என்ன பெயர் வைக்க....


வானத்தில் கார்மேகத்தின்

அழகினை ரசித்திருக்கிறேன்...

பூமியிலும் கார்மேகம் தோன்றுமோ..

நீ கருப்பு சுரிதாரில் பவனி வரும் போது..


########‍‍$$$$########‍

எனது இதயம் கூட

சிறிது இடைவெளி விட்டுத்தான் துடிக்கிறது..

அந்த இடைவெளியிலும் கூட

என் மனம் உன்னை மட்டுமே

நினைக்கிறதே...

########‍‍$$$$########‍

உன்
பெயரில் என்ன

வசியம் உள்ளதடி....

என் வீட்டு பூனை கூட

உன் பெயர் சொன்னால்

ரசிக்கிறது....

########‍‍$$$$########‍

உனக்காக நான்...

எனக்காக நீ...

நமக்காக நம் காதல்..

இந்த ஒன்று போதுமே

என் வாழ்க்கை என்னும்

பயணத்தை கடக்க...

########‍‍$$$$########‍

பூக்கடைக்காரன் புலம்புகிறான்....

பூக்கள் கூட உன் முகம்

பார்த்தால் தான்

மலருகின்றனவாம்...

########‍‍$$$$########‍

என்ன பெயர் வைக்க

நம் குழந்தைக்கு...

நேற்றிரவு கனவில்

சொல்லாமல் போய்விட்டாய்...

########‍‍$$$$########‍

பேச வேண்டிய இதழ்கள்..

பேசிக்கொள்ளவில்லை;

பேசிக்கொண்டன விழிகள்...

மூடிக்கொண்டது இமை..

திறந்தது மனம்..

உறங்கவில்லை இதயம்

########‍‍$$$$########‍


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

24 பின்னூட்டங்கள்:

Raju said...

இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணுனா இன்னும் Stronga வரும் அன்பு.

லோகு said...

மாப்ள.. பஸ்ல போன முழு டிக்கெட் வாங்குற அளவுக்கு கூட வளரல.. அதுக்குள்ளே காதல் கவிதையா... ஜாக்கிரதை மாப்பு.. வச்சுடுவாங்க ஆப்பு..


நல்ல முயற்சி.. எனக்கு புடிச்சிருக்கு..

துபாய் ராஜா said...

அனைத்தும் அருமை என்றாலும் தோழர் டக்ளஸ் கூறியது போல் ஏதோ குறைகிறது.

இன்னும் முயற்சிக்கவும்.

Suresh Kumar said...

இன்னும் கொஞ்சநாள் போனா காதல் தோல்வி கவிதைகள் வருமா ?

நல்லா இருக்கு

Anbu said...

\\ டக்ளஸ்... said...

இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணுனா இன்னும் Stronga வரும் அன்பு.\\\

கவிதையா இல்லை காதலா தல...

S.A. நவாஸுதீன் said...

நல்ல முயற்சி. பாராட்டுகள் அன்பு. தொடர்ந்து எழுதுங்கள்.

Anbu said...

\\\லோகு said...

மாப்ள.. பஸ்ல போன முழு டிக்கெட் வாங்குற அளவுக்கு கூட வளரல.. அதுக்குள்ளே காதல் கவிதையா... ஜாக்கிரதை மாப்பு.. வச்சுடுவாங்க ஆப்பு..


நல்ல முயற்சி.. எனக்கு புடிச்சிருக்கு..\\\

ஏன் இந்த கொலைவெறி மச்சான்

கார்த்திகைப் பாண்டியன் said...

இந்த அப்பாவிப் பய புள்ள மனச கெடுத்த பாவி யாருன்னு தெரியலையே?

Anbu said...

\\\துபாய் ராஜா said...

அனைத்தும் அருமை என்றாலும் தோழர் டக்ளஸ் கூறியது போல் ஏதோ குறைகிறது.

இன்னும் முயற்சிக்கவும்.\\\

கண்டிப்பாக அண்ணா..

