சில வித்தியாசமான அழகான புகைப்படங்கள்!!!!


















  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாய் விட்டு சிரிங்க!!!


கடவுள்:என்ன வரம் வேண்டும் கேள்.
பையன்:எனக்கு ஒன்றும் வேண்டாம்.என் அம்மாவிற்கு மட்டும் ஒரு நல்ல அழகான பொண்ணு மருமகளா வரவேண்டும்.
கடவுள்:!!!!

மனைவி:எதுக்கு அடிக்கடி கிச்சன் ரூமுக்கு போயிட்டு வர்றிங்க.
கணவன்:டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கான்னு செக்கப் பண்ணச் சொன்னார்!!!

ஒசாமா பின்லேடனுக்கு ''பயம்'' என்றால் என்னவென்று தெரியாது.
ஏன்???
ஏன்னா பின்லேடனுக்கு தமிழ் தெரியாது.

நடிகர் பார்த்திபன்:என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?
நடிகர் வடிவேலு:ஹலோ இது குரங்கு இல்லை.நாய்
நடிகர் பார்த்திபன்:நான் நாய்கிட்ட கேட்டேன்.
நடிகர் வடிவேலு:அப்ப சரி!!!

ஆசிரியர்:நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.
மாணவன்:ஏன் டீச்சர் 'இந்தியா'என்கிற பேர் நல்லா இல்லையா...
ஆசிரியர்:???????//

ப்யூட்டி பார்லர் முன்பு எழுதியிருந்த வாசகம்:
இங்கிருந்து வெளியே செல்லும் பெண்களைப் பார்த்து விசில் அடிக்காதீர்கள்!!
அவள் ஒரு வேளை உன் பாட்டீயாக கூட இருக்கலாம்!!!

பையன்:டிரஸ் சூப்பர்!
லேடி:தேங்ஸ்
பையன்:லிப்ஸ்டிக் சூப்பர்!
லேடி:தேங்ஸ்
பையன்:மேக்கப் சூப்பர்! வெரி நைஸ்!
லேடி:தேங்ஸ் டா
பையன்:அப்புறம் ஏன்டீ அசிங்கமா இருக்க?!!!!

பிளாஷ் நியூஸ்:சென்னை மெரினா பீச்ல மீன் சாப்பிட்ட 3 பேர் மண்டைய போட்டுட்டாங்களாம்.
அய்யோ அப்புறம்?
அப்புறம் என்ன அந்த மீன் மண்டைய நாய் தூக்கிட்டு போயிடுச்சு.

ஆப்பிள் அழுது கொண்டு இருக்கிறது
வாழைப்பழம்:ஏன் அழுகிறாய்?
ஆப்பிள்:எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!
வாழைப்பழம்:நீ பரவாயில்லை.என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!

சர்தார் 1:நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்
சர்தார் 2:போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??
சர்தார் 1:கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!

உறக்கமில்லாமல் சுத்துகிறேன்
நீ நிம்மதியாக உறங்குவாய் என்று
இப்படிக்கு
உஷா பேன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கடவுள் இருக்கிறாரா? இல்லையா???


ஒரு ஆற்றினில் தன் நண்பர்களுடன் ரமேஷ் குளித்துக் கொண்டிருந்தான். ஆற்றினில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படவே நண்பர்கள் ஆற்றினில் இருந்து கரையேறினர்.ஆனால் ரமேஷ் மட்டும் கரையேரவில்லை.எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது.என்னை கடவுள் காப்பாற்றுவார் எனக் கூறிக் கொண்டு இருந்தான்.

தண்ணீர் அவன் இடுப்பளவு வந்துவிட்டது.அவனுடன் வந்த நண்பர்கள் அவனை கரையேறும்படி வற்புறுத்தினர்.ஆனால் அவனோ எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது.என்னை கடவுள் காப்பாற்றுவார் எனக் கூறிக் கொண்டு இருந்தான்.

