அரும்பு மீசை...


சிறுவனாய் இருந்த நான்
என்னுள் இன்று ஏகப்பட்ட
மாற்றங்கள் பல கண்டுள்ளேன்...

எண்ணங்கள் பல..
சலனங்கள் சில..

சீராய் இருந்த முகத்தில்
மேடு பள்ளங்கள்..

பள்ளிக்குப் புறப்படும்போது
எண்ணையும் சீப்புமாய் வரும்
அம்மாவின் கையை
உதறும் என் கைகள்..

இன்று கண்ணாடி முன்
அரைமணி நேரம் கையில் சீப்புடன்!!

வீதியில் செல்லும்போது
நண்பர்களுடன் சண்டை
தாண்டிச் சென்றவள்
என்னைத்தான் பார்த்தாலென்று!

உடையில் கவனம்

நண்பர்களுடன் அரட்டை

அரைக்கால் சட்டைக்கு விடுதலை

கையில் கடிகாரம்

பழைய சட்டையை போட மறுத்தல்

இன்னும் எத்தனை மாற்றங்கள் என்னுள்ளே!!

ஒரு சிறு மீசை
அரும்பிய நாள் முதல்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

23 பின்னூட்டங்கள்:

Raju said...

இதெல்லாம் ரொம்ப டூடூடூடூமச்சு...!

விக்னேஷ்வரி said...

அட, சின்ன பசங்கல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாங்கபா.
நல்லா இருக்கு அன்பு.

Suresh Kumar said...

பருவ மாற்றங்களை கவிதையாக்கியது நல்லா இருக்கு

coolzkarthi said...

wow!super anbu....

S.A. நவாஸுதீன் said...

அரும்பு மீசை நல்லா இருக்கு அன்பு

ஜெட்லி... said...

//சீராய் இருந்த முகத்தில்
மேடு பள்ளங்கள்//

கரெக்ட் .

அப்துல்மாலிக் said...

ம்ம் சூப்பர் டூப்பர்

சங்கர் said...

அன்பு, அது உங்க போட்டோ தானே :)

வால்பையன் said...

ஹைய்யா!

அன்பு வயசுக்கு வந்துட்டாருருருருருரு!

உங்கள் தோழி கிருத்திகா said...

கவிதைக்கு ஏத்த படம்....ரெண்டும் சூப்பர் அன்பு தம்பி :)

க.பாலாசி said...

//வீதியில் செல்லும்போது
நண்பர்களுடன் சண்டை
தாண்டிச் சென்றவள்
என்னைத்தான் பார்த்தாலென்று!//

அடப்பாவி மக்கா இன்னும் நிறுத்தலையா இத....ஆனாலும் அதுவும் ஒரு சுகதானுள்ள...

நல்லாருக்கு நண்பரே....

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

மீசை முளைச்சு எவ்வளவு நாளாச்சு தம்பி.

அத்திரி said...

அரும்பு மீசை ஓகே......பத்து பதமா இருந்துக்க அ(ரு)ன்பு

கார்த்திகைப் பாண்டியன் said...

ஐயோ ஐயோ.. இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு..

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

அரும்பு மீசை பாடாய்ப் படுத்தும் - அனுபவி - கவனமாக அனுபவி

நல்வாழ்த்துகள்

கவிதை - சிந்தனை - சொற்கள் - அனைத்துமே அருமை

கடைக்குட்டி said...

kalakkal... :-)

வினோத் கெளதம் said...

நல்லா இருக்கு..

அன்பரசன் said...
This comment has been removed by the author.
அன்பரசன் said...

சூப்பரப்பூ...

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

சிங்கக்குட்டி said...

அருமை அன்பு :-) வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

//ஒரு சிறு மீசை
அரும்பிய நாள் முதல்..///


ம்ம்ம்ம் அசத்தல்

தமிழ் said...

அருமை