வருங்கால இந்திய பிரதமரின் 32 பதில்கள்..!!

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

ஓபன் ஹார்ட் என்பது சட்டென என் நண்பரின் மனதில் தோன்றியது.எனக்கும் பிடித்திருந்ததால் உடனே வைத்தேன்..அன்பு என்பது என்னுடைய பெயர்.மதி என்பது அம்மாவின் பெயர். அதனால் இரண்டையும் இணைத்து அன்புமதி என்று வைத்துக்கொண்டேன். என்னுடைய பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும்..
************************************************************************
2.கடைசியாக அழுதது எப்பொழுது?

ஒரு வாரத்திற்கு முன்பு.சிறு குழந்தை ஒன்று எதிரே வந்த வண்டியின் மீது மோத அக்குழந்தையின் அம்மா கதறி அழுத காட்சியை பார்த்தபோது என் கண்களில் தானாகவே கண்ணீர் வந்தது..
************************************************************************
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்பபிடிக்கும்
************************************************************************
4.பிடித்த மதிய உணவு என்ன?

தயிர்சாதம்,அம்மாவின் சமையல் எதுவாயிருந்தாலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
************************************************************************
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கொஞ்ச காலம் பழகியபின் அவர்களது நடத்தைகள் சரியாக இருந்தால் மட்டுமே உடனே நட்பை தொடருவேன்.ஆனால் நட்பு என்பது மிகவும் பிடித்தமான ஒன்று.
************************************************************************
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடலில் குளிக்க பிடிக்கும். அருவியில் கிளிக்க ரொம்ப ரொம்ப பிடிக்கும், அதிலும் குற்றாலம் என்றால் ஜாலிதான்...
************************************************************************
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்..பின் ஆடை அணிந்திருக்கும் விதம்..
************************************************************************
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்சது:தன்னம்பிக்கை..எந்த வேலையிலும் வெற்றி எனக்குத்தான் கிடைக்க வேண்டும் என நினைப்பேன்..

பிடிக்காதது:கோபம்.வெற்றி என்ற இலக்குக்காக பல தவறான முடிவுகளை எடுத்தல்.. இந்த இரண்டையும் எவ்வளவோ முயன்றும் என்னால் மாற்ற இயலவில்லை..
************************************************************************
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

சாரிங்க..எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை:-))
************************************************************************
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க..நான் விரும்பும் அனைவருமே என் அருகிலே உள்ளனர்..
************************************************************************
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

சிவப்பு நிற சட்டை..சந்தன நிற பேண்ட்..
************************************************************************
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

ஒரு முறை பிறந்தேன்..ஒரு முறை பிறந்தேன்..உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்..
************************************************************************
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு
************************************************************************
14.பிடித்த மணம்?

மல்லிகையின் மணம்.மண்வாசனை.
************************************************************************
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

பொன் வாசுதேவன்: "அகநாழிகை" என்னும் பெயரில் எழுதி வருகிறார்..நிறைய கவிதைகள் எழுதுவார்.
************************************************************************
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

டக்லஸ்: எனக்கு பிடித்த பதிவு. 2020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை..நல்ல மொக்கையான பதிவு.
************************************************************************
17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்..
************************************************************************
18.கண்ணாடி அணிபவரா?

கண்டிப்பாக இல்லை
************************************************************************
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

பெரும்பாலும் காதல் திரைப்படங்கள்.
************************************************************************
20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க..
************************************************************************
21.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்
************************************************************************
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் இரண்டாம் பாகம்..
************************************************************************
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

தினமும் ஒரு படம் வைத்து ரசிப்பேன்
************************************************************************
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது:குழந்தையின் சிரிப்பு.
பிடிக்காதது : ரோட்டில் வரும் ஹார்ன் இரைச்சல்,
************************************************************************
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சென்னை..
************************************************************************
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எதுவும் இல்லை..
************************************************************************
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பொதுவா லஞ்சம், மற்றும் ஏமாற்றுதல்.
************************************************************************
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்…
************************************************************************
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இன்னும் எதுவுமே பார்க்கலைங்க..பார்த்தபின் தான்சொல்ல முடியும்.. இதுவரை குற்றாலம் ரொம்ப பிடிக்கும்.. ************************************************************************
30.எப்படி இருக்கணும்னு ஆசை?

பெரிய ஆசை எல்லாம் ஒன்னும் இல்லைங்க..இந்தியாவின் பிரதமர் ஆனால் போதும்..
************************************************************************
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?

ஏற்கனவே சொன்னது போல் நான் ரொம்ப சின்னப்பையன்ங்க..
************************************************************************
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை வாழ்வதற்கே..ஒவ்வொருவரும் தன் இலக்கை நோக்கி முயற்சித்து போராடுங்கள்.. வெற்றி ஒரு நாள் நிச்சயம்..
************************************************************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

55 பின்னூட்டங்கள்:

Suresh Kumar said...

