கண்டதும் கேட்டதும்..(27-07-09)


முதலில் சந்தோஷமான விஷயம் ஒன்று..நமது பாசக்காரப் பதிவர் சீனா ஐயாவின் மகள் பிரியா மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம்..தாயும் சேயும் நலமாக உள்ளார்கள்..அவருக்கு அனைத்து வலைப் பதிவர்சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..நீங்களும் அவருக்கு உங்கள் வாழ்த்துக்களைத்தெரிவித்து அவரை மகிழ்விக்கவும்!!

****************************
பதிவுலகில் போன வாரம் விருதுகள் வாரம் என்று சொல்லலாம்..எனக்கு இயற்கை அக்கா மற்றும் வியா,அவர்கள் இன்டிரஸ்டிங் அவார்டு கொடுத்தார்கள்..இந்த வாரம் விஜயின் பரம எதிரியான மன்னிக்கவும் ரசிகனான பிரியமுடன் வசந்த் அவர்கள் ஒரு விருதினை வழங்கியுள்ளார்..அவருக்கு என் நன்றிகள்..மேலும் என்னோடு விருதினை வாங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..
****************************
நேற்று சன்டிவியில் ஆயிரத்தில் ஒருவன், பாடல் வெளியீட்டு விழா ஒளிபரப்பினது.. அதில் நடித்த நடிகை ஆண்டிரியா பாடிய பாடல் என்னை மெய்மறக்க செய்தது...அதே போல் தனுஷ் ஐஸ்வர்யா பாடிய பாடலும்,விஜய் ஜேசுதாஸ் மற்றும் நித்திய ஸ்ரீ மகாதேவன் ஆகியோர் பாடிய பாடலும் மிகவும் அருமையாக இருந்தது..
****************************
நிகழ்ச்சியின் இடையே வந்த ஏர்டெல் கம்பெனியின் விளம்பரம் ஒன்று என்னை மிகவும் ரசிக்க வைத்தது..ஒரு சிறு குழந்தை காகிதத்தில் கப்பல் செய்து தண்ணீரில் விடுகிறாள்..தண்ணீருடன் கப்பல் நன்றாக போய் கொண்டிருக்கிறது..தீடீரென மழை பொழிவதால் மழையில் காகிதக்கப்பல் நனையாமல் இருக்க தனது கை வைத்து கப்பலை மறைக்கிறாள்...சிறிது நேரத்தில் தன் இரண்டு கை மட்டுமே இருந்த இடத்தில் இன்னும் சிலர் வந்து கப்பலின் மீது கை வைத்து பாதுகாப்பாக கொண்டு செல்கின்றனர்..இவை அனைத்தும் வெறும் 45 வினாடிகளில்...அருமை..(மிகப்பெரிய நடிகர்களே தயவு செய்து அந்த சிறு குழந்தையிடம் நடிப்பினை கற்றுக்கொள்ளுங்கள்...)
****************************
கவிதை:-

எனது அறையின் தினசரி காலண்டர் கூட
கேலி பேசுகிறது என்னை..
முதல் நாள் உன்னைப் பார்த்திருந்தால்
அந்த தேதியை மெதுவாக கிழிக்கின்றேனாம்...
பார்க்கவில்லையெனில்
பிய்த்து கசக்கி எறிகிறேனாம்...
****************************
தத்துவம்:-

லவ் என்று சொன்னாலும் காதல் என்று சொன்னாலும்
உதடுகள் ஒட்டாது..

பிக்-அப்,டிராப்,எஸ்கேப்,என்று சொன்னால் மட்டுமே
உதடுகள் ஒட்டும்..

கலைஞர் இல்லைங்கோ இன்றைய இளைஞர்..
****************************
பொன்மொழி:-

எத்தனை துன்பங்கள் வந்தாலும்

எத்தனை தடைகள் வந்தாலும்

எனக்கு கவலையில்லை..

ஏனெனில், நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...

1000 முறை தோற்றவன்..

எடிசன்..
****************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

37 பின்னூட்டங்கள்:

ப்ரியமுடன் வசந்த் said...

//லவ் என்று சொன்னாலும் காதல் என்று சொன்னாலும்
உதடுகள் ஒட்டாது..