அடுத்த முறை நன்றாக எழுத முயற்சிக்கிறேன்..

Anbu said...

\\Suresh Kumar said...

இன்னும் கொஞ்சநாள் போனா காதல் தோல்வி கவிதைகள் வருமா ?

நல்லா இருக்கு\\\


அதுக்குள்ள தோல்வியா..

இன்னும் கொஞ்ச நல்லா இருந்துக்கிறேனே...

Anbu said...

\\S.A. நவாஸுதீன் said...

நல்ல முயற்சி. பாராட்டுகள் அன்பு. தொடர்ந்து எழுதுங்கள்.\\

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா..

Anbu said...

\\கார்த்திகைப் பாண்டியன் said...

இந்த அப்பாவிப் பய புள்ள மனச கெடுத்த பாவி யாருன்னு தெரியலையே?\\\\

பாவி என்றெல்லாம் சொல்லாதீங்க அண்ணா..

அவங்க ரொம்ப நல்லவங்க...

வருகைக்கும் கருத்துகும் நன்றி அண்ணா

cheena (சீனா) said...

அடடே அன்பு

காதலா - வாழ்க

காதல் கவிதைகள் எழுதித்தான் அநேக கவிஞர்கள் சிறப்புப் பெற்றிருக்கிறார்கள்.

தொடர்க காதலினை - கவிதையினை

பேசாத இதழகள்
பேசிய விழிகள்
மூடிய இமைகள்
திறந்த மனசு
உறங்காத இதயம்

பாத்துக்கப்பா - எச்சரிக்கையா இரு

கவிதையின் வரிகளை மிகவும் ரசித்தேன் அன்பு

நல்வாழ்த்துகள்

சுந்தர் said...

//என் வீட்டு பூனை கூட

உன் பெயர் சொன்னால்

ரசிக்கிறது...// அப்போ உன் ஆளு பேர் mouse ஆ !.

யோ வொய்ஸ் (யோகா) said...

மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனித காதல் அல்ல...

வேற என்னமோ இருக்கு

ஆ.ஞானசேகரன் said...

கவிதையோடு நிறுத்திகொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்.. அன்பு

வால்பையன் said...

நல்ல டாகடரா பாருங்க அன்பு!

அத்திரி said...

நான் அரும பெருமையா வளத்தேனே.........இந்த பயபுள்ள யார்கிட்ட போய் மாட்டிக்கிச்சோ.............

வழிப்போக்கன் said...

நல்ல கற்பனை கவிதை..

sakthi said...

பேச வேண்டிய இதழ்கள்..

பேசிக்கொள்ளவில்லை;

பேசிக்கொண்டன விழிகள்...

மூடிக்கொண்டது இமை..

திறந்தது மனம்..

உறங்கவில்லை இதயம்


ம்ம்ம்ம்ம்

நடக்கட்டும்

தேவன் மாயம் said...

ரொம்ப தூரம் போயாச்சு போல....வாழ்க!!

அப்துல்மாலிக் said...

//பூக்கடைக்காரன் புலம்புகிறான்....

பூக்கள் கூட உன் முகம்

பார்த்தால் தான்

மலருகின்றனவாம்...
//

முக்கியமா மதுரைக்கு அனுப்புங்க, மலர் விற்கும் வியாபாரிகள் வருத்தமாக இருக்காங்கலாம்

எல்லாமே கொஞ்சம் அதிகமா இருந்தாலும் கவிதை அழகு

தொடருங்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

காதல் காதல் காதல் போயின்....

கவிதை மட்டும்தான் மிஞ்சும்.....

கவிதை நல்லாயிருக்கு அன்பு

பீர் | Peer said...

அனைத்தையும் ரசித்தேன்.

//உறங்கவில்லை இதயம்//

ஸ்லீப்பிங் பில் ட்ரை பண்ணி பாத்தியா, அன்பு? நான் வேணா தேவா சார்க்கு சொல்லி அனுப்பட்டா?