இந்தக்கேள்வி இச்சிறுவனின் மனதில் சிறுவயதில் இருந்தே இருக்கிறது..
அசைவம் கூடாதென்ற காந்தியே, ஆட்டுப்பால் குடித்தாராம்.. எனவே பால் சைவம் என்பது காந்தியின் கருத்து..
தன் கோவிலுக்கு மாலை அணிந்துவரும் பக்தர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது என உத்தரவிட்ட ஐயப்பன் புலிப்பால் குடித்தாராம்..அதனால் அவரது பார்வையில் பால் சைவமே..
முட்டையை அசைவம் என்று கூறுகிறார்கள்..எப்படி கோழியின் வயிற்றிலிருந்து முட்டை வருகிறதோ..அதே மாதிரிதானே மாட்டின் மடியிலிருந்து பால் வருகிறது..எப்படி பால் மட்டும் சைவமாக இருக்க முடியும் என்பதே இச்சிறுவனின் கேள்வி..
*************
என்னுடைய வாழ்வினில் நடந்த சம்பவம்:-
நான் சிறுவனாக இருந்த போது எனது சித்தப்பா ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்தார்.அந்த வருடம் அது அவருக்கு முதல் வருடம்.எனவே கன்னிச்சாமி என்றெல்லாம் அழைத்தார்கள்..அவரை கோவிலுக்கு வழியனுப்ப நானும் என்னோட அம்மாவும் போயிருந்தோம்.வழக்கமாக நாங்கள் போனால் எங்கள் சித்தி கறிகுழம்பு வைப்பது வழக்கம்..ஆனால் அன்று வைக்கவில்லை.ஏன் என்று கேட்டதற்கு சித்தப்பா அதெல்லாம் சாப்பிடக்கூடாது என்று அம்மா சொன்னாங்க..அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பால் குடித்தார்..
மறுபடியும் சந்தேகம்..பாலும் மாட்டிலிருந்து தானே வருகிறது..எப்படி சைவமாக முடியும்..
ஒரு உயிரை கொன்று அதன் இறைச்சியை புசிப்பது தான் அசைவம் என்றால் கன்றுக்குட்டி குடிக்க வேண்டிய பாலை மட்டும் நாம் குடிக்கலாமா..??
கன்றுக்குட்டியும் ஓர் உயிர்தானே..அதுக்கும் பசி என்ற ஒன்று இருக்கத்தானே செய்யும்...
*************
நாம் சைவம் என்று சாப்பிடிகின்ற நெல்,கத்திரிக்காய்,தக்காளி என எல்லா தாவரங்களுமே நிலத்தில் விழுந்தால் மறுபடியும் முளைக்கக்கூடியவைதான்..அப்படியானால் அதுக்கும் உயிர் இருக்கதான் செய்கிறது..உயிரைக்கொன்று தான் நாம் சாப்பிடுகிறோம்..
தாவரங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக பூக்கின்ற பூக்களை கூட மனிதர்கள் சைவம் என்று கூறியே சாப்பிடுகிறோம்..
*************
வீட்டில் என் அம்மாவிடம் ஒருமுறை காலையில் காபியை குடித்தவாறே கேட்டேன்.பால் சைவமா..அசைவமா என்று அவங்க சொன்ன பதில்..சைவமோ அசைவமோ "குடிச்சா நல்லா இருக்குல" என்கிறார்கள்..சரி நண்பர்களிடம் கேட்போம் என்று விவாதித்தால் "இவ்வளவு நாளா நல்லாதானாட இருந்த..தீடீரென்று என்ன ஆச்சு உனக்கு" அப்படி என்கிறார்கள்..
அதான் பதிவர்களிடம் விவாதிக்கலாம் என முடிவு செய்துவிட்டேன்...
தயவு செய்து விளக்கத்தினை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..
விவாதத்துடன்:-
பால் சைவமா..?? அசைவமா..??
Subscribe to:
Post Comments (Atom)
69 பின்னூட்டங்கள்:
எல்லாம் பிரம்மை.. எச்ச்சச்ச எச்ச்சச்ச்சா.. கச்ச்சச்ச்சா கச்ச்சச்சா..அஹம் பிரம்மாஸ்மி.. ஏதாவது புரியுதா? எனக்கும் புரியலப்பா..:-)))))
இவ்வளவு நாளா நல்லாதானாட இருந்த..தீடீரென்று என்ன ஆச்சு உனக்கு.. :)))))))))
aiyarkalukku ethu pidikkiratho athellam saivam.ethu avarkalukku pidikkatho athellam asaivam.
