முக்கோணக்காதல்....


"என்னைக் கொஞ்சம் மாற்றி" என்ற பாடலை பாடியவாறே கண்ணாடியின் முன் தன் முகபாவனைகளை சரி செய்து கொண்டிருந்தாள் கார்த்திகா.
இவளின் வழக்கத்திற்கு மாறான அலப்பரையை பார்த்து வியந்து போய் "எங்கடி கிளம்பிட்ட" என்றாள் ராணி.

"ஒரு வாரமா என் பின்னால சுத்திக்கிட்டு இருந்தானே.. கார்த்திக், நேத்து பக்கத்துல வந்து உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..நாளைக்கு தாஜ் ஹோட்டலுக்கு வரமுடியுமா? என்று கேட்டான்.. "

" நீ என்னடி சொன்ன?" என்றாள் ராணி..

"வரேன் என்று சொல்லிட்டேன்....

" அப்போ கார்த்திக்கை காதலிக்கிறாயா?"

" ஆமாம்.. "

"அப்போ ராஜாவின் நிலைமை??"

"அவன் என்னை காதலிப்பது நம்ம காலேஜூக்கே தெரியும்..இருந்தாலும் வந்து சொல்லமாட்டேன்கிறான்..அவன் என்னிக்கு வந்து என்கிட்ட சொல்லி...எனக்கு டைம் ஆச்சு நான் புறப்படுகிறேன்.. அப்புறம் இந்த சுரிதார் எனக்கு எப்படி இருக்கு?"
"ம்ம்ம்..நல்லாத்தான் இருக்கு.. "

கார்த்திகாவும் ராணியும் கல்லூரி தோழிகள்..இருவருக்கும் ஒரே விடுதி..ஒரே அறை..இருவரும் ஒன்றாகவே கல்லூரிக்குச்செல்வர்..

அவசர அவசரமாக ஆட்டோ பிடித்து தாஜ் ஹோட்டலுக்கு சென்றடைவதற்குள் அறை மணி நேர தாமதம்..இருந்தாலும் கார்த்திக் எங்கு இருக்கிறான் என்று நோட்டமிட்டாள்..சிவப்பு நிற டி-ஷர்ட்டில் மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தான்.. இருவரும் பார்த்தவுடன் தங்களுக்குள் ஒரு புன்னகை..

கார்த்திக் அருகில் சென்று "வந்து ரொம்ப நேரம் ஆச்சா..?? "
"இல்லை 15 நிமிடம் தான்.. "

கார்த்திக் "ஐ லவ்" என்று ஆரம்பிக்க, சர்வர் "என்ன மேடம் வேணும்? " என்று சொல்ல..கார்த்திக் சிறிது அமைதியானான்..
"இரண்டு வெண்ணிலா.." என்று ஆர்டர் பண்ணிவிட்டு..

" கார்த்திகா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல.. ரொம்ப பயமா இருக்கு.. அதுக்காக சொல்லாமலும் இருக்க முடியாது.. " என்று தயங்கினான்..

"பரவாயில்லை பயப்படாம சொல்லுங்க " என்றாள் கார்த்திகா.. தன் மேலான அவன் காதலை அவன் வாயாலையே சொல்வதை கேட்க..

கார்த்திக் மெல்ல தயங்கி, "நான் உங்க பிரண்ட் ராணியை... ராணியை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்..அவங்க இல்லாமல் என்னால் இருக்க முடியாது..கிட்டதட்ட மூன்று வருஷமா அவங்களை காதலிக்கிறேன்..வாழ்ந்தா அவங்ககூடத்தான் வாழனும் என்று ஆசைப்படுறேன்..ஆனா அவங்ககிட்ட சொல்ல தைரியம் இல்லை..மேலும் சொன்னா என்னுடைய நிராகரித்துவிடுவார்களோ என்ற பயம்தான்..நீங்க தான் அவங்ககிட்ட பக்குவமா பேசி என்னுடைய காதலை சொல்லணும்" என்றான்..

இதை சற்றும் எதிர்பாராத கார்த்திகாவுக்கு சிறிது வியர்த்தாலும் சுதாரித்துகொண்டு "ம்ம் கண்டிப்பா சொல்றேன் " என்று கிளம்பினாள்..


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

11 பின்னூட்டங்கள்:

வால்பையன் said...

என்ன பிரச்சனை வந்தாலும் சரி, உங்களுக்கு ராணியை கட்டி வச்சிடுறோம் அன்பு அண்ணே!

அப்படி ராணி கிடைக்கலேன்னா கார்த்திகா ஒகே தானே!

லோகு said...

காதல் விஷயமாவே எழுதி கலக்கறீங்க அன்பு... என்ன நடக்குது அங்கே..


கதை நல்லா இருக்கு..

துபாய் ராஜா said...

அன்புத்தம்பி,ஆரம்பம் முதல் முடிவு வரை அருமை.காட்சிகள் வர்ணனை, உரையாடல்கள் கனகச்சிதம். தொடர்ந்து கதை எழுதுங்கள்.

ஆனா எனக்கு ஒரு சந்தேகம். இது நீங்களே எழுதுனதா இல்லை யாராவது மண்டபத்துல எழுதிக்கொடுத்ததை பதிவாக்கிட்டீங்களா...??!! :))

ப்ரியமுடன் வசந்த் said...

என்னப்பா திடீர்ன்னு முடிச்சுட்ட...

இன்னும் கொஞ்சம் நேரம் சுவாரஸ்யமா எடுத்துட்டு போயிருக்கலாம் ஒரு நிமிஷத்துல படிச்சுட்டேன்...

இருந்தாலும் நல்லா வந்துருக்கு தொடர்ந்து இதே மாதிரியே எழுதுங்க அன்பு தம்பி

*இயற்கை ராஜி* said...

நல்லா இருக்கு..

ஆ.ஞானசேகரன் said...

படமும் சூப்பர்

வழிப்போக்கன் said...

கார்த்திகாவுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...
:)))

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு அன்பு.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

cheena (சீனா) said...

சூப்பர் கத டா தம்பி - கார்த்திகாவுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் - ராணி சொல்லலியா இவ கிட்ட

நல்லாருக்கு - நல்வாழ்த்துகள்

மதுரை சரவணன் said...

கதை அருமை. ஆனால் சொந்த அனுபவமோ என்ற சந்தேகம்?உங்கள் அனுபவம் தொடந்து , எங்கள் உள்ளம் பூரிப்படைய நிறைய எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.