நன்றி...நன்றி..
பதிவுலகில் எழுத ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகின்றன..இதற்குள் 56 பதிவுகள்..54 பாலோயர்கள்..இரண்டு முறை பதிவர் சந்திப்புகள்..நினைத்தாலே மனம் மகிழ்ச்சியாக உள்ளது..மேலும் என் எழுத்தையும் தொடர்ந்து ரசிக்கும் அந்த 54 பாலோயர்க்கும்,இனிமேல் பாலோயாராக சேர இருக்கும் நண்பர்களுக்கும் என் மனமானர்ந்த நன்றிகள்..
***********************************
நேற்று(05/07/09) நடைபெற விருந்த மேற்கு இந்தியத்தீவுக்களுக்கு எதிரான கடைசி ஒருதின போட்டி மழையால் கைவிடப்பட்டது..இருப்பினும் இந்திய அணி ஏற்கனவே முன்னிலையில் இருப்பதால் தொடரை எளிதாக கைப்பற்றியது..20 ஓவர் போட்டியில் கோப்பையை வெல்லமுடியாமல் போன இந்திய அணிக்கு இந்த போட்டி சற்று ஆறுதல் அளித்திருக்கும்..
மேலும் நேற்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் இறுதி போட்டியில் ரோஜர் பெடரர் கோப்பையை கைப்பற்றினார்..இது அவருக்கு 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.அவர் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்..
***********************************
நேற்று காலை சன் டி.வி.யின் டாப்-டென் நிகழ்ச்சி காண நேரிட்டது..பெரும்பாலும் பாடல்களை மட்டும் கேட்கும் நான் சரி எந்த படம் தான் முதலிடத்தில் உள்ளது என பார்ப்போமே என பார்த்தால் ஒரே ஆச்சர்யம்
3வது இடத்தில் அயன்...
2வது இடத்தில் நாடோடிகள்
1வது இடத்தில் மாசிலாமணி..
மாசிலாமணி படத்தில் நல்ல பாடல்கள்,மற்றும் நல்ல கதைக்களம் என எல்லா அடிப்படைத்தேவைகளையும் இப்படம் பூர்த்தி செய்திருப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..என்றனர்...
இந்த நிலைமை நீடித்தால் இந்த ஆண்டின் இறுதியில் அவர்கள் வெளியிட்ட படங்கள் மட்டுமே அவர்கள் டி.வி.யில் டாப்-டென்னாக இருக்கும்..
இந்த பிழைப்புக்கு....????
***********************************
சமீபத்தில் 'அதே நேரம் அதே இடத்தின்' பாடல்கள் கேட்டேன்..இப்படத்தின் இசையமைப்பாளர்-பிரேம்ஜி அமரன்..படத்தில் ஒரு பாடல் பெண்களை மையப்படுத்தி வந்துள்ளது..பாடலை பாடியவர்:வெங்கட் பிரபு..எழுதியது யார் என்று தெரியவில்லை.தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்.பாடல் மிக அருமை..பாடலின் தொடக்க வரிகள்..
நம்மூர் சென்னையில நாள்தோறும் வீதியிலே
பல நூறு பொண்ணுங்களை பார்த்தேனே..
என்னோட நெஞ்சுக்குள்ளே எப்போதும் கண்ணுக்குள்ளே
உயிராக ஒருத்தியாகத்தான் வைச்சேனே..
பாடலை ஸ்கிரினில் பார்க்க ஆவலாக உள்ளது...
***********************************
நகைச்சுவை:-
மனைவி: இந்த வாரம் முழுவதும் படம் பார்த்தோம்..
அடுத்த வாரம் முழுவதும் ஸாப்பிங் போவோங்க.
கணவன்:சரி.அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்..
மனைவி:எதுக்குங்க..
கணவன்:பிச்சை எடுக்க தான்..
***********************************
கவிதை:
நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..