சைவம் அசைவம் எல்லாம் பார்க்க கூடாது . இறைச்சி சாப்பிட்டா தெய்வ குட்டம் என்று சொல்பவர்களை அவர்களின் அறியாமை என்று தான் சொல்ல வேண்டும் .
உடம்பிற்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிட வேண்டியது தான் .
பால் அசைவமாக தான் இருக்க வேண்டும் .
\\\ கார்த்திகைப் பாண்டியன் said...
எல்லாம் பிரம்மை.. எச்ச்சச்ச எச்ச்சச்ச்சா.. கச்ச்சச்ச்சா கச்ச்சச்சா..அஹம் பிரம்மாஸ்மி.. ஏதாவது புரியுதா? எனக்கும் புரியலப்பா..:-)))))\\
வாத்தியாருக்கே புரியலை அப்படின்னா எப்படி அண்ணா..
\\\ லோகு said...
இவ்வளவு நாளா நல்லாதானாட இருந்த..தீடீரென்று என்ன ஆச்சு உனக்கு.. :)))))))))\\\
ரைட்டு நீங்களுமா..
\\\Barari said...
aiyarkalukku ethu pidikkiratho athellam saivam.ethu avarkalukku pidikkatho athellam asaivam.\\\
அது என்னங்க நியாயம்..
ஐயர்கள் என்ன பெரிய இவங்களா..
\\\ Suresh Kumar said...
சைவம் அசைவம் எல்லாம் பார்க்க கூடாது . இறைச்சி சாப்பிட்டா தெய்வ குட்டம் என்று சொல்பவர்களை அவர்களின் அறியாமை என்று தான் சொல்ல வேண்டும் .
உடம்பிற்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிட வேண்டியது தான் .
பால் அசைவமாக தான் இருக்க வேண்டும் .\\\\
மிகவும் சரி அண்ணா..நீங்கள் சொல்லி இருப்பது..
குட் கொஸ்டின்....
இத தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு அப்டியே பக்கத்துல உக்காந்துக்கங்க... பின்னாடி வர்றகூடிய சந்ததிகள் அத படிச்சி பாத்து தெளிவா பதில் சொல்லுவாங்க...
உனக்கு மட்டும் எப்படி ராசா இப்படியெல்லாம் தோணுது.. ??!!
:))
\\\துபாய் ராஜா said...
குட் கொஸ்டின்....
இத தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு அப்டியே பக்கத்துல உக்காந்துக்கங்க... பின்னாடி வர்றகூடிய சந்ததிகள் அத படிச்சி பாத்து தெளிவா பதில் சொல்லுவாங்க...
உனக்கு மட்டும் எப்படி ராசா இப்படியெல்லாம் தோணுது.. ??!!
:))\\\
கொஷ்டின் நல்லாதான் இருக்கு..ஆனா நீங்க பதிலே சொல்லலை..
சமீபத்தில் கலைஞர் அவர்கள் தான் சிறுவனாக இருந்தபோது திரு கிருபானந்த வாரியாரை அசைவம் என் சாப்பிடக்கூடாது என்று கேட்டதாகவும் அதற்கு வாரியார் அவர்கள் .....
மேலும்
http://sarath-sirukathaigal.blogspot.com/2009/09/blog-post_10.html
பால் அசைவமே ! அது போல பூ, பழம் எல்லாமே அசைவமே !
\\\sarath said...
சமீபத்தில் கலைஞர் அவர்கள் தான் சிறுவனாக இருந்தபோது திரு கிருபானந்த வாரியாரை அசைவம் என் சாப்பிடக்கூடாது என்று கேட்டதாகவும் அதற்கு வாரியார் அவர்கள் .....
மேலும்
http://sarath-sirukathaigal.blogspot.com/2009/09/blog-post_10.html\\\\
உங்களுக்கு உங்கள் பதிவில் பின்னூட்டம் போட்டாச்சு அண்ணா...
\\சுந்தர் said...
பால் அசைவமே ! அது போல பூ, பழம் எல்லாமே அசைவமே !\\
என் இனம் அண்ணா நீங்கள்......
இந்த கார்த்திகை பாண்டி கூட புள்ளைய பலகவுட்டது தப்பா போச்சி....
உக்காந்து யோசிக்கிறேன்... உக்காந்து யோசிக்கிறேன்னு சொல்லி, இங்கே நம்ம புள்ளைய எப்படி கெடுத்து வச்சிருக்குன்னு... பாரு..
பால் அசைவமே!
தாவரத்தில் இலைகளை தவிர விதையாக இருக்கும் அனைத்தும் அசைவமே!
இது என்ன கேள்வி? பால் ஒரு திரவம் :-)) சும்மா...
