கடவுள் இருக்கிறாரா? இல்லையா???


ஒரு ஆற்றினில் தன் நண்பர்களுடன் ரமேஷ் குளித்துக் கொண்டிருந்தான். ஆற்றினில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படவே நண்பர்கள் ஆற்றினில் இருந்து கரையேறினர்.ஆனால் ரமேஷ் மட்டும் கரையேரவில்லை.எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது.என்னை கடவுள் காப்பாற்றுவார் எனக் கூறிக் கொண்டு இருந்தான்.

தண்ணீர் அவன் இடுப்பளவு வந்துவிட்டது.அவனுடன் வந்த நண்பர்கள் அவனை கரையேறும்படி வற்புறுத்தினர்.ஆனால் அவனோ எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது.என்னை கடவுள் காப்பாற்றுவார் எனக் கூறிக் கொண்டு இருந்தான்.

தண்ணீர் அவன் மார்பளவு வந்துவிட்டது.நண்பனில் ஒருவன் கயிறு கொடுத்து காப்பாற்ற உதவினான்.ஆனால் அவன் வரவில்லை.

தண்ணீர் அவன் வாய் வரை வந்துவிட்டது.அவனுடன் வந்த நண்பர்களில் ஒருவன் கரையேறும்படி தான் கொண்டு வந்த சைக்கிள் டியூப்பினை அவனிடம் கொடுத்து கரையேறும்படி கூறினான்.

தண்ணீர் அவன் நெற்றியளவு வந்துவிட்டது.அவன் வானத்தை நோக்கி 'கடவுளை என்னைக் காப்பாற்று' எனக் கூறினான்.

அப்போது வானத்தில் தோன்றிய கடவுள் சொன்னார்.நான் உன்னைக் காப்பாற்றுவதற்காக முதலில் ஒருவனை அனுப்பினேன்.நீ வரவில்லை.என் மீது அதிக பாசம் வைத்துள்ளதால் மீண்டும் ஒருவனை அனுப்பினேன்.ஆனால் மீண்டும் நீ வரவில்லை. இதில் என் மீது எந்தக் குற்றமுமில்லை எனக் கூறினார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

7 பின்னூட்டங்கள்:

Anonymous said...

super story

cheena (சீனா) said...

உண்மை உண்மை அன்பு - கடவுள் கதவினைத் தட்டி உதவி செய்வார் - ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் நமக்கு வேண்டும் - நல்ல கருத்து - நல்வாழ்த்துகள்

thala bala said...

இப்படி தான் பல மக்கள் கடவுள் காப்பாற்றுவார் என்று புலம்புகிறார்கல்

Ashwinji said...

படித்தேன்
'படி'த்தேன்.
சுவைத்தேன்
''சுவை''த்தேன்.

வருக என் வலைப்பூவுக்கு
அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com

மோனிபுவன் அம்மா said...

Story Very nice.

Anonymous said...

தோழர் உங்கள் கதை நன்றாக உள்ளது .என் வாழ்க்கையில் கடவுள் இல்லை என்று நினைக்கிறேன் ...எப்படி நான் கடவுளை உணர்வது ....

Anonymous said...

தோழர் உங்கள் கதை நன்றாக உள்ளது .என் வாழ்க்கையில் கடவுள் இல்லை என்று நினைக்கிறேன் ...எப்படி நான் கடவுளை உணர்வது ....