***********************************
தத்துவம்:
தூசி பட்ட கண்களும் காதல் பட்ட இதயமும்
எப்போதுமே கலங்கி கொண்டே தான் இருக்கும்..
***********************************
கண்டதும் கேட்டதும் (06/07/09)
Subscribe to:
Post Comments (Atom)
58 பின்னூட்டங்கள்:
அருமை.
\\இந்த பிழைப்புக்கு....????\\
ஏய்..
ராங் நம்பர்ன்னா ராங் நம்பர்ன்னு சொல்லு, அத விட்டுட்டு என்ன ராங்கா பேசுறது ராஸ்கல்...!
\\54 பாலோயர்கள்..\\
என்ன பாவம் பண்ணுனாங்களோ..!
\\மேலும் நேற்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் இறுதி போட்டியில் ரோஜர் பெடரர் கோப்பையை கைப்பற்றினார்..இது அவருக்கு 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.அவர் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்..\\
காலையில தினமலர் படிச்சயா..?
Anbu Said...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டக்ளஸ் அண்னா...!
Anbu said..
\\54 பாலோயர்கள்..\\
என்ன பாவம் பண்ணுனாங்களோ..!\\
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா...!
This post has been Removed by Author...
\\பாடலை ஸ்கிரினில் பார்க்க ஆவலாக உள்ளது...\\
அதுக்குள்ள மாத்திட்டயா..?
ஸ்கிரீன்பிளேன்ல்ல இருந்தது.
சன் சேனலுக்கு வேற பிழைப்பு இப்ப இல்லை...
வாழ்த்துக்கள் அன்பு..
அனைத்தும் அருமை, வாழ்த்துகள் அன்பு
ஜோக்ஸ் சூப்பர்..
நல்ல பயணம் அன்பு, தொடர வாழ்த்துக்கள்.
தூசி பட்ட கண்களும் காதல் பட்ட இதயமும்
எப்போதுமே கலங்கி கொண்டே தான் இருக்கும்..\\
நாடோடிகள் எத்தனை முறை பார்த்தீங்க
இந்த பிழைப்புக்கு....????
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாகன்னு சொல்லி இந்த வாரம் மாசிலாமணி போட்டு எல்லோரையும் சாவடிச்சிருக்கலாம்
தத்துவம்:
தூசி பட்ட கண்களும் காதல் பட்ட இதயமும்
எப்போதுமே கலங்கி கொண்டே தான் இருக்கும்..
நான் சுவாசிக்கும் காற்றாய் நீ இருக்கிறாய்ன்னு சொல்லி இருப்பீங்க. அதான் தூசியோட வந்து கண்ண கசக்க வச்சிட்டாங்க
எல்லாமே யோசிக்க சிரிக்க வைத்தது
தொடர்ந்து கலக்குங்க
நல்லாதா இருந்தா உங்க பதிவு நிச்சயம் ரசிக்கப்படும், அதுக்காக தேங்க்ஸ் சொல்லு பிரிச்சிடாதீங்க தல
mm.nica..kalakareenga anbu
பதிவுலகில் எழுத ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகின்றன..இதற்குள் 56 பதிவுகள்..54 பாலோயர்கள்..இரண்டு முறை பதிவர் சந்திப்புகள்..நினைத்தாலே மனம் மகிழ்ச்சியாக உள்ளது..மேலும் என் எழுத்தையும் தொடர்ந்து ரசிக்கும் அந்த 54 பாலோயர்க்கும்,இனிமேல் பாலோயாராக சேர இருக்கும் நண்பர்களுக்கும் என் மனமானர்ந்த நன்றிகள்..
///
வாழ்த்துக்கள் அன்பு!!
வெளுத்து வாங்குங்க!!
நான்
நினைக்கும்போதெல்லாம்
விக்கல்
வருமென்றால்,
அவள்
எப்போதோ
இறந்திருப்பாள்
விக்கியே..
இதுக்கு பேரு தான் கவிதை!
