கண்டதும் கேட்டதும்..(1/7/09)


இது ஒரு மொக்கைப்பதிவுதான்..அதாவது அவியல்,குவியல்,உட்கார்ந்து யோசித்தது,ரூம் போட்டு யோசித்தது,காக்டெயில்,கொத்து புரோட்டா,மாதிரி இதுவும் ஒன்னுங்க....எனக்கும் இந்த மாதிரி ஒரு பதிவு எழுத வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசைங்க..ஆனால் அதிகமான ஆணி பிடுங்குதல்,சரியான தலைப்பு கிடைக்காததால் எழுத இயலவில்லை..இந்த தலைப்பின் சொந்தக்காரர் அண்ணன் ஸ்ரீ-க்கு என் மனமார்ந்த நன்றிகள்..

*******************************************************************

போன வெள்ளிக்கிழமையன்று வெளியான நாடோடிகள் திரைப்படம் மிகவும் அருமையாக உள்ளது.அனைவரும் போய் பார்க்க வேண்டிய படம்.
சசிகுமார் இயக்குனராகவும்,தயாரிப்பாளராகவும்,நடிகராகவும் கலக்கி வருகிறார்..அவரது நடனம் கூட நன்றாக உள்ளது...சமீபத்திய மொக்கைப்படங்கள் பார்த்த எனக்கு இப்படம் ஒரு திருப்தியாக இருந்தது.இனி நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்கள்..ஆயிரத்தில் ஒருவன்,கந்தசாமி.நந்தலாலா..பொறுத்திருந்து பார்ப்போம்..

*******************************************************************

சமீபத்தில் வந்த திரைப்பட பாடல்களில் என் மனதை மிகவும் கொள்ளை கொண்ட பாடல்கள் ஆயிரத்தில் ஒருவன் தான்..படத்தில் இருக்கும் பத்து பாடல்களும் அருமையாக உள்ளது.இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ்குமார் தன் பணியை செவ்வென செய்து உள்ளார்..இருந்தாலும் செல்வராகவன் படம் என்றாலே என் நெஞ்சினில் வருவது யுவன்சங்கர் ராஜாவின் இசைதான்..துள்ளுவதோ இளமை, 7யின் தாக்கம்...இப்படத்திலும் இசையமைத்திருந்தால் இன்றும் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.இருப்பினும் ஜீ.வி.பிரகாஷ்குமாருக்கு ஹேட்ஸ் ஆப்...

பாடல்களை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்குங்க.

*******************************************************************

அண்ணன் பைத்தியக்காரன் அவர்கள் நடத்திய சிறுகதைப்போட்டி நேற்றோடு நிறைவுக்கு வந்தது.பல மூத்த பதிவர்கள் பங்கு பெற்ற இப்போட்டியில் நானும் பங்குபெற்றது மிக்க மகிழ்ச்சி..மொத்தம் 219 கதைகளாம்.என்னோட சிறுகதை படிக்க..

*******************************************************************

24-6-09 அன்று அண்ணன் கார்த்திகைப்பாண்டியன் தங்கைக்கு மதுரையில் இனிதே நடைபெற்றது..இதில் பங்குகொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி.சொல்லரசன் மற்றும் ஆதவா ஆகிய இரு முக்கிய பதிவர்களை முதன் முதலாக சந்தித்தேன்.தங்கைக்கு கல்யாணம் முடிந்த கையுடன் தனக்கும் பொண்ணு தேடிக்கொண்டு வருகிறார் அண்ணன் கார்த்திகைப்பாண்டியன்.விண்ணப்பம் செய்பவர்கள் செய்யலாம்..


*******************************************************************

வழக்கமாக நான் பதிவெழுதாத நாட்களில் நம்ம கடையின் நிலைமை ரொம்ப பரிதாபமாக இருக்கும்..வெறும் பத்து ஹிட்ஸ் வந்து இருக்கும்..அதுவும் நான்தான் பார்த்திருப்பேன்..கடந்த இரண்டு நாட்களாக தினமும் 100 பேர் வருகின்றனர்...என்னவென்று தணிக்கைகுழு வைத்து ஆராய்ச்சி செய்ததில் டாக்டர் தேவன் சாரின் பதிவுலக மன்மதன்கள் என்ற பதிவுதான் காரணம் என தெரியவந்தது..எனவே டாக்டருக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
மேலும் டாக்டரின் சமீபத்திய பதிவான காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை அவரது மனைவி படித்துவிட்டாராம்..வீட்டில் ஒரே கலாட்டாவாம்..
மேலும் விவரங்களுக்கு தேவா சாரை அணுகவும்...

*******************************************************************

பிரபல பதிவர் அவர் தன் காதலியிடன் சண்டையிட்டுக்கொண்டு உள்ளாராம்..தொ(ல்)லைபேசியில் வந்த குறுந்தகவல் தான் காரணமாம்..நல்லா பார்த்து எஸ்.எம்.எஸ். அனுப்புங்க மக்கா

*******************************************************************

நகைச்சுவை:-

ஆசிரியர்: ஒவ்வொருவரும் அவங்கிட்ட இருக்கிற தனித்திறமைப் பற்றி சொல்லுங்க..
மாணவன்:நான் பின்னாலே நடப்பேன் சார்..
ஆசிரியர்:எவ்வளவு தூரம்.
மாணவன்:உங்க பொண்ணு எவ்வளவு தூரம் போகுதோ அவ்வளவு தூரம்..
ஆசிரியர்:...????

*******************************************************************

கவிதை:-

பூக்களின் மரணம்
பெண்களின் கொண்டையில்...

ஆண்களின் மரணம்
பெண்களின் புன்னகையில்...

*******************************************************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

55 பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால் said...

தேவா சார் உனக்கு நல்லது செஞ்சார்

அவருக்கு நீ இப்படி செய்துட்டியே ராஸா


:) :) :)

தேவன் மாயம் said...

அன்பு!!
பிரபல பதிவர்கள் வரிசையில் சேர்ந்தாச்சா///

தருமி said...

தலைப்புக்கும் படத்துக்கும் என்ன தொடர்பு? ஒருவேளை தலைப்பை - "கண்டதும் கேட்டதும், பார்த்ததும்-னு வைக்கணுமோ?

கார்க்கிபவா said...

//பாடல்களை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்குங்க.//

இது எதுக்கு? வேனூம்ன்னா வாங்கி கேட்கட்டும். அல்லது அவஙக்ளா தேடி செய்து கொள்ளட்டும்

Beski said...

//அவரது நடனம் கூட நன்றாக உள்ளது//
இது கொஞ்சம் ஓவரு...

//சமீபத்தில் வந்த திரைப்பட பாடல்களில் என் மனதை மிகவும் கொள்ளை கொண்ட பாடல்கள் ஆயிரத்தில் ஒருவன் தான்//
ஆமா, நல்லாத்தான் இருக்கு. வாமனனும் சூப்பர்ல?


//கவிதை//
இது எனக்கு வேற மாதிரி வந்தது.... அதே மாதிரிதான் அங்கயும் வந்துருக்கும்னு நெனக்கிறேன், ஹி ஹி ஹி...

S.A. நவாஸுதீன் said...

திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

Suresh said...

அன்பு சூப்பர் தம்பி கலக்கிட்ட நண்பா..

நல்ல பெயர் கண்டதும் கேட்டதும் ;) கவிதையா இருக்கு

சொன்ன விஷங்களும் நல்லா இருக்கு, ஜோக் என்று நல்ல வேளை தேவா அடிவாங்கியதை போடவில்லை ஹீ ஹீ ;)

தொடந்து எழுது இத மாதிரி ஜாலியா ..

கார்த்தி தங்கைக்கு வாழ்த்து சொல்லியாச்சு இருந்தாலும் இங்கும் வாழ்த்துவது தவறு இல்லையே :-) வாழ்த்துகள்

லோகு said...

/இனி நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்கள்..ஆயிரத்தில் ஒருவன்,கந்தசாமி.நந்தலாலா..பொறுத்திருந்து பார்ப்போம்..//

கந்தசாமி, ஆயிரத்தி ஒருவன் எல்லாம் உனக்கு பையன் பொறந்த பிறகுதான் ரிலீசாகும் போல..

*****

என்னது பத்து பாட்டா... ஒரு பாட்டுக்கு ஒரு சிகரெட்டுனாலும் பத்து பாட்டுக்கு ஒரு பாக்கெட்.. எப்படி மாப்ள உன் பட்ஜெட் தாங்கும்..

****
219 ah?????? நீ எத்தனாவது ரேங்க்..

****
//.தங்கைக்கு கல்யாணம் முடிந்த கையுடன் தனக்கும் பொண்ணு தேடிக்கொண்டு வருகிறார் அண்ணன் கார்த்திகைப்பாண்டியன்.விண்ணப்பம் செய்பவர்கள் செய்யலாம்..//
****
கடைசியாக கிடைத்த தகவல் படி, விண்ணப்பங்கள் அண்ணாரின் வீடு நோக்கி குவிகின்றன..
****

'A' Joke enge????

நையாண்டி நைனா said...
This comment has been removed by the author.
Rajeswari said...

உண்மைதான்.ஆயிரத்தின் ஒருவன் பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளது

Rajeswari said...

//
மேலும் டாக்டரின் சமீபத்திய பதிவான காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை அவரது மனைவி படித்துவிட்டாராம்..வீட்டில் ஒரே கலாட்டாவாம்..
மேலும் விவரங்களுக்கு தேவா சாரை அணுகவும்...//

அடகடவுளே..இதென்ன கலாட்டா..

Rajeswari said...

///பூக்களின் மரணம்
பெண்களின் கொண்டையில்...

ஆண்களின் மரணம்
பெண்களின் புன்னகையில்...
//

தம்பிக்கு ஏன் இந்த கொலைவெறியோ????

கார்த்திகைப் பாண்டியன் said...

:-)))))))))))

Anbu said...

\\\நட்புடன் ஜமால் said...
தேவா சார் உனக்கு நல்லது செஞ்சார்

அவருக்கு நீ இப்படி செய்துட்டியே ராஸா


:) :) :)\\\

உண்மைதான் அண்ணா...

வருகைக்கு நன்றி அண்ணா

Unknown said...

ஐயையோ..
தேவா சார் மாட்டிக்கிட்டாரா???

தேவா சாரே..
பாத்து...

குடந்தை அன்புமணி said...

நாடோடிகள் படத்தில் நடிப்பு மற்றும் தயாரிப்பு மட்டுமே சசிக்குமார். இயக்குனர் சமுத்திரக்கனி.

நையாண்டி நைனா said...

நடத்துங்க நடத்துங்க...

Anbu said...

\\thevanmayam said...
அன்பு!!
பிரபல பதிவர்கள் வரிசையில் சேர்ந்தாச்சா//\\\

நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம் சார்..

Anbu said...

\\ தருமி said...
தலைப்புக்கும் படத்துக்கும் என்ன தொடர்பு? ஒருவேளை தலைப்பை - "கண்டதும் கேட்டதும், பார்த்ததும்-னு வைக்கணுமோ?\\\

காண்பதும் பார்ப்பதும் இரண்டுமே ஒன்றுதானே சார்..

வருகைக்கு நன்றி சார்..

Cable சங்கர் said...

ரைட்டு.. நீயும் ஆரம்பிச்சிட்டியா..? :)

Anbu said...

\\\கார்க்கி said...
//பாடல்களை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்குங்க.//

இது எதுக்கு? வேனூம்ன்னா வாங்கி கேட்கட்டும். அல்லது அவஙக்ளா தேடி செய்து கொள்ளட்டும்\\

தெரியாதவர்களுக்காக அண்ணா..

வருகைக்கு நன்றி அண்ணா..

Anbu said...

\\ எவனோ ஒருவன் said...
//அவரது நடனம் கூட நன்றாக உள்ளது//
இது கொஞ்சம் ஓவரு...

//சமீபத்தில் வந்த திரைப்பட பாடல்களில் என் மனதை மிகவும் கொள்ளை கொண்ட பாடல்கள் ஆயிரத்தில் ஒருவன் தான்//
ஆமா, நல்லாத்தான் இருக்கு. வாமனனும் சூப்பர்ல?


//கவிதை//
இது எனக்கு வேற மாதிரி வந்தது.... அதே மாதிரிதான் அங்கயும் வந்துருக்கும்னு நெனக்கிறேன், ஹி ஹி ஹி..\\\

எனக்கு அப்படித்தான் தெரிஞ்சது தல..

வாமனன் நல்லா இருக்கு..ஆனாலும் நெஞ்சில் நிற்கவில்லை..

அங்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை..எனக்கு இப்படித்தான் வந்தது..

வருகைக்கு நன்றி தல..

குமரை நிலாவன் said...

ரைட்டு.. நீயும் ஆரம்பிச்சிட்டியா..? :)

Anbu said...

\\S.A. நவாஸுதீன் said...
திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்\\

பதிவு பிடிக்கவில்லையா அண்ணா..

வருகைக்கு நன்றி...

Anbu said...

\\அன்பு சூப்பர் தம்பி கலக்கிட்ட நண்பா..

நல்ல பெயர் கண்டதும் கேட்டதும் ;) கவிதையா இருக்கு

சொன்ன விஷங்களும் நல்லா இருக்கு, ஜோக் என்று நல்ல வேளை தேவா அடிவாங்கியதை போடவில்லை ஹீ ஹீ ;)

தொடந்து எழுது இத மாதிரி ஜாலியா ..

கார்த்தி தங்கைக்கு வாழ்த்து சொல்லியாச்சு இருந்தாலும் இங்கும் வாழ்த்துவது தவறு இல்லையே :-) வாழ்த்துகள்\\

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அண்ணா..

Anbu said...

\\லோகு said...
/இனி நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்கள்..ஆயிரத்தில் ஒருவன்,கந்தசாமி.நந்தலாலா..பொறுத்திருந்து பார்ப்போம்..//

கந்தசாமி, ஆயிரத்தி ஒருவன் எல்லாம் உனக்கு பையன் பொறந்த பிறகுதான் ரிலீசாகும் போல..

*****

என்னது பத்து பாட்டா... ஒரு பாட்டுக்கு ஒரு சிகரெட்டுனாலும் பத்து பாட்டுக்கு ஒரு பாக்கெட்.. எப்படி மாப்ள உன் பட்ஜெட் தாங்கும்..

****
219 ah?????? நீ எத்தனாவது ரேங்க்..

****
//.தங்கைக்கு கல்யாணம் முடிந்த கையுடன் தனக்கும் பொண்ணு தேடிக்கொண்டு வருகிறார் அண்ணன் கார்த்திகைப்பாண்டியன்.விண்ணப்பம் செய்பவர்கள் செய்யலாம்..//
****
கடைசியாக கிடைத்த தகவல் படி, விண்ணப்பங்கள் அண்ணாரின் வீடு நோக்கி குவிகின்றன..
****

'A' Joke enge????\\\

'A' Joke-உனக்கு மெயில் பண்றேன் மச்சான்
வருகைக்கு நன்றி .

Anbu said...

\\Rajeswari said...
///பூக்களின் மரணம்
பெண்களின் கொண்டையில்...

ஆண்களின் மரணம்
பெண்களின் புன்னகையில்...
//

தம்பிக்கு ஏன் இந்த கொலைவெறியோ???\\

அக்கா நல்ல கவிதைதானே..

வருகைக்கு நன்றி

Anbu said...

\\கார்த்திகைப் பாண்டியன் said...
:-)))))))))))\\

எங்க தல-க்கு கல்யாணக்கலை வந்திருச்சு...

Anbu said...

\\veththiyan said...
ஐயையோ..
தேவா சார் மாட்டிக்கிட்டாரா???

தேவா சாரே..
பாத்து.\\

பார்க்கப்போய் தான் தல மாட்டிக்கிட்டார்..
வருகைக்கு நன்றி தல

Anbu said...

\\ குடந்தை அன்புமணி said...
நாடோடிகள் படத்தில் நடிப்பு மற்றும் தயாரிப்பு மட்டுமே சசிக்குமார். இயக்குனர் சமுத்திரக்கனி\\\

அவர் ஒரு ஏற்கனவே இயக்கிவுள்ளார் அண்ணா..
படம் பெயர்..சுப்ரமணியபுரம்

வருகைக்கு நன்றி அண்ணா

Anbu said...

\\நையாண்டி நைனா said...
நடத்துங்க நடத்துங்க..\\

எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான் அண்ணா..

Anbu said...

\\ Cable Sankar said...
ரைட்டு.. நீயும் ஆரம்பிச்சிட்டியா..? :)\\

அப்புறம் கிளம்பிட்டோம்ல...

வருகைக்கு நன்றி அண்ணா..

Anbu said...

\\ குமரை நிலாவன் said...
ரைட்டு.. நீயும் ஆரம்பிச்சிட்டியா..? :)\

ஆமாம் அண்ணா..

வருகைக்கு நன்றி அண்ணா

*இயற்கை ராஜி* said...

:-)))))))))))

S.A. நவாஸுதீன் said...

Anbu said...

\\S.A. நவாஸுதீன் said...
திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்\\

பதிவு பிடிக்கவில்லையா அண்ணா..

வருகைக்கு நன்றி...

இல்ல அன்பு. காலைல ஆணி கொஞ்சம் ஜாஸ்தியா இருந்தது. அதான் அப்போதைக்கு அது.

சிநேகிதன் அக்பர் said...

ஜோக் சூப்பர்.

வால்பையன் said...