நல்லாத்தான போய்க்கிட்டு இருந்திச்சி.......... ஏதோ ஒன்னு ஒன்னைய புடிச்சிருக்கு
பால் சைவமே
அதற்கு உயிர் கிடையாது
உயிர் இல்லாததால் பால் சைவமா?
அப்படியானால் செத்த ஆட்டையும், கோழியையும் சாப்பிடலாமா?
தனக்கு தேவையான உணவை தானே தயாரித்து கொண்டு வளரும் தாவரம் உயிருள்ளது தானே!
அப்போ தாவரம் அசைவமா?
There is nothing new in this question. Vardhaman Mahaveera has asked and answered this question 2500 years ago.
//அது என்னங்க நியாயம்..
ஐயர்கள் என்ன பெரிய இவங்களா..//
ஐயர்கள் மட்டுமல்ல. உலகில் பல பகுதிகளிலும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் உண்டு.
//ஐயர்கள் மட்டுமல்ல. உலகில் பல பகுதிகளிலும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் உண்டு. //
அசைவ உணவு சாப்பிடும் ஐயர்களும் உண்டு!
கல்கத்தாவில் மீன் பிரதான உணவு ஐயர்களுக்கு!
குழந்தைக்கு முதல் உணவும், முதியவர்களுக்கு கடைசி உணவும் பால் தான். குழந்தைக்கான பால் உணவு இயற்கை. அதை சைவம் / அசைவம் என்று வகைப்படுத்த முடியாது.
விதைபரவலுக்கு கனி(சதை) பழத்தில் இருப்பதால் மரத்துக்கு பலன் இல்லை, அது விதை பரவலுக்கு உதவுபவர்களுக்கு கிப்ட். அது போல் பிற உயிரனங்களில் கால்நடைகளுக்கு கன்றுக்குத் தேவையை விட மிகுதியான பால் சுரப்பதால் தான் அவை வீட்டு விலங்குகள் ஆனது.
பால் கண்ணுக்குட்டிக்கு என்பது சரிதான். கூடவே பிறருக்காகவும் மாடு மிகுதியாக சுரக்கிறது. கால்நடை இனங்கள் பரவிவளர பால் மறைமுகமாக அவற்றிற்கு துணை செய்கின்றன. இறைச்சியை உண்ணுவது அது வேறு.
பால் ஒரு இயற்கை உணவு, அசைவா சைவமா என்று பார்ப்பது தேவை இல்லை.
//கால்நடைகளுக்கு கன்றுக்குத் தேவையை விட மிகுதியான பால் சுரப்பதால் தான் அவை வீட்டு விலங்குகள் ஆனது.//
அது உங்ககிட்ட வந்து அப்படி சொல்லுச்சா!?
தாய் பால் குடிபதும், தாயை சாபிடுவதற்கும் உள்ளம் வித்யாசம் உள்ளது அன்பரே. உங்கள் கேள்விக்கு விடை கிடைத்திருக்கும்.
தாய் பால் குடிபதும், தாயை சாபிடுவதற்கும் உள்ளம் வித்யாசம் உள்ளது அன்பரே. உங்கள் கேள்விக்கு விடை கிடைத்திருக்கும்.
//தாய் பால் குடிபதும், தாயை சாபிடுவதற்கும் உள்ளம் வித்யாசம் உள்ளது அன்பரே. உங்கள் கேள்விக்கு விடை கிடைத்திருக்கும். //
மாட்டுப்பாலை நாம் குடிப்பதற்கும், கன்றுகுட்டி குடிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தையும் அப்படியே சொல்லிவிடுங்களேன்!
மனித மிருகத்திற்கு பகுத்தறிவுன்னு ஒரு கருமம் இருப்பதால் இப்படியெல்லாம் பேரு வெச்சு கொழப்புது.
உணவில் சைவம் அசைவம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. தனக்கு விருப்பமுள்ள, (உடலும், பொருளும் ஒத்துழைத்து) தன்னால் முடிகிற அனைத்தையும் அவரவர் உண்ண வேண்டியது தான்.
உண்பது உயிர்வாழவே, உணவாக்க கிடைப்பது அனைத்துமே இயற்கைதான்.
உயிர்கள் உண்பதும் இயற்கை, உணவும் இயற்கை.
//எப்படி கோழியின் வயிற்றிலிருந்து முட்டை வருகிறதோ..அதே மாதிரிதானே மாட்டின் மடியிலிருந்து பால் வருகிறது..எப்படி பால் மட்டும் சைவமாக இருக்க முடியும் //
முட்டையிலிருந்து கோழிவரும் பாலில் இருந்து கன்றுக்குட்டி வருமா!????
