கா.பா. - தோழி - பிரித்தி...


டிஸ்கி: முதலில் இந்த பதிவு எழுத காரணமாக இருந்த அண்ணன் கார்த்திகைப்பாண்டியன்-அண்ணி பிரித்தி அவர்களுக்கு மிக்க நன்றி.. அண்ணன் கா.பா.வுக்கு கிடைத்த காதலி போல் எனக்கும் ஒரு காதலி கிடைக்க ஆசைதான்..சரி விடுங்க என் ஆசை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அண்ணன் கா.பா. விரைவில் அண்ணி பிரித்தியை கைப்பிடிக்க எல்லாம் வல்ல எழுச்சி ஏழுமலையாணை பாதம் தொட்டு வேண்டிக்கொள்கிறேன்.

***************

இவ்வுலகில் தேவதையே இல்லை என்று சொல்லி வாக்குவாதம் பண்ணும் அம்மாவிடம் எப்படி சொல்லி புரிய வைப்பேன்.. அவளுக்கு மருமகளாக வருபவளே தேவதைதான் என்பதை..

சக்கரை நோய் வரப்போகிறதென எச்சரிக்கிறார் என் குடும்ப மருத்துவர்..முடிவு எடுத்துவிட்டேன் இனிமேல் உன் பெயரை ஒரு நாளைக்கு ஒரு முறை தான் உச்சரிக்க வேண்டுமென்று..

நீ, நான், காதல், என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது.. முத்தம், காமம் என்று சொன்னால் உடனே உதடுகள் ஒட்டிக்கொள்கிறது என்றேன் தோழியிடம்.. ஒரு மாதிரியாக என்னை பார்த்தவள் உன் உதடும் என் உதடும் ஒட்டிக்கொள்ள என்ன சொல்ல வேண்டும் என்கிறாள்!!!

"ரத்தசரித்திரம்" படத்தில் கூட ஆட்களை கொல்ல அரிவாள், துப்பாக்கியை உபயோகப்படுத்தினார்கள்.. ஆனால் என்னவளோ கையில் ஒரு தாளை வைத்துக்கொண்டு பயமுறுத்துகிறாள்.. அவள் கையில் "காவலன்" படத்திற்கான டிக்கெட்..

நீ போனபின்பும் கூட
வெட்கத்திலிருக்கிறது...
நீ ஆடிய ஊஞ்சல்!!

உன் கழுத்திலே இருப்பதற்கு
என்ன தவம் செய்திருக்கும்...
அந்த வெள்ளை பாசிகள்!!

***************

இந்த மொக்கைக்கு எதுக்குடா கா.பா.வுக்கு நன்றி சொன்ன அப்படின்னு கேட்டீங்கன்னா எல்லாம் ஒரு விளம்பரம் தான்.. அண்ணனுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடப்பதாக அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..வாழ்த்துக்கள் அண்ணா..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

11 பின்னூட்டங்கள்:

அத்திரி said...

ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்க..................... வாழ்த்துக்கள்

அத்திரி said...

கா.பா வுக்கு ப்ரீத்தி கெடைச்ச மாதிரி உனக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

அத்திரி said...

கவிதையிலும் காவலனா???????????/

நல்லா இரு தம்பி

Anbu said...

வாழ்த்துக்களுக்கு நன்றி அத்திரி அண்ணே..
காவலன் - அவ்வ்வ்வ்

தேவன் மாயம் said...

அன்பு! நலமா? ஏக்கம் தீரும்...என் வாழ்த்துகள்!

Anbu said...

@தேவன்
நல்லா இருக்கேன் சார்.. நீங்க நலமா?

Anbu said...

@நண்டு
நன்றி அண்ணே..

cheena (சீனா) said...

அன்பின் அன்பு - பொடியன் நீ - காபாவே இப்பத்தான் இப்படி அப்படி ன்னு பிடிக்க முயற்சி பண்றார். உனக்கென்ன அவசரம் இப்பொ - ம்ம்ம் எனி வே பொழச்சிக்க - எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-)))))))

சத்ரியன் said...

கா.பா.வுக்கு கிடைச்ச மாதிரியே இல்லாம இருக்கலாம், அன்புக்கு பிடிச்சமாதிரி ஒன்னு அகப்படாமலா போகும்...!

ஆசிகள் அன்பு.

Unknown said...

சூப்பர்