இனிய கவிதைகள்

அனுமதி இலவசம் !

பூட்டிதான் இருக்கும்
புன்னகையால் திற

பெரிகார்டியம் மெல்லியது
கிழித்து உள்ளே வா

தமனியில் தங்கு
சிரையில் சிறைபடு

அறைகள் நான்கு உண்டு
வசதியாக வாழ்

வெண்ட்ரிக்கிளில் விளையாடு
ஆரிக்கிளில் இளைப்பாறு

உள்ளே வரும் குருதியில்
நீ குளித்து
அதை சுத்தமாக்கி வெளியேற்று

உட்சுவரில் சாய்ந்து கொள்
உயிர் வாழ உதவு

வாடுமென் உயிருக்கு
வசந்தம் வரவழை

சுருங்கி விரியும் - அதையுன்
சுவாசத்தால் சுத்திகரி

லப்டப் சத்தத்தை
லாவகமாய் சங்கீதமாக்கு

அன்பின் சின்னம்
அழியாமல் காப்பாற்று

நோய்வந்து தாக்குமுன்னே
நீவந்து தாக்கு

புதிதாய் குடிபுகுந்து
புத்துணர்ச்சி பரப்பு

விரைந்து வா
வெற்றிடம் நிரப்பு

உனக்காக காத்திருக்கிறது
என் இதயம்.

-------------------------------------------------------------------------------------------
தேர்வு
ஒரு அதிகாலை பொழுது
நீ நீராடிவிட்டு
பாவாடை தாவணியில்
தலையில் நீர் சொட்ட
உன் விட்டு வாசலில் கோலம்
போட்டு விட்டு ஓடிப்போனாய்
அன்று
நம் பள்ளி வரலாற்று
தேர்வில் வினா ஒன்று
உலகின் மிகச்சிறந்த ஓவியம்
எது என்று ?
சற்றும் தயங்காமல் எழுதினேன்
என் எதிர் வீட்டு கோலம்
என்று !!!

-------------------------------------------------------------------------------------------

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4 பின்னூட்டங்கள்:

Anbu said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

அன்பின் அன்பு

அருமையான காதல் கவிதை

இதயத்தின் படம் வரைந்து பாகங்கள் குறித்துக் கொடுத்து காதலியினை வரவழைக்கும் கவிதை நன்று நன்று - நல்வாழ்த்த்துகள்

cheena (சீனா) said...

உலகின் மிகச் சிறந்த ஓவியம் எதிர் வீட்டுக் கோலம் - நன்று நன்று - வயதுக் கோளாறு - காதல் கவிதைகள் ரத்தத்தில் கொப்பளிக்கின்றன

SURESH said...

ARUMAIYANA KAVITHAI