கூட்ட நெரிசல்..
வேலை அலைச்சல்..
எதுவும் தெரியவில்லை எனக்கு...
பேருந்தில் அவள் முகம் கண்டவுடன்...
பூமியில் நகரும் பேருந்து,
என்னை மட்டும்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பயணிக்க வைக்கிறது...
என் விழி படும் இடமெல்லாம்,
அவள் நிற்கிறாள்..
அவள் விழி படும் இடமெல்லாம்,
நான் நகர்கிறேன்...
என்றும் மெதுவாய் செல்லும் பேருந்துக்கு,
இன்று மட்டும் ஏனோ அவசரம்!
நான் இறங்கும் இடத்தில்
அவளும் இறங்கினாள்...
அவளை முன்னே செல்லவிட்டு
நான் பின்னே நடந்தேன்..
அவளின் கால்தடத்தில்..
அவள் தலைமுடியிலிந்து விழும்
ஒவ்வொரு பூவின் இதழும்
மீண்டும் சொர்க்கத்தை அடைய ஏங்கின..
ஏனோ இயலவில்லை..
உன் வழியில் நீ சென்றாய்
என் வழியில் நான் சென்றேன்..
உன் நினைவுகளை சுமந்தபடி...
நாளையும் வருவாயா..
இதே பேருந்தில்...??
பேருந்து காதலி..
Subscribe to:
Post Comments (Atom)
31 பின்னூட்டங்கள்:
//என் விழி படும் இடமெல்லாம்,
அவள் நிற்கிறாள்..
அவள் விழி படும் இடமெல்லாம்,
நான் நகர்கிறேன்...//
வாவ்.... அருமையா இருக்கு இந்த வரிகள்
கவிதை நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் மெனகெடலாமே !!!
பாத்து மாப்ள!! மப்டி போலீசா இருக்க போகுது...
அன்பின் அன்பு
காதல் கவிதைகள் எழுதத்துவங்கியாயிற்றா
நல்ல நடை - நல்லாருக்கு கவிதி
நல்வாழ்த்துகள்
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அன்பு!
//லோகு said...
பாத்து மாப்ள!! மப்டி போலீசா இருக்க போகுது...
///
rippeateeeeeeyyyyyyyyyyyyyyyy
//என் விழி படும் இடமெல்லாம்,
அவள் நிற்கிறாள்..
அவள் விழி படும் இடமெல்லாம்,
நான் நகர்கிறேன்...//
2+3=5
3+2=5
மேலுள்ள வித்தியாசம் தான் உங்கள் வரிகளில் உள்ளது!
அதை வேணுமென்றே கதிர் அண்ணன் ஏத்தி வேற விடுகிறார்! பார்த்து ஜாக்கிரதை!
//லோகு said...
பாத்து மாப்ள!! மப்டி போலீசா இருக்க போகுது...//
அடுத்து லாக்அப் கவிதை தானா!?
//நாளையும் வருவாயா..
இதே பேருந்தில்...?? //
வரிகளின் உன் வயதும் தெரிகின்றது அன்பு... எல்லா வரிகளும் அழகு துளிகள்...
நல்ல கவிதைகள்...
\\ஈரோடு கதிர் said...
//என் விழி படும் இடமெல்லாம்,
அவள் நிற்கிறாள்..
அவள் விழி படும் இடமெல்லாம்,
நான் நகர்கிறேன்...//
வாவ்.... அருமையா இருக்கு இந்த வரிகள்\\\
நன்றி அண்ணா..
\\\அடலேறு said...
கவிதை நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் மெனகெடலாமே !!!\\\
கண்டிப்பாக முயற்சிக்கிறேன் அண்ணா.
\\\லோகு said...
பாத்து மாப்ள!! மப்டி போலீசா இருக்க போகுது...\\\
போலிஸாக இருக்க வாய்ப்பில்லை மச்சான்..
\\\cheena (சீனா) said...
