18 வயசுல.....


நீ தலைவாரும் சீப்பிலிருந்த
கேசத்தை எடுத்து
புத்தகத்தில் வைத்தேன்
மயிலிறகு குட்டிபோடும் என்றால்
உன் மயிர் இறகு போடாதா ?

**********************

கொலைக் கருவிகளின் பட்டியலில்
நீ அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம் !

**********************

உன் கூந்தல் சிலுவையில் அறையப்படும்
மல்லிகைப்பூக்கள்
மறுநாள் மரிப்பதில்லை
உயிர்த்தெழுகின்றன

**********************

பூஜைநேரம் ஆனால்
கோயில் மணி அடிக்கிறது
நீ வரும் நேரம் ஆனால்
என் இதயத்தில் பூஜை நடக்கிறது.

**********************

உன் கால்தடங்களைக் கண்டால்
அழித்துவிடுகிறேன்
தேவதையின் பாதச்சுவடுகள்
தெருவில் கிடப்பதா ?

**********************

துணி காயப்போட
நீ மாடிக்கு வருவது
தெருவில் போகும் என்னை
துவைக்கத்தானே..!

**********************

உனக்கே தெரியாமல் நான்
உன்னை காதலித்ததிலும்
நீ என்னை காதலிப்பதாக
நினைத்துக் கொள்வதிலும்
உள்ள சுகம்
அவன் அவனுக்கு மட்டும் தெரியும்.

**********************

பா.விஜய் அவர்கள் எழுதிய 18 வயசுல என்ற புத்தகத்தில் எனக்குப் பிடித்த கவிதைகள் இவை...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

18 பின்னூட்டங்கள்:

Raju said...

எப்பவோ படிச்சது..!
அந்த புக்கோட மாடல் மோனிகாவும் சூப்பர்.

நையாண்டி நைனா said...

இப்போ நாங்களும் கோதாவிலே குதிப்போம்லோ...

அத்திரி said...

கவித நல்லாயிருக்கு

துபாய் ராஜா said...

அன்புதான் இவ்வளவு அழகாக எழுதிட்டாரோன்னு நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்..... :))

//நீ தலைவாரும் சீப்பிலிருந்த
கேசத்தை எடுத்து
புத்தகத்தில் வைத்தேன்
மயிலிறகு குட்டிபோடும் என்றால்
உன் மயிர் இறகு போடாதா ?//

//கொலைக் கருவிகளின் பட்டியலில்
நீ அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம் !//

//துணி காயப்போட
நீ மாடிக்கு வருவது
தெருவில் போகும் என்னை
துவைக்கத்தானே..!//

//உன் கால்தடங்களைக் கண்டால்
அழித்துவிடுகிறேன்
தேவதையின் பாதச்சுவடுகள்
தெருவில் கிடப்பதா ?//

அருமையான வரிகள்.

நல்லதொரு பகிர்வு.

வால்பையன் said...

பா.விஜயும் இவ்வளவு மொக்கை போடுவாரா!?

S.A. நவாஸுதீன் said...

உன் கால்தடங்களைக் கண்டால்
அழித்துவிடுகிறேன்
தேவதையின் பாதச்சுவடுகள்
தெருவில் கிடப்பதா?

இது நல்லா இருக்கு

S.A. நவாஸுதீன் said...

துணி காயப்போட
நீ மாடிக்கு வருவது
தெருவில் போகும் என்னை
துவைக்கத்தானே..!

இதுவும் நல்லா இருக்கு

உதய தாரகை said...

எல்லாமே அழகு..

//
உன் கால்தடங்களைக் கண்டால்
அழித்துவிடுகிறேன்
தேவதையின் பாதச்சுவடுகள்
தெருவில் கிடப்பதா ?
//

என்பது நச்.

இனிய புன்னகையுடன்,
உதய தாரகை

பீர் | Peer said...

;)

ஆ.ஞானசேகரன் said...

அய்ய்ய்ய் டெம்பிளேட் மாற்றி இருக்க அன்பு

ஆ.ஞானசேகரன் said...

//நீ தலைவாரும் சீப்பிலிருந்த
கேசத்தை எடுத்து
புத்தகத்தில் வைத்தேன்
மயிலிறகு குட்டிபோடும் என்றால்
உன் மயிர் இறகு போடாதா ?///

எல்லாம் வயசு கோளாரு... கண்ணாலம் ஆனா சரியாகிடும் அன்பு

லோகு said...

:))))))))))))))))))

நட்புடன் ஜமால் said...

நல்ல தொகுப்பு

கலையரசன் said...

யார் எழுதினா என்ன பாஸ்..?
இப்பவும் வீரியம் இருக்கு!!!

அப்துல்மாலிக் said...

18 வயசை மட்டுமா 60 வயசையும் தட்டி எழுப்பும் வரிகள்

நல்லாவே ப.விஜய் எழுதிருக்கார்

வீரியம் குறையவில்லை ஒவ்வொரு வரியிலும்...

சுந்தர் said...

பா.விஜய் வரிகளை ஞாபகப் படுத்தியதற்கு நன்றி தம்பி ! ஆமா எப்போ கில்லி போட்டி ?

sakthi said...

அழகான வரிகள்

thangesh said...

i want full lyrics of 18 vayasula...can u update.....