வேட்டைக்காரன்-முன்நவீனத்துவமான விமர்சனம்..


ஏ.வி.எம் தயாரிப்பில் சன் பிக்சர்ஸின் வெளியீட்டில் மிகவும் பிரம்மாண்டமாய் வந்திருக்கும் படம் வேட்டைக்காரன்...

பொதுவாகவே விஜய் படங்களில் முதலில் ஒரு ஓபனிங் சாங் வரும்..ஆனால் இப்படத்தின் முதல் காட்சியே நம் நெஞ்சை உருக்குகிறது..விஜய் பத்து வயது சிறுவனாக வருகிறார்..அதற்காக அவர் கடினமாக உழைத்திருப்பார் என எதிர்பார்க்கிறேன்..கண்ணில்லாத அக்கா...காலில்லாத தம்பி..ஆஸ்த்துமா நோயில் தாய்..மரண படுக்கையில் தந்தை..வேலையில்லாமல் விஜய்..என முதல் காட்சியிலே ஒரு குடும்பத்தின் கஷ்டங்களை நம் முன்னே காட்டுகிறார் இயக்குனர் பாபு சிவன்..

விஜய் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர இன்டர்வியூ போகிறார்..அங்கே இவரது திறமை அவமதிக்கப்படிகிறது உடனே"வேட்டைக்காரன் டோய் வேட்டைக்காரன் டோய்"..என்ற பாடல் ஒளிபரப்பாகிறது..பாடலிலே விஜய் அந்த கம்பெனியின் எம்.எடியை தீர்த்துக்கட்டுகிறார்..

இப்படி வேலை தேடிக்கொண்டிருக்கும் விஜயின் கனவு என்னவென்றால் தமிழகத்தின் முதல்வர் ஆவதுதான்..இதற்காக இவர் படும் கஷ்டங்கள்..படத்தில் மிகவும் அருமையாக சொல்லப்பட்டுள்ளன..இடையில் அனுஷ்காவுடன் மோதல்..மோதலின் விளைவு காதல்..என தன் இளமைக்கால வாழ்க்கையையும் என்ஜாய் பண்ணுகிறார்..அனுஷ்கா மிகவும் அழகாக இருப்பதுடன் தன் காதலன் முதலமைச்சராக அவர் படும் கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்லை..இக்கட்டத்தில் தமிழகத்தில் பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடவே ஆளுங்கட்சி கவிழ்கிறது..இந்நேரத்தில் விஜய் கட்சி உருவாக்குகிறார்..தேர்தலில் நிற்கிறார்..கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர்..மிகவும் கஷ்டப்படுகிறார்..படத்தில் சந்திரசேகர் விஜயின் மாமாவாக வருகிறார்..அருமையான நடிப்பு..அனுஷ்கா கட்சியின் விளம்பரத்தூதுவர்.

இறுதியில் தேர்தலில் வென்றும் விடுகிறார்...தமிழக முதல்வனாக விஜய்..வெள்ளை வேஷ்டி,வெள்ளை சட்டையில்..பார்க்கவே கொடுத்து வைக்கனும் நம் கண்களுக்கு ..

படத்தில் எந்த ஒரு பாமரனும் நினைத்தால் தமிழகத்தில் முதல்வர் ஆகலாம் என்ற உண்மையை எடுத்துக்காட்டியுள்ளனர். :-((

கிளைமேக்ஸ் காட்சியில் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திர சேகர் அவர்கள் தமிழக மக்களுக்கு ஒரு இருபது நிமிடம் அறிவுரை கூறுகிறார்...

படத்தின் பிற்பாதியில் தமிழகத்தின் வறுமை எப்படி குறைந்தது..விஜயின் ஆட்சி எப்படி இருந்தது என்பதை மிகவும் அழகாக கூறியிருக்கார் இயக்குனர்..

படத்தில் பிண்ணனி இசையும் (விஜய் ஆண்டனி) கிளைமேக்ஸ் வசனங்களும் மிக அருமை..

வேட்டைக்காரன்:- தமிழகத்தின் பஞ்சத்தை வேட்டையாட வந்தவன்..