முட்டையில் இருக்கும் சத்து பாலில் இருக்கலாம் அதனால் முட்டையும் பாலும் ஒன்றாகுமா?
உண்ணும் உணவின் குண இயல்புகளே உடலின் இயல்புகளை நிர்ணயிக்கின்றது,
உடலின் இயல்பே உள்ளத்தில் எண்ணங்களின் உற்பத்திக்கு உறுதுணையாகிறது.
எண்ணங்களே எம்மை இயக்கும் மந்திரங்களாகும்,
ஆகவே கண்டதையும் திண்டு கண்டதையும் எண்ணி தானும் அழிந்து அடுத்தவனையும் அழிக்கும் ஆற்றலை எப்படிப் பெறுகிறான் அப்பாவி மனிதன் பாருங்கள்.
முதலில் சைவம் என்ற சிதாந்த்தமே ஒரு பொய், உலகில் பல கால நிலைகளுக்கு ஏற்ப மனிதன் வாழ்கின்றன், அவனுக்கு எது தேவை படுகின்றதோ அதை சாப்பிட்டு / குடித்து விட்டு போகட்டுமே, மேலும் உலகில் உள்ள எல்லோரும் சைவம் மட்டுமே சாபிடவேண்டும் என்று கட்டளை இட்டால் இன்று விற்கும் பருப்பின் விலை இமாலய அளவிற்கு சென்று விடும், ஒரு கிரை கட்டின விலை பத்தாயிரம் ஆகி விடும், மேலும் துருவ பிரதேசத்தில் வாழ் பவர்களின் கதி என்ன ஆகும்?
கீழ் கண்ட கேள்விகளுக்கு பதில்சொல்லுங்கள்.
உயிர் வகைகளை உணவுக்காக கொல்வதை உயிர் வதை என்று காரணம் கூறிகின்றனர், உயிர் வதை தான் என்றல் அவர்கள் பல விடயங்களை தெளிவு படுத்த வேண்டும்.
கால் நடைகளை விவசாயா பணிகளிலும், பாரம் இழுக்கும் பணிகளிலும் உபயோக படுத்துவது உயிர் வதை இல்லையா ?
மனிதன் அருந்தும் தண்ணிரிலும் கோடி கணக்கான உயிர் கல் இருக்கிறதே அது உயிர் வதை இல்லையா ?
கொசு தேள் பாம்பு போன்ற எத்தனையோ உயிர் வகைகளை மனிதன் தனது சுயநலத்திற்கு கொள்வது உயிர் வதை இல்லையா?
இன்றைய அறிவியல் உண்மையல் தாவரங்களுக்கு உயிர் உள்ளதை நிருபணம் செய்யபடுல்லாதே அப்போது தாவர செடி கொடிகளை உட் கொள்வது உயிர் வதை இல்லையா ?
சைவம் தான் சாப்பிட வேண்டும் என்று அடம் பிடிபவர்கள் மீன் என்னை மாத்திரைகளை சாப்பிடு வதன் நோக்கம் என்ன ? அது உயிர் வதை இல்லையா ?
ஆனைக்கு அர்ரம்னா, குதிரைக்கு குர்ரம்மா? என்னய்யா உங்க லாஜிக்..
கோழி வயிற்றிலிருந்து முட்டை வருதாம், மாட்டின் மடியிலிருந்து பால் வருதாம், அதனால ரெண்டும் ஒண்ணாம்... சாணி கூடத்தான் மாட்டு வயிற்றிலிருந்து வருது, அதனால முட்டை, பால், சாணி எல்லாத்தையும் ஒண்ணா ஒப்பிடலாமா?
\\நையாண்டி நைனா said...
இந்த கார்த்திகை பாண்டி கூட புள்ளைய பலகவுட்டது தப்பா போச்சி....
உக்காந்து யோசிக்கிறேன்... உக்காந்து யோசிக்கிறேன்னு சொல்லி, இங்கே நம்ம புள்ளைய எப்படி கெடுத்து வச்சிருக்குன்னு... பாரு..\\\
வருகைக்கு நன்றி நைனா அவர்களே..அடிக்கடி வந்து போங்க..
\\\வால்பையன் said...
பால் அசைவமே!
தாவரத்தில் இலைகளை தவிர விதையாக இருக்கும் அனைத்தும் அசைவமே!\\\
சரியாக சொன்னீங்க வால் அண்ணே..
\\\சிங்கக்குட்டி said...
இது என்ன கேள்வி? பால் ஒரு திரவம் :-)) சும்மா...\\\
வருகைக்கு நன்றி சிங்கக்குட்டி..
நீயும் யோசிக்க ஆரம்பிச்சுட்டியா...
\\அத்திரி said...