//தனக்கும் பொண்ணு தேடிக்கொண்டு வருகிறார் அண்ணன் கார்த்திகைப்பாண்டியன்.விண்ணப்பம் செய்பவர்கள் செய்யலாம்..//

ஏம்பா, மதுரையில இருக்குற கிழவிங்க வேணாமாமா! இணையத்துல தான் விண்ணப்பிகனுமா?

அப்துல்மாலிக் said...

பதிவு நல்லாயிருக்கு

தேவா சார் கைகாரியத்துலே எம்வீட்டுலேயும் இதே நிலைதான்


கவிதை + ஜோக் சூப்பர்

வால்பையன் said...

///பூக்களின் மரணம்
பெண்களின் கொண்டையில்...

ஆண்களின் மரணம்
பெண்களின் புன்னகையில்...
//

நீ காதலிச்சிகிட்டு இருக்குற விசயத்தை எப்படி சொல்லாம சொல்லனுமா!

விடு! நாங்க இருக்கோம்ல, உனக்கு ஒரு கஷ்டம்னா நாங்க வரமாட்டோமா!?

Anbu said...

\\இய‌ற்கை said...
:-)))))))))))\\

நன்றி அக்கா வருகைக்கு

Anbu said...

S.A. நவாஸுதீன் said...
Anbu said...

\\\\\S.A. நவாஸுதீன் said...
திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்\\

பதிவு பிடிக்கவில்லையா அண்ணா..

வருகைக்கு நன்றி...

இல்ல அன்பு. காலைல ஆணி கொஞ்சம் ஜாஸ்தியா இருந்தது. அதான் அப்போதைக்கு அது.\\\

சரி அண்ணா..ஆணி பிடுங்கியாச்சா..

Anbu said...

\\அக்பர் said...
ஜோக் சூப்பர்\\\

நன்றி அண்ணா..முதல் வருகைக்கும் கருத்துக்கும்

Anbu said...

\\\அபுஅஃப்ஸர் said...
பதிவு நல்லாயிருக்கு

தேவா சார் கைகாரியத்துலே எம்வீட்டுலேயும் இதே நிலைதான்

கவிதை + ஜோக் சூப்பர்\\\

உங்க வீட்டிலுமா...

வருகைக்கு நன்றி அண்ணா

Anbu said...

\\வால்பையன் said...
//தனக்கும் பொண்ணு தேடிக்கொண்டு வருகிறார் அண்ணன் கார்த்திகைப்பாண்டியன்.விண்ணப்பம் செய்பவர்கள் செய்யலாம்..//

ஏம்பா, மதுரையில இருக்குற கிழவிங்க வேணாமாமா! இணையத்துல தான் விண்ணப்பிகனுமா?\\

இணையத்தில் விண்ணப்பம் பண்ணுவதான் தான் வால் கிக்கு..

உங்களுக்கு கிழ்வின்னாலும் ஓ.கே

பாவம் அவர் சின்னப்பையன் தானே அதான்..

ஆ.ஞானசேகரன் said...

அன்பு, இது ஒரு கதம்ப மாலையா அருமையா இருக்குப்பா..

Anbu said...

\\ஆ.ஞானசேகரன் said...

அன்பு, இது ஒரு கதம்ப மாலையா அருமையா இருக்குப்பா\\\

நன்றி அண்ணா..வருகைக்கும் கருத்துக்கும்..

சுந்தர் said...

தம்பி, நல்லா கலக்குறீங்க ? // பூக்களின் மரணம் பெண்களின் கொண்டையில் // இகி ...இகி ...

தீப்பெட்டி said...

அசைவ கவிதையா..
மசாலா கொஞ்சம் தூக்கலா இருக்கே..

Anbu said...

\\ சுந்தர் said...

தம்பி, நல்லா கலக்குறீங்க ? // பூக்களின் மரணம் பெண்களின் கொண்டையில் // இகி ...இகி ...\\

நன்றி அண்ணா வருகைக்கு..

Anbu said...

\\தீப்பெட்டி said...

அசைவ கவிதையா..
மசாலா கொஞ்சம் தூக்கலா இருக்கே..\\\

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..

Misha said...

short and sweet messages brother

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

கலக்குங்க தம்பி.

Anbu said...

\\Misha said...

short and sweet messages brother\\

நன்றி தோழி.

Anbu said...

\\ஸ்ரீதர் said...

கலக்குங்க தம்பி.\\

கலக்கிடுவோம் அண்ணா..

cheena (சீனா) said...

அன்பு

கண்டதும் கேட்டதும் நல்லாவே இருக்கு

கலக்கிட்டே அன்பு

ஜோக்கும் கவிதையும் நல்லா இருக்கு