டிஸ்கி 1 : படத்தில் விஜய் ஆட்சி செய்வதை பார்க்கும்போது நமக்கே இவர் உண்மையிலே ஆட்சிக்கு வந்தால் எப்படிக்கு இருக்கும் தமிழகத்தின் பஞ்சம் தீர்ந்துவிடுமோ என்று தோன்றுகிறது..

டிஸ்கி 2 : இங்கு கூறியிருக்கும் அனைத்தும் கற்பனையே...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

38 பின்னூட்டங்கள்:

லோகு said...

ரைட்டு..

Unknown said...

//தேர்தலில் நிற்கிறார்..கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர்..மிகவும் கஷ்டப்படுகிறார்..படத்தில் சந்திரசேகர் விஜயின் மாமாவாக வருகிறார்..அருமையான நடிப்பு.. //

படத்தில மட்டும் தானே 'மாமா'வா வாறார்??? ;)

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏம்பா.. நம்ம ஊர் திருட்டு விசிடிய ஏதோ புளு ரே டிஸ்குன்னு சொல்லி போன படத்தில ஊர ஏமாத்தின மாதிறி இந்த படத்திலே வோட்டிங்க மெஷின வெச்சு ஏதும் காமெடி இல்லயா?

Raju said...

ரைட்டு..

ப்ரியமுடன் வசந்த் said...

தப்பு...(ரைட்டுக்கு ஆப்போசிட்)

சுந்தர் said...

நடத்துங்க தம்பி

துபாய் ராஜா said...

யானை இளைச்சதுன்னா எலி ஏறி விளையாடுமாம். படம் டிரெயிலரே வரலை விமர்சனமா எழுதுற நீ.....

இருடி இரு.ரிலீசாகுற தியேட்டர்ல பத்துநாள் உன்னை கட்டிப்போடுறோம்.
அதற்கப்புறம நீ திரும்பி வந்து..... நிச்சயம் வரமாட்டே.....மீறி வந்தா அப்புறம் வந்து எழுது பின்நவீனத்துவ விமர்சனத்தை.....

வான்முகிலன் said...

இன்னும் இன்னும் நிறைய உங்ககிட்ட இருந்து எதிர்பாக்குறேன்...

Anbu said...

\\லோகு said...

ரைட்டு..\\\

நன்றி மச்சான் வருகைக்கு..

Anbu said...

\\ கனககோபி said...

//தேர்தலில் நிற்கிறார்..கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர்..மிகவும் கஷ்டப்படுகிறார்..படத்தில் சந்திரசேகர் விஜயின் மாமாவாக வருகிறார்..அருமையான நடிப்பு.. //

படத்தில மட்டும் தானே 'மாமா'வா வாறார்??? ;)\\\

நான் அப்படித்தான் நினைக்கிறேன்..

நீங்க என்ன நினைக்கிறிங்க..

வால்பையன் said...

அன்பு உங்களுக்கு அல்ல மொக்கை போடவும் வருது!

கலக்குங்க!

Anbu said...

\\\\ குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏம்பா.. நம்ம ஊர் திருட்டு விசிடிய ஏதோ புளு ரே டிஸ்குன்னு சொல்லி போன படத்தில ஊர ஏமாத்தின மாதிறி இந்த படத்திலே வோட்டிங்க மெஷின வெச்சு ஏதும் காமெடி இல்லயா?\\\

படம் போய் பாருங்க அண்ணா..எல்லாத்தையும் நானா எப்படி சொல்ல...

Anbu said...

\\ராஜு.. said...

ரைட்டு..\\\

வருகைக்கு நன்றி தல..

Anbu said...

\\\ பிரியமுடன்...வசந்த் said...

தப்பு...(ரைட்டுக்கு ஆப்போசிட்)\\

ரைட்டு அண்ணே..

Anbu said...

\\சுந்தர் said...

நடத்துங்க தம்பி\\\

வருகைக்கு நன்றி அண்ணா..

Anbu said...

\\\துபாய் ராஜா said...

யானை இளைச்சதுன்னா எலி ஏறி விளையாடுமாம். படம் டிரெயிலரே வரலை விமர்சனமா எழுதுற நீ.....