நல்லாத்தான போய்க்கிட்டு இருந்திச்சி.......... ஏதோ ஒன்னு ஒன்னைய புடிச்சிருக்கு\\\\
என்னையை எதுவும் பிடிக்கலை அண்ணா..தெளிவாகத்தான் இருக்கிறேன்
\\cheena (சீனா) said...
பால் சைவமே
அதற்கு உயிர் கிடையாது\\\\
இதில் கண்டிப்பாக உடன்பாடு இல்லை சார்..
உயிர் இல்லை என்றால் எப்படி சைவம்..வால் அண்ணன் சொன்னது போல் செத்துப்போன ஆடும்,மாடும் சைவமா?
\\\ nandan said...
There is nothing new in this question. Vardhaman Mahaveera has asked and answered this question 2500 years ago.\\\\
அப்படியே அவர் 2500 வருஷத்துக்கு முன்னாடி என்ன பதில் சொன்னார் என்று கூறினால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்..
\\\குடுகுடுப்பை said...
மனித மிருகத்திற்கு பகுத்தறிவுன்னு ஒரு கருமம் இருப்பதால் இப்படியெல்லாம் பேரு வெச்சு கொழப்புது.\\\
குழப்பத்திற்கு விடை தெரியாமல் தான் கேட்கிறேன் அண்ணா..
\\ பீர் | Peer said...
உணவில் சைவம் அசைவம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. தனக்கு விருப்பமுள்ள, (உடலும், பொருளும் ஒத்துழைத்து) தன்னால் முடிகிற அனைத்தையும் அவரவர் உண்ண வேண்டியது தான்.
உண்பது உயிர்வாழவே, உணவாக்க கிடைப்பது அனைத்துமே இயற்கைதான்.
உயிர்கள் உண்பதும் இயற்கை, உணவும் இயற்கை.\\\\\\
அனைத்தும் இயற்கை என்பது தவறான கருத்து..
நிலத்தை உழுதுவிட்டு இயற்கையாக நெல் முளைக்கும் என்று இருந்தால் அது முட்டாள்தனம்..மனிதன் இறங்கி வேலை பார்த்தால் மட்டுமே அங்கு நெல் கிடைக்கும்..எனவே அது செயற்கையே
\\\ Anonymous said...
//எப்படி கோழியின் வயிற்றிலிருந்து முட்டை வருகிறதோ..அதே மாதிரிதானே மாட்டின் மடியிலிருந்து பால் வருகிறது..எப்படி பால் மட்டும் சைவமாக இருக்க முடியும் //
முட்டையிலிருந்து கோழிவரும் பாலில் இருந்து கன்றுக்குட்டி வருமா!????
முட்டையில் இருக்கும் சத்து பாலில் இருக்கலாம் அதனால் முட்டையும் பாலும் ஒன்றாகுமா?
உண்ணும் உணவின் குண இயல்புகளே உடலின் இயல்புகளை நிர்ணயிக்கின்றது,
உடலின் இயல்பே உள்ளத்தில் எண்ணங்களின் உற்பத்திக்கு உறுதுணையாகிறது.
எண்ணங்களே எம்மை இயக்கும் மந்திரங்களாகும்,
ஆகவே கண்டதையும் திண்டு கண்டதையும் எண்ணி தானும் அழிந்து அடுத்தவனையும் அழிக்கும் ஆற்றலை எப்படிப் பெறுகிறான் அப்பாவி மனிதன் பாருங்கள்.\\\
அனானி அவர்களே,,,
நான் இப்போ கோழியிலிருந்து முட்டை வந்ததா..இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்று கேட்கவில்லை..
\\\\கலாட்ட பையன் said...
முதலில் சைவம் என்ற சிதாந்த்தமே ஒரு பொய், உலகில் பல கால நிலைகளுக்கு ஏற்ப மனிதன் வாழ்கின்றன், அவனுக்கு எது தேவை படுகின்றதோ அதை சாப்பிட்டு / குடித்து விட்டு போகட்டுமே, மேலும் உலகில் உள்ள எல்லோரும் சைவம் மட்டுமே சாபிடவேண்டும் என்று கட்டளை இட்டால் இன்று விற்கும் பருப்பின் விலை இமாலய அளவிற்கு சென்று விடும், ஒரு கிரை கட்டின விலை பத்தாயிரம் ஆகி விடும், மேலும் துருவ பிரதேசத்தில் வாழ் பவர்களின் கதி என்ன ஆகும்?
கீழ் கண்ட கேள்விகளுக்கு பதில்சொல்லுங்கள்.
