இது சாதரண 'பூ' அல்ல 'குறிஞ்சிப் பூ'
ஒரு பெண்ணின் காதல் உணர்ச்சிகளை மிகவும் அழகாக எடுத்து காட்டியிருக்கும் படம்.
உறவினர்களுக்கிடையேயான திருமணத்தின் போது இரத்த சம்பந்த நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதுஎன்ற அறிவியல் உண்மையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு சொல்ல முயற்சி செய்துள்ள படம்.
தன் தாய்மாமன் தங்கராசுவை திருமணம் செய்வது தான் தன் வாழ்நாள் இலட்சியமாக வைத்துக்கொண்டு வாழும் பெண் மாரியாக புதுமுகம் பார்வதி. "உன் மாமனை அம்புட்டு பிடிக்குமோ" என்றுகேள்விக்கு "அம்புட்டு இல்ல இம்புட்டு" என்று கையை விரித்து பதில் சொல்லும் காட்சியில்எக்ஸ்பிரஷனில் பின்னுகிறார் பார்வதி. சிவகாசி பக்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும்வெடியாபிஸில் வேலை செய்கிறார். ஆனால் மாரியை பற்றிக் கொஞ்சம் கூட நினைக்காமல்இன்ஞ்சினியரிங் படிக்கும் மாணவனாக ஸ்ரீகாந்த். சொல்லப் போனால் இவருக்குப் படத்தில்வேலையே இல்லை. பார்வதியின் கணவராக "சென்னை 28" ல் Rockers டீம் கேப்டனாக வரும்இனிகோ. இவருக்கும் பார்வதிக்கும் முதல் பாடலில் அருமையான கெமிஸ்டரி.
படத்தில் மாரியாக வந்திருக்கும் பார்வதியின் நடிப்புக்கு தேசிய விருது வழங்கலாம்.
சின்மயி குரலில் "ஆவாரம் பூ" பாடல் தீம் மியூசிக்காக உருகுகிறது. அதே போல் "சூ சூ மாரி", "மாமன்எங்கே இருக்கான்" பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் அருமையாக உள்ளன. சூ சூ மாரியில் வரும் ஒருசிறுவன் கேமரா முன்னால் நின்று கொண்டு பண்ணும் குறும்பு ரசிக்கும்படி உள்ளது.
2008-ம் ஆண்டின் மிகச் சிறந்த படம் 'பூ'
Subscribe to:
Post Comments (Atom)
2 பின்னூட்டங்கள்:
super
நல்ல படம் அவ்வளவாய் ஓடாதது வருத்தமளிக்கிறது..
Post a Comment