தவறான தொழில் செய்தாலும் அதிலும் ஒரு நேர்மையை கடைபிடிக்கும் ரவுடியின் கதை..ரவுடியாக ஆலமரத்தான்(ராதாரவி). ராதாவின் மகனாக குட்டி(ஹரிக்குமார்).குட்டியின் அக்கா மகளாக கார்த்திகா.ராதாரவியின் பேரில் ஓட்டு வாங்கி எம்.பி.ஆகிறார் கட் அவுட் ஆளவந்தான் ( காதல் தண்டபாணி)..ஆனால் கள்ளச்சாரயம் காய்ச்ச்சுவதால் ராதாரவியின் எதிரி ஆகிறார்..இவர்கள் இருவருக்கும் நடக்கும் பிரச்சினை முதல் பாதி..
இரண்டாம் பாதியில் என்கவுண்டர் ஸ்பெலிஸ்ட்டாக கரோலின் தாமஸ் (அனுயா). போலிஷ் வேஷத்தில் இருப்பதை விட மற்ற காஷ்டியூம்களில் கலக்குகிறார்..அருமையான நடிப்பு..இரண்டாம் பாதி முழுவதும் அவர் ரவுடியுடன் மோதுவது என படம் நகர்கிறது.
படத்தில் ஹீரோ பேசும் முதல் வார்த்தையே..
வடக்கிலே திண்டுக்கல்லு..
தெற்கிலே திருப்பரங்குன்றம்...
மேற்கிலே மேலூர்..
கிழக்கிலே கூடலூர்..என்கிற டையலாக்..
டையலாக் பேசுவதில் விஜயை மிஞ்சுகிறார்.மற்றபடி சண்டைக்காட்சிகளில் இவரிடம் அடி வாங்குபவர்கள் எல்லாம் எப்படி 20 அடி தூரம் தள்ளி விழுகிறார்கள் என்பது தெரியவில்லை..சண்டைக்காட்சிகளில் "அனல் அரசு" அனலை கக்குகிறார்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
ஹரிக்குமார் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்..வசனங்கள் அனைவருக்கும் புரியும்படி தெளிவாக பேசிகிறார்..படத்தில் இரண்டு பாடல்கள் பாடி இருக்கிறார்..மற்றாபடி ஒன்னுமில்லைங்க..
கார்த்திகா படத்தில் மூன்று காட்சிகளில் வருகிறார்..இரண்டு பாடல்களுக்கு ஆடுகிறார்..இரண்டு முறை அழுகிறார்..மற்றபடி எதுவும் இல்லைங்க..
அனுயா அழகாக இருக்கிறார்.நன்றாக நடித்திருக்கிறார்..ஹீரோவுடன் காதல் கொள்வதாக ஏமாற்றி அவர் அப்பாவையும் மாமாவையும் கொலை செய்கிறார்.இறுதியில் இறந்தும்விடுகிறார்..காதலுடன் ரொமான்ஸ் காட்சிகள் அருமை..
ஆனந்த் பாபு கூலிப்படை ரவுடியாக வருகிறார்..
இசை ஜான் பீட்டர் சொல்லிக்கொள்ளும் படி இல்லை..
படத்தின் பாடல்களையும் எழுதி இயக்கி இருப்பவர் யுரேகா..
படத்தில் பேசப்பட்ட வித்தியாசமான வசனங்கள்:-
1.ஆடு புளுக்கை போடுற மாதிரி அதிகமா பேசாத..
2.குட்டின்னா..பன்னிக்குட்டி இல்லைடி..சிங்கக்குட்டி..
3.கீழ விழுந்தா விழுந்த இடத்துல தான் எந்திக்க முடியும்..கொஞ்சம் தள்ளிப்போயா எந்திக்க முடியும்..
4.நாங்களெல்லாம் ஸ்விட்ச் போட்டாதான் லைட்டே எரியும்..நாங்களெல்லாம் ஸ்விட்ச் போட்டாதான் சூரியனே எரியும்..
இது போல் படத்தில் வசனங்களுக்கும் பஞ்ச் டையாலாக்கும் குறைவில்லை..
சம்பவங்கள்:
1.படம் முழுவதும் ஒரே சாவுக்காட்சிகள்..தியேட்டரே சுடுகாடு வாசம்..
2.நான் பார்த்தவரையில் வித்தியாசமான கிளைமேக்ஸ்..இதுவரை வந்த தமிழ் சினிமாவில் கிளைமேக்ஸ் காட்சிகள் ஒன்று சண்டையாக இருக்கும்..இல்லையென்றால் செண்டிமெண்டாக இருக்கும்..இதில் கொஞ்சம் வித்தியாசம்..பாருங்கள்..
3.மதுரை மெயின் ரோட்டில் ஒரு முத்தம் (ரோட்டில ஒருத்தர் கூட இல்லைங்க..)
மதுரைச்சம்பவம்:- சம்பவங்கள் நிறைய இருக்கு..
மதுரை சம்பவம்-சம்பவங்கள் பல..
Subscribe to:
Post Comments (Atom)
22 பின்னூட்டங்கள்:
இன்னும் மதுரைல எவ்வளோ கதை இருக்குன்னு தெரியல.. பார்த்து பார்த்து சலிச்சுடுச்சு..