தண்ணீர் அவன் மார்பளவு வந்துவிட்டது.நண்பனில் ஒருவன் கயிறு கொடுத்து காப்பாற்ற உதவினான்.ஆனால் அவன் வரவில்லை.

தண்ணீர் அவன் வாய் வரை வந்துவிட்டது.அவனுடன் வந்த நண்பர்களில் ஒருவன் கரையேறும்படி தான் கொண்டு வந்த சைக்கிள் டியூப்பினை அவனிடம் கொடுத்து கரையேறும்படி கூறினான்.

தண்ணீர் அவன் நெற்றியளவு வந்துவிட்டது.அவன் வானத்தை நோக்கி 'கடவுளை என்னைக் காப்பாற்று' எனக் கூறினான்.

அப்போது வானத்தில் தோன்றிய கடவுள் சொன்னார்.நான் உன்னைக் காப்பாற்றுவதற்காக முதலில் ஒருவனை அனுப்பினேன்.நீ வரவில்லை.என் மீது அதிக பாசம் வைத்துள்ளதால் மீண்டும் ஒருவனை அனுப்பினேன்.ஆனால் மீண்டும் நீ வரவில்லை. இதில் என் மீது எந்தக் குற்றமுமில்லை எனக் கூறினார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அழகான கடற்கரைகள் பார்க்க வேண்டுமா....









  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மூன்றாம் உலகப்போருக்கு தயார் நிலையில் உள்ள மிருகங்கள்!!!!!!!!!









  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நீங்கள் ஒரு தமிழனா???? பரிசோதிக்க இங்கே க்ளிக் பண்ணவும்.........

கீழ் உள்ளவைகளின்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்...!

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வுபேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால்குக்கரும், அஜந்தா
கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..!
பேரு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்]
திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு சைஸ்
சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க.
அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க...!

6. மளிகைப் பொருட்களின்பாலிதீன் உறைகளை பத்திரமா வைப்பீங்க..
பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப்பார்வையோடு...!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் பார்ப்பீங்க.
சீல் விழாம இருந்தா, அந்த கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு,
அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ,விரைவுப் பேருந்தோ..இருபக்க கை வைக்கும்
இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரிட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..[ரமேஷ், மகேஷ்.அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி.திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க..
ஏ.சி.கோச்சுன்னா,கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்கவைப்பீங்க.!

11. விமானமோ,ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து
ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க....!

12. புதுசா கார் வாங்கினா,அதுக்கு மணப்பெண்அலங்காரம் பண்ணிதான்
எடுத்துட்டு வருவீங்க.!கொஞ்ச நாளைக்கு சீட்.பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..
நம்பர் எழுதறீங்களோஇல்லையோ.. கொலைகார முனிதுணைன்னு
ஸ்டிக்கர் ஒட்டமறக்கவே மாட்டீங்க...!

13.. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான்
உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்தபிள்ளைகளைப் பாரு..எவ்வளவு சாமர்த்தியமாஇருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவேமாட்டாங்க.. அடுத்த
பெற்றோரைப் பாருங்க..எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு
நீங்க நெனைப்பீங்க..ஆனா சொல்ல மாட்டீங்க..!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா
தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி
குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு
இருக்கும். [உ-ம்.பிரஷர். குக்கர்,காப்பி மேக்கர்,வாக்குவம் கிளீனர்,பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன்,கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18.பொங்கல், தீபாவளின்னாவீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு,தகராறுபண்ணி,போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்...
உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2008-ம் ஆண்டின் மிகச் சிறந்த படம் 'பூ'



இது சாதரண 'பூ' அல்ல 'குறிஞ்சிப் பூ'
ஒரு பெண்ணின் காதல் உணர்ச்சிகளை மிகவும் அழகாக எடுத்து காட்டியிருக்கும் படம்.
உறவினர்களுக்கிடையேயான திருமணத்தின் போது இரத்த சம்பந்த நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதுஎன்ற அறிவியல் உண்மையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு சொல்ல முயற்சி செய்துள்ள படம்.

