இந்த அபார்ட்மெண்டிற்கு குடி வந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை..சித்ரா யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என ஆச்சர்யமாய் கவனித்தான் சரவணன்.
பிளிஸ்..இந்த விஷயம் அவருக்கு தெரிய வேண்டாம்! நான் அப்புறமா வரேன்.என எதிர்த்த வீட்டு தடியனுடன் வழிந்து விட்டு பதட்டத்துடன் உள்ளே நுழைந்தால் சித்ரா..
அடப்பாவி மூனு வருஷம் நாய் மாதிரி அலைஞ்சுதான் சித்ராவை கை பிடிச்சேன்! அடேய்..தடியா..அஞ்சே நாள்ல மடக்கிட்டியேடா...என முணுமுணுத்தவாறே ஆபிஸிற்கு கிளம்பினான் சரவணன்..
சித்ராவிடம் நான் போயிட்டு வரேன்.என வால்டர் வெற்றிவேல் ஸ்டைலில் கூறிவிட்டு வெளியே வந்த சரவணனஇ அதே தடியன் எதிர்கொண்டான்.
என்ன சார்...ஆபிஸ் கிளம்பிட்டீங்க போல!..
இல்லை..ஆடு மேய்க்க கிளம்பிட்டேன்..வாய் வரை வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு,ஆமா சார் ..நீங்க போகலை..? என அசடு வழிந்தான் சரவணன்.
பொண்டாட்டியும் குழந்தையும் ஊருக்கு போய்ட்டாங்க சார்..! தடியன் முடிப்பதற்குள்..
ஏன் சார்...செகண்டு டெலிவரியா?..
ரொம்ப குறும்பு சார்.! உங்களுக்கு..அம்மா வீட்டுக்கு போறேன்னா..உடனே அனுப்பிட்டேன் சார்..மேரேஜ்க்கு அப்புறமா இது மாதிரி கிடைக்கிற பேச்சுலர் லைப்பை மிஸ் பண்ணக்கூடாது..அதுல ஒரு திரில் இருக்கு!இன்னைக்கு புல் டே ஜாலியா..வீட்டிலேயே..என்ஜாய் பண்ணப்போறேன் சார்.. தடியன் சொல்லிசிரிக்க..
'அடப்பாவி என் தலையில இடி விழ..' என திட்டியவாறே ஆபிஸுக்கு நடையை கட்டினான் சரவணன்.
ஆபிஸில் மதியம் வரை மனது ஒட்டாமல் வேலை பார்த்த சரவணன்,,சித்ராவிற்கு போன் போட..அது ஸ்விட்ச் ஆப் எனக்கூற..சரவணனுக்கு பயம் தொற்றி கொண்டது.
சித்ரா நல்ல பொண்ணுதான்..ஆனா..அந்த தடியன் கெட்டவனாச்சே...! என டென்ஷனுடன் லீவ் எழுதி கொடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்..'என்ன சார் இன்னிக்கு சீக்கிரமே வந்தீட்டீங்க' என வாட்ச்மேன் கேட்க..
கொஞ்சம் வேலை அதுதான்..!அவசர அவசரமாய் அபார்மெண்டில் நுழைந்த சரவணனிடம்...
சார்..அம்மா வீட்டிலே இல்ல சார்! இப்பத்தான் இ.பி கார்ட்டை கொடுக்கப்போனேன் கதவைத் திறக்கலை சார்..
வெளியே போனாங்களாப்பா..?
இல்ல சார்..நான் இங்கேயே தான் இருக்கேன்! வேற யாரு வீட்டிற்காவது போயிருப்பாங்க சார்..என வாட்ச்மேன் கூற..
டேய்..அவ என் பொண்டாட்டிடா..''இப்படி சித்ரவதை பண்றையேடி சித்ரா..''என மனதில் கருவிக்கொண்டே மாடி வாசல்படியில் பறந்தான் சரவணன்..வாட்ச்மேன் கூறியது சரியே..வெகுநேரம் காலிங்பெல் அழுத்தியும் சரவணன் மிகவும் யோசித்து விட்டு எதிர்த்த வீட்டு காலிங் பெல்லை அழுத்தப்போனவன்..கதவு திறந்தே இருக்க..தயங்கியபடியே உள்ளே சென்றான்..
'போதும்.... விடுங்க....' இன்னும் எத்தனை நேரம்!..சித்ராவின் குரல் சரவணனின் நெஞ்சில் நெருப்பள்ளிப்போட்டது..
ஆக்க பொறுத்துக்கிட்டு ஆறப் பொறுக்காம இருந்தா எப்படீங்க..? பிளிஸ் எனக்காக.. அதே தடியனின் குரல் தான்..
டென்ஷன் உச்சிக்கு போக..நரம்புகள் புடைக்க கோபத்துடன் அந்த அறைக்குள் நுழைந்தான் சரவணன்..
நம்ம சித்ராவா இப்படி..? கண்களை நம்ப முடியாமல் மலைத்து நின்றான் சரவணன்..சரவணனை கண்டதும் பிரமித்துப்போனாள் சித்ரா...
