கண்டதும் கேட்டதும்..(21-07-09)



நமது பதிவுலகில் மூத்த பதிவரான சீனா ஐயா அவர்கள் தம் இரண்டு பெண் குழந்தைகளையும் மற்றும் பேரன் பேத்திகளையும் பார்க்க 45 நாள் விடுப்பில் இலண்டன் சென்று உள்ளாராம்...அவரது இந்த சுற்றுலா பயணம் உல்லாசமாக அமைய எனது வாழ்த்துக்கள்..வரும்பொழுது எனக்கு ஒரு பரிசு பொருள் வாங்கிவதாக கூறியுள்ளார்..பரிசினைக்காண ஆவலாக உள்ளேன்..
*******************************************
பதிவுலகத்தை விட்டு சென்ற பிரபல பதிவர் சென்றதுக்கு காரணம் பிரச்சனை எதுவும் இல்லையாம்.. தொழிலில் கவனம் செலுத்தவே எழுதுவதை விட்டாராம். தொழில் சரியான பின் காதல் கவிதைகள் மீண்டும் பொழிவார் என தெரிகிறது..(எனக்கு இப்பவே கண்ணை கெட்டது)
*******************************************
பதிவுலக மங்கை இயற்கை அக்கா அவர்கள் எனக்கு ஒரு பிளாக்கர் விருது கொடுத்துள்ளார்கள்..அவர்களுக்கு என் நன்றிகள்..மேலும் என்னோடு அனைவ்ருக்கும் என் வாழ்த்துக்கள்.
*******************************************
கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பொழுது போகாமல் வீட்டினில் தொலைக்காட்சியினை மேய்ந்து கொண்டிருக்கையில் சன் மீயூசிக் சேனலை பார்த்தேன்..எனக்கு மிகவும் பிடித்த பாடல் குளிர் 100டிகிரி படத்திலிருந்து பூம் பூம் என்று ஆரம்பிக்கிற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.. பென்னிதயால்,அபிஷேக்,மற்றும் சிலர் படித்த பாடல்.பாடலில் ஒரு வரியில் 'மானாட மயிலாட' என்கிறஒரு வரி வரும்..அதை மட்டும் சன் மியூசிக் கணிணி வல்லுநர்கள் மீயூட் செய்துவிட்டனர்..எனக்கு அவர்களது கோழைத்தனத்தை பார்க்கும் போது ஒரே சிரிப்பு..
*******************************************
மேலும் ஒரு அருமையான நிகழ்ச்சினை காண நேர்ந்தது..அது விஜய் டி.வி.யின் 'நீயா நானா' நிகழ்ச்சி. 'காதலில் இருப்பவர்கள் காதலில் இருந்தவர்கள்' இரு தரப்பினர்களுக்கும் இடையான உரையாடல்..மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது..வெகுவிரைவில் இந்த நிகழ்ச்சி மாதிரி ஒரு நிகழ்ச்சி சன்.டி.வி.யில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கிறேன்..அவ்வ்வ்வ்வ்வ்
*******************************************
கவிதை:-

நீ நடக்கையில் உன்

நிழல் உன்னுடன் வருகிறது..

நான் நடக்கையில் மட்டும் என்னுடன்

இரண்டு நிழல்கள் வருவதாக உணர்கிறேன்...

நாம் இருவரும் நடக்கையில்

மூன்று நிழல்கள் நம்மை தொடர்கின்றன்..

அப்படியானால்

மூன்றாவது நிழல்...

நம் குழந்தையா..!!!

(டிஸ்கி:-இது என்னுடைய முதல் காதல் கவிதை..அதனால் நீங்க நல்லா இருக்கு என்று சொல்லியே ஆக வேண்டும்..இல்லைன்னா இது போல பல மொக்கைக்கவிதைகள் காத்து உள்ளன...)
*******************************************
நகைச்சுவை:-

மாமியார்: எட்டு வருஷம் கழித்து குழந்தை பெத்துருக்க..அதுவும் பொம்பளைப்பிள்ளை..

மருமகள்: சும்மா கத்தாதீங்க..உங்க பிள்ளையை நம்பி இருந்தா இதுவும் பிறந்திருக்காது..
*******************************************
தத்துவம்:-
காதல் என்பது அழகான ஓவியம் போல..

வரையத்தெரிந்தவன் புத்திசாலி..

வரையத்தெரியாதவன் அதிர்ஷ்டசாலி..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

20 பின்னூட்டங்கள்:

cheena (சீனா) said...

டேய் வர வர உனக்குக் குசும்பு அதிகமாகுது - ஆமா - நீ யாரோட நடக்கறே - மூணவது நிழல் ரெடியாடுச்சா

ம்ம்ம் - பசங்க ரொம்ப வேகமா முன்னெறாங்கப்பா

நல்லாருங்கடா

நகைச்சுவை வேற - அசைவம் மான் கறி துண்ணியா

Raju said...

நடத்துங்கண்ணோவ்,,,,!

நட்புடன் ஜமால் said...

கவிதை நல்லாவேயில்லை



(இப்படி சொன்னாத்தான் இன்னும் நிறைய நல்ல கவிதை சொல்லுவே )



:) :) :)

புருனோ Bruno said...

//தொழில் சரியான பின் காதல் கவிதைகள் மீண்டும் பொழிவார் என தெரிகிறது.//

குட் !