நீங்க எழுதியிருந்தது, செண்டன்ஸ் அண்ணே!
வால்பையன் said...
நான்
நினைக்கும்போதெல்லாம்
விக்கல்
வருமென்றால்,
அவள்
எப்போதோ
இறந்திருப்பாள்
விக்கியே..
இதுக்கு பேரு தான் கவிதை!
நீங்க எழுதியிருந்தது, செண்டன்ஸ் அண்ணே!
ஹா ஹா ஹா. இதுக்கு பேருதான் வால்தனம்ங்க்றது.
கவிதை:
நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..////
நச் கவிதை... பா
அருமை,வாழ்த்துகள்.
//நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே.. //
கவி மதி அன்பு மதி
கலவை அருமை அன்பு ,..
எல்லாம் கலந்த கலவை நல்ல இருந்தது.
\\எவனோ ஒருவன் said...
அருமை.\\
நன்றி தல..
\\ டக்ளஸ்....... said...
\\இந்த பிழைப்புக்கு....????\\
ஏய்..
ராங் நம்பர்ன்னா ராங் நம்பர்ன்னு சொல்லு, அத விட்டுட்டு என்ன ராங்கா பேசுறது ராஸ்கல்...!\\
சும்மாதான் தல..
\\டக்ளஸ்....... said...
\\54 பாலோயர்கள்..\\
என்ன பாவம் பண்ணுனாங்களோ..!\\
என்னை சொல்லி குற்றமில்லை..உன்னை சொல்லி குற்றமில்லை..
\\ டக்ளஸ்....... said...
\\மேலும் நேற்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் இறுதி போட்டியில் ரோஜர் பெடரர் கோப்பையை கைப்பற்றினார்..இது அவருக்கு 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.அவர் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்..\\
காலையில தினமலர் படிச்சயா..?\\
இல்லையே தல..
\\டக்ளஸ்....... said...
Anbu said..
\\54 பாலோயர்கள்..\\
என்ன பாவம் பண்ணுனாங்களோ..!\\
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா...! \\\
இதெல்லாம் ரொம்ப ஓவரு தல..
\\டக்ளஸ்....... said...
\\பாடலை ஸ்கிரினில் பார்க்க ஆவலாக உள்ளது...\\
அதுக்குள்ள மாத்திட்டயா..?
ஸ்கிரீன்பிளேன்ல்ல இருந்தது.\\
நாங்க எல்லாம் யாரு..
Congratulations brother
\\ அமுதா கிருஷ்ணா said...
சன் சேனலுக்கு வேற பிழைப்பு இப்ப இல்லை...\\
ம்ம்ம் இருக்கட்டும்..முதல் வருகைக்கு நன்றி அக்கா
\\Cable Sankar said...
வாழ்த்துக்கள் அன்பு..\\
நன்றி அண்ணா..
\\ஆ.ஞானசேகரன் said...
அனைத்தும் அருமை, வாழ்த்துகள் அன்பு\\
நன்றி அண்ணா..
\\ பீர் | Peer said...
நல்ல பயணம் அன்பு, தொடர வாழ்த்துக்கள்.\\
வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா..
\\நட்புடன் ஜமால் said...
தூசி பட்ட கண்களும் காதல் பட்ட இதயமும்
எப்போதுமே கலங்கி கொண்டே தான் இருக்கும்..\\
நாடோடிகள் எத்தனை முறை பார்த்தீங்க\\
இரண்டு முறை அண்ணா..இன்னும் ஒரு முறை பார்க்கலாம் என நினைக்கிறேன்.
\\S.A. நவாஸுதீன் said...
இந்த பிழைப்புக்கு....????
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாகன்னு சொல்லி இந்த வாரம் மாசிலாமணி போட்டு எல்லோரையும் சாவடிச்சிருக்கலாம்\\
பாவம் அண்ணா..நிறைய சின்னப்பிள்ளைங்க எல்லாம் டி.வி. பார்க்கும்..
