கரையும் உருவங்கள்..


இரவு மணி பதினொன்றை தாண்டியது..தெருவினில் ஆள் நடமாட்டம் அதிகமில்லை..சாலையோர டீக்கடையில் எப்.எம்.மில் "நினைத்தாலே இனிக்கும்" ஓடிக்கொண்டிருக்கிறது.தன்னுடைய பாத்திரங்களை தெருவில் போட்டு விளக்கிக்கொண்டிருந்தான் டீக்கடைக்காரன்..அதன் கழிவுநீர் ரோட்டினை அசுத்தப்படுத்திக்கொண்டிருந்தது..தன் நிழலை பார்த்தவாறே நடந்து வந்தான் கண்ணன்..தெருவின் கடைசியில் உள்ள மின்விளக்கு அவனுக்கு வழிகாட்டியது..கழிவுநீரை தாண்ட முயற்சி செய்கையில் இரண்டு நாளாக இப்போ பிய்ந்துவிடும் பிறகு பிய்ந்துவிடும் என்ற நிலையில் இருந்த செருப்பு அவன் வீட்டருகில் யாரும் இல்லாத வேளையில் அறுந்து போனது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது..

செருப்பினை கையில் பிடித்தவாறே வீட்டினை நோக்கி நடக்கலானான்..வீட்டின் முன் நின்றான்..கதவினை தட்ட மனம் வரவில்லை..கண்களிலே கண்ணீர்தான் வந்தது.நிலையினை பிடித்தவாறே நின்றான்..திடீரென கதவினை திறந்தாள் அக்கா வாசுகி..

எவ்வளவு நேரமா வெளியில நிக்கிறடா..??

கதவினை தட்டவேண்டியதுதானா.??

கேள்விகளுக்கு பதில் எதுவும் சொல்லாமல் வீட்டினுள் நுழைந்தான் கண்ணன்..

இந்த சத்தங்களுக்கு இடையே அப்பா கண்முழித்தார்..கண்ணா வந்துட்டியா..காலாகாலத்துலே சீக்கிரமா வரலாம்ல..பொம்பிளைப்புள்ளை எவ்வளவு நேரமா முழிச்சுக்கிட்டு இருப்பா..??

தட்டினில் சாதத்தினை வைத்து அவனை சாப்பிடச்சொன்னாள் வாசுகி..

எனக்கு சாப்பாடு வேண்டாம்..

ஏன்டா..துரை சாப்பிட்டு வந்திங்களோ..???

இல்லை..

பின்ன என்ன..??

பசிக்கலை..

ஆமா காலையில வேலை விஷயமா போனியே என்ன ஆச்சு..

கிடைக்கலை...

சரி விடுடா..நீ சாப்பிடு உனக்கு நல்லா வேலையா சீக்கிரமா கிடைக்கும்..

வருகிற வழியில் சுரேஷ் மாமாவை பார்த்தேன்..

என்ன சொன்னார்..அவர் மகனுக்கு வேலை கிடைச்சிருச்சாமே..

நாளைக்கு திருப்பூருக்கு போகச்சொன்னார்..அங்கே அவருக்கு தெரிந்த நண்பரிடம் வேலைக்கு சேர்த்துவிடுகிறேன் என்றார்..

சரி போயிட்டு வாடா..போக காசு வைத்திருக்கிறாயா என்று அவன் சட்டைப்பைக்குள் கையை நுழைத்தாள்..கிழிந்து போன ஐந்து ரூபாய் நோட்டு மட்டுமே இருந்தது..இரு வருகிறேன் என்று தன் வளையல் டப்பாவுக்குள் எட்டு மடிப்பாக வைத்திருந்த ஐம்பது ரூபாய் தாளை நீட்டினாள்..

என்னடா பாக்குற..நீ கொடுத்ததுதான்.போன தீபாவளிக்கு கொடுத்தியே அந்த காசுதான்..

கண்களில் நீர் மல்க அவள் மடியினில் சாய்ந்தான் கண்ணன்..ஆறுதல் கூறியவாறே அழுது கொண்டிருந்தாள் அவள் அக்கா வாசுகி..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

16 பின்னூட்டங்கள்:

வால்பையன் said...

தல தீபாவளி கழிச்சு போக சொல்லுங்க!
இப்போ போனா வேலை கிடைக்காது!

ஆயில்யன் said...

//என்னடா பாக்குற..நீ கொடுத்ததுதான்.போன தீபாவளிக்கு கொடுத்தியே அந்த காசுதான்..//


ஒரு முறை நான் எங்க பாட்டியிடம் கொடுத்த நூறு ரூபாய் நிகழ்ச்சிதான் ஞாபகத்துக்கு வந்துச்சு :(

பட் வாலு சொல்றதும் கரீக்ட்டுத்தான் :))))

Sinthu said...

வேலை கிடைக்குமா அன்பு................?

*இயற்கை ராஜி* said...

mm..nice:-)

ஜெட்லி... said...

கலக்கு ...கதை நடை சூப்பர்.....

Anbu said...

\\\வால்பையன் said...

தல தீபாவளி கழிச்சு போக சொல்லுங்க!
இப்போ போனா வேலை கிடைக்காது!\\\

நீங்க சொன்ன சரிதான் வால் அண்ணே...

Anbu said...

\\ஆயில்யன் said...

//என்னடா பாக்குற..நீ கொடுத்ததுதான்.போன தீபாவளிக்கு கொடுத்தியே அந்த காசுதான்..//


ஒரு முறை நான் எங்க பாட்டியிடம் கொடுத்த நூறு ரூபாய் நிகழ்ச்சிதான் ஞாபகத்துக்கு வந்துச்சு :(

பட் வாலு சொல்றதும் கரீக்ட்டுத்தான் :))))\\\

நன்றி அண்ணா..

Anbu said...

\\\Sinthu said...

வேலை கிடைக்குமா அன்பு................?\\\

கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன் அக்கா..

Anbu said...

\\இய‌ற்கை said...

mm..nice:-)\\\

thanks akka..

Anbu said...

\\\ ஜெட்லி said...

கலக்கு ...கதை நடை சூப்பர்....\\\


நன்றி அண்ணா..

Anbu said...

\\\♠ ராஜு ♠ said...

Good\\\


Thanks Thala..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லருக்கு தம்பி.

Anonymous said...

good :)

gayathri said...

nalla iruku pa

Eswari said...

//என்னடா பாக்குற..நீ கொடுத்ததுதான்.போன தீபாவளிக்கு கொடுத்தியே அந்த காசுதான்..//
இதை படிச்சதும் அழுகாச்சி அழுகாச்சியா வந்துருச்சி...

இருந்தாலும் மனம் நிறைய சந்தோசத்தோடு சொல்லுறேன்
Happy Happy Birthday

Prabhu said...

தப்பா நினைச்சுக்காதீங்க! ஆனா இந்த கதை எங்கயோ படிச்ச மாதிரி இருக்கு! நான் சில வருஷம் முன்னாடி பன்னிரண்டாப்பு படிச்சப்போ தமிழ் துணைப்பாடத்துல!