சதுரகிரி யாத்திரை-ஒரு பயணப்பதிவு...

கடந்த சனிக்கிழமை அன்று நான் மற்றும் எனக்கு இணைய உலகத்தை விளக்கி எடுத்துரைத்த எனது கம்பெனியின் எம்.டி.மற்றும் சிலர் சதுரகிரிக்கு யாத்திரை சென்றிருந்தோம்.மிகவும் நல்ல சுற்றுலா பயணமாக எனக்கு அமைந்தது.. நல்ல சுவையான அனுபவம் கிடைத்தது.என்னை அழைத்துச் சென்ற எனது எம்.டி.க்கு நன்றிகள் பல..அதைப்பற்றிய பதிவுதான் இங்கே..

மனித நேயம் அறிந்த மனிதனே மகான் ஆகிறான்.பின்னாளில் தெய்வமும் ஆகின்றான்.உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதன் பிறந்தான்.தன் பிறப்பின் நோக்கம் என்ன என்று தொடான்கினான்.தேடலின் சுவை அறிந்தான்.சுகம் தேடினான்.உணவு தேடி அலைந்தவன் உணர்ச்சிகளை வளர்த்தான்..உண்மையைத்தேடி அலைந்தவன் ஆன்மீகத்தை வளர்த்துக்கொண்டான்..

உணவு வேண்டும்...உறையுள் வேண்டும்..என லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனிதன் தேடத்தொடங்கினான்..இன்றைக்கும் தேடிக்கொண்டே இருக்கிறான்..நாகரீக வள்ர்ச்சியோடும் நவீன வசதிகளோடும்..காலங்கள் மாறினாலும் காரியம் ஒன்றுதான்..

உண்மையைத் தேடி திரிந்தவர்கள் மலைகளில் தங்களது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டனர்.தவத்திலும் ஞானத்திலும் நாட்களை செலவிட்டனர்.அங்கு தினமும் பெரிய கொடூரமான மிருகங்களை சந்திக்க நேர்ந்தது.மிருகங்களையும் நண்பர்களாக முற்பட்டான்..கண்களில் கனிவையும் உள்ளத்தில் அன்பையும் வைத்து பாசத்தோடு பழகினான்..மிருகங்களும் தங்களது வாழ்க்கையில் வித்தியாசம் காட்டின.அவர்களுடன் நெருங்கி பழகின..காலம் கடந்த பின் அவர்கள் ஆன்மிகவாதிகள் ஆனார்கள்..கலைகளை கற்று தேர்ந்தார்கள்..

சதுரகிரி..

சித்தர்களின் தலைமைப்பீடம் சதுரகிரி என்கிறார்கள்.எண்ணற்ற சித்தர்கள் பலர் சதுரகிரி மலையில் கூடி ஆன்மீக விவாதங்கள் நடத்துவது உண்டாம்.இதற்கென அவர்கள் பயன்படுத்தும் குகைகள் பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம் காணப்படுகின்றன.சித்தர்கள் ஏற்படுத்திய தீர்த்தங்கள் இன்றைக்கும் இருக்கின்றன..சித்தர்கள் வசித்த குகைகளில் மனிதர்களால் செல்ல இன்றளவும் இயலாத ஒன்றாகவே உள்ளது.

வான்மீகி,கோரக்கர்,கமலமுனி,சட்டைமுனி,அகத்தியர்,சுந்தரானந்தர்,கருவூரார்,அகப்பைச்சித்தர்,கொங்கணர்,தன்வந்திரி,பாம்பாட்டிச்சித்தர்,ராமதேவர்,
இடைக்காட்டுச்சித்தர்,திருமூலர்,போகர்,அழுகுணிச்சித்தர்,காலாங்கிநாதர்,மச்சமுனி,ஆகியோர் பதிணென் சித்தர்கள் எனப்படுவர்..

தன்னை தரிசிக்க வரும் எவரையும் எந்தவித சிரமத்திற்கும் உள்ளாக்குவதில்லை மகாலிங்க ஸ்வாமிகள்.மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் போது வழி மாறி செல்லாமல் இருக்க பைரவர்கள்(நாய்கள்) பக்தர்களை பார்த்து வாலாட்டிவிட்டு "என் பின்னாலே வா.."என்பது போல் வழிகாட்டிக்கொண்டே செல்லும்..பக்தர்கள் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து உட்காரும் போது நாய்களும் ஒரி இடத்தில் உட்காருகின்றன..நாம் எந்திரித்து நடக்க ஆரம்பித்தவுடன் நாய்களும் நமக்கு வழிகாட்டியாக எந்திரித்து நடக்க ஆரம்பிக்கின்றன...அந்த நிகழ்வை பார்க்கவே அதிசயமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது..

அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஒரு புனிதமான இடம்...மிஸ் பண்ணாதீங்க..

புகைப்படங்கள் கிழே:-






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

40 பின்னூட்டங்கள்:

*இயற்கை ராஜி* said...

me the firstayyyyy

Raju said...

\\நடந்து செல்லும் போது வழி மாறி செல்லாமல் இருக்க பைரவர்கள்(நாய்கள்) பக்தர்களை பார்த்து வாலாட்டிவிட்டு "என் பின்னாலே வா.."என்பது போல் வழிகாட்டிக்கொண்டே செல்லும்..பக்தர்கள் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து உட்காரும் போது நாய்களும் ஒரி இடத்தில் உட்காருகின்றன..நாம் எந்திரித்து நடக்க ஆரம்பித்தவுடன் நாய்களும் நமக்கு வழிகாட்டியாக எந்திரித்து நடக்க ஆரம்பிக்கின்றன...அந்த நிகழ்வை பார்க்கவே அதிசயமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது..\\

அட, அமானுஷ்யம்தான்...!
தம்பி, என்ன இப்புடி தீடிருன்னு அன்மீகப்பயணம்.

Raju said...

யாருப்பா அது இயற்கை..!
ஆட்டோ அனுப்பணும் போலயே...

வால்பையன் said...

எனக்கு தெரியாத சப்ஜெக்டு!

தேவன் மாயம் said...

சதுரகிரி மலை ஆன்மீகப்பயணம் அருமை!!
இளம் வயதிலேயே பக்தியா!!

தேவன் மாயம் said...

சதுரகிரி மலயில் மூலிகைச் செடிகள் அதிகம் என்பார்களே!!

கார்த்திகைப் பாண்டியன் said...

விவரிப்பில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது அன்பு.. வாழ்த்துகள்...

Unknown said...

நல்ல பதிவு அன்பு அங்குள்ள மூலிகைபற்றியும் எழுதியிருக்கலாம்,விவரிப்பு அருமை வாழ்த்துகள்

தீப்பெட்டி said...

நானும் அங்கு தை பொங்கலன்று நண்பரோடு சென்றேன். நல்ல அனுபவம். இனியும் என்று செல்வோமென்ற ஆவலோடு இருக்கிறேன்..

அங்கு நாங்கள் இரவு தங்கியிருந்து சங்கர லிங்கம், சுந்தர லிங்கம் தரிசனம் செய்தோம்.. சுகானுபவம்..

Anbu said...

\\இய‌ற்கை said...
me the firstayyyyy\\

நன்றி அக்கா முதல் வருகைக்கு..

Anbu said...

\\ டக்ளஸ்....... said...
\\நடந்து செல்லும் போது வழி மாறி செல்லாமல் இருக்க பைரவர்கள்(நாய்கள்) பக்தர்களை பார்த்து வாலாட்டிவிட்டு "என் பின்னாலே வா.."என்பது போல் வழிகாட்டிக்கொண்டே செல்லும்..பக்தர்கள் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து உட்காரும் போது நாய்களும் ஒரி இடத்தில் உட்காருகின்றன..நாம் எந்திரித்து நடக்க ஆரம்பித்தவுடன் நாய்களும் நமக்கு வழிகாட்டியாக எந்திரித்து நடக்க ஆரம்பிக்கின்றன...அந்த நிகழ்வை பார்க்கவே அதிசயமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது..\\

அட, அமானுஷ்யம்தான்...!
தம்பி, என்ன இப்புடி தீடிருன்னு அன்மீகப்பயணம்\\\

எல்லாம் சும்மாதான் தல..நாலும் தெரிஞ்சுக்கனும்ல அதான்..

Anbu said...

\\டக்ளஸ்....... said...
யாருப்பா அது இயற்கை..!
ஆட்டோ அனுப்பணும் போலயே.\\

அப்படி எதுவும் பண்ணிடாதீங்க தல..

Anbu said...

\\ வால்பையன் said...
எனக்கு தெரியாத சப்ஜெக்டு\\\

உங்களுக்கு உரிய பதிவு நாளைக்கு போடுகிறேன் வால்...

Anbu said...

\\ thevanmayam said...
சதுரகிரி மலயில் மூலிகைச் செடிகள் அதிகம் என்பார்களே!\\

ஆமாம் சார்..லட்சக்கணக்கில் தாவரசெடிகள் உள்ளனவாம்..அதைப்பற்றி ஒரு பதிவு எழுதலாம் அல்லவா அதான்..விட்டுவிட்டேன்

Anbu said...

