காதல் படுத்தும் பாடு!!


தன் காதல் கடிதத்தை சாந்தியிடம் நீட்டினான் சக்தி..அவளும் அக்கடிதத்தை எதிர்பார்த்து இருந்திருப்பாள் போல..அவன் கொடுத்தவுடன் பெண்ணுக்கே உரிய வெட்கத்துடன் தலைகுனிந்து வாங்கிச்சென்றாள்.இவனுக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி.என்ன செய்வதென்று தெரியவில்லை..ரோட்டில் தானாவே சிரித்தான்..அவனது கால்கள் ரோட்டில் ஆட்டம் போட்டுக்கொண்டே சென்றன..என்ன சொல்லப்போகிறாள் தெரியவில்லையே..மறுநாள் காலையில் தான் அவளை சந்திக்க இயலும்..ஓ.கே சொல்லிடுவாளா?

அன்றிரவு அவனுக்கு உறக்கம் வரவில்லை..நண்பர்களை தொலைபேசியில் அழைத்தான்..அனைவரும் வழக்கம் போல் கட்டைச்சுவரில் கூடினர்.

என்னடா மாப்ள..அவசரமா வரச்சொன்ன..

சும்மாதான்டா..

சொல்லேண்டா..10.00 மணியாச்சு தூங்கணும்

ஒண்ணுமில்லைடா இன்னிக்கு சாந்திக்கு லவ் லெட்டர் கொடுத்தேன்டா..

என்னடா சொன்னா..

காலையில சொல்றேன் சொன்னாடா..

மச்சி கலக்கிறடா..சரிடா காலையில பார்ப்போம்.

இருடா எனக்கு தூக்கமே வரலைடா..கொஞ்சம் பொறுடா.

எனக்கு தூக்கம் வருதேடா..அவ உனக்கு தான் மச்சான் கவலைப்படாதே..போய் தூங்குடா..

பிரியா மனதுடன் விடை பெற்று சென்றான்..

இரவு உறக்கம் வரவில்லை..தீடிரென விழித்தான்..அதிகாலை 4.00 மணி..விடியலை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தான்..கிழக்கில் சூரியன் மெல்ல உதிக்க ஆரம்பித்தான்.மிக ஆர்வத்துடன் கல்லூரிக்கு கிளம்ப தயாரானான்.அவனிடம் இருப்பதிலே மிகவும் நல்ல ஆடையை அணிந்தான்..தலையை நூறு முறை சீவியும் அவனுக்கு அழகாக தெரியவில்லை..ஒருமனதாக கல்லூரிக்கு கிளம்பினான்..

மிகவும் ஆவலுடன் கல்லூரியின் வாசலை எதிர்நோக்கி இருந்தான்.மணி 9.00 ஆகியும் வரவில்லை..அவள் தோழிகளிடம் விசாரித்தான்..அனைவரும் தெரியவில்லை என்றே பதில் கூறினர்..மனம் உடைந்து போனான்..

யாரோ ஒருவர் ஓடி வருவதை உணர்ந்த அவன் திரும்பிபார்க்க..சாந்தி மூச்சிரைக்க ஓடி வந்தாள்..அவளைக்கண்டதும் அவன் மகிழ்ச்சியில் திளைத்தான்.
அவளிடம் இருந்து ஒரு வார்த்தைக்காக மிகவும் ஏங்கினான்..

அவளோ ச்.சீ போடா என்று சிணுங்கியபடி வகுப்புக்குள் ஓடினாள்..இவன் மனதுக்குள் ஒரு ஆயிரம் சூர்யா வந்துவிட்டது போல் துள்ளிகுதித்தான்..

துள்ளி குதித்ததில் அவனை அறியாமல் படுக்கையறையிலிருந்து கீழே விழுந்தான்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

34 பின்னூட்டங்கள்:

Unknown said...

காதலான கனவு

லோகு said...

ஒ.. அப்படி போகுதா கதை..

கனவு பலிக்கட்டும்..

Anbu said...

\\\நட்புடன் ஜமால் said...

காதலான கனவு\\\

ஆமாம் அண்ணா

வருகைக்கு நன்றி

Anbu said...

\\லோகு said...

ஒ.. அப்படி போகுதா கதை..

கனவு பலிக்கட்டும்..\\

உங்க வார்த்தை பலிக்கட்டும் தல

Suresh said...

அழகு மிலிருது :-)

Suresh said...

கணவு வேறயா ஹீ ஹீ

ஆ.ஞானசேகரன் said...

கனவாஆஆஆஆஆஆஆஆஅ

Cable சங்கர் said...