வாழ்க வருங்கால பிரதமர்

Raju said...

\\ஒரு முறை பிறந்தேன்..ஒரு முறை பிறந்தேன்..உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்..\\

எனக்கும் ஒரு வாட்டி....ப்ளீஸ்

\\15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

கார்த்திகைப்பாண்டியன்: "பொன்னியின் செல்வன்" என்னும் பெயரில் எழுதிவருகிறார்.நல்ல பதிவுகளை எழுதுபவர்.
பொன் வாசிதேவன்: "அகநாழிகை" என்னும் பெயரில் எழுதி வருகிறார்..நிறைய கவிதைகள் எழுதுவார்.\\

நீ என்னோட பதிவப் படிச்சயா இல்ல..பாத்தயா?

கடைசி கேள்விக்கு ஒரு வரிலதான்ப்பா பதில் சொல்லணும்.

வால்பையன் said...

//எப்படி இருக்கணும்னு ஆசை?

பெரிய ஆசை எல்லாம் ஒன்னும் இல்லைங்க..இந்தியாவின் பிரதமர் ஆனால் போதும்..//

சுவிஷ் பேங்குல கோடி கோடியா பணம் வேணும்னு சொல்லாம சொல்றிங்க!

Anbu said...

\\Suresh Kumar said...

வாழ்க வருங்கால பிரதமர்\\

வாழ்க சுரேஷ்குமார்..

நன்றி அண்ணா வருகைக்கு

Anbu said...

\\\டக்ளஸ்....... said...

\\ஒரு முறை பிறந்தேன்..ஒரு முறை பிறந்தேன்..உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்..\\

எனக்கும் ஒரு வாட்டி....ப்ளீஸ்

\\15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

கார்த்திகைப்பாண்டியன்: "பொன்னியின் செல்வன்" என்னும் பெயரில் எழுதிவருகிறார்.நல்ல பதிவுகளை எழுதுபவர்.
பொன் வாசிதேவன்: "அகநாழிகை" என்னும் பெயரில் எழுதி வருகிறார்..நிறைய கவிதைகள் எழுதுவார்.\\

நீ என்னோட பதிவப் படிச்சயா இல்ல..பாத்தயா?

கடைசி கேள்விக்கு ஒரு வரிலதான்ப்பா பதில் சொல்லணும்.\\\

மதுரைக்கு வாங்க தாரேன் தல

இல்லை தல அவசரத்தில் இட்டுவிட்டேன்..மன்னிக்கவும்..

ஒருவரியில் வாழ்க்கையை எப்படிங்க சொல்றது..

Anbu said...

\\வால்பையன் said...

//எப்படி இருக்கணும்னு ஆசை?

பெரிய ஆசை எல்லாம் ஒன்னும் இல்லைங்க..இந்தியாவின் பிரதமர் ஆனால் போதும்..//

சுவிஷ் பேங்குல கோடி கோடியா பணம் வேணும்னு சொல்லாம சொல்றிங்க!\\

அப்படியும் ஒரு ஆசை இருக்கு வால்
உதவ முடியுமா..?

*இயற்கை ராஜி* said...

:-)

நட்புடன் ஜமால் said...

நான் வருங்கால முதல்வராகத்தான் நினைத்திருந்தேன் ...

சரி சரி இப்போ பிரமதமருக்கே போட்டியிடுவோம்.

\\10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க..நான் விரும்பும் அனைவருமே என் அருகிலே உள்ளனர்..\\

அப்படின்னா நாங்க ...

Anbu said...

\\ இய‌ற்கை said...

:-)\\

நன்றி அக்கா

Anbu said...

\\நட்புடன் ஜமால் said...
\\10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க..நான் விரும்பும் அனைவருமே என் அருகிலே உள்ளனர்..\\

அப்படின்னா நாங்க ...\\

நீங்க எல்லோரும் என் மனதில் இருக்கீங்க அண்ணா!

பாலகுமார் said...

நல்லா இருக்கு, அன்பு.

வாழ்க்கை வாழ்வதற்கே,,, அருமை. :)

நையாண்டி நைனா said...

எச்சூஸ் மீ மே ஐ கம் இன்?

நையாண்டி நைனா said...

அட... கடை தொரந்துதான் கிடக்கு...

நையாண்டி நைனா said...

/*ஓபன் ஹார்ட் என்பது சட்டென என் நண்பரின் மனதில் தோன்றியது.எனக்கும் பிடித்திருந்ததால் உடனே வைத்தேன்*/

நான் கூட நீங்க ஒப்பன் ஹார்ட் சர்ஜரிலே பெரிய ஆளுன்னு நெனச்சி இருந்தேன்... இப்படி சப்புன்னு ஆக்கிட்டீங்களே....

