.

நல்ல பதிவிற்கு வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Anbu said...

\\\நட்புடன் ஜமால் said...

ஆசிரியர்களை நினைவு கூர்வது

நல்ல விடயம்

நல்லா மாணவர் தான் நீங்கள்\\

நன்றி அண்ணா

Anbu said...

\\"அகநாழிகை" said...

அன்பு,
நல்ல பதிவுதான். எனது பள்ளி ஆசிரியர்கள் மேல் எனக்கு அவ்வளவு நினைவு கூறக்கூடிய அபிப்ராயம் இல்லை. ஆனால் கல்லூரியில் எனக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.
அது என் வாழ்வில் கிடைத்த வரம் என்றே கருதுகிறேன்.

நல்ல பதிவிற்கு வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்\\

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்

தருமி said...

அது ஏன் என்றே தெரியவில்லை. எல்லோருக்குமே நம் முதல் வகுப்பு ஆசிரியர் நினைவு மறப்பதில்லை என்று நினைக்கிறேன்.

எனக்கு எங்கள் மாணிக்கம் சார் நினைவுக்கு வந்தார்.

கார்த்திகைப் பாண்டியன் said...

பதிவை ஜோரா எழுதி இருக்கீங்க அன்பு.. வாழ்த்துக்கள்..:-)

Cable சங்கர் said...

எல்லா ஊர்லேயும் ஒரு மல்லிகா டீச்சர் இருப்பாஙக் போலருக்கு..:)

Anbu said...

\\தருமி said...

அது ஏன் என்றே தெரியவில்லை. எல்லோருக்குமே நம் முதல் வகுப்பு ஆசிரியர் நினைவு மறப்பதில்லை என்று நினைக்கிறேன்.

எனக்கு எங்கள் மாணிக்கம் சார் நினைவுக்கு வந்தா\\

நன்றி ஐயா வருகைக்கு

Anbu said...

\\கார்த்திகைப் பாண்டியன் said...

பதிவை ஜோரா எழுதி இருக்கீங்க அன்பு.. வாழ்த்துக்கள்..:-)\\

நன்றி அண்ணா

Anbu said...

\\Cable Sankar said...

எல்லா ஊர்லேயும் ஒரு மல்லிகா டீச்சர் இருப்பாஙக் போலருக்கு..:)\\

உங்களுக்குமா :-))

முரளிகண்ணன் said...

Different meme. Nice

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

பிடித்த ஆசிரியர்களைப் பற்றிய பதிவு அருமை அருமை - துவக்கப்பள்ளி ஆசிரியர்களை மறக்கவே இயலாது.

http://cheenakay.blogspot.com/2007/11/5.html

நேரமிருப்பின் என் துவக்கப்பள்ளியினைப் பற்றிய பதிவினைப் படிக்கவும்

Unknown said...

Wow. If they read this they will be happy