தன் தாய்மாமன் தங்கராசுவை திருமணம் செய்வது தான் தன் வாழ்நாள் இலட்சியமாக வைத்துக்கொண்டு வாழும் பெண் மாரியாக புதுமுகம் பார்வதி. "உன் மாமனை அம்புட்டு பிடிக்குமோ" என்றுகேள்விக்கு "அம்புட்டு இல்ல இம்புட்டு" என்று கையை விரித்து பதில் சொல்லும் காட்சியில்எக்ஸ்பிரஷனில் பின்னுகிறார் பார்வதி. சிவகாசி பக்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும்வெடியாபிஸில் வேலை செய்கிறார். ஆனால் மாரியை பற்றிக் கொஞ்சம் கூட நினைக்காமல்இன்ஞ்சினியரிங் படிக்கும் மாணவனாக ஸ்ரீகாந்த். சொல்லப் போனால் இவருக்குப் படத்தில்வேலையே இல்லை. பார்வதியின் கணவராக "சென்னை 28" ல் Rockers டீம் கேப்டனாக வரும்இனிகோ. இவருக்கும் பார்வதிக்கும் முதல் பாடலில் அருமையான கெமிஸ்டரி.
படத்தில் மாரியாக வந்திருக்கும் பார்வதியின் நடிப்புக்கு தேசிய விருது வழங்கலாம்.

சின்மயி குரலில் "ஆவாரம் பூ" பாடல் தீம் மியூசிக்காக உருகுகிறது. அதே போல் "சூ சூ மாரி", "மாமன்எங்கே இருக்கான்" பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் அருமையாக உள்ளன. சூ சூ மாரியில் வரும் ஒருசிறுவன் கேமரா முன்னால் நின்று கொண்டு பண்ணும் குறும்பு ரசிக்கும்படி உள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பராக் ஒபாமா


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இனிய கவிதைகள்

அனுமதி இலவசம் !

பூட்டிதான் இருக்கும்
புன்னகையால் திற

பெரிகார்டியம் மெல்லியது
கிழித்து உள்ளே வா

தமனியில் தங்கு
சிரையில் சிறைபடு

அறைகள் நான்கு உண்டு
வசதியாக வாழ்

வெண்ட்ரிக்கிளில் விளையாடு
ஆரிக்கிளில் இளைப்பாறு

உள்ளே வரும் குருதியில்
நீ குளித்து
அதை சுத்தமாக்கி வெளியேற்று

உட்சுவரில் சாய்ந்து கொள்
உயிர் வாழ உதவு

வாடுமென் உயிருக்கு
வசந்தம் வரவழை

சுருங்கி விரியும் - அதையுன்
சுவாசத்தால் சுத்திகரி

லப்டப் சத்தத்தை
லாவகமாய் சங்கீதமாக்கு

அன்பின் சின்னம்
அழியாமல் காப்பாற்று

நோய்வந்து தாக்குமுன்னே
நீவந்து தாக்கு

புதிதாய் குடிபுகுந்து
புத்துணர்ச்சி பரப்பு

விரைந்து வா
வெற்றிடம் நிரப்பு

உனக்காக காத்திருக்கிறது
என் இதயம்.

-------------------------------------------------------------------------------------------
தேர்வு
ஒரு அதிகாலை பொழுது
நீ நீராடிவிட்டு
பாவாடை தாவணியில்
தலையில் நீர் சொட்ட
உன் விட்டு வாசலில் கோலம்
போட்டு விட்டு ஓடிப்போனாய்
அன்று
நம் பள்ளி வரலாற்று
தேர்வில் வினா ஒன்று
உலகின் மிகச்சிறந்த ஓவியம்
எது என்று ?
சற்றும் தயங்காமல் எழுதினேன்
என் எதிர் வீட்டு கோலம்
என்று !!!

-------------------------------------------------------------------------------------------

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS