காதல் ஒழிக..!!


உன் ஒவ்வொரு SMS ம் என் நெஞ்சில் பால் வார்க்கின்றன
100 ருவா டாப் அப் போடுடா என்று வந்த ஒன்றை தவிர

**********************************

என் காதல் தேசத்தின் கடவுள் நீதான்..
ஆனால் என்னை ஏன் நாத்திகன் ஆக்கினாய்...

**********************************

காதல் தெய்வீகமானது
அதிக கட்டணம் செலுத்தினால்
சிறப்பு தரிசனம்..

**********************************

நீ நம் காதலுக்காக உயிரையும் கொடுத்திருப்பாய்..
உன் அப்பா அமெரிக்காவில்
மாப்பிள்ளை பாக்காமல் இருந்திருந்தால்..

**********************************

காதலுக்கு ஜாதி, மதம்,
அழகு, வயது என
எதுவும் தடையில்லை..

என் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..

**********************************

கடும் தவம் புரிந்தால் தான்
ஞானம் பிறக்குமாம்..

யார் சொன்னது
உன்னை காதலித்திருந்தாலே போதுமே..

**********************************
என் இதயமே நீதான் என்றாய்
உன் புதுக்கணவன்
இதய மாற்று
அறுவைச்சிகிச்சை நிபுணராமே!

**********************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

61 பின்னூட்டங்கள்:

Rajeswari said...

நல்ல கவிதைகள்!!

Anbu said...

\\ Rajeswari said...

நல்ல கவிதைகள்!!\\

நன்றி அக்கா..

Suresh Kumar said...

உன் ஒவ்வொரு SMS ம் என் நெஞ்சில் பால் வார்க்கின்றன
100 ருவா டாப் அப் போடுடா என்று வந்த ஒன்றை தவிர /////////////

கடலை போட வேண்டுமென்றால் டாப் அப் போட்டு தானே ஆகணும்

Anbu said...

\\Suresh Kumar said...

உன் ஒவ்வொரு SMS ம் என் நெஞ்சில் பால் வார்க்கின்றன
100 ருவா டாப் அப் போடுடா என்று வந்த ஒன்றை தவிர /////////////

கடலை போட வேண்டுமென்றால் டாப் அப் போட்டு தானே ஆகணும்\\

கண்டிப்பாக அண்ணா..

சுந்தர் said...

//உன் புதுக்கணவன்// காதலனா ? கணவனா ?

சுந்தர் said...

எதுவும் புட்டுகிச்சா தம்பி ? ஓவர் புலம்பலா இருக்கே ?

ஆ.ஞானசேகரன் said...

//காதலுக்கு ஜாதி, மதம்,
அழகு, வயது என
எதுவும் தடையில்லை..

என் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..//

அடே நல்லா இருக்கே

ஆ.ஞானசேகரன் said...

என்னாச்சு அன்பு ஒரே புலம்பல்...

பாலா said...

hahaha

Raju said...

மடக்கி மடக்கி எழுதிருக்கியே..!
இதுதான் கவிதையா தம்பி..?

Anbu said...

\\ சுந்தர் said...

//உன் புதுக்கணவன்// காதலனா ? கணவனா ?\\\

உங்க சாய்ஸ் தான்

Anbu said...

\\சுந்தர் said...

எதுவும் புட்டுகிச்சா தம்பி ? ஓவர் புலம்பலா இருக்கே ?\\

சும்மா கற்பனை பண்ணினேன்..

Anbu said...

\\ஆ.ஞானசேகரன் said...

//காதலுக்கு ஜாதி, மதம்,
அழகு, வயது என
எதுவும் தடையில்லை..

என் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..//

அடே நல்லா இருக்கே\\\

நன்றி அண்ணா

Anbu said...

\\ ஆ.ஞானசேகரன் said...

என்னாச்சு அன்பு ஒரே புலம்பல்.\\

சும்மா தான் அண்ணா

Anbu said...

\\ பாலா said...

hahaha\\

முதல் வருகைக்கு நன்றி அண்ணா

Anbu said...

\\டக்ளஸ்....... said...

மடக்கி மடக்கி எழுதிருக்கியே..!
இதுதான் கவிதையா தம்பி..?\\

அப்படித்தான் நினைக்கிறேன் தல..

கார்த்திகைப் பாண்டியன் said...

SMS கவிதைகளா அன்பு? வாழ்க்கைல உனக்கு இன்னும் நிறைய விஷயங்கள் காத்திருக்குப்பா.. அதுக்குள்ளே புலம்பினா எப்படி?

Anbu said...

\\\ கார்த்திகைப் பாண்டியன் said...

SMS கவிதைகளா அன்பு? வாழ்க்கைல உனக்கு இன்னும் நிறைய விஷயங்கள் காத்திருக்குப்பா.. அதுக்குள்ளே புலம்பினா எப்படி?\\\

எஸ்.எம்.எஸ். கவிதை தான் அண்ணா..

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. எல்லாமே நல்லா இருக்கு அன்பு. நக்கல் இருந்தாலும் வலியும் இருக்கிறது

வால்பையன் said...

//காதல் தெய்வீகமானது
அதிக கட்டணம் செலுத்தினால்
சிறப்பு தரிசனம்..//

ஜூப்பரு!

*இயற்கை ராஜி* said...

ஹா ஹா . எல்லாமே நல்லா இருக்கு அன்பு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
காதலுக்கு ஜாதி, மதம்,
அழகு, வயது என
எதுவும் தடையில்லை..

என் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..
//

அழகான கவிதைகள்..

sms கவிதையும் அருமை

RAMYA said...

//
உன் ஒவ்வொரு SMS ம் என் நெஞ்சில் பால் வார்க்கின்றன
100 ருவா டாப் அப் போடுடா என்று வந்த ஒன்றை தவிர
//

அது சரி :))

இதெல்லாம் சொன்னாதான் தெரியுது போல :-)

RAMYA said...

//காதலுக்கு ஜாதி, மதம்,
அழகு, வயது என
எதுவும் தடையில்லை..

என் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..
//

பார்த்தா என்னாகும்?? புட்டுக்குமா :))

RAMYA said...

ஒரே புலம்பலா இருக்கு!

சரி மனசை தேத்திக்கங்க தம்பி எல்லாம் கொஞ்ச நாளிலே சரியாகிவிடும்னு பட்சி சொல்லிச்சி :))

Anbu said...

\\\ S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. எல்லாமே நல்லா இருக்கு அன்பு. நக்கல் இருந்தாலும் வலியும் இருக்கிறது\\\

நன்றி அண்ணா..

Anbu said...

\\வால்பையன் said...

//காதல் தெய்வீகமானது
அதிக கட்டணம் செலுத்தினால்
சிறப்பு தரிசனம்..//

ஜூப்பரு!\\\

நன்றி வால்..

Anbu said...

\\இய‌ற்கை said...

ஹா ஹா . எல்லாமே நல்லா இருக்கு அன்பு\\

நன்றி அக்கா..

Anbu said...

\\ச.செந்தில்வேலன் said...

//
காதலுக்கு ஜாதி, மதம்,
அழகு, வயது என
எதுவும் தடையில்லை..

என் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..
//

அழகான கவிதைகள்..

sms கவிதையும் அருமை\\


நன்றி அண்ணா முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

Anbu said...

\\RAMYA said...

ஒரே புலம்பலா இருக்கு!

சரி மனசை தேத்திக்கங்க தம்பி எல்லாம் கொஞ்ச நாளிலே சரியாகிவிடும்னு பட்சி சொல்லிச்சி :))\\\


மனதை தேற்றிக்கொள்கிறேன் அக்கா..

நன்றி அக்கா ஆறுதல் கூறியதற்கு..

லோகு said...

உனக்கு
பத்து வரிகளில்
பின்னூட்டம் எழுத
நினைக்கிறேன் நான்..

நீயோ
ஒரு ஸ்மைலியொடு
சந்தோஷ பட்டுக் கொள்கிறாய்..

நட்புடன் ஜமால் said...

தலைப்பில் ஏன் கொலவெறி ...

சொல்லரசன் said...

இது லோகுவிற்கு எதிர்கவிதையா?

Anbu said...

\\லோகு said...
உனக்கு
பத்து வரிகளில்
பின்னூட்டம் எழுத
நினைக்கிறேன் நான்..

நீயோ
ஒரு ஸ்மைலியொடு \\\

இது என்னாது மச்சான்..

Anbu said...

\\நட்புடன் ஜமால் said...
தலைப்பில் ஏன் கொலவெறி ..\\

சும்மாதான் அண்ணா

Anbu said...

\\சொல்லரசன் said...
இது லோகுவிற்கு எதிர்கவிதையா?\\


சே அப்படியெல்லாம் இல்லை அண்ணா...

தேவன் மாயம் said...

என் இதயமே நீதான் என்றாய்
உன் புதுக்கணவன்
இதய மாற்று
அறுவைச்சிகிச்சை நிபுணராமே!
//
ஆகா கடைசியில இதயத்தையே மாத்திவிட்டீர்களே!!

தேவன் மாயம் said...

//காதலுக்கு ஜாதி, மதம்,
அழகு, வயது என
எதுவும் தடையில்லை..

என் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..///

ஆமா! பணம் வேணுமில்ல!!

தேவன் மாயம் said...

மடக்கி மடக்கி எழுதிருக்கியே..!
இதுதான் கவிதையா தம்பி..?///

கடைசியிலெ மடக்க முடியலியே!!

வெற்றி-[க்]-கதிரவன் said...

:)

வெற்றி-[க்]-கதிரவன் said...

super anbu...

Anbu said...

\\\ தேவன் மாயம் said...
மடக்கி மடக்கி எழுதிருக்கியே..!
இதுதான் கவிதையா தம்பி..?///

கடைசியிலெ மடக்க முடியலியே!\\\

கண்டிப்பாக சார்...

வினோத் கெளதம் said...

தம்பி உண்மையில் சொல்லுறேன் கலக்கி எடுத்து இருக்கே போ..

Anbu said...

\\பித்தன் said...
super anbu..\\

நன்றி அண்ணா

Anbu said...

\\ வினோத்கெளதம் said...
தம்பி உண்மையில் சொல்லுறேன் கலக்கி எடுத்து இருக்கே போ.\\\

நன்றி அண்ணா...

jothi said...

அடி கொஞ்சம் பலமோ? சூப்பர்

அப்துல்மாலிக் said...

//காதலுக்கு ஜாதி, மதம்,
அழகு, வயது என
எதுவும் தடையில்லை..

என் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..
//

ரசிச்சேன்

அப்துல்மாலிக் said...

//காதல் தெய்வீகமானது
அதிக கட்டணம் செலுத்தினால்
சிறப்பு தரிசனம்..

//

சூப்பரப்பு

சிவாஜி said...

:)

Suresh said...

/உன் ஒவ்வொரு SMS ம் என் நெஞ்சில் பால் வார்க்கின்றன
100 ருவா டாப் அப் போடுடா என்று வந்த ஒன்றை தவிர /////////////

கடலை போட வேண்டுமென்றால் டாப் அப் போட்டு தானே ஆகணும்/

எந்த காலத்துல இருக்கிங்க ;) ஹீ ஹீ கேள் பிரண்ட்ஸ் தான் காசு செலவு செய்து கால் பண்ணுவாங்க நீங்க பழய சினிமா பாக்குறீங்களா ;)

cheena (சீனா) said...

அன்பு

வயது படுத்துகிறதா - கவலை வேண்டாம் - நல்ல துணை அமைய நல்வாழ்த்துகள்

குறுங்கவிதைகள் அனைத்துமே அருமை - ஏன் அனைத்துமே பெண்ணை வைத்தே எழுதப்பட்டிருக்கின்றன

ம்ம்ம்ம்ம்ம்ம்

ராம்.CM said...

ஏங்க இந்த கொலைவெறி...??..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//காதல் தெய்வீகமானது
அதிக கட்டணம் செலுத்தினால்
சிறப்பு தரிசனம்..//

ஏன் தம்பி சிறப்பு தரிசனம்னா என்னப்பா அர்த்தம்?

sakthi said...

அருமை

Anbu said...

நன்றி

॰ ஜோதி

॰ அபு அப்ஸர்

॰ சிவாஜி

॰ சுரேஷ்

॰ சீனா

॰ ராம் .சி.எம்

॰ sridhar

॰ சக்தி

Anonymous said...

என் இதயமே நீதான் என்றாய்
உன் புதுக்கணவன்
இதய மாற்று
அறுவைச்சிகிச்சை நிபுணராமே!//

super.

மிக்கி மௌஸ் said...

நல்லாகீதுப்பா SMS எல்லாமே!...

எம்.எம்.அப்துல்லா said...

இன்னாமாகீது ஃபீலிங்சு, டக்கரு.

:))

priyamudanprabu said...

என் காதல் தேசத்தின் கடவுள் நீதான்..
ஆனால் என்னை ஏன் நாத்திகன் ஆக்கினாய்...
///
சூப்பருங்க

Ashok D said...

எல்லாம் நல்லா கீதுபா...

nzpire said...

ரசிக்கும்படியான புலம்பல் !.