நையாண்டி நைனா said...

/*அருவியில் கிளிக்க ரொம்ப ரொம்ப பிடிக்கும்*/

பக்கத்துலே குளிக்குறவன் ஜட்டியவா...???

எப்ப...!!! சாமி நீ டெர்ரர் ஆசாமியா இருப்பே போலிருக்கே...???

உன் பக்கத்திலே நின்னு குளிக்கணும்னா மூணு ஜட்டி போட்டுகிட்டுதான் குளிக்கனுமா ???

நையாண்டி நைனா said...

/*சாரிங்க..எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை:-))*/

அட... இங்கே பார்ரா.... சரி பாதியா இருக்க.. கல்யாணம் ஆகணும் என்றெல்லாம் அவசியம் இல்லே தம்பி....

நையாண்டி நைனா said...

/*ஒரு முறை பிறந்தேன்..ஒரு முறை பிறந்தேன்..உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்..*/

உசுரும் வேணாம் ஒன்னும் வேணாம் ரூபா பத்தாயிரம் மட்டும் கொடு போதும்.

நையாண்டி நைனா said...

/*தினமும் ஒரு படம் வைத்து ரசிப்பேன்*/

சத்தியமா என்னோட படமாவோ உங்களோட படமாவோ இருக்க போறதில்லே... நமீதா படம் தானே????

நையாண்டி நைனா said...

/*கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?

ஏற்கனவே சொன்னது போல் நான் ரொம்ப சின்னப்பையன்ங்க..*/

அதை பத்தி நீங்க ஏன் கவலை படுறீங்க...
உங்க கணவன், உங்க மனைவி என்றா கேள்வி கேட்டு இருக்கு.

நையாண்டி நைனா said...

ஆமா கடைய தொறந்து போட்டு நீங்க எங்கே போய்ட்டீங்க..???

Anonymous said...

இருபது பின்னூட்டம் போட்ட இரும்பு நெஞ்சன் நைனா வாழ்க

நைனா ரசிகர் மன்றம் - சூரத் கிளை. said...

கன்னியரின் கனவு நாயகன் நைனா வாழ்க

நைனா ரசிகர் மன்றம் - மும்பை கிளை. said...

பருவப் பெண்களின் பெருந்தலைவன் நையாண்டி நைனா வாழ்க வாழ்க.

நையாண்டி நைனா said...

சரி இன்றைய கோட்டா முடிஞ்சது. மீதி அடுத்த வாரம், ஆராவாரம்.

நையாண்டி நைனா said...

குவாட்டர் போட்ட நைனா வாழ்க

கார்த்திகைப் பாண்டியன் said...

எளிமையான பதில்கள் அன்பு.. சாரி.. வருங்காலப் பிரதமர்..;-)

Anbu said...

\\\பாலகுமார் said...

நல்லா இருக்கு, அன்பு.

வாழ்க்கை வாழ்வதற்கே,,, அருமை. :)\\\

நன்றி அண்ணா வருகைக்கு

Anbu said...

\\ நையாண்டி நைனா said...

அட... கடை தொரந்துதான் கிடக்கு...\\\

இப்படி திறந்து வைத்துவிட்டு போனா ரொம்ப கும்மி அடித்திட்டீங்களே அண்ணா

Anbu said...

\\கார்த்திகைப் பாண்டியன் said...

எளிமையான பதில்கள் அன்பு.. சாரி.. வருங்காலப் பிரதமர்..;-)\\

அது..

வருகைக்கு நன்றி அண்ணா

வெற்றி-[க்]-கதிரவன் said...

//30.எப்படி இருக்கணும்னு ஆசை?

பெரிய ஆசை எல்லாம் ஒன்னும் இல்லைங்க..இந்தியாவின் பிரதமர் ஆனால் போதும்..//

வாழ்த்துக்கள்

அகநாழிகை said...

அன்பு,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

என்னை இத்தொடர் பதிவிற்கு இன்று (5.6.09)டக்ளஸ், தீபா, ஆ.ஞானசேகரன், உமாஷக்தி ஆகியோரும் அழைத்துள்ளார்கள்.
நீங்களும் அழைத்ததில் மகிழ்ச்சி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

அத்திரி said...

//எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

பெரும்பாலும் காதல் திரைப்படங்கள்//

உன் வயசு அப்படி............

நல்லாவே பதில் சொல்லியிருக்கிறாய்

Anbu said...

\\பித்தன் said...

//30.எப்படி இருக்கணும்னு ஆசை?