ஏங்க நான் வேண்டாம் என்று தான் சொன்னேன்..ஆனா இவருதான்.....வெகுளித்தனமாய் சித்ரா கூற..
வியப்புடன் அந்த தடியன் வரைந்த ஓவியத்தை இமை கொட்டாமல் பார்த்தான் சரவணன்.
வீணையை கையில் பிடித்தபடி அந்த சரஸ்வதி தேவி போல் வரைந்திருந்தான் சித்ராவை..
இன்னும் என்ன சேர்ல உட்கார்ந்துக்கிட்டு முதல்ல எந்திரி..என்ற சரவணன் அவசர அவசரமாய் சேரில் அமர்ந்து 'பிளிஸ் சார் என்னையும் ஒரு முறை வரையுங்களேன்' குழந்தைத்தனமாய் கெஞ்ச..சித்ராவும் அந்த தடியனும் இல்லை ஓவியரும் ஒரு சேர சிரித்தனர்...
23 பின்னூட்டங்கள்:
பேசுவதற்கெல்லாம் சந்தேகப்படுபவன் பேர் புருஷனல்ல,
புண்ணாக்கு!
நல்லா இருக்கு
அசத்தீட்டீங்க டம்பிரீ...!
ஆமா, யாரந்த தடியனான் ஒவியன்..?
\\வால்பையன் said...
பேசுவதற்கெல்லாம் சந்தேகப்படுபவன் பேர் புருஷனல்ல,
புண்ணாக்கு!\\
ஒரு சிலர் அப்படித்தான் உள்ளனர் வால் என்ன செய்ய..
\\Rajeswari said...
நல்லா இருக்கு\\
நன்றி அக்கா..
\\ டக்ளஸ்....... said...
அசத்தீட்டீங்க டம்பிரீ...!
ஆமா, யாரந்த தடியனான் ஒவியன்..\\
நன்றி தல...
அந்த தடியன் வேற யாருமில்ல..
நம்ம..
பேசுவதற்கெல்லாம் சந்தேகப்படுபவன் பேர் புருஷனல்ல,
புண்ணாக்கு!///
உண்மைதான்!!
\ டக்ளஸ்....... said...
அசத்தீட்டீங்க டம்பிரீ...!
ஆமா, யாரந்த தடியனான் ஒவியன்..\\
நன்றி தல...
அந்த தடியன் வேற யாருமில்ல..
நம்ம....//
நம்ம?????
அன்பா... அப்படி... யோசித்தது...!!
புண்ணாக்கு கமெண்ட் சூப்பர்.
வால்பையா.
அருமையான கதை அன்பு
நல்லாயிருக்கு பாஸ்..
//என்னையும் ஒரு முறை வரையுங்களேன்' குழந்தைத்தனமாய் கெஞ்ச..சித்ராவும் அந்த தடியனும் இல்லை ஓவியரும் ஒரு சேர சிரித்தனர்...//
அருமை... பட்டையை கிளப்புங்க தம்பி
கதை என்ற முறையில் நல்லா இருக்கு என்றாலும் வால் சொன்னதை வழிமொழிகிறேன்
வால் கருத்தில் இரண்டு உண்மைகள் இருக்கிறது.
1. பேசுவதற்கெல்லாம் சந்தேகப்படுபவன் புண்ணாக்கு தான்
2. நீங்கள் உங்கள் கதையில் அந்த கணவர் சந்தேப்படுவதற்கான அழுத்தமான காரணத்தையோ காட்சியோ நுழைக்கவில்லை. என்வே ஏன் இவன் தேவையில்லாமல் சந்தேகப்படுகிறான் என்ற எண்ணம் வாசகருக்கு தோன்றுகிறது.
உண்மையில் மற்றபடி சிறந்த கதை அமைப்பு மற்றும் கதையோட்டம்.
அன்பின் அன்பு
கதை நல்லா இருக்கு - சந்தேகப்படுவதற்கு - இன்னும் காரணங்கள் தேவை - இருப்பினும் கதை அமைப்பு பாராட்டத் தக்கது
நல்வாழ்த்துகள்
நல்லா இருக்கு
Good One.
என்னை உங்கள் நட்பு லிஸ்ட்டில் சேர்த்து, எனக்கு லின்க் கொடுத்தமைக்கு நன்றி!
தம்பி, நடை அருமையாய் இருக்கு.இதை நீ ஏதாவது பத்திரிக்கைக்கு அனுப்பியிருக்கணும் .ஏன் இடுகையாப் போட்ட?
என் பிளாக்கில் விருது காத்திருக்கிறது
http://iyarkai09.blogspot.com/
அன்பு
கதையோட்டம் தொடர்வது கதை அமைப்பினுள் இயல்பாய அமைந்துள்ளது. ஒன்றின் நிழலாய் ஒன்று இருப்பது போல் கதை அமைந்திருப்பது நன்று
முடிவு பாராட்டத்தக்கது
முன்னோட்டம் தான் சற்றே உதைக்கிறது - கதைக்கருவிற்கு மாற்றாக ....
எழுதும் திறமையினைத் தொடர்க
Post a Comment