\\\ கார்த்திகைப் பாண்டியன் said...
விவரிப்பில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது அன்பு.. வாழ்த்துகள்.\\\

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தல..
வருகைக்கும் வாழ்த்துக்ககுக்கும் நன்றி அண்ணா

Anbu said...

\\\sollarasan said...
நல்ல பதிவு அன்பு அங்குள்ள மூலிகைபற்றியும் எழுதியிருக்கலாம்,விவரிப்பு அருமை வாழ்த்துகள்\\

அதைப்பற்றி ஒரு பதிவு இடுகிறேன் அண்ணா..

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அண்ணா

Anbu said...

\\தீப்பெட்டி said...
நானும் அங்கு தை பொங்கலன்று நண்பரோடு சென்றேன். நல்ல அனுபவம். இனியும் என்று செல்வோமென்ற ஆவலோடு இருக்கிறேன்..

அங்கு நாங்கள் இரவு தங்கியிருந்து சங்கர லிங்கம், சுந்தர லிங்கம் தரிசனம் செய்தோம்.. சுகானுபவம்.\\

நீங்களும் போயிருக்கீங்களா...
எனக்கும் அடுத்தமுறை செல்ல ஆசையாகத்தான் உள்ளது..

Beski said...

படங்களை விட எழுத்து அருமையோ அருமை.
கலக்குங்க மாப்ள.

Raj said...

எப்படி போகணும் வழி சொல்லுங்க சார்

Misha said...

malaikku maela innum aeri poai innoru idam paarpaangalaamae.... kaelvi pattaen... neenga poaningalaa brother???

லோகு said...

என்ன மாப்ள திடீர்னு பக்தி மயம்..


நல்ல உபயோகமான பதிவு,, இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது தான் நமக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை உணர்வு பூர்வமாக தெரிந்து கொள்ள முடிவும், பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்..

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பக்திமயமான பகிர்வு வாழ்த்துகள்

Unknown said...

to know more about sathuragiri
download this book
http://www.box.net/shared/0cvj4lhk0m
or
http://svmanivannan.googlepages.com/sathuragiri.pdf


for visit sathuragiri
to go madurai mattuthavani bus stand.and go to wadrap via buses.then take auto to thaniparai.then by walk to 10Kms to sathuragiri.
to view sathuragiri in google earth or map

http://maps.google.com/maps/ms?hl=en&ptab=0&ie=UTF8&oe=UTF8&msa=0&msid=109609011494968496562.000454f1b016c9233cf4b&ll=9.753724,77.634888&spn=0.326855,0.4422&t=h&z=11

by
http://svmanivannan.co.cc

குமரை நிலாவன் said...

ஆன்மீகப்பயணம் அருமை!!

வெற்றி-[க்]-கதிரவன் said...

//தன்னை தரிசிக்க வரும் எவரையும் எந்தவித சிரமத்திற்கும் உள்ளாக்குவதில்லை மகாலிங்க ஸ்வாமிகள்.மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் போது வழி மாறி செல்லாமல் இருக்க பைரவர்கள்(நாய்கள்) பக்தர்களை பார்த்து வாலாட்டிவிட்டு "என் பின்னாலே வா.."என்பது போல் வழிகாட்டிக்கொண்டே செல்லும்..பக்தர்கள் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து உட்காரும் போது நாய்களும் ஒரி இடத்தில் உட்காருகின்றன..நாம் எந்திரித்து நடக்க ஆரம்பித்தவுடன் நாய்களும் நமக்கு வழிகாட்டியாக எந்திரித்து நடக்க ஆரம்பிக்கின்றன...அந்த நிகழ்வை பார்க்கவே அதிசயமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.//

எனக்கும் இது போல இரண்டு கோவில்களில் அனுபவம் இருக்கின்றது -:)

***
சித்தர பத்தி இன்னும் எழுதிருக்கலாம் :)

http://maargalithingal.blogspot.com/

Anbu said...

\\\எவனோ ஒருவன் said...

படங்களை விட எழுத்து அருமையோ அருமை.
கலக்குங்க மாப்ள.\\\

நன்றி மச்சான்...வருகைக்கு

Anbu said...

\\Raj said...

எப்படி போகணும் வழி சொல்லுங்க சார்\\

வத்ராப் போய் போகணும் சார்..

Anbu said...

\\Misha said...

malaikku maela innum aeri poai innoru idam paarpaangalaamae.... kaelvi pattaen... neenga poaningalaa brother???\\\

நான் போக நேரமில்லாததால் செல்லவில்லை..அடுத்த முறை கண்டிப்பாக பார்க்க வேண்டும்..
வருகைக்கு நன்றி தோழி

Anbu said...