:)

Anbu said...

\\Suresh said...
கணவு வேறயா ஹீ ஹீ\\\

ஆமாம் அண்ணா..

Anbu said...

\\ஆ.ஞானசேகரன் said...
கனவாஆஆஆஆஆஆஆஆஅ\\

கனவே தான்

Anbu said...

\\\Cable Sankar said...
:)\\

வருகைக்கு நன்றி அண்ணா

Athisha said...

கதை நல்லாருக்கு நண்பா.

எல்லாமே கனவுதான் எல்லாமே கலையணும்தான்

Anbu said...

\\ அதிஷா said...
கதை நல்லாருக்கு நண்பா.

எல்லாமே கனவுதான் எல்லாமே கலையணும்தான்\\\

கலைந்தால் நல்லா இருக்கும் ..வருகைக்கு நன்றி அண்ணா

வேத்தியன் said...

ரொம்ப நல்லா இருக்கு அன்பு...

நீ கலக்கு மாப்ள...

வாழ்த்துகள்...

Anbu said...

\\வேத்தியன் said...
ரொம்ப நல்லா இருக்கு அன்பு...

நீ கலக்கு மாப்ள...

வாழ்த்துகள்...\\\

வாழ்த்துக்கு நன்றி மச்சான்..

வால்பையன் said...

காதல் தவிர யோசிப்பதற்கு வேறு எதுவும் உண்டா?

Anbu said...

\\வால்பையன் said...
காதல் தவிர யோசிப்பதற்கு வேறு எதுவும் உண்டா?\\\

ஒன்னுமில்லை வால்..வயசு அப்படி நான் என்ன செய்ய..

வால்பையன் said...

//ஒன்னுமில்லை வால்..வயசு அப்படி நான் என்ன செய்ய..//

ஆ வூ ந்னா இப்படி ஒரு பதிலை சொல்லிருஙய்யா!
எங்களுக்கு மட்டும் என்ன வயசாச்சு,
மிஞ்சி போனா ஒரு 22 இருக்குமா, நாங்க ஒழுங்கா வேலைக்கு போகலை!

Anbu said...

\\வால்பையன் said...
//ஒன்னுமில்லை வால்..வயசு அப்படி நான் என்ன செய்ய..//

ஆ வூ ந்னா இப்படி ஒரு பதிலை சொல்லிருஙய்யா!
எங்களுக்கு மட்டும் என்ன வயசாச்சு,
மிஞ்சி போனா ஒரு 22 இருக்குமா, நாங்க ஒழுங்கா வேலைக்கு போகலை!\\\

22-ன்னா முடியவில்லை வால்..என்ன இருந்தாலும் பெரிசு பெரிசுதான்

முரளிகண்ணன் said...

Nice post. (sorry no tamil fond here)

தேவன் மாயம் said...

படுக்கையிலேயே காதல் கனவா? ஓகே! ஒகே!!

Raju said...

நீ நடத்து மவனே..!

Anbu said...

\\முரளிகண்ணன் said...

Nice post. (sorry no tamil fond here)\\\

நன்றி அண்ணா

Anbu said...

\\ thevanmayam said...

படுக்கையிலேயே காதல் கனவா? ஓகே! ஒகே!!\\\

நன்றி டாக்டர்

Anbu said...

\\டக்ளஸ்....... said...

நீ நடத்து மவனே..!\\
எல்லாம் உங்க ஆசிர்வாதம் தல..

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல கனவு அன்பு..:-)

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog


நன்றி
தமிழர்ஸ்

சொல்லரசன் said...

இது என்ன, சிறுகதை போட்டிக்கு முன்னோட்டமா?
நல்லயிருக்கு உங்க கதையும் கனவும்.

Anbu said...

\\\கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல கனவு அன்பு..:-)\\\

நன்றி அண்ணா வருகைக்கு..

Anbu said...

\\சொல்லரசன் said...

இது என்ன, சிறுகதை போட்டிக்கு முன்னோட்டமா?
நல்லயிருக்கு உங்க கதையும் கனவும்.\\\

நன்றி அண்ணா வருகைக்கு..

அத்திரி said...

superb

அப்துல்மாலிக் said...

கடைசி வரியில் வாய்விட்டு சிரித்தேன்

நல்லாயிருக்கு

cheena (சீனா) said...

நல்ல கதை - இயல்பான நடை - நச்சென்ற முடிவு - காதல் படுத்தும் பாடு சொல்லில் அடங்காது அன்பு

Subankan said...

ம்.. நல்லாக் காணுங்க கனவு..

கனவு பலிக்கட்டும்..