பெரிய ஆசை எல்லாம் ஒன்னும் இல்லைங்க..இந்தியாவின் பிரதமர் ஆனால் போதும்..//

வாழ்த்துக்கள்\\

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அண்ணா

Anbu said...

\\\"அகநாழிகை" said...

அன்பு,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

என்னை இத்தொடர் பதிவிற்கு இன்று (5.6.09)டக்ளஸ், தீபா, ஆ.ஞானசேகரன், உமாஷக்தி ஆகியோரும் அழைத்துள்ளார்கள்.
நீங்களும் அழைத்ததில் மகிழ்ச்சி.\\

எல்லோருக்கும் உங்க மேல் ரொம்ப பிரியம் அண்ணா

Anbu said...

\\\அத்திரி said...

//எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

பெரும்பாலும் காதல் திரைப்படங்கள்//

உன் வயசு அப்படி............

நல்லாவே பதில் சொல்லியிருக்கிறாய்\\\

ஆமாம் அண்ணா..இந்த வயசு இருக்கே..

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

நல்ல பதிவு - உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - எண்ணுவதெல்லாம் உயர்வாகவே எண்ணூக - பிரதமராக ஆசைப்படு - சரியான திசையில் சிந்திக்க்கிறாய்.

Anbu said...

\\\cheena (சீனா) said...

அன்பின் அன்பு

நல்ல பதிவு - உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - எண்ணுவதெல்லாம் உயர்வாகவே எண்ணூக - பிரதமராக ஆசைப்படு - சரியான திசையில் சிந்திக்க்கிறாய்.\\\

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ஐயா

சொல்லரசன் said...

//பெரிய ஆசை எல்லாம் ஒன்னும் இல்லைங்க..இந்தியாவின் பிரதமர் ஆனால் போதும்..//

கனவு மெய்பட வாழ்த்துகள்,

ஆ.ஞானசேகரன் said...

//வாழ்க்கை வாழ்வதற்கே..ஒவ்வொருவரும் தன் இலக்கை நோக்கி முயற்சித்து போராடுங்கள்.. வெற்றி ஒரு நாள் நிச்சயம்..//

வாழ்த்துகள் தம்பி...

வேத்தியன் said...

நேற்றே பதில்களை படித்து முடித்து விட்டேன் அன்பு...
பின்னூட்டம் போட மறந்துவிட்டேன்..
மன்னிக்கவும்...

பதில்களை மிகவும் ரசித்தேன்...

பிரதமராக வாழ்த்துகள் மாப்ள...
:-)

Anbu said...

\\சொல்லரசன் said...

//பெரிய ஆசை எல்லாம் ஒன்னும் இல்லைங்க..இந்தியாவின் பிரதமர் ஆனால் போதும்..//

கனவு மெய்பட வாழ்த்துகள்,\\\

வாழ்த்துக்கு நன்றி அண்ணா

Anbu said...

\\ஆ.ஞானசேகரன் said...

//வாழ்க்கை வாழ்வதற்கே..ஒவ்வொருவரும் தன் இலக்கை நோக்கி முயற்சித்து போராடுங்கள்.. வெற்றி ஒரு நாள் நிச்சயம்..//

வாழ்த்துகள் தம்பி...\\

வாழ்த்துக்கு நன்றி அண்ணா

Anbu said...

\\\வேத்தியன் said..

பதில்களை மிகவும் ரசித்தேன்...

பிரதமராக வாழ்த்துகள் மாப்ள...
:-)\\\\

நன்றி தல..

அப்துல்மாலிக் said...

முதல் பதில் மதுமதி என்னை வியக்க வைத்தது

அனைத்து பதில்களும் எதார்த்தம்

வியா (Viyaa) said...

சுருக்கமா பதில்கள்..
இருந்தாலும் சூப்பர்

Anbu said...

\\அபுஅஃப்ஸர் said...

முதல் பதில் மதுமதி என்னை வியக்க வைத்தது

அனைத்து பதில்களும் எதார்த்தம்\\

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..

Anbu said...

\\வியா (Viyaa) said...

சுருக்கமா பதில்கள்..
இருந்தாலும் சூப்பர்\\

நன்றி வியா

வருகைக்கும் கருத்துக்கும்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பதில்கள்.நல்லாருக்கீங்களா தம்பி?

பீர் | Peer said...

நல்ல பதில்கள் அன்பு,
வாழ்த்துக்கள்.

பீர் | Peer said...

50.

வழிப்போக்கன் said...

பதில்கள் அருமை...
வாழ்த்துகள்...

நையாண்டி நைனா said...

இப்பவும் பதில் சொல்லாமல் மழுப்பினால்......

Anbu said...

நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...

Anbu said...

நைனாவுக்கு நன்றிகள் பல..

Tamilparks said...

வாழ்க வளமுடன், நன்றிகள் பல