கீழ் உள்ளவைகளின்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்...!
1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வுபேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!
2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!
3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால்குக்கரும், அஜந்தா
கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..!
பேரு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்]
திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!
4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு சைஸ்
சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!
5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க.
அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க...!
6. மளிகைப் பொருட்களின்பாலிதீன் உறைகளை பத்திரமா வைப்பீங்க..
பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப்பார்வையோடு...!
7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் பார்ப்பீங்க.
சீல் விழாம இருந்தா, அந்த கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு,
அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.
8. சினிமா தியேட்டரோ,விரைவுப் பேருந்தோ..இருபக்க கை வைக்கும்
இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!
9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரிட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..[ரமேஷ், மகேஷ்.அமிர்தா,சுகிர்தா..]
10. ஏ.சி.திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க..
ஏ.சி.கோச்சுன்னா,கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்கவைப்பீங்க.!
11. விமானமோ,ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து
ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க....!
12. புதுசா கார் வாங்கினா,அதுக்கு மணப்பெண்அலங்காரம் பண்ணிதான்
எடுத்துட்டு வருவீங்க.!கொஞ்ச நாளைக்கு சீட்.பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..
நம்பர் எழுதறீங்களோஇல்லையோ.. கொலைகார முனிதுணைன்னு
ஸ்டிக்கர் ஒட்டமறக்கவே மாட்டீங்க...!
13.. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான்
உங்களுக்கு நிம்மதி..!
14. அடுத்தபிள்ளைகளைப் பாரு..எவ்வளவு சாமர்த்தியமாஇருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவேமாட்டாங்க.. அடுத்த
பெற்றோரைப் பாருங்க..எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு
நீங்க நெனைப்பீங்க..ஆனா சொல்ல மாட்டீங்க..!
15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா
தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!
16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி
குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!
17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு
இருக்கும். [உ-ம்.பிரஷர். குக்கர்,காப்பி மேக்கர்,வாக்குவம் கிளீனர்,பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன்,கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]
18.பொங்கல், தீபாவளின்னாவீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு,தகராறுபண்ணி,போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!
19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..
20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்...
உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..
நீங்கள் ஒரு தமிழனா???? பரிசோதிக்க இங்கே க்ளிக் பண்ணவும்.........
Subscribe to:
Post Comments (Atom)
8 பின்னூட்டங்கள்:
அட்டகாசம்..
அடடா.
நிறைய விட்டுட்டீங்களே.
ஒரு பதிவைப் போட்டால் திட்டுவதும் தமிழன் குணம் தானே.
அதை விட்டுட்டீங்களே.
மொக்கைப் பதிவைப் போட்டால் வாழ்த்துவதும் தமிழன் குணம் தானே.
அதையும் விட்டுட்டீங்களே.
இப்போ புரியுதா - நான் என்ன சொல்ல வருகிறேன் என்று..
ஆகா..
//உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா
தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!
ஆகா வாய்ப்பே இல்லை. அவங்க ஊருக்குப் போகிட்டாங்க.
நான் ஒரு வேளை சமைப்பதற்குள் அட போங்கப்பா. நீங்களும் உங்கள் சமையலும்னுட்டு.. வெளியிட சாப்பிட்டேன்.
ஹோட்டல் சாப்பாடை சாப்பிட்டபிறகு நினைத்த வாசகம் -
அட போங்கடா நீங்களும் உங்களுடைய சாப்பாடும்.
நான் சமைத்தால் இதைவிட நல்லா சமைப்பேன் - என்று நினைத்தேன்.
பிறகு ஆரம்பித்தேன் - சமைத்துப்பார்த்தேன்.
அட நல்லாத்தானே இருக்கு.
அதனால எதையும் வேஸ்ட் வைக்கலை
அடிச்சு தூள் பண்ணிட்டேன்.
சாப்பிட்டுப் பார்க்கிறீங்களா? வரீங்களா?
Like you many people like getting popularity just by criticizing own people. Do u think, except Tamizh, all are maintaining time perfectly. Each point you mentioned is followed by all Indians. Don’t try to get cheap popularity.
வணக்கம் அன்புமதி அவர்களே,
நீங்கள் சொன்னது பொதுவாக தமிழன் என்றில்லை இந்தியர் எல்லாருக்கும் பொருந்தும்
என் பார்வையில் விடுபட்ட சிலது
தனக்கு பிடிக்காதவர் என்று தெரிந்தும்,வாங்க எங்க விடுபக்கமே காணும் என்பது ,
போய்டடுவரேன் என்று சொல்லிவிடு அரைமணி நேரம் விட்டுவாசலில் பேசிகொண்டிருப்பது, விழாகாலங்களில் மற்ற வீடுகலிலிருந்து வரும் பலகாரங்களை
மாற்றிபோட்டு தன்விட்டில் செய்ததையும் சேர்த்து அவர்கள் விட்டுக்கே அனுப்புவது ,
துணி (புடவை ) எடுக்க சென்றால் கடையையே குத்துகை எடுப்பது ,நாத்தெமெடுக்கும்
உள்ளாடையை மறைக்க வெளியே புதுச்சட்டையை போட்டுக்கொள்வது என்பன சில
இதில் பல செயல்கள் எல்லோரும் செய்வது தான் - பல செயல்கள் தமிழனே செய்யாததுதான் - இருப்பினும் இடுகை இட்டாயிற்று
வாழ்க வளர்க - மொக்கைத்திலகம் அன்புமதி
Post a Comment