பிக்-அப்,டிராப்,எஸ்கேப்,என்று சொன்னால் மட்டுமே
உதடுகள் ஒட்டும்..

கலைஞர் இல்லைங்கோ இன்றைய இளைஞர்..//

நல்லாருக்குடா....

வாழ்த்துக்கள்....

லோகு said...

அவார்டு மேல அவார்டா வாங்கி குவிக்கற போல.. கலக்கு மாப்ள..

//லவ் என்று சொன்னாலும் காதல் என்று சொன்னாலும்
உதடுகள் ஒட்டாது..

பிக்-அப்,டிராப்,எஸ்கேப்,என்று சொன்னால் மட்டுமே
உதடுகள் ஒட்டும்..

கலைஞர் இல்லைங்கோ இன்றைய இளைஞர்..//

செருப்பு ன்னு சொன்ன கூடத்தான் உதடுகள் ஓட்டும்.. அதுக்கு என்ன செய்ய..

வால்பையன் said...

எனக்கு அந்த போட்டோவுல இருக்குற பொம்மை வேணும்!

Anbu said...

\\\பிரியமுடன்.........வசந்த் said...

//லவ் என்று சொன்னாலும் காதல் என்று சொன்னாலும்
உதடுகள் ஒட்டாது..

பிக்-அப்,டிராப்,எஸ்கேப்,என்று சொன்னால் மட்டுமே
உதடுகள் ஒட்டும்..

கலைஞர் இல்லைங்கோ இன்றைய இளைஞர்..//

நல்லாருக்குடா....

வாழ்த்துக்கள்....\\\


நன்றி அண்ணா..

Anbu said...

\\\ லோகு said...

அவார்டு மேல அவார்டா வாங்கி குவிக்கற போல.. கலக்கு மாப்ள..

//லவ் என்று சொன்னாலும் காதல் என்று சொன்னாலும்
உதடுகள் ஒட்டாது..

பிக்-அப்,டிராப்,எஸ்கேப்,என்று சொன்னால் மட்டுமே
உதடுகள் ஒட்டும்..

கலைஞர் இல்லைங்கோ இன்றைய இளைஞர்..//

செருப்பு ன்னு சொன்ன கூடத்தான் உதடுகள் ஓட்டும்.. அதுக்கு என்ன செய்ய..\\\


இன்னும் செருப்பு வரைக்கும் போகலை மச்சான்..

Anbu said...

\\\வால்பையன் said...

எனக்கு அந்த போட்டோவுல இருக்குற பொம்மை வேணும்!\\\

எதுக்கு வர்ஷா கூட விளையாடவா...

நட்புடன் ஜமால் said...

சீனா ஐயாவிற்கும் அவர் குடம்பத்திற்கும் வாழ்த்துகள்.

விருதகளுக்கு(ம்) வாழ்த்துகள்!.

தத்துவும் பொன்மொழியாக இருக்கின்றது

பொன்மொழியில் நல்ல தத்துவம் இருக்கின்றது.

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

வாழ்த்துகளுக்கு நன்றி

பகிர்வினிற்கும் நன்றி

விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துகள்

ஏர்டெல் விளம்பரம் உண்மையிலேயே ரசிக்கத்தக்கது தானாம்

தினமும் காலண்டரை - தேதியை மெதுவாக ரசித்து அனுபவித்துக் கிழிக்க நல்வாழ்த்துகள்

சும்மா பிகரோட பேசிட்டு இருந்தா உதடுகள் ஒட்டாது - நச்சுன்னு ஒரு கிஸ் அடிச்சாதான் உதடுகள் கூட ஒட்டும்

சொன்னது எகெய்ன் கலைஞர் இல்ல - ஒரு வேலையத்த இளைஞர் ( நானில்ல நானில்ல )

1000 முறை தோற்றாலும் 1001வது முறையாக முயலுக

நல்வாழ்த்துகள்

ஜோசப் பால்ராஜ் said...

உங்களுக்கு இன்ட்ரெஸ்டிங் ப்ளாக்கர் அவார்ட் குடுத்தது பொறுத்தமானது தம்பி. நல்லாருக்கு எல்லாமே.