நல்ல விமர்சனம் மாப்ள.. எழுத்து நடை நல்லா இருக்கு.. தொடர்ந்து எழுது.. வாழ்த்துக்கள்..
எனக்கு ரிஸ்க் எடுக்க விருப்பமில்லை!
சன் டீவியில போடும் போது பாத்துகிறேன்!
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
தம்பி, அவர் தண்டாயுதபாணி இல்ல, தண்டபாணி..!
\\2.நான் பார்த்தவரையில் வித்தியாசமான கிளைமேக்ஸ்..இதுவரை வந்த தமிழ் சினிமாவில் கிளைமேக்ஸ் காட்சிகள் ஒன்று சண்டையாக இருக்கும்..இல்லையென்றால் செண்டிமெண்டாக இருக்கும்..இதில் கொஞ்சம் வித்தியாசம்..பாருங்கள்..\\
அந்த வித்தியாசத்தைதான் நீயே சொல்லிட்டயே ராசா..!
வால்பையன் said...
எனக்கு ரிஸ்க் எடுக்க விருப்பமில்லை!
சன் டீவியில போடும் போது பாத்துகிறேன்!
நான் அந்த அளவுக்கு கூட தயார் இல்ல அன்பு. உஷார்படுத்தியதற்கு நன்றி
நல்ல விமர்சனம் அன்பு....
\\\ லோகு said...
இன்னும் மதுரைல எவ்வளோ கதை இருக்குன்னு தெரியல.. பார்த்து பார்த்து சலிச்சுடுச்சு..
நல்ல விமர்சனம் மாப்ள.. எழுத்து நடை நல்லா இருக்கு.. தொடர்ந்து எழுது.. வாழ்த்துக்கள்..\\\
நன்றி மச்சான்..வருகைக்கும் கருத்துக்கும்..
\\\வால்பையன் said...
எனக்கு ரிஸ்க் எடுக்க விருப்பமில்லை!
சன் டீவியில போடும் போது பாத்துகிறேன\\\\
தீபாவளிக்கு எதிர்பாருங்க வால் அண்ணே..
கண்டிப்பாக கலைஞர் டி.வி.யில் வரும் என எதிர்பார்க்கிறேன்..
\\\ ராஜு.. said...
தம்பி, அவர் தண்டாயுதபாணி இல்ல, தண்டபாணி..!
\\2.நான் பார்த்தவரையில் வித்தியாசமான கிளைமேக்ஸ்..இதுவரை வந்த தமிழ் சினிமாவில் கிளைமேக்ஸ் காட்சிகள் ஒன்று சண்டையாக இருக்கும்..இல்லையென்றால் செண்டிமெண்டாக இருக்கும்..இதில் கொஞ்சம் வித்தியாசம்..பாருங்கள்..\\
அந்த வித்தியாசத்தைதான் நீயே சொல்லிட்டயே ராசா..!\\\
மாத்திட்டேன் தல..
வித்தியாசத்தை சொல்லலையே..
\\\S.A. நவாஸுதீன் said...
வால்பையன் said...
எனக்கு ரிஸ்க் எடுக்க விருப்பமில்லை!
சன் டீவியில போடும் போது பாத்துகிறேன்!
நான் அந்த அளவுக்கு கூட தயார் இல்ல அன்பு. உஷார்படுத்தியதற்கு நன்றி\\\
அது சரி..
\\ஜெட்லி said...
நல்ல விமர்சனம் அன்பு....\\
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...
நீ எச்சரிக்கை பண்ணியதுக்கு நன்றி..மேலும் நான் அதிகம் படம் பார்ப்பதில்லை...
எப்படி இவ்வளவு பொருமையா விமர்ச்சனம் எழுதினீங்களோ...
வால்பையன் said...
எனக்கு ரிஸ்க் எடுக்க விருப்பமில்லை!
சன் டீவியில போடும் போது பாத்துகிறேன்!
நான் இங்கும் ரிஸ்க் எடுக்க மாட்டேன்...
ஜூன் - வாமனன்
ஜூலை - பொக்கிஷம்
ஆகஸ்ட் - கந்தசாமி
செப்டம்பர் - இன்னுமொரு சம்பவம்.
தியேட்டர் போறதுக்கு பலமிறை சிந்திக்கணும் போல.....
//டையலாக் பேசுவதில் விஜயை மிஞ்சுகிறார்//
ஓவர் காமிடியோ "ங்க்னா" :-))
3.மதுரை மெயின் ரோட்டில் ஒரு முத்தம் (ரோட்டில ஒருத்தர் கூட இல்லைங்க..)
மதுரைச்சம்பவம்:- சம்பவங்கள் நிறைய இருக்கு..//
இங்க தான் தலைப்புக்கான மேட்டரே இருக்கு...
:)))
நல்ல விமர்சனம்... நான் கொஞ்சம் நாளா படம் பார்பதில்லை... தப்பிசேனும் நினைக்கின்றேன்
நல்ல விமர்சனம் . நல்லா இருக்கு..
//அனுயா அழகாக இருக்கிறார்//
என்ன டேஸ்டுபா உனக்கு!!!
\\குறை ஒன்றும் இல்லை !!! said...
//அனுயா அழகாக இருக்கிறார்//
என்ன டேஸ்டுபா உனக்கு!!!\\\
அவளுக்கு என்ன அண்ணா தங்கத்துக்கு..
Post a Comment