அன்பின் அன்பு
காதல் கவிதைகள் எழுதத்துவங்கியாயிற்றா
நல்ல நடை - நல்லாருக்கு கவிதி
நல்வாழ்த்துகள்\\\
நன்றி ஐயா..வருகைக்கும் கருத்துக்கும்..
\\பா.ராஜாராம் said...
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அன்பு!\\
நன்றி அண்ணா..முதல் வருகைக்கும் கருத்துக்கும்..
\\\அத்திரி said...
//லோகு said...
பாத்து மாப்ள!! மப்டி போலீசா இருக்க போகுது...
///
rippeateeeeeeyyyyyyyyyyyyyyyy\\\
Raittuuu
\\\வால்பையன் said...
//லோகு said...
பாத்து மாப்ள!! மப்டி போலீசா இருக்க போகுது...//
அடுத்து லாக்அப் கவிதை தானா!?\\\
ஏன் தல...முடிவே பண்ணிட்டீங்களா..
எனக்கு ஜெயில் கஞ்சுதான் என்று..
\\\ஆ.ஞானசேகரன் said...
//நாளையும் வருவாயா..
இதே பேருந்தில்...?? //
வரிகளின் உன் வயதும் தெரிகின்றது அன்பு... எல்லா வரிகளும் அழகு துளிகள்...\\
நன்றி அண்ணா..
\\ கமலேஷ் said...
நல்ல கவிதைகள்...\\
நன்றி அண்ணா..முதல் வருகைக்கும் கருத்துக்கும்..
அரும்பு மீசைக் கவிதை நல்லா இருக்கு அன்பு
//பாத்து மாப்ள!! மப்டி போலீசா இருக்க போகுது...//
:))
சூப்பர் கவிதை, சூப்பர் comments.
--வித்யா
ரொம்ப நல்லா இருக்கு தம்பி, காதல் பண்ணுற வயசு தான இது! கலக்கு கலக்கு.
//என் விழி படும் இடமெல்லாம்,
அவள் நிற்கிறாள்..
அவள் விழி படும் இடமெல்லாம்,
நான் நகர்கிறேன்...//
நம்ம ஊர் பஸ்ல இதுதான நடக்குது......
அனுபவிச்சு எழுதி இருப்பீங்க போல.......
அழகான கவிதை..............
என் விழி படும் இடமெல்லாம்,
அவள் நிற்கிறாள்..
அவள் விழி படும் இடமெல்லாம்,
நான் நகர்கிறேன்...//
நல்லாருக்கு.
நான் இறங்கும் இடத்தில்
அவளும் இறங்கினாள்... //
இது மாத்தியில்ல இருக்கணும்
"அவள் இறங்கும் இடத்தில்
நானும் இறங்கினேன்" ன்னு ;)
அன்பு, யார்கிட்ட குடுத்து எழுதி வாங்கின கவிதை இது...
ரொம்ப நல்லாருக்குங்க, உங்க வயசுக்கு.
//என்றும் மெதுவாய் செல்லும் பேருந்துக்கு,
இன்று மட்டும் ஏனோ அவசரம்!//
ஹா ஹா....
அனுபவப்பட்டு எழுதியிருப்பியள் போல?
நல்ல கவிதை...
வாழ்த்துக்கள்....
வருவாள் நாளையும் உன் மீது ஈர்ப்பு ......அன்பு இருந்தால் அதே நேரம் ...அதே பஸ்ஸில்....வெற்றி பெற வாழ்த்துக்கள்.
உன் நினைவுகளை சுமந்தபடி...
this line adds value to your poem
கண்டிப்பாக வருவாள் போலீஸூடன்.
நல்ல கவிதை வாழ்த்துக்கள்.
இது சும்மா :-)
ஆனா நாட்டாமை...பஸ்சமாத்து, சினேகா போற பஸ் வேணாம்... :-)
//என் விழி படும் இடமெல்லாம்,
அவள் நிற்கிறாள்..
அவள் விழி படும் இடமெல்லாம்,
நான் நகர்கிறேன்...//
நச்!
Post a Comment