துபாய் ராஜா said...

விருதிற்கேற்ற ஆள் தான்.

வாழ்த்துக்கள்.

Suresh said...

Kavithai sema super

S.A. நவாஸுதீன் said...

சீனா அய்யாவுக்கு வாழ்த்துக்கள்.

காலண்டர் கவிதை பிச்சி எடுத்துட்டீங்க போங்க

பலபல விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

பொன்மொழி - சூப்பர்

தத்துவம் - சீனா அய்யா சொன்னதை வழிமொழிகிறேன்

லோகு said...

//எனது அறையின் தினசரி காலண்டர் கூட
கேலி பேசுகிறது என்னை..
முதல் நாள் உன்னைப் பார்த்திருந்தால்
அந்த தேதியை மெதுவாக கிழிக்கின்றேனாம்...
பார்க்கவில்லையெனில்
பிய்த்து கசக்கி எறிகிறேனாம்...//

எதிர்கவுஜ:
டாஸ்மாக் பாரின் கவர்ச்சி போஸ்டர் கூட
கேலி பேசுகிறது என்னை..
வாங்கி கொடுக்க நீ இருந்தால்
ஒரு புல்லையே மெதுவாக குடிக்கிறேனாம்..
நீ இல்லையென்றால்
ஒரே கட்டிங்க் அடித்து விட்டு கிளம்புகிறேனாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

சீனா அய்யாவுக்கு வாழ்த்துக்கள்... மற்றபடி கலக்கல் காக்டெயில்..

ஆதவா said...

அந்த ஏர்டெல் விளம்பரத்தை நானும் பார்த்தேன்... பொதுவாகவே (ஏர்டெல் ) விளம்பரங்கள் நன்றாக இருக்கும்...!!!

உதடு ஒட்டும் வரிகள் ... சிரிப்பு!!!

தொடர்க அன்பு

Suresh Kumar said...

தத்துவம்:-

லவ் என்று சொன்னாலும் காதல் என்று சொன்னாலும்
உதடுகள் ஒட்டாது..

பிக்-அப்,டிராப்,எஸ்கேப்,என்று சொன்னால் மட்டுமே
உதடுகள் ஒட்டும்..

கலைஞர் இல்லைங்கோ இன்றைய இளைஞர்../////////////////////


தத்துவம் சூப்பர்

Suresh Kumar said...

தாத்தா சீனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

விருதுகள் வாங்கிய தம்பி அன்புக்கு வாழ்த்துக்கள் ...........

அன்பு கண்டதும் கேட்டதும் கலக்கலா இருக்கிறது

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா இருக்குப்பா ..

Beski said...

//இடையே வந்த ஏர்டெல் கம்பெனியின் விளம்பரம் ஒன்று என்னை மிகவும் ரசிக்க வைத்தது//
இந்த மாதிரி குரூப் 5 விளம்பரங்கள் எல்லாமே நல்லாயிருக்கு.
---
/எனது அறையின் தினசரி காலண்டர் கூட
கேலி பேசுகிறது என்னை..
முதல் நாள் உன்னைப் பார்த்திருந்தால்
அந்த தேதியை மெதுவாக கிழிக்கின்றேனாம்...
பார்க்கவில்லையெனில்
பிய்த்து கசக்கி எறிகிறேனாம்...//
உன் தங்கயைப் பார்த்திருந்தால்
கிழிக்கவே மறந்து விடுகிறேனாம்.
---
//பிக்-அப்,டிராப்,எஸ்கேப்,என்று சொன்னால் மட்டுமே
உதடுகள் ஒட்டும்..//
லாக்கப் என்று சொன்னால் கூட உதடுகள் ஒட்டும்.
---
//ஏனெனில், நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...
1000 முறை தோற்றவன்..
எடிசன்..//
எங்கயோ படிச்ச ஞாபகம்...
பல ஆயிரம் தடவை செய்த சோதனைகள் தோற்ற பின் ஒருவர் கேட்டாராம்... (ஒரு 2000 நு வச்சுக்குங்களேன்)
‘நீங்க பண்ண இந்த 2000 சோதனைகள் வேஸ்ட்தான?’
அத்ற்கு எடிசன் சொன்னாராம்...
‘வேஸ்ட் அல்ல, எனக்குப் பின்னாடி வர்றவங்க இதையெல்லாம் பண்ண வேண்டிய அவசியம் இருக்காது’ன்னு.
---
கண்டதும் கேட்டதும் மொத்தத்தில் அருமை.

