என் உயிர் நண்பனுக்காக....


ஓ... தோழனே! தோழியே!!

காலையில் மலருவது
மல்லிகை என்றால்...

உன்னைக் கண்டதும்
மலர்வது முகமா
இல்லை என் மனமா!

புது மலருக்குப் பூச்சூட்டி
புத்தம் புது பூவினிற்கு
புடவை கட்டி...

பனித்துளியை நீராட்டி
பூங்காற்றை அனுப்புவேன்
உனக்கு தூது சொல்ல...

சாதி, மதம், இனம், மொழி
இவற்றை எல்லாம் கடந்து வரும்
காற்றைப் போல நம் தூய நட்பையும்
சுவாசிப்போம்!!

காற்று வீச மறந்தாலும்;
இலைகள் அசைய மறந்தாலும்;
கடல் அலையை மறந்தாலும்;
பறவை பறக்க மறந்தாலும்;
மான் துள்ளி ஓட மறந்தாலும்;
குயில் கூவ மறந்தாலும்;
மயில்தோகை விரிக்க மறந்தாலும்;
நான் ஒரு நாளும் உனை மறவேன்!!!!!!!!!!!

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

22 பின்னூட்டங்கள்:

லோகு said...

கலக்குற நண்பா...
வாழ்த்துக்கள்..

வால்பையன் said...

ஆகஸ்ட் ரெண்டு ஞாயிற்றுகிழமை என்பதான் அட்வான்ஸாகவா!

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

Unknown said...

அன்பு கவிதை அழகா நச்சுன்னு இருக்கு

//சாதி, மதம், இனம், மொழி
இவற்றை எல்லாம் கடந்து வரும்
காற்றைப் போல நம் தூய நட்பையும்
சுவாசிப்போம்!!//

எங்கயோ பிட் அடிச்சாமாதிரி தெரியுது,,,,,

Raju said...

பேசாம, நீங்க தமிழ்ப் படத்துக்கு பாட்டெழுதப் போலாம் கவிஞர் ஸார்.

cheena (சீனா) said...

அன்பின் அன்பு - டக்ளச் சொன்னதக் கேட்டியா

நலலாவே எழுதறே -

படமும் சூப்பர் - கவிதையும் சூப்பர்

புஷ்பம் - வட மொழியினைத் தவிர்க்க முயற்சி செய்

புத்தம் புது பூவினிற்கு ப்டவை கட்டி

நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்

Suresh Kumar said...

கவிதை நல்லா இருக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .

ஆமா நண்பர்கள் தினம் ஆகஸ்ட் 12 இல்லையா என்னவோ நல்ல நண்பர்களுக்கு எதுக்கு தனியா ஒரு நாள் எல்லா நாளும் நண்பர்கள் தினம் தான்

Suresh Kumar said...

வால்பையன் said...

ஆகஸ்ட் ரெண்டு ஞாயிற்றுகிழமை என்பதான் அட்வான்ஸாகவா!

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!///////////////////

ஒ ஒ ........... ஆகஸ்ட் இரண்டா நண்பர்கள் தினம் . சரி போட்டு நமக்கு காதலர் தினம் மட்டும் தான் தெரியும் . அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

காற்று வீச மறந்தாலும்;
இலைகள் அசைய மறந்தாலும்;
கடல் அலையை மறந்தாலும்;
பறவை பறக்க மறந்தாலும்;
மான் துள்ளி ஓட மறந்தாலும்;
குயில் கூவ மறந்தாலும்;
மயில்தோகை விரிக்க மறந்தாலும்;
நான் ஒரு நாளும் உனை மறவேன்!///

குளுப்பாட்டிட்டியே
அன்பு!!

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்... said...
பேசாம, நீங்க தமிழ்ப் படத்துக்கு பாட்டெழுதப் போலாம் கவிஞர் ஸார்.*/

வேண்டாம்டா... டக்கு....
அப்புறம் நடிக்கவும் வந்து படுத்தி எடுத்திருவாங்க...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாருக்கு தம்பி.உனக்கும் நண்பர்கள் தின அட்வான்ஸ் வாழ்த்துகள்.

shortfilmindia.com said...

நண்ப்ர்கள் தின அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

கேபிள் சங்கர்

சொல்லரசன் said...

நான் ஒரு நாளும் உனை மறவேன்!

வழிப்போக்கன் said...

ரசிக்கும் படியாக இருந்தது...
கலக்கல்...

sakthi said...

அருமை அன்பு

Unknown said...

நண்பர் தின வாழ்த்துகள்!

ஆ.ஞானசேகரன் said...

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...


கவிதையும் அருமை அன்பு

S.A. நவாஸுதீன் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும். நன்றி அன்பு

கார்த்திகைப் பாண்டியன் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துககள்..;-))))

Anbu said...

நன்றி மச்சான்...

நன்றி வால்..

நன்றி வசந்த் அண்ணா..

நன்றி தல..

நன்றி சார்..

நன்றி சுரேஷ் அண்ணா...

நன்றி தேவா சார்...

நன்றி நைனா அவர்களே..

நன்றி ஸ்ரீ அண்ணா

நன்றி சொல்லரசன் அண்ணா

நன்றி வழிப்போக்கன் சார்..

நன்றி சக்தி அக்கா..

நன்றி ஜமால் அண்ணா..

நன்றி ஞான்சேகரன் அண்ணா...

நன்றி S.A. நவாஸுதீன் அண்ணா...

நன்றி கார்த்தி அண்ணா...

துபாய் ராஜா said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

அப்துல்மாலிக் said...

என்றென்றும் இந்த நட்பு தித்திக்கட்டும்

என்னுடைய வாழ்த்தையும் இங்கே பதிவு செய்கிறேன்

தாராபுரத்தான் said...

நட்புடன் !அப்பன் !