உயிர் வகைகளை உணவுக்காக கொல்வதை உயிர் வதை என்று காரணம் கூறிகின்றனர், உயிர் வதை தான் என்றல் அவர்கள் பல விடயங்களை தெளிவு படுத்த வேண்டும்.
கால் நடைகளை விவசாயா பணிகளிலும், பாரம் இழுக்கும் பணிகளிலும் உபயோக படுத்துவது உயிர் வதை இல்லையா ?
மனிதன் அருந்தும் தண்ணிரிலும் கோடி கணக்கான உயிர் கல் இருக்கிறதே அது உயிர் வதை இல்லையா ?
கொசு தேள் பாம்பு போன்ற எத்தனையோ உயிர் வகைகளை மனிதன் தனது சுயநலத்திற்கு கொள்வது உயிர் வதை இல்லையா?
இன்றைய அறிவியல் உண்மையல் தாவரங்களுக்கு உயிர் உள்ளதை நிருபணம் செய்யபடுல்லாதே அப்போது தாவர செடி கொடிகளை உட் கொள்வது உயிர் வதை இல்லையா ?
சைவம் தான் சாப்பிட வேண்டும் என்று அடம் பிடிபவர்கள் மீன் என்னை மாத்திரைகளை சாப்பிடு வதன் நோக்கம் என்ன ? அது உயிர் வதை இல்லையா ?\\\\
மிகவும் சரியாக கூறியுள்ளீர்கள் அண்ணா..
நீங்கள் கூறும் அனைத்தும் உயிர்வதையே..
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா..அடிக்கடி வாங்க..
\\\Raja said...
ஆனைக்கு அர்ரம்னா, குதிரைக்கு குர்ரம்மா? என்னய்யா உங்க லாஜிக்..
கோழி வயிற்றிலிருந்து முட்டை வருதாம், மாட்டின் மடியிலிருந்து பால் வருதாம், அதனால ரெண்டும் ஒண்ணாம்... சாணி கூடத்தான் மாட்டு வயிற்றிலிருந்து வருது, அதனால முட்டை, பால், சாணி எல்லாத்தையும் ஒண்ணா ஒப்பிடலாமா?\\\
ராஜா அவர்களே..
எங்க ஊரில மாட்டி வயித்திலிருந்து வருகிற பால் மட்டும் குடிக்கிறோம்...சாணியை எல்லாம் சாப்பிடுவதில்லை..
நீங்க எப்படி.
\\\பிரியமுடன்...வசந்த் said...
நீயும் யோசிக்க ஆரம்பிச்சுட்டியா...\\\
ஆமாங்கண்ணா..
சார், உங்க ஒப்பீடே தவறு என்பதற்காகவே சாணியும் மாட்டு வயிற்றிலிருந்துதானே வருகிறது என்றேன், எவ்வாறு மூன்று பொருட்களையும் ஒப்பீடு செய்வீர்கள் என்று.
//முட்டையிலிருந்து கோழி வரும், பாலிலிருந்து மாடு வருமா//
//குழந்தை தாய்ப்பால் குடிப்பதற்கும், தாயை வெட்டி சாப்பிடுவதற்கும் வேறுபாடு உள்ளது//
மேற்கண்ட கமெண்ட்ஸ் மேலே உள்ளது, ஒப்பீடு தவறு என்பதைத்தான் அவர்களும் சொல்கிறார்கள்.
//பால் சைவமா..அசைவமா//
http://www.kamakoti.org/tamil/3dk168.htm
//தாவரத்தில் இலைகளை தவிர விதையாக இருக்கும் அனைத்தும் அசைவமே//
http://www.kamakoti.org/tamil/3dk160.htm
தெய்வத்தின் குரலில் தெளிவான பதில் கண்டு தெளியவும்,
//£‹ú «ð£üùñ£è£¶. è¡Á‚° õJÁ Gó‹ð ᆴ‚ ªè£´ˆîH¡, ð² èwìI™ô£ñ™ ²óŠ¹ M´Aø õ¬óJ™ â…C»œ÷ ð£¬ô‚ èø‰¶  â´ˆ¶‚ ªè£œõF™ ðJ™¬ô. ÞF«ô 𲾂° U‹¬ú Þ™¬ô. èø‚è£M†ì£™î£¡ 𣙠膮‚ ªè£‡´ ñ® èùˆ¶‚ 舶‹. Þó‡ì£õî£è„ ªê£¡ù Cˆî Mè£ó‹ róˆî£™ à‡ì£õF™//
இது தான் தெய்வத்தின் குரலா!?
உங்க தெய்வம் செய்த கொலை கேஸ் என்னாச்சு!
பால் குடிச்சிகிட்டு இருக்காரா? இல்ல உள்ளே கழி திங்கிறாரா?
//இது தான் தெய்வத்தின் குரலா!?//
கொடுத்த லிங் "தெய்வத்தின் குரல்" உடையதே.
உஙகள் வக்கிரமான கேள்விகளுக்கும் தெய்வம் விரைவில் விடைகொடுக்கும்.
இது தொடர்பான எனது இடுகை நீங்க சைவமா அசைவமா?
தாவரங்கள் எப்படியெல்லாம் மனிதர்களால் கொடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டு கடைசியில் உண்ணப்படுகின்றன அப்படின்னு ஒரு எட்டு http://www.vegetablecruelty.com/gallery/?show=1க்கு போய் பாத்துருங்க.
(இளகிய மனம் கொண்டோர், இதயநோயாளிகள் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)
//
உஙகள் வக்கிரமான கேள்விகளுக்கும் தெய்வம் விரைவில் விடைகொடுக்கும்.//
அடக்கொடுமையே இது வக்கிரமா!?
சரி உங்க தெய்வம் உங்களுக்கு தலையை கொடுக்கலையே!
(தலையில்லாத) முண்டம் மாதிரி வந்து அனானியா பின்னூட்டம் போடுறிங்க!?
சொந்த பேர்ல வாங்க நண்பரே!
அப்புறம் வறுத்தெடுக்கலாம் உங்கள் தெய்வங்களை!
மேலும் இதை பற்றி அறிய, சொடுகவும் இந்த லிங்கை
http://www.youtube.com/watch?v=s4sMSxHbyR4&NR=1
நடத்துங்க தம்பி.
பசியை போக்குவதற்காக படைக்கப்பட்ட உணவுகளை மனிதர்களாகிய நாம்தான் (அதிலும் இந்தியாவில் அதிகம்) சைவம்/அசைவம் என்று பிரித்து இது கூடாது அது கூடும் என்று பிரித்து அதற்கான பிரிவினை உண்டாக்கி இருக்கிறோம், எல்லா உணவுகளிலேயும் ஒவ்வொரு விதமான விட்டமின், சத்து இருக்கிறது.. பிடித்தால் எதையும் சாப்பிடலாம். இதுலே சைவம்/அசைவம் என்று எதுவுமே இல்லை
அனானி தலைவா,
ரொம்ப அருமையான ஒரு லிங்க் கொடுத்து இருக்கப்ப உனக்கு நான் மிக்க நன்றி சொல்ல கடமை பட்டவனாக இருக்கிறேன், இவ்ளோ நாள் தட்ஸ் தமிழ்.காம் ஒரு யுத்தம் மே நடந்துகிட்டு இருந்துச்சு பார்ப்பான பத்தி, அதுக்கு மேற்கோள் காட்டுறதுக்கு என்கிட்ட சரியான ஆதரம் இல்லமா இருந்துச்சி, பிராமின்ஸ் ஷ பத்தி டார்ர் டாரா கிளிகிரதுகு ரொம்ப யூஸ் புள்ள இருக்கும் நு நினைக்கிறன் இந்த லிங்க் . அனானி மக்கா சொந்த செலவுல சூனியம் வச்சிகிடியே, அஹா இவளவு நாள் இந்த லிங்க் நம்ப கண்ணுல படமே போய்டுச்சே........
// Anbu said...
அனைத்தும் இயற்கை என்பது தவறான கருத்து..
நிலத்தை உழுதுவிட்டு இயற்கையாக நெல் முளைக்கும் என்று இருந்தால் அது முட்டாள்தனம்..மனிதன் இறங்கி வேலை பார்த்தால் மட்டுமே அங்கு நெல் கிடைக்கும்..எனவே அது செயற்கையே//
அண்ணே, நீங்க உணவு உண்பது இயற்கையா செயற்கையா?
வால், இலை மட்டும் சைவமானது ஏன்? புதசெவி.
அதுவும் இல்லைனா பாவம் சைவபிள்ளைங்க சோறு தண்ணி இல்லாம செத்து போயிருமே!
பால் அசைவமோ சைவமோ உடம்புக்கு ரொம்ப நல்லது. இப்படியே எல்லாத்திலும் பார்த்தால் தண்ணி கூட குடிக்க முடியாது. ஏன்னா அதுல கூடா கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் எக்கச்சக்கமா இருக்கு. சூடு காட்டி குடிச்சாலும் கிருமி சூப் குடிக்கிறேன்னுதான் சொல்லனும்.
//உயிர் இல்லாததால் பால் சைவமா?
அப்படியானால் செத்த ஆட்டையும், கோழியையும் சாப்பிடலாமா?//
பாலானது எலும்பினாலும் சதையினாலுமான பிணக்கூடு அல்லவே.
