கடலை! கடலை! கடலை!கடலை ரசித்தபடி
கடலைப் பார்த்தவாறு காற்றுவாங்கி
கடற்கரையில் தோழியுடன் இருக்கையில்
கடலை கடலை என்றான் சிறுவன்!
கடலை பொட்டலம் வாங்கி
கடலை சாப்பிட்டவாறே பேசிக்கொண்டிருந்தோம்!
கடலைக் காணவந்தவன் ஒருவன்
கடலைப் பார்த்தபடி அருகில் வந்து
கடலையா.................? என்றான்!
கடலை தான் கேட்கிறான் என்று
கடலைப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு
கடலைப் பார்த்தது போதுமென்று
கடலை விட்டு நீங்கி செல்கையில்
கடற்கரையில் கடலையா? எனக்கேட்டவன் கேட்ட
கடலை என்னவென்று தோழி எனக்கொரு
கடலை வகுப்பெடுத்தாள்!
கடலை போடுவது பற்றி!
கடலையில் இப்படியும் ஒரு வகையா? என
கடற்கரையை நினைத்து நகைத்தேன்!
கடலலைபோல் அவளும் சிரித்தாள்! நிலம் பார்த்தவாறு!

குறிப்பு:- மீள்பதிவு....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

10 பின்னூட்டங்கள்:

விக்னேஷ்வரி said...

அப்பா, என்னா கடலை...

அத்திரி said...

--..)))))))))))))

S.A. நவாஸுதீன் said...

கடலை வியாபாரம் கடுமையா இருக்கே

தேவன் said...

கடலை கடலையோ ............... கடலை

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-)))))))))

வால்பையன் said...

ஏன் இந்த கொலைவெறி!

cheena (சீனா) said...

வயசுக் கோளாறு - கடல போடற வயசு - கடலும் இல்ல - கடலயும் இல்ல

கணேஷ் said...

எ.கொ.இதெல்லாம் அன்பு!

டெம்ப்ளேட் தூள்!

அன்பரசன் said...

கடலை வாசம் அதிகமா இருக்கு. ரொம்ப கருகிருச்சுன்னு நினைக்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல கடலை