எனக்கு வந்த குறுஞ்செய்திகள்..மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..

குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...

எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..

ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..

என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..

என்னை அல்ல...
மழையை..

**********************

அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..

நான் அவளை
சுற்றினேன் காதலோடு..

அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..

****************

நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..

****************

மின்னலே..
உன்னை ஒருமுறை பார்த்தால்
கண்களை எரித்துவிடுகிறாய்..

ஒருமுறை அவள் கண்களை
நேருக்கு நேர் பார் நீயே
எரிந்து விடுவாய்..

****************

சூரியனே.. இன்று மட்டும் வராதே!

அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..

****************

உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்...

****************

இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..

****************

எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..

****************

உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!

****************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

20 பின்னூட்டங்கள்:

வால்பையன் said...

முதல் மேட்டரை தவிர மற்றதெல்லாம் காதல் தான்!

அன்பு அண்ணே வீட்டுல சொல்லி சீக்கிரம் கால் கட்டு போடுங்க!

துபாய் ராஜா said...

அன்புத்தம்பி அனைத்து செய்திகளும் அருமை தம்பி.

லோகு said...

//வால்பையன் said...

முதல் மேட்டரை தவிர மற்றதெல்லாம் காதல் தான்!

அன்பு அண்ணே வீட்டுல சொல்லி சீக்கிரம் கால் கட்டு போடுங்க!//

குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் வால்பையன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்..

வழிப்போக்கன் said...

ஒரே காதல் மழையா பொழிகிறீங்களேஅண்ணா....
:)))

Raju said...

OK.

S.A. நவாஸுதீன் said...

மழை - ரொம்ப டாப்பு
மத்ததெல்லாம் ஓக்கே

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

Karthik said...

ஹா..ஹா. :)))

//அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..

நான் அவளை
சுற்றினேன் காதலோடு..

அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..//

கடைசி வரியை விட்டுட்டீங்களே?

ஓடு..ஓடு..ஓடு!

Cable சங்கர் said...

m..mm.. வயசு.. :)

தேவன் மாயம் said...

ஹா..ஹா. :)))

//அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..

நான் அவளை
சுற்றினேன் காதலோடு..

அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..//

கடைசி வரியை விட்டுட்டீங்களே?
///

நாங்களும் கொலை வெறியோட சுத்திக்கிட்டு இருக்கோம்!!!அன்பு! மாட்டினே அவ்வளவுதான்!!!இஃகி! இஃகி!

கார்த்திகைப் பாண்டியன் said...

Love"O"phobia..:-))))

தீப்பெட்டி said...

//நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..//

எனக்கு பிடித்த குறுஞ்செய்தி..

*இயற்கை ராஜி* said...

mmmmmmm........

Sen22 said...

Ella SMS-m Nalla irukku..

cheena (சீனா) said...

ஆகா ஆகா - எழுது எழுது - காதல் பைத்தியம் பிடித்து அலையாதே - ஒடம்பப் பாத்துக்க - நான் அம்மா கிடே சொல்றேன் - நல்ல பொண்ணாப் பாக்கச் சொல்லுறேன் - சரியா

முதல் கவிதை சூப்பர் - அருமை அருமை

நல்வாழ்த்துகள்

Unknown said...

அருமை...
அழகான தொகுப்பு...
வாழ்த்துக்கள்...

சுந்தர் said...

நல்லா இருக்கு தம்பி !

சிங்கக்குட்டி said...

உங்க வீடு சினேகா வீட்டுக்கு பக்கமோ? :-))

Saranya said...

இயல்பாய் இருந்தது முதல் SMS
மற்றபடி...... ok
சிரிக்க வைக்கும் sms இருக்கா?

Anonymous said...

நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்

Suparappu........