\\லோகு said...

என்ன மாப்ள திடீர்னு பக்தி மயம்..


நல்ல உபயோகமான பதிவு,, இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது தான் நமக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை உணர்வு பூர்வமாக தெரிந்து கொள்ள முடிவும், பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்..\\

நன்றி மச்சான்..

Anbu said...

\\ஆ.ஞானசேகரன் said...

நல்ல பக்திமயமான பகிர்வு வாழ்த்துகள்\\

நன்றி அண்ணா..

Anbu said...

\\ manivannan said...

to know more about sathuragiri
download this book
http://www.box.net/shared/0cvj4lhk0m
or
http://svmanivannan.googlepages.com/sathuragiri.pdf


for visit sathuragiri
to go madurai mattuthavani bus stand.and go to wadrap via buses.then take auto to thaniparai.then by walk to 10Kms to sathuragiri.
to view sathuragiri in google earth or map

http://maps.google.com/maps/ms?hl=en&ptab=0&ie=UTF8&oe=UTF8&msa=0&msid=109609011494968496562.000454f1b016c9233cf4b&ll=9.753724,77.634888&spn=0.326855,0.4422&t=h&z=11

by
http://svmanivannan.co.cc\\

நன்றி அண்ணா..

முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

Anbu said...

\\குமரை நிலாவன் said...

ஆன்மீகப்பயணம் அருமை!!\\

நன்றி அண்ணா..

வருகைக்கும் கருத்துக்கும்..

Anbu said...

\\\ பித்தன் said...

//தன்னை தரிசிக்க வரும் எவரையும் எந்தவித சிரமத்திற்கும் உள்ளாக்குவதில்லை மகாலிங்க ஸ்வாமிகள்.மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் போது வழி மாறி செல்லாமல் இருக்க பைரவர்கள்(நாய்கள்) பக்தர்களை பார்த்து வாலாட்டிவிட்டு "என் பின்னாலே வா.."என்பது போல் வழிகாட்டிக்கொண்டே செல்லும்..பக்தர்கள் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து உட்காரும் போது நாய்களும் ஒரி இடத்தில் உட்காருகின்றன..நாம் எந்திரித்து நடக்க ஆரம்பித்தவுடன் நாய்களும் நமக்கு வழிகாட்டியாக எந்திரித்து நடக்க ஆரம்பிக்கின்றன...அந்த நிகழ்வை பார்க்கவே அதிசயமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.//

எனக்கும் இது போல இரண்டு கோவில்களில் அனுபவம் இருக்கின்றது -:)

***
சித்தர பத்தி இன்னும் எழுதிருக்கலாம் :)\\\

அடுத்த பதிவில் போடுகிறேன் அண்ணா..

வினோத் கெளதம் said...

அருமையான விவரிப்பு நண்பா..

cheena (சீனா) said...

அன்பு

ஆன்மீகப்பயணம் அருமை - விவரித்த விதம் நன்று - ஒரு முதிர்ந்த கலைஞனின் கைவண்ணம் தெரிகிறது. பயணக்கட்டுரை என்பது ஒரு கடினமான செயல்.

நன்கு வந்திருக்கிறது. நல்வாழ்த்துகள்

அடுத்த இடுகை காதல் ஒழிக எழுதியதும் சதுரகிரி யாத்திரை எழுதியதும் ஒருவர்தானா ?

பன்முகம் காட்டும் அன்புமதி - வாழ்க வாழ்க

செல்விஷங்கர் said...

அருமையான ஆன்மீகப்பாதை - அழகாய் இருக்கிறது - ஆழமாயும் இருக்கிறது - பார்த்ததை படம் பிடித்தாற்போல் பதிந்திருக்கும் நடை அருமை - நல்ல சிந்தனை - தொடர்க

Anonymous said...

தங்களுடைய கட்டுரையை படித்தவுடன் நாமும் செல்ல வேண்டும் என்று ஆவல் ஏற்படுகிறது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன். அன்புடன் சீனிவாசன்.

rajsteadfast said...

நல்ல பதிவு. நல்ல முதிர்ச்சி இருக்கிறது எழுத்தில். வாழ்த்துக்கள்.

Kannan said...

மிகவும் அருமை

Unknown said...

மிக மிக உபயோகமான தகவல்கள். மிக்க நன்றி. நானும் எனது நண்பர்களும் அடுத்த மாதம் பௌர்ணமிக்கு போகலாம் என்று பிளான் போட்டுள்ளோம். இறைவன் சித்தம் எப்படியோ...