இருடி இரு.ரிலீசாகுற தியேட்டர்ல பத்துநாள் உன்னை கட்டிப்போடுறோம்.
அதற்கப்புறம நீ திரும்பி வந்து..... நிச்சயம் வரமாட்டே.....மீறி வந்தா அப்புறம் வந்து எழுது பின்நவீனத்துவ விமர்சனத்த\\\\\

பத்து நாள் தியேட்டர்ல கட்டி போடுறதுக்கு என்னை ஆக்ஸா பிளேடை வச்சு என் கழுத்தை அறுத்து விடாலாமே அண்ணா..

Anbu said...

\\\வான்முகிலன் said...

இன்னும் இன்னும் நிறைய உங்ககிட்ட இருந்து எதிர்பாக்குறேன்...\\

அடுத்த முறை உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறேன் அண்ணா..

Anbu said...

\\\ வால்பையன் said...

அன்பு உங்களுக்கு அல்ல மொக்கை போடவும் வருது!

கலக்குங்க!\\\

நன்றி அண்ணா..வருகைக்கும் கருத்துக்கும்..

Cable சங்கர் said...

mokkkaiiiiiiiiiiiiooooo mokkkaiiiiii

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதை நான் ஆமோதிக்கிறேன்

Anonymous said...

panch dailogue illama vijay padama

padathula villane illaiya

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

நல்லதொரு விமர்சனம்

சிவகாசிலே பாத்தாச்சாக்கும்

நான் இன்னும் பாக்கல

நல்லாருக்கு விஜயின் ஆட்சி - சொன்னாங்க மக்கள்ஸ்

தேவன் மாயம் said...

குத்தீட்டேன் தமிழ்மணத்தில்!

Unknown said...

முன் நவீனமா

யப்பா கற்பனை குதிரை பலமாத்தான்கீது

ஜெட்லி... said...

ஏன் உனக்கு இந்த கொலை வெறி????

வழிப்போக்கன் said...

எனக்கு இதுல ர்ர்ர்ர்ர்ர்ர்ரொம்ப புடிச்சதே டிஸ்கி 2 தான்...
:)))

அப்துல்மாலிக் said...

//இங்கு கூறியிருக்கும் அனைத்தும் கற்பனையே//

i like it

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம் நடக்கட்டும்

மஞ்சூர் ராசா said...

டிஸ்கி 2 தேவையே இல்லை. எல்லோருக்குமே புரிகிறது.

S.A. நவாஸுதீன் said...

ஏன் ஏன் ஏன்? அன்பு ஏன் ஏன் ஏன்?

பாசத்திற்குரிய பாரதிராஜா said...

அண்ணே அது ஒரு டம்மி பீசு அண்ணே. பார்த்த பவமா இல்லையா. இந்த வாங்கு வாங்குறீங்க. இதுவும் நல்லாதானே இருக்கு , நடத்துகுங்க

நாமக்கல் சிபி said...

ரெண்டாவது டிஸ்கி மிக அருமை!

நன்கு ரசித்தேன்!

thala vijay bala said...

இங்கு கூறியிருக்கும் அனைத்தும்

unmai

thala vijay bala said...

படத்தில் விஜய் ஆட்சி செய்வதை பார்க்கும்போது நமக்கே இவர் உண்மையிலே ஆட்சிக்கு வந்தால்
பஞ்சம் varathu ena thalaiku appadi oru power

thala vijay bala said...

இங்கு கூறியிருக்கும் அனைத்தும் கற்பனை alla

thala vijay bala said...

விஜய் பற்றி கிண்டல் அடிக்க கூடாது

விஜய் பற்றி ஒரு கவிதை சொல்லுறேன்

இந்தியா சுற்றி ராணுவ படை

தலை விஜய் சுற்றி ரசிகர்கல் படை

விஜய் பற்றி கிண்டலா எதாச்சு பதில் வந்துச்சு சீவிருவோம்

Anonymous said...

கொலவெறி எழுத்துல தெரியுதே!!! :)

கற்பனை பலே!