\\ S.A. நவாஸுதீன் said...
தத்துவம்:
தூசி பட்ட கண்களும் காதல் பட்ட இதயமும்
எப்போதுமே கலங்கி கொண்டே தான் இருக்கும்..
நான் சுவாசிக்கும் காற்றாய் நீ இருக்கிறாய்ன்னு சொல்லி இருப்பீங்க. அதான் தூசியோட வந்து கண்ண கசக்க வச்சிட்டாங்க\\
ம்ம்ம்...சரிதான்..எப்படி கண்டுபிடிச்சீங்க..
\\அபுஅஃப்ஸர் said...
எல்லாமே யோசிக்க சிரிக்க வைத்தது
தொடர்ந்து கலக்குங்க
நல்லாதா இருந்தா உங்க பதிவு நிச்சயம் ரசிக்கப்படும், அதுக்காக தேங்க்ஸ் சொல்லு பிரிச்சிடாதீங்க தல\\
சரி தல..இனி சொல்ல மாட்டேன்..
\\இயற்கை said...
mm.nica..kalakareenga anbu\\
நன்றி அக்கா
\\தேவன் மாயம் said...
வெளுத்து வாங்குங்க!!\\
ம்ம்ம்..கலக்கிடுவோம் சார்..வாழ்த்துக்களுக்கு நன்றி சார்
\\ வால்பையன் said...
நான்
நினைக்கும்போதெல்லாம்
விக்கல்
வருமென்றால்,
அவள்
எப்போதோ
இறந்திருப்பாள்
விக்கியே..
இதுக்கு பேரு தான் கவிதை!
நீங்க எழுதியிருந்தது, செண்டன்ஸ் அண்ணே!\\
வால் நான் ரொம்ப சின்ன பையன் தானே அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க..
\\S.A. நவாஸுதீன் said...
வால்பையன் said...
நான்
நினைக்கும்போதெல்லாம்
விக்கல்
வருமென்றால்,
அவள்
எப்போதோ
இறந்திருப்பாள்
விக்கியே..
இதுக்கு பேரு தான் கவிதை!
நீங்க எழுதியிருந்தது, செண்டன்ஸ் அண்ணே!
ஹா ஹா ஹா. இதுக்கு பேருதான் வால்தனம்ங்க்றது.\\
கண்டிப்பாக அண்ணே..
\\ ஷீ-நிசி said...
கவிதை:
நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..////
நச் கவிதை... பா\\
நன்றி அண்ணா..
\\ஸ்ரீதர் said...
அருமை,வாழ்த்துகள்\\
வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா..
\\ பிரியமுடன்.........வசந்த் said...
//நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே.. //
கவி மதி அன்பு மதி\\
எனக்கு ஒரு பட்டம் கொடுத்துட்டாங்க டோய்..
\\jothi said...
கலவை அருமை அன்பு ,..\\
நன்றி அக்கா
\\அக்பர் said...
எல்லாம் கலந்த கலவை நல்ல இருந்தது.\\
நன்றி அண்ணா
\\Misha said...
Congratulations brother\\
நன்றி அக்கா
அருமையான கவிதை .... வாழ்த்துகள்
வால்பையன் said...
நான்
நினைக்கும்போதெல்லாம்
விக்கல்
வருமென்றால்,
அவள்
எப்போதோ
இறந்திருப்பாள்
விக்கியே..//
இறுதியில் ஆச்சரியக் குறியை விட்டதற்கு கண்டிக்கிறேன்.:-)
அருமையான் இடுகை அன்பு.
//\\jothi said...
கலவை அருமை அன்பு ,..\\
நன்றி அக்கா//
அன்பு, பாசத்தை நல்லாதான் பொழியிறிங்க, நான் அக்கா இல்ல, அண்ணன்
அன்பு வாழ்த்துக்கள்....
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Post a Comment