//சொந்த பேர்ல வாங்க நண்பரே!//
வந்தமா பேசினமா போனமான்னு இல்லாமா எதுக்குங்க இந்த ஊரு பேரு எல்லா,
அடுத்தவங்க முண்டமாக்கிறத்துக்கு முண்ணாடி நாமளே முண்டமாகீட்ட்டா நமக்கு நல்லதில்லையா.
//அஹா இவளவு நாள் இந்த லிங்க் நம்ப கண்ணுல படமே போய்டுச்சே........//
அனானி தொண்டரே
இப்போதா உமக்கு நல்ல வந்திருக்காப் போல. "தெய்வத்தின் குரல்" எல்லாத்தையும் நல்லா படிச்சு அகத்தை தூய்மை படுத்தீடும். அப்புறம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்தான்,
ulla varum pothu nalla thanya vanthen pokum pothu ...........
S.A. நவாஸுதீன் said...
பால் அசைவமோ சைவமோ உடம்புக்கு ரொம்ப நல்லது. இப்படியே எல்லாத்திலும் பார்த்தால் தண்ணி கூட குடிக்க முடியாது. ஏன்னா அதுல கூடா கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் எக்கச்சக்கமா இருக்கு. சூடு காட்டி குடிச்சாலும் கிருமி சூப் குடிக்கிறேன்னுதான் சொல்லனும்.
கிருமி சூப் குடிக்கிறேன்னுதான் சொல்லனும்.
super anna
\\அனானி தொண்டரே
இப்போதா உமக்கு நல்ல வந்திருக்காப் போல. "தெய்வத்தின் குரல்" எல்லாத்தையும் நல்லா படிச்சு அகத்தை தூய்மை படுத்தீடும். அப்புறம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்தான்,//
எல்லோரும் போய் அந்த லிங்க படிச்சி பார்த்திவிட்டு வாங்க பெரியார் தொண்டர்களுக்கு வேலை மிச்சம், கண்டிபா பிராமின் தவிர இந்து மதத்துல உள்ள மத்த ஜாதி காரங்க படிச்சா வெக்கி தலை குனிச்சு வேற மதத்திற்கு கண்டிபா மாறி விடுவான், அந்த அளவுக்கு வருனஷிராம கொள்கை, உடன்கட்டை ஏறுதல், பாலிய விவாகம், பெண் அடிமை தனம் எல்லாம் நிறைஞ்ச, தெய்வம் குரல் என்ற போர்வையில் ஒரு கலுசடையின் குரல் நிரம்பி இருக்கு.
@ வால்ஸ்,
/இது தான் தெய்வத்தின் குரலா!?
உங்க தெய்வம் செய்த கொலை கேஸ் என்னாச்சு!
பால் குடிச்சிகிட்டு இருக்காரா? இல்ல உள்ளே கழி திங்கிறாரா?/
இது கணினிக் கடவுள் மப்புல, எழுத்துரு சரியாத் தெரியாமக் காமிச்ச குரல்! தெய்வத்தின் குரல் என்று சொல்வது இப்போதிருக்கும் தெய்வத்தின் தெய்வம்-அதாங்க, இவருக்கு முந்தி மடாதிபதியா இருந்தவரோட குரல்!
அடுத்த கேள்விக்கு, கோர்டில இழுத்துக்கிட்டிருக்கு!
கடைசிக் கேள்விக்கு அவர் எப்பவும் போல வெளியில உலாத்திட்டுத் தான் இருக்கார். ஏற்லேநேவே பேசி வச்ச மாதிரி, ஒவ்வொரு அரசுத் தரப்பு சாட்சியாக, பல்டி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பேசிவைத்ததுபோலவே, கூடிய சீக்கிரம் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டு வெளியே வந்து விடுவார்! வேறு என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
//தெய்வம் குரல் என்ற போர்வையில் ஒரு கலுசடையின் குரல் நிரம்பி இருக்கு.//
உம்முள் நிரம்பிள்ள துஷ்ட குணங்களே இப்படியெல்லாம் எழுத்ததூண்டுகிறது என்பதனை தெரிந்து கொண்டேன்,
மெய்யோர் தன்னைப் பழிக்காதீர்
கிடைத்த வாழ்வை அழிக்காதீர்.
இந்த மாதிரி எல்லாரும் யோசிக்க ஆரம்பிச்சா நாடு எங்க போகும்?
ல்லாம் பிரம்மை.. எச்ச்சச்ச எச்ச்சச்ச்சா.. கச்ச்சச்ச்சா கச்ச்சச்சா..அஹம் பிரம்மாஸ்மி.. ஏதாவது புரியு
Post a Comment