Suresh said...

Kavithai sema super.. i have voted.. Wishes to Mr.Cheena

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

ரெட்மகி said...

//
காதல் என்று சொன்னாலும்
உதடுகள் ஒட்டாது..

பிக்-அப்,டிராப்,எஸ்கேப்,என்று சொன்னால் மட்டுமே
உதடுகள் ஒட்டும்..

கலைஞர் இல்லைங்கோ இன்றைய இளைஞர்..//
ஜோக் பயங்கர மொக்கை .... ஹி ஹி ஹி ..Superb

Airtel விளமபரம் நன்றாக
உள்ள போதும் ஒரு சின்ன
உறுத்தல்...
Vodafone பார்த்து copy செய்கிறார்கள் ...(சின்ன பொண்ணு )

cheena (சீனா) said...

நன்றி ஜமால்

நன்றி நவாசூதீன்

நன்றி கார்த்திகைப் பாண்டியன்

நன்றி சுரேஷ்குமார்

நன்றி சுரேஷ்

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் அன்பு..தொடர்ந்து கல்லா கட்டுங்க!!

Anbu said...

நன்றி ஜமால் அண்ணா..

நன்றி சீனா சார்..

நன்றி ஜோசப் அண்ணா..

நன்றி துபாய் ராஜா அண்ணா..

நன்றி சுரேஷ் அண்ணா..

நன்றி S.A. நவாஸுதீன் அண்ணா..

நன்றி மச்சான் நல்லா இருக்கு எதிர்கவுஜ..

நன்றி கார்த்தி அண்ணா..

நன்றி ஆதவா அண்ணா..

நன்றி சுரேஷ்குமார் அண்ணா..

நன்றி குறை ஒன்றும் இல்லை அவர்களே..

நன்றி எவனோ ஒருவன்..

நன்றி ரெட்மகி அண்ணா

நன்றி தேவா சார்..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

எடிசனின் வார்த்தைகள் அருமை.

அப்துல்மாலிக் said...

எல்லாமே கலக்கல்

நல்ல முன்னேற்றம், விருதுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

கவுஜ !!! முடியல!

அப்பறம் airtel இன்னொரு விளம்பரமும் நல்லா இருக்கும், ஸ்கூலில் மிஸ் எழுத சொல்லும் வாத்தைகளை எல்லா குழந்தைகளும் சேர்த்து எழுதி தருவதை கலர் சாக் கையில் ஒட்டி இருப்பதின் மூலம் சொல்லுவாங்க...

jothi said...

pomozhi super

Cable சங்கர் said...

நைஸ்..

ஆ.ஞானசேகரன் said...

எல்லாமே அருமையா இருக்கு அன்பு

தினேஷ் said...

/லவ் என்று சொன்னாலும் காதல் என்று சொன்னாலும்
உதடுகள் ஒட்டாது..

பிக்-அப்,டிராப்,எஸ்கேப்,என்று சொன்னால் மட்டுமே
உதடுகள் ஒட்டும்..//

லொள்ளு அன்பு ..

சுந்தர் said...

நல்ல கலக்கல். தொடர வாழ்த்துக்கள் தம்பி.

சுந்தர் said...

சீனா அய்யா தாத்தா, வாக பிரமோசன் ஆனதுக்கு வாழ்த்துக்கள்,

cheena (சீனா) said...

நன்றி ஜமால் - நவாசுதீன் - கார்த்திகைப் பாண்டியன் - சுந்தர்

நல்வாழ்த்துகளுக்கு

சிங்கக்குட்டி said...

//1000 முறை தோற்றவன்//
ஏற்கனவே படித்த, தெரிந்த வரியானாலும் இந்த இடத்தில படிப்பது பொருத்தம், வாழ்த்துக்கள் நண்பா...:-))

சிநேகிதன் அக்பர் said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.