Misha said...

//மேலும் ஒரு அருமையான நிகழ்ச்சினை காண நேர்ந்தது..அது விஜய் டி.வி.யின் 'நீயா நானா' நிகழ்ச்சி. 'காதலில் இருப்பவர்கள் காதலில் இருந்தவர்கள்' இரு தரப்பினர்களுக்கும் இடையான உரையாடல்..மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது..//

I too saw the show...
Gopinath's hosting fantastic...

//வெகுவிரைவில் இந்த நிகழ்ச்சி மாதிரி ஒரு நிகழ்ச்சி சன்.டி.வி.யில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கிறேன்..//

I too have the same thought...

Cable சங்கர் said...

ஏ ஜோக்கெல்லாம் போட ஆரம்பிச்சிட்ட.. சரி.. ரைட்டு.. அன்பு வயசுக்கு வந்திட்டான்..:)

Suresh Kumar said...

ஏ ஜோக்கெல்லாம் போட ஆரம்பிச்சிட்ட.. சரி.. ரைட்டு.. அன்பு வயசுக்கு வந்திட்டான்..:)//////////////////////////

எப்பவும் சின்ன பிள்ளையாவே இருக்க முடியுமா என்ன ?

Subankan said...

//ஏ ஜோக்கெல்லாம் போட ஆரம்பிச்சிட்ட.. சரி.. ரைட்டு.. அன்பு வயசுக்கு வந்திட்டான்..:)//

அதோட நேற்றய பதிவை மறந்துட்டீங்களே!

வால்பையன் said...

சீனா ஐயா லண்டனுக்கு போயிட்டாரா!?
எங்கிட்ட சொல்லவேயில்ல!

******

பதிவை விட்டு ஓய்வு எடுப்பவர்கள் பெரும்பாலும் ஆணி அதிகம் என்பதால் தான் செல்கிறார்கள்!

******

விருதுக்கு வாழ்த்துக்கள்!

*******

சன்டீவீயில் காசு வாங்காமல் விளம்பரம் போடுவதில்லை!

*******

விஜய்டீவியில் காப்பி அடிப்பது ஒன்றும் சன் டீவிக்கு புதிதல்ல!

*******

மூன்றாவது நிழல் குழந்தையல்ல!
உன் முன்னால் காதலி!

*******

நகைசுவை!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

******

தத்துவம்!

முடியல!
நீ புத்திசாலியா! அதிர்ஷ்டசாலியா?

********

சொல்லரசன் said...

காதல்தோல்வியால் அரசங்க கடை எண் 2060லே குடியிருப்பதால் பதிவு எழுதமுடியவில்லை என‌ கேள்விபட்டேன் உண்மையா?

லோகு said...

//சொல்லரசன் said...

காதல்தோல்வியால் அரசங்க கடை எண் 2060லே குடியிருப்பதால் பதிவு எழுதமுடியவில்லை என‌ கேள்விபட்டேன் உண்மையா?//

அதில் ஒரு தவறு நடந்து விட்டது.. கடை எண் 2060 இல்லை.. கடை எண் 2000... அன்று தெளிவாக பார்த்ததில் சரியாக தெரியவில்லை..

Beski said...

நல்லாருக்குப்பா.

Anbu said...

நன்றி சீனா ஐயா..குசும்பு கொஞ்சம் தாங்க..

நன்றி டக்லஸ் தல..

நன்றி ஜமால் அண்ணா..நல்லா இருக்குன்னு சொல்ல வர்ரீங்க தானா..

நன்றி புரூனோ..அவர் எழுதுவதால் எல்லோருக்குமே மக்கிழ்ச்சி தான்..

நன்றி மிஸா அக்கா..

நன்றி சங்கர் அண்ணா...நான் வயதுக்கு வந்து பல நாள் ஆகிவிட்டது அண்ணா..

நன்றி சுரேஷ் அண்ணா..

நன்றி சுபாங்கன்,..

நன்றி வால்...

நன்றி சொல்லரசன் அண்ணா..

நன்றி லோகு மச்சான்...

சிநேகிதன் அக்பர் said...

கவிதை நல்லாயிருக்கு.

நல்லா எழுதுறீங்க.

கார்த்திகைப் பாண்டியன் said...

கலவை நல்லா இருக்கு அன்பு.. ஆனா கமென்ட் மாடரேஷன் எதுக்காக?

Anbu said...

நன்றி அக்பர் அண்ணா

நன்றி கார்த்திகைப்பாண்டியன் அண்ணா..

Unknown said...

சன் காப்பி ரெடிங்கன்னே../

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

மூணாவது நிழலா? சரிதான்.ஜோக்கு லேசா A வாடை அடிக்குதே தம்பி.

Anonymous said...

//மானாட மயிலாட' என்கிறஒரு வரி வரும்..அதை மட்டும் சன் மியூசிக் கணிணி வல்லுநர்கள் மீயூட் செய்துவிட்டனர்//

நல்லா கவனிக்கிறீங்க

அத்திரி said...

//ஏ ஜோக்கெல்லாம் போட ஆரம்பிச்சிட்ட.. சரி.. ரைட்டு.. அன்பு வயசுக்கு வந்திட்டான்..:)